அமைதியான வேளையில் அருகில் கேட்கும் குயிலின் கூவல் மெல்லிய காற்றில் படபடக்கும் இலைகளின் சலசலப்பு எங்கோ ஒலிக்கும் சிறுவர்களின் விளையாட்டு சத்தம் வீட்டு கூடாரத்தில் ஒலிக்கும் கடிகாரத்தின் டிக் டாக் ஒலி நிசப்தத்தின் உச்சக்கட்டமாய் என்னை அச்சுறுத்தும் இதயத் துடிப்பிலும் "ஒரு முறை மனதில் நுழைந்தால் இறுதி மூச்சு வரை என் இதயத்தில் இருப்பாய் " என்று அன்று நீ உரைத்த வார்த்தைகள் மட்டுமே உன் குரலில் என் துணையாய் நிற்கிறதே ...
@jskl அருமை கவிதை அதை நான் காண குயில் பாட புத்தம் புது காலை - பாட்டு பாட பொன்னிற வேளை தென்இலைகள் தள்ளாட தென்றல் அங்கு வீச Jskls சலசலப்பு அதை காண சிறுவர்கள் ஓடி ஆட சத்தம் அது கீதம் காற்றினிலே வரும் அந்த கீதம் தாழ்வாரம்கடிகாரம் டிக்டிக் என இதயம் லப்டப் லப்டப் படபடக்க துணை சொன்ன சொல்லே இதயத்தின் ஆழத்திலே என் இதயத்தின் ஆழத்திலே என்னவர் சொல்லே.