1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிழல் பின்னே நாய் போல

Discussion in 'Regional Poetry' started by priyar, Jul 4, 2010.

  1. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    நான் பிறந்த நேரம் காலை 5:45.
    தொடர்ந்து ஓடிகொண்டிருக்கிறது கடிகாரம்.
    அதன் பின்னே நானும் ஓடிகொண்டிருக்கிறேன்
    "நிழல் பின்னே ஓடும் நாய் போலே".
    கல்லூரி காலம் முடிந்தது.
    கல்லூரியின் வெற்றியும் தோல்வியும்
    வாழ்க்கையோடு சம்மந்தப்படவில்லை.
    கல்லூரியோடு என் காதலும் முடிந்தது
    நான் நேசித்த பெண் என் வாழ்க்கையில் வரவில்லை.
    திருமணம் நடந்தது பெற்றறோரின் நிச்சயப்பு.
    ஆம்! காமம்தான் காதல் தோல்விக்கு மருந்து.
    காமத்துடன் வாழ்க்கையை துவக்கினேன் என் மனைவியுடன்.
    சூரியன் கிழக்கில் இருந்து உச்சிக்கு வரவர
    பனி உருகி மலை தெரிவது போல ;
    வயது ஏற ஏற காமம் கரைந்து அன்பு மிஞ்சியது இருவரிடமும்.
    பொறுப்புகள்,பிள்ளைகள்,கஷ்டங்கள்,நஷ்டங்கள்,நோய்கள் .
    என்னை விட தாமதமாக உலகத்திற்கு வந்தாலும்,
    சரியாக என்னைபோலவே என் பிள்ளைகள்
    நிழல் பின்னே ஓடும் நாய்களாய்.
    இதோ விரிக்கப்படிருக்கிறது மரணபடுக்கை.
    சாய்ந்துவிட்டேன் அதன் மேலே
    நெருங்கிவிட்டது மரணம்.
    சிந்தனைகள் பலவாறு வந்துபோகிறது மனதில்.
    எனது பெற்றோர்கள் தாங்கள் மலடல்ல என நீருபித்துகொண்டது "நான்".
    எனது காமத்திற்கு தீனி தேடியபோது வந்துபோனது என் "காதல்".
    ஆனால் அதற்க்கு தீனி இட்டது என் வாழ்க்கை துணை "திருமணம்".
    வாழ்க்கை முழுவதும் எனது பசிக்கு உணவு தேட முயன்றது என் "அறிவு".
    நானும் மலடல்ல என சமுதாயத்திற்கு காட்டிகொண்டது என் "பிள்ளைகள்".
    உடல் தளர தளர மனம் தளர்ந்தபோது
    துணைக்கு தேவைபட்டது மனிதர்கள் "பாசம்".
    இதோ பிரியபோகிறது என் உயிர் ,
    உணவிற்கும்,காமத்திற்கும்,புகழிற்கும் மட்டுமே வாழ்ந்து முடித்துவிட்டேன் .
    இல்லை ஓடி முடித்துவிட்டேன்.
    ஓவ்வொரு மனிதனும் இதற்க்காகவே
    இன்னமும் ஓடிகொண்டிருக்கிறான் .
    அல்லது ஓடிமுடித்துவிட்டான் .
    அல்லது ஓடபோகிறான்
    இதோ எனக்கு பேரன் பிறந்துவிட்டதாய் செய்தி
    நேரம் மாலை 6:15.
    இன்று இரவு எனது மரணம்
    நாளையும் அதேவிடியல் .
     
    Loading...

  2. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Very well put!!!! :thumbsupGreat job!!!!
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
    தொடர் ஓட்டம், தடை ஓட்டம்
    இடைஞ்சல் ஓட்டம் ஊஞ்சல் ஓட்டம்
    வாலிப ஓட்டம் துள்ளல் ஓட்டம்
    வயோதிப ஓட்டம் தள்ளல் ஓட்டம்
    இறுதி ஓட்டம் தள்ளாட்டம்
    மரண நாக்கு அருகில்
    புதிதில்லை.
    நிழலாய் என் முன்னே
    பயமில்லை.
    வாழ்ந்து கெட்ட எனக்கு
    வாழ வைத்தவன் கொடுத்த வெற்றிக் கேடயம்
    கொடுத்து வைத்தவன் நான்
    என் சந்ததி என்னைத் தொடர்கிறது
    நிழல் போல்......
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Azhagana kavidai.
     
    Last edited: Jul 5, 2010
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Good poem.... wonderful words :thumbsup
     

Share This Page