1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நினைத்ததும், கிடைத்ததும்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 8, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    இயற்கை அன்னையை அன்புடன் நோக்கி. அவள்
    இயற்றும் அற்புதங்களை வியப்பது என் வழக்கம்!

    சந்திர சூரியர்களை எத்தனை முறை காமராவில்,
    சிந்தை மகிழ்திடச் சிறைப் பிடித்தாலும் போதாது!

    சிங்காரச் சென்னைக்கு வந்து முப்பது ஆண்டுகள்!
    சிந்தித்தேன், ஏன் சீரிய சித்ரா பவுர்ணமியை நான்

    சிறைப் பிடிக்காமல் போனேன் என! இந்த ஆண்டு
    இதை நிறைவேற்ற வேண்டுமே! ஆவல் கொண்டு

    புறப்பட்டேன் கடற்கரை நோக்கி என் நண்பியுடன்,
    சிறந்த படங்கள், எளிதாகத் தரும் காமராவுடன்!

    நிரம்பி வழிகின்றது கூட்டம்; சாந்தோம் கடற்கரை!
    நிரம்பிக் கிடக்கின்றன Fast food விற்கும் கடைகள்!

    கடல் அலைகள் Bench போல வடிவமைத்து வைத்த
    கடல் அருகில், சுடும் மணலில், கிடைத்த இடத்தில்,

    வசதியாக அமர்ந்தோம் நாங்கள்! இந்த இடம்தான்
    வசதியாக இருக்கும், புகைப் படங்கள் நன்கு எடுக்க.

    அந்த நேரம் சிறிது அமைதியாக இருந்த அலைகள்
    கொஞ்ச நேரம் ஆன பின், அதிகரிக்கத் துவங்கின!

    கதிரவன் மறையும் நேரத்தில் சரியாகச் சந்திரன்
    உதித்து வரும் அல்லவா? பின்னே நோக்கியதும்

    கண்டேன் சிவக்கும் சூரியனை; கையில் எடுத்துக்
    கொண்டேன் அவனின் அழகைப் படங்கள் எடுக்க!

    சிவப்பு நிற உருண்டையாக மாற முனைந்து,
    உவப்பு மிக எனக்கு எழச் செய்தான் ஆதவன்!

    மெதுவாக ஒளியைக் குறைத்தான்; மேகங்கள்
    மெதுவாகப் படர, ஒளிந்து விளையாடினான்!

    சென்னைக்கு விடை தந்து, மறைய முனைந்து,
    இன்னும் இறங்கி, கட்டிடங்களில் மறைந்தான்!

    நிலவின் வருகைக்காகக் காத்துச் சோர்ந்தோம்;
    நிலவின் தரிசனம் கெடுக்க, வந்தன மேகங்கள்!

    தாகம் கொண்ட பூமியின் வேட்கை தீர்க்க, மழை
    மேகம் கொண்ட எண்ணத்தால், கரும் திரைகள்!

    மழை காலிறங்கிக் கடலிலே பொழிய, கரு நிறப்
    போர்வை ஒன்று போர்த்திக்கொண்டது, வானம்!

    கடலை ஒட்டிப் பெரிய அளவு நிலவு எழும் என்று
    கனவைச் சுமந்து வந்த எனக்கு, ஏமாற்றம்தான்!

    சில நிமிடங்கள் சென்றதும், மெல்லிய ஒளியை
    நிலவு தந்தபடிக் கண்களில் பட்டது! ஆனால் அது

    தொடுவானத்தைத் தாண்டி மிகவும் உயரத்தைத்
    தொடும் வண்ணம் சென்றுவிட்டது! இருந்தாலும்,

    இன்னும் சில மணித் துளிகளில், தனது ஒளியை
    இன்னும் சிறிது கூட்டிப் பிரகாசமானது சந்திரன்!

    காண நினைத்தது, நிலவைத் தொடுவானத்தில்;
    காணக் கிடைத்தது, அழகிய சூரிய அஸ்தமனம்!

    சூரியனும், சந்திரனும் இறையின் கண்கள்தானே!
    சீரிய அழகை எது தந்தாலும், மன நிறைவுதானே!


    [​IMG]

    [​IMG]

    இயற்கை அன்னையைப் போற்றுவோம்!
     
    Loading...

  2. bhuvisrini

    bhuvisrini Gold IL'ite

    Messages:
    929
    Likes Received:
    490
    Trophy Points:
    140
    Gender:
    Female
    RajiRam
    Super Super Superrrrrrrr both ur poem and the photos. The poem and the pictures shows that u r real lover of nature. One can write or click pics only they have imagination & creativity. U r having Both. WELL CLICKED AND WELL WRITTEN WORDS just poured from ur mind. Awesome :)
    Cheers
    BhuviSrini
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you very much for your nice feed back, dear Bhuvi!! :)
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,176
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Surya asthamanamum and Chandran udayamum reminded me of the political change in Tamil Nadu. Jokes apart, both photographs and poem are excellent.
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you Viswa Sir!

    With a creative kit and mind, the Moon can glow blue!! :thumbsup


    [​IMG]
     
  6. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சகோதரி ராஜிராம்,

    “கதிரவன் மறையும் நேரத்தில் சரியாகச் சந்திரன்
    உதித்து வரும் அல்லவா? பின்னே நோக்கியதும் ”


    சூரிய அஸ்தமனம், சந்திர உதயம்....கடற்கரை...
    அழகான வண்ண படங்களுடன் ,கவிதை மிக் அழகாக இருக்கிறது!

    இயற்கை அன்னையை அழகாக வருணித்திருக்கிரீர்கள்!
    நாங்கள் படிதது மகிழ்ந்தோம்.
    நன்றி.
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Suryakala,

    All my friends' support has been like a tonic to me!
    Thank you! :cheers
     

Share This Page