1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் தான் உன் பொன்வசந்தம் ...

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 2, 2013.

  1. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    [JUSTIFY]"நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்க வாழனும்.."

    பந்தல் வாசலின் இருபுறத்திலும் வாழை மரங்களோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள் இரண்டும் மனோவின் கம்பீரமான குரலை அந்த தெரு எங்கும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தன. வீட்டின் உள்ளே இருந்த ஆண்கள் புன்னகையோடும் பெண்கள் பொன்னகையோடும் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தனர். வீட்டின் பின்புறத்தில் பெரிய பெரிய பத்திரத்தில் ஆளை தூக்கும் வாசத்தோடு உணவு வகைகள் தயாராகிக் கொண்டிருந்தன. மாவிலை தோரணங்கள், சீரியல் செட்டு பல்புகள், பட்டு பாவாடை குழந்தைகள் என்று அந்த வீடு முழுக்க முழுக்க உற்சாகத்தில் மூழ்கி கிடந்தது, இருவரை தவிர. வருண், நித்யா..

    "நீ மாறமாட்ட வருண். எனக்கு தெரியும் நீ மாறமாட்ட. இதான் நீ.. இப்போ பேசினியே இது தான் உன்னோட உண்மையான கேரக்டர். ச்சே.."

    "போதும் நித்யா.." அதுவரை வார்த்தைகளில் கோபக்கனலை வைத்து எரித்து கொண்டிருந்த நித்யாவை நிறுத்தினான் வருண். "அது ஏன் எப்பவுமே நான் உனக்கு தப்பா தெரியுறேன்? நீ அவசரப்படுவ, நான் பொருத்துக்கணும், நீ கோபப்படுவ நான் அமைதியா இருக்கணும், நீ எப்பவும் என் மேல குத்தம் சொல்லுவா அதை நான் ஒத்துக்கணும்.. இல்ல? திஸ் இஸ் வாட் யு வான்ட் ரைட்..?"

    "இனப் வருண். யூ டோன்ட் நீட் டூ டாலரெட் மீ.. லெட்ஸ் ப்ரேக் அப்.."

    "என்ன..." அதிர்ச்சி நிறைந்த கண்களோடு வருண் நித்யாவை பார்த்தான். "இன்னிக்கு இங்க என்ன நடக்கபோகுதுன்னு உனக்கு தெரியும் நித்யா..? யூ வான்ட் டு டூ திஸ் நவ்.."

    "எனக்கு நீ வேண்டாம் வருண் .. போதும் இனிமே நான் உன்ன.."

    "ஓகே எனக்கும் நீ வேண்டாம்.." அவளை பேச விடமால் வருண் இடைமறித்தான்.

    நித்யா அதிர்ச்சியில் விக்கித்து நின்றாள். "இன்னும் கொஞ்ச நேரத்தில நமக்கு கல்யாணம் வருண்.."

    "நீ தான சொன்ன நித்யா.. நான் வேண்டாம்ன்னு.. போ.. உன் விருப்பபடி, உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய். நீ என்ன சொல்றது நித்யா. நான் சொல்றேன், எனக்கு நீ வேண்டாம்."

    அப்பொழுது அறை கதவை திறந்து கொண்டு பிரகாஷ், ஜென்னி இருவரும் வந்தார்கள். கட்டுபாட்டை மீறி வழிந்த கண்ணீரை துடைக்க சக்தி இன்றி நித்யா நின்றுகொண்டிருந்தாள். மணக்கோலத்தில் கலங்கிய கண்களோடு நின்ற நித்யாவை பார்த்து ஜென்னி அதிர்ச்சி ஆனாள்.

    "வருண்.. வாட்ஸ் ஹெப்பனிங் ஹியர்.."

    "டேய் மச்சான்.. என்ன டா இது.. " பிரகாஷ் வருணை பார்த்து கடிந்தான். "எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிட்டாங்க டா. இப்போ என்னடா பிரச்சனை பண்ணிகிட்டிருக்கிங்க.."

    வருண் முகத்தை திருப்பி கொண்டான். வெளியே மினி வேன் வந்து நின்று ஹாரன் அடித்தது. அடுத்த சில நொடிகளில் அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் சுமதி.

