1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நன்றி! by கிருஷ்ணாம்மா !

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 29, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் இதோ மற்றும் ஒன்று எழுதிவிட்டேன் ....படித்து கருத்து சொல்லுங்கள் krishnaamma [​IMG]

    தூங்கிக்கொண்டிருந்த ஊர்மிளாவிற்கு இடுப்பை வலிப்பது போல இருந்தது, மணி பார்த்தால் இரவு 2. சரி விடியும் வரை பொறுக்கலாம் என்று எண்ணியவாறே படுக்கை இல் கிடந்தாள். வீட்டிலிருந்து 5 கிலோமிட்டர் தான் ஹாஸ்பிடல்..............போவது ஒன்றும் சிரமம் இல்லை. பிள்ளைப்பேறுக்காக இந்தியா போகாமல் கணவனும் மனைவியும் சௌதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.

    இங்கு உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் இந்தியாவிலும் இவர்களுக்கு இதே கதி தான். காதலித்து மணம் புரிந்தாலே இப்படித்தானே? என்று எண்ணி பெருமுச்சு ஒன்றை விட்டாள். வலி அதிகரிப்பது போல இருந்தது. தாள முடியாமல் 'அம்மா' என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டாள் போல இருக்கிறது. பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்த், விழித்துக்கொண்டான்.

    "என்ன ஆச்சு ஊர்மி?" என்றான்.

    "வலிக்குதுங்க, என்றாலும் இந்த நேரத்தில் வேண்டாம், விடியட்டும் பார்க்கலாம்"....என்று சொல்வதற்குள்ளே மீண்டும் 'பளீர்' என்று ஒரு வலி.

    " இல்லை இல்லை ..உன் முகம் சரியாக இல்லை, இந்த ஊரில் என்ன பயம்? வா கிளம்பலாம்" என்று சொல்லி, முகம் கழுவி, ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, இவளையும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.

    அவளை பத்திரமாய் உட்காரவைத்து விட்டு, தானும் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான். அந்த இருளில் வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு கார் மெயின் ரோடு இல் சீறிப்பாய்ந்தது. ஏசி இலும், வலியால் வியர்த்து இருந்த மனைவி இன் பக்கம் திரும்பி, " கொஞ்சம் பொறுத்துக்கோ, 5 கிலோ மீட்டர் தான்" என்றான்.

    அவளும் கஷ்டத்துடன் புன்னகைக்க முயன்றாள். அந்த விடியற்காலை இல் நிறைய வண்டிகள் கடப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டர்கள். இவ்வளவு காலை இல் என்ன இப்படி என்று. 'உம்ரா' வுக்கு போகிறவர்களுடைய வண்டிகள் இந்த ரோடு இல் செல்வது வழக்கம் தான் என்றாலும், 'இத்தனை காலை இல்' என்று கொஞ்சம் நெருடலாகவே எண்ணினான் ஆனந்த்.

    ஒரு 2 கிலோமீட்டர் கூட தாண்டி இருக்க மாட்டார்கள், ஒரு பெரிய குலுக்கலுடன் வண்டி நின்றுவிட்டது. " அடாடா.... என்ன அச்சு? " என்று சொல்லிக்கொண்டே, ஸ்டார்ட் செய்தான், ஸ்டார்ட் ஆகலை...............கொஞ்சம் பதட்டத்துடன், மீண்டும் ஸ்டார்ட் செய்து பார்த்தான், ஸ்டார்ட் ஆகவில்லை.

    அதற்குள் ஊர்மிளா கேட்டாள், " என்னங்க ஆச்சு? " என்று...." தெரியலை, கொஞ்சம் இரு பார்க்கிறேன்".என்று சொல்லி , ஹசாட் போட்டுவிட்டு, வண்டியை விட்டு கீழே இறங்கி பானட்டை திறந்து பார்த்தான்....இவனுக்கு ஒன்றும் பிடிபடலை.

    இப்போது என்ன செய்வது? ஊர்மிக்கோ வலி அதிகமாகி விட்டது, தாங்க முடியவில்லை அவளால். அப்போது, சாலைகளில் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் ஒன்று இவர்கள் வண்டியைத்தாண்டி ஒரு 10 அடி சென்று நின்றது. அதிலிருந்து வெள்ளை நிற 'தோப்' அணிந்த சில இளைஞர்கள் இறங்கினார்கள்; இவர்கள் வண்டியை நோக்கி வந்தார்கள்.

    அதைப்பார்த்ததும் ஆனந்த் அவர்களை நெருங்கினான், விவரத்தை அவர்களிடம் விளக்கினான், அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும், ஊர்மிளாவுக்கு தலை சுற்றியது; அவ்வளவுதான் தான், தன்கணவன் மற்றும் தன் குழந்தை எல்லாம் இன்றோடு முடிந்தோம் என்று நினைத்து மனம் நடுங்கினாள்.

