1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்ல சாவு

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, Apr 9, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஒரு ஊரில் நாகராஜன் தேவரப்பன் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரு வகையில் உறவினர்கள் கூட. இவர்களில் தேவரப்பன் சொந்தமாக நெசவு தறி வைத்து இருப்பவன் நாகராஜன் ஒரு துணி கடையில் கணக்கு பிள்ளையாக வேலை செய்பவன். இருவரும் திருமண வயது அடைந்தனர். முதலில் தேவரப்பனுக்கு திருமணம் ஆயிற்று. சில மாதங்கள் கழித்து நாகராஜனுக்கும் திருமணம் நடந்தேறியது.

    இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. தேவரப்பனுக்கு இரண்டு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது அதே போல் நாகராஜனுக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் பிறந்தன. தேவரப்பன் சற்று ஓர வஞ்சனை குணம் கொண்டவன். அவனுக்கு பிடிபவர்களுக்கு மட்டும் தான் அனைத்தும் செய்வான் மற்றவர்களை கண்டு கொள்ள மாட்டான். ஆஅனால் நாகராஜன் அப்படியல்ல தனக்கு பிடித்தால் தான் சம்பாத்தியம் செய்ததை அனைவருக்கும் சமமாக செய்வான் இல்லாவிட்டால் தான் சம்பாத்தியம் செய்ததை தானே செலவிடுவான்.

    தேவரப்பனுக்கு தன பிள்ளைகளில் இளைய பிள்ளையின் மீது தான் பாசம் அதிகம். ஆதலால் தன் இளைய பிள்ளைக்கு மட்டும் வேண்டிய அனைத்தையும் செய்தான் மற்ற குழந்தைகளுக்கு ஏனோ தானோ என்று செய்வான். ஆனால் நாகரஜனோ தன்னிடம் இருக்கும் காசை பிள்ளைகளுக்க் சமமாக செலவிடுவான் இல்லா விட்டால் தான் சம்பாதித்ததை தானே செலவிடுவான்.

    இருவரின் பிள்ளைகளும் திருமண வயதை அடைந்தனர்.
    தேவரப்பன் தன் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து விட்டு அனைவரையும் தனி குடுத்தனம் போகும் படி கூறி விட்டார் தன் இளைய பிள்ளையை மட்டும் தன்னுடனே வைத்துக்கொண்டார். வாரத்தில் ஒரு நாள் தேவரப்பன் தன் மூத்த பிள்ளைகள் வீட்டிற்க்கு சென்று உணவருந்தி விட்டு செலவிற்கு காசு வாங்கி வந்து அதையும் தன் இளைய மகனுக்கே செலவிட்டான். நாகராஜனோ தன் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைத்தார். ஆனால் மற்றவர்கள் இடத்தில் இருந்து காசு வாங்கும் பழக்கம் இல்லை. தானே சம்பாதிக்க வேண்டும் அதில் கொஞ்சம் வீட்டிற்க்கு கொடுத்து விட்டு மீதியை தானே செலவிட வேண்டும் என்ற குணம் கொண்டவர்.

    இருவரும் முதுமை அடைந்தனர் ஒரு நாள் நாகராஜன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்து படுத்தவன் தான் எழுந்திருக்கவே இல்லை. நல்ல சுகமான சாவு எந்தவொரு இன்னலும் இல்லை அவனுக்கு. நாகராஜன் இறந்தது சில வருடம் கழித்து தேவரப்பனுக்கு உடல் நிலை மோசமானது. படுத்த படுக்கை ஆனான். ஒரு மனிதன் தன் இறுதி காலத்தில் படக்கூடாத அனைத்து இன்னல்களுக்கும் அவன் ஆளானான். இறுதியில் படக்கூடாத கஷ்டங்களை அனுபவித்த பிறகு அவன் உயிர் பிரிந்தது.

    இறந்து மேல் உலகம் சென்ற தேவரப்பன் எம தர்மனை பார்த்து. கடவுளே இது நியாயமா எந்த குழந்தையையும் சரியாக பார்த்து கொள்ளாத நாகராஜனுக்கோ சுகமான எந்த இன்னலும் அனுபவிக்காத நல்ல சாவு. ஆனால் ஒரு பிள்ளையையாவது ஒழுங்காக கவனித்து கொண்ட எனக்கோ பல இன்னல்களை அனுபவித்த பின் சாவு இது என்ன நியாயம். இதற்க்கு பதிலளித்த எம தர்மன் தேவாரப்ப நீயோ உன் ஓர வஞ்சனை குணத்தால் ஒரு பிள்ளையை மட்டும் கவனித்து கொண்டு மற்ற பிள்ளைகளை சரி வர கவனிக்கவில்லை ஆனால் நாகரஜனோ செய்தால் அணைத்து பிள்ளைகளுக்கும் சமமாக செய்தான் இல்லா விட்டால் தான் சம்பாத்தியம் செய்தததை தானே செலவிட்டான் அவனிடத்தில் ஓரவஞ்சனை குணமில்லை அதனால் தான் அவனுக்கு எந்த துன்பமும் நேராத நல்ல சாவு.

    தான் பெற்ற பிள்ளைகளிடதிலேயே தன் ஓர வஞ்சனை குணத்தை காட்டினால் இந்த தேவரப்பன் நிலை தான் அனைவருக்கும். இறுதி காலத்தில் துன்பப்பட்டு இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஓரவஞ்சனையை ஓரம்கட்டு,
    சமத்துவத்தை செயல் படுத்து,
    போகிற வழிக்கு புண்ணியம் தேடு,
    என நல்ல கதை வாயிலாக சொர்க்க,
    வாயிலுக்கு வழி காண்பித்த ராமுக்கு பாராட்டுக்கள்.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thaane petra kuzhandaigalidam oravanjanai.... irtharkku thaan avanukku ippadi oru saavu.... sariyaana theerpu raman.....
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou sandhyaa
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமையான கதை தோழா!!!!
    ஆனால் ஏதோ இடறுவது போல் எனக்கு பட்டது தவறாக நினைக்க வேண்டாம் கதையின் கருத்தே கடைசியில் தான் அடக்கம்!!!
    தேவாரப்பா இறுதிகாலத்தில் படுக்கையில் விழுந்து ஓரவஞ்சணையாய் நடந்த காரணத்தால் அவரை சரியாக கவனிக்க எவரும் முன் வரவில்லை அதில் தன தவறு உணர்ந்த மாதிரி இருந்திருந்தால் மிகம அருமையாய் இருந்திருக்கும்!!!

    என்னுடைய கருத்து நண்பரே தவறிருந்தால் மன்னிக்கவும்!!!! கருத்து சொல்லும் உரிமை எனக்கு உண்டு தானே?????
    தங்கள் கதை பலே!!!!:thumbsup
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கண்டிப்பாக உனக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் இந்த கதை கடைசி காலத்தில் படும் கச்டத்திர்கான kaaranaththai பற்றியது. அவன் திருந்தியும் பயனில்லை பட்ட கஷ்டம் பட்டது தான். இது சரியா யம்ஸ். கருத்து தெரிவித்தால் தான் பிரச்சினையை பல்வேறு கோணங்களில் ஆராய முடியும் சோ கீப் ஷேர் யுவர் ஒபினன் இட் மே positive or negative
     

Share This Page