    "என்ன எல்லாரும் அப்பிடியே நிக்கிரிங்க.. வேன் வந்தாச்சு கெளம்புங்க. பிரகாஷ் அங்கிள் உங்க பிரண்ட கூப்டுகிட்டு வாங்க.." சொல்லிவிட்ட அவள் நகர எத்தனிக்க பிரகாஷ் பேசினான்.

    "சுமதி இருமா.."

    "என்னாச்சு அங்கிள்.."

    "ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டாங்க.."

    சுமதி தலையில் கையை வைத்துகொண்டாள். "மறுபடியுமா.."

    "இதே வேலையா போச்சு. சும்மா சும்மா சண்டை போட்டுக்குவிங்க, அப்புறம் சேர்ந்துபிங்க.. எவ்வளோ செலவு பண்ணி இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிருக்கோம். இப்போ சண்டைன்னா என்ன அர்த்தம்?" சுமதி பொரிந்து தள்ளினாள். வருனோ நித்யாவோ முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் நின்றிருந்தனர். அப்பொழுது கதவை திறந்து கொண்டு வந்தாள் நதி.

    "என்ன ஏதோ சண்டை அது இதுன்னு காதில விழுந்திச்சு.." ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தலையை சாய்த்தபடி வருணை பார்த்து முறைத்தாள் பத்து வயது நதியா.

    "நல்லா கேளு நதி குட்டி. இவங்க ரெண்டு பேரும் உனக்கு மட்டும் தான் பயபடுறாங்க.." இப்பொழுது ஜென்னி நதியாவின் பக்கம் சேர்ந்து கொண்டாள்.

    தன் பிஞ்சு கால்களால் சின்ன சின்னதாய் ஆனால் வேகமாய் அடி எடுத்து வைத்து வருணை நெருங்கினாள் நதியா. அவன் கையை வெடுக்கென்று பிடித்து அவனை இழுத்து கொண்டு நித்யா பக்கம் வந்து தள்ளினாள்.

    "ரெண்டு பேரும் ஹேன்ட்ஷேக் பண்ணிக்கோங்க.." அதிகாரம் தொனிக்கும் குரலில் மிரட்டினாள். லேசாய் சிரித்துவிட்ட வருனும், நித்யாவும் எங்கோ பார்த்து கொண்டு கை குலுக்கினார்கள்.

    "வெரி குட்.. இப்போ ரெண்டு ஹக் பண்ணுங்க.."

    அவ்வளவுதான், வருனும் நித்யாவும் குபீரென்று சிரித்துவிட்டனர். அவர்கள் சிரிப்பில் பிரகாஷ், ஜென்னி, சுமதி அனைவரும் அடுத்தடுத்து கலந்து கொண்டனர். இப்பொழுது நம் பெரிய மனுஷி நதி குட்டி ஓடி சென்று சுமதியின் கால்களை கட்டிகொண்டாள்.

    "அம்மா.. தாத்தாவும் பாட்டியும் சமாதனம் ஆயிட்டாங்க.. வாங்க மா போலாம்.."

    வருண் நித்யாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு அனைவரும் கலகலப்புடன் கோவிலுக்கு புறப்பட்டனர்..

    ♥♥♥ Still they are happily fighting together ♥♥♥[/JUSTIFY]
     
    15 people like this.
    Loading...

  2. makechange

    makechange Bronze IL'ite

    Messages:
    62
    Likes Received:
    47
    Trophy Points:
    38
    Gender:
    Female
    I used to tell my DH all the time, that we will be (silly but seriously)fighting even at our 60th wedding anniversary..

    Very nice story, it felt so personal...
     
    1 person likes this.
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
  4. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    sema twist


    as usual super jaga
     
  5. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
  6. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
  7. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hi anna....

    as usual kalakal story anna........

    cute and nice story,.....

    climax super anna.........
     
  8. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
  9. muthu21

    muthu21 Gold IL'ite

    Messages:
    358
    Likes Received:
    271
    Trophy Points:
    123
    Gender:
    Female
  10. krithivenugopal

    krithivenugopal Bronze IL'ite

    Messages:
    124
    Likes Received:
    44
    Trophy Points:
    48
    Gender:
    Female

Share This Page