1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நானும் என் எதிரொலியும்!

Discussion in 'Regional Poetry' started by suryakala, May 30, 2016.

  1. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நான்: இன்னியஎதிரொலி எங்கே உள்ளாய்?
    உன்னிடம் நானும் பேசிட வரவா ?

    எதி: வா, வா.

    நான்: நன்றாம் நாட்டில் என்றும் நீங்காத்
    துன்பமிங்கே வாட்டுதே மக்களை?

    எதி: களை, களை

    நான்: இத்தகு அவலம் நிகழ்ந்திடு மென்றோ
    வித் தகன் சுதந்திரம் வேண்டினான் அன்று?

    எதி: அன்று அன்று;

    நான்: களைந்திட வேண்டும் துன்பம் என்றால்
    களையும் வழியும் நீ கூ றயோ?

    எதி: ஓ ஓ!

    நான்: மக்கள் நன்கு உழைத்திட லுடனே
    ஊக்கத்துடனே செயல் பட வே ண்டுமாம்.

    எதி: ஆம் ஆம்!

    நான்: தலைவர் யாரும் தன்னுடை நலத்தைத்
    தள்ளிப் பொது நலம் பேணிநல் செய்க

    எதி: செய்க செய்க!


    நான்: பொது நல வாழ்வு போகட்டு மிங்கே
    என்னுடை வாழ்வு சிறந்திட வழி புகல்;

    எதி: கல் கல் ;

    நான்: என்னுடை சொல்லே உ ன்னுடை பதிலோ ?
    என்றால் உன்னுடன் பேசலை நீபோ !

    எதி: நீ போ நீ போ !
     
    Harini73, periamma, jskls and 4 others like this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Nice attempt Madam. Just remembered this wonderful thirukkuraL when I read this piece -
    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
     
    periamma, suryakala and PavithraS like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    எதிரொலி (ஸூர்யகலா ) கேட்டேன் ! மனசாட்சி (ஸ்ரீநிவாஸன்) பார்த்தேன் ! இரண்டும் வழங்கிய பாடங்கள் நன்று !


    ஒன்று தரமான எண்ண வெளிப்பாட்டின் வகையில் மொழிந்த பேச்சொலியின் எதிர் விளைவு என்றால், மற்றொன்று சொல் உதிர்க்காமல் மௌனமாய் மனம் வழங்கும் ஞானம் ! ஒன்றில் சமூக நோக்கு, மற்றொன்றில் சுமுக வாழ்விற்கான நோக்கு !

    நூல் நயமறிந்த நாவலர் நீங்கள் ,
    நற்கவி நலமாய் நாளும் நல்கிறீர் !
    நன்றென நவில நா நயமில்லை !
    நன்றி நவில்கிறேன், நங்கை நானே !
     
    suryakala likes this.
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear @rgsrinivasan ,

    Nice to have your thoughtful response.

    I am so happy that the 'echo' of the poem on you is to take you to Thirukkural and the voice of conscience!

    I appreciate the depth your imagination!

    Thanks a lot.
     
    rgsrinivasan likes this.
  5. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு மகள் பவித்ரா,

    இத்தகு கவியால் இன்புற வாழ்த்தின்
    எத்தனை எத்தனை கவிகளும் எழுதலாம்
    மெத்தவே அழகுடை மேம்படு கருத்தால்
    சித்தமும் நிறைத்தனை சீருடை நங்காய்!
     
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Good one. அருமையான கவிதை

     

Share This Page