1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ...

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Aug 30, 2018.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    என்னு ளிருந்து,உண்மை யொளிர்ந்து,
    நன்மை,தீமை யிரண்டு முணர்த்தித்,
    தன்னை மறப்பி னுறுத்திக் காட்டும்,
    என்னை நடத்தும் என் மனசாட்சி!

    என்னு ளிருந்தும்,எங்குள தென்று,
    என்னி லிருந்தேக் கேள்வி பிறந்தும்,
    தன் நிலை துளியும் தானிழவாது,
    என்னைத் தாங்கும் தூணதன் மாட்சி!

    மன்னிய புகழோ,மனிதரின் இகழோ,
    புண்ணிய செயலோ,அன்றியெத் தவறோ,
    கண்ணிய மிழந்துத் தடுமாறா தெனைத்
    தானேத் தடுத்தாளும் தெய்வத்து ஆட்சி!

    இன்மை நிலையிலும் தடம் மாறாது,
    வன்மை உலகிலே எனை நீங்காது,
    பன்மை மடங்கிலேத் துன்பம் இறுக்கினும்,
    மென்மை குன்றாது காக்குமதன் நீட்சி !

    உண்மை உணர்ந்து உள்ளொலி அதனைத்
    திண்மை கலந்தத் தெளிவுடன் நாடில்,
    மேன்மை மிகுந்த நல்வழி காட்டும்,
    கேண்மை நிறைந்த அதுவேயென் மீட்சி !

    Regards,

    Pavithra
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS பவித்ரா மௌனத்தில் விளையாடும் மனசாட்சி தந்திடுமே மீட்சி .துல்லியமான கணிப்பு .
     
    PavithraS likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மனசாட்சியிடத்தில் மௌனத்தோடு உரையாடும் போது உண்மையைத் தவிர வேறொன்றும் அங்கே வெளிப்படாதல்லவா ? உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி பெரியம்மா !
     

Share This Page