1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நம் வெற்றிக்கு வழி-------எப்படிப்‬ பேசவேண்டு&#

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Aug 19, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [h=3]படித்ததில் பிடித்தது ...
    .ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான்.ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.
    [/h]அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போது இந்த கயிற்றால்தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும்போது இந்த கயிறுகள் அறுக்கவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.
    அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்க்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.
    இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகிறோம்.

    தோல்வி என்பது நாம் ஜெயிக்கபோவதின் முதல் படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்..


    ...................
    ‎எப்படிப்‬ பேசவேண்டும்?

    ஒரு ஜென் குருவின் மடத்திலிருந்து ஒரு சீடன் அழுதுகொண்டே ஓடிவந்தான் .
    அவனுக்கு எதிரில் வந்துகொண்டிருந்த இன்னொரு சீடன் அவனை நிறுத்தி,"ஏன் அழுகிறாய்?"என்று கேட்டான்.அழுகையை நிறுத்திவிட்டு,"குருவிடம் தியானம் செய்யும்போது புகைப்பிடிக்கலாமா?"என்று கேட்டேன்,அதற்கு என்னை குரு அடித்து விட்டார் என்றான்.
    முட்டாளே எதை பேசுகிற விதத்தில் பேசவேண்டும்,நீ கேட்ட அதே கேள்வியை நான் குருவிடம் கேட்கும் விதத்தில் கேட்கிறேன்,அவர் என்னை அடிக்கமாட்டார் என்று கூறி அவனையும் அழைத்துக்கொண்டு ஜென்குருவிடம் போய் ,"குருவே, நான் புகைப்பிடிக்கும்போது தியானம் செய்யலாமா ?"என்றுகேட்டான் ,குரு,"ஆஹா....தாராளமாக"என்றார் .


     
    Loading...

  2. Laxmi

    Laxmi Administrator Staff Member Platinum IL'ite

    Messages:
    4,242
    Likes Received:
    372
    Trophy Points:
    200
    Gender:
    Female
    Re: நம் வெற்றிக்கு வழி-------எப்படிப்‬ பேசவேண்ட&#300

    Hello Mathangi,

    yeah true, perceptions do matter. If you think you can then success is just a step away. If you think it is impossible then however easy the task is, it might be futile.

    Zen story too is interesting.
     

Share This Page