    அவர்கள் சொன்னது இது தான், "மன்னர் அப்துல்லா மறைந்துவிட்டார்" ...நாங்கள் என்று
    அவர்கள் மேலே சொன்னது எதுவுமே கேட்கலை...இந்த செய்தியே காதுகளில் ரீங்காரம் இட்டது, நம் நாட்டில் தலைவர்கள் மறைவின் போது, மற்றும் கலவர நேரங்களில் நடக்கும் அட்டுழியங்களை அவள் பத்திரிகைகளில் படித்தும் டிவி இல் பார்த்தும் இருக்கிறாள் ........அப்படி ஏதாவது நடந்தால் ..........????? காருடன் தன்னையும் கணவரையும் கொளுத்திவிடுவார்களோ ?............குஜராத் சம்பவம் போல கத்தியால் வயிற்றை கிழித்து நடு ரோட்டில் போட்டுவிடுவார்களோ?.............என்றெல்லாம் எண்ணி மிகவும் பயந்து போனாள்.

    செய்வது அறியாது திகைத்தாள்.............இறங்கியவர்கள் தங்கள் காரை நோக்கி வருவதையும் பார்த்தாள். கணவரும் அவர்களுடன் வந்தாலும் இவளுக்கு பயத்தில் எதுவுமே மனதில் மூளை இல் உறைக்கவே இல்லை...........வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள்.

    அருகில் வந்த ஆனந்த், " ஊர்மி, இறங்கு"........என்றான்.

    இவள் உடனே " மாட்டேன்....பயமாய் இருக்கு..என்று திக்கியவாறே சொன்னாள்."

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ............" என்ன ஆச்சு உனக்கு? நம் வண்டி நின்று விட்டது, இவர்கள் நம்மை ஹாஸ்பிடலில் கொண்டு விடுவதாக சொல்கிறார்கள்...இறங்குமா" என்றான்.

    அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஒருவாறாக சுதாதரித்துக்கொண்டு ஏதோ கேட்க வாயை திறந்தாள், ஆனால் அதற்குள் ஒரு இளைஞன் அவர்கள் காரை அருகில் கொண்டு வந்து விடவே, பேசாமல் மெல்ல இறங்கி அதில் ஏறினாள். அவர்களே இவர்களின் பொருட்களை கொண்டுவந்து அந்த வண்டி இல் வைத்து தந்தார்கள்.

    ஒருவன் மட்டும் காரை எடுத்தான், மற்றவர்கள் அங்கேயே நின்றுகொண்டார்கள். வண்டி இல் போகும் போதும் ஆனந்த்தும் அந்த இளைஞனும் ஏதோ பேசிய படியே வந்தார்கள்...ஆனால் இவளால் தன் பிரமிப்பிலிருந்து விடுபட முடியலை. 2 நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து விட்டது. இவர்கள் பத்திரமாய் இறங்கியதும், தான் காரை 'பார்க்' செய்து விட்டு வருவதாக சொல்லி சென்றான் அந்த இளைஞன்.

    இறங்கியதும் ஊர்மிளா அவனுக்கு கைகளை கூப்பியபடி நன்றி சொன்னாள், கண்களில் நீர் வழிய சரியாக பேசக் கூட முடியலை அவளால். அதற்கு அந்த இளைஞன், புன்னகைத்த வாறே
    "நோ ப்ரோப்ளேம், இன்ஷா அல்லா, எல்லாம் நல்லபடி நடக்கும், கவலை வேண்டாம்" என்றான் ஆங்கிலத்தில்.

    இவள்,"உங்கள் பெயர்? "....என்றதும், Sarfaraz ஸர்பராஸ் என்றான்.

    ஊர்மிளா அட்மிட் ஆகும் வரை காத்திருந்து விடை பெற்றான்.

    சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள் ஊர்மிளா. நர்ஸ் வந்து குழந்தை இன் பேர் கேட்டதும் ஏதோ சொல்ல வாய் எடுத்த கணவனை தடுத்து Sarfaraz என்றாள். நர்ஸ் சென்றதும், "என்ன ஊர்மி இது? எவ்வளவு நாள் நெட் எல்லாம் தேடி எடுத்த பேரை வெக்காமல்? " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆனந்த்.

    "ஆமாங்க, தன்னுடைய அரசர், மாமன்னர் மரணத்துக்காக வழிபாடு நடத்த மக்கா போகும் அவர்கள், இடை இல் நமக்காக அதைக்கூட விட்டுக்கொடுத்து, உதவினார்கள் என்றல் அந்த மனித நேயத்துக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியலை எனக்கு, அது தான் இப்படி செய்தேன். நான் ரொம்ப பயந்து போனேன், நாம் அனைவரும் அவ்வளவுதான் ...முடிந்தோம் .. என்று நினைத்தேன். எவ்வளவு பொறுப்பாக நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்தான் அந்த பையன்"...மேலும் சொன்னாள் " Sarfaraz " என்றால் 'அரசன் ' என்று அர்த்தம், அதனால் தான் அவனுக்குள்ளாகவே அந்த 'காக்கும்' எண்ணம் இருந்திருக்கு .... என்று மனம் நெகிழ்ந்து சொன்னாள்.

    மேலும் தொடர்ந்தாள் " ஒரு காலத்தில் நம் இந்தியாவில், இந்திய மண்ணில் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளி நாட்டிலிருந்து வருவார்களாம். அந்த அளவு புனிதம் நிறைந்ததாக இருந்த நம் நாடு