1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா !

Discussion in 'Regional Poetry' started by dmahesh2k, Aug 8, 2013.

  1. dmahesh2k

    dmahesh2k New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    சுவாசங்கள் இரண்டும் கலந்து
    விடும் தூரத்தில் நீ வந்தாய்
    ஏதோ கேட்டாய்
    என்னமோ புரிந்தது
    நின்று சிரித்தாய்
    யாரோ அழைக்க
    விலகி ஓடினாய்
    அடங்காத வெட்கத்தோடு !
    எனக்கு என்ன நேர்ந்தது ?
    பட்டியல் இடுகிறேன் கேட்டுக் கொள் !
    அந்த நிமிடம் நாம் பார்த்துகொண்ட போது
    பார்வைகள் பேசினதாகவே எனக்குப்பட்டது
    கண்கள் நனைந்தன எங்கோ ஓரத்தில்.
    உதடுகள் ஸ்தம்பித்தன
    மூச்சு கொதித்தது அனலாய்
    இதயம் நொடிக்கு நூறாய்
    இடி இடித்தது
    கைகள் வேர்த்தன
    ஒரு நொடி போதை தலைக்கேற
    என் மயிர்கால்கள் நாற்று நட்ட
    தூரத்தில்
    நீ செல்கிறாய் வெகு இயல்பாக
    உன் மென் சால்வை எப்போதோ
    என் மேல் உராசி செல்ல.
     
    2 people like this.
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பார்வைகள் பேசிவிட
    வியர்வைகள் போர்வையிட ....போராட்டம்தான்
    சரணாகதி ..வேறு வழி ?????

    மிக அழகான உணர்வு வரிகள்.
    நன்றி
     

Share This Page