1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் ப

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Aug 19, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [h=3]படித்ததில் பிடித்தது ...
    ஒரு குரு தன்னுடைய மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்......[/h]"நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் பேசுகிறோம்? "
    மாணவர்கள் சிறிது யோசித்துப் பார்த்தனர். அதில் ஒருவர்,
    "நாம் நமது அமைதியை இழந்து விடுகிறோம். அதனால்தான் கத்துகிறோம்"
    அதற்கு அந்த குரு,
    "ஆனால் நமது அருகிலேயே நாம் கோபப்படும் நபர் இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்? நாம் மிகச் சாதரணமாக நமது அருகில் இருப்பவரிடம் பேசலாமே......... கத்த வேண்டிய அவசியம் இல்லையே……நாம் கோபமாக இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்?"
    மாணவர்கள் பல விடைகளைக் கூறினர். ஆனால் எதுவும் குருவுக்கு திருப்தியாக அமையவில்லை. அதற்கு மேலும் மாணவர்களை சோதிக்க விரும்பாமல் அவரே பதிலைக் கூறத் தொடங்கினார்.
    "இரண்டு நபர்கள் ஒருவர் மேல் மற்றவர் கோபமாக இருக்கும் போது, அவர்களுடைய இதயங்களுக்கான இடைவெளி மிகவும் அதிகம். அப்பொழுது அந்த இரண்டு இதயங்களுக்கும் கேட்கும் விதத்தில் அவர்கள் கத்திப் பேசுகின்றனர்.
    எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் கோபமாக இருக்கின்றனரோ அந்த அளவுக்கு அவர்கள் இதயங்களின் தூரம் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் இதயங்களுக்கு கேட்கும் விதமாக கத்துகின்றனர்."
    பிறகு, குரு தனது மாணவர்களைப் பார்த்து,
    "இரண்டு நபர்கள் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? அவர்களுக்குள் மிகவும் மெதுவாக பேசிக் கொள்வார்கள். ஏன்? அவர்களின் இதயம் நெருக்கமாக உள்ளது. அவைகளுக்கிடையேயான தூரம் மிகவும் குறைவு.........


    அவர்களின் காதல் அதிகமாக ஆகும் போது என்ன நடக்கும்? அவர்கள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். வெறும் முணு முணுப்புதான் இருக்கும். இன்னும் அவர்களின் காதல் அதிகரிக்கும் போது அந்த முணு முணுப்பு கூட இருக்காது. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டுமே இருக்கும்.



    அன்பினால் மட்டுமே இரண்டு இதயங்கள் சேரும். இது காதலுக்கு மட்டும் அல்ல.........நட்பிற்கும் தான்......."
    அன்பே சிவமும் அன்பே சக்தியும்
    அன்பே ஹரியும் அன்பே பிரமனும்
    அன்பே தேவரும் அன்பே மனிதரும்
    அன்பே நீயும் அன்பே நானும்
    அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
    அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
    அன்பே மௌனம் அன்பே மோக்ஷம்
    அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்......

     
    1 person likes this.
    Loading...

  2. ammusatheesh

    ammusatheesh Gold IL'ite

    Messages:
    663
    Likes Received:
    410
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: "நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் &#2

    True words...
     

Share This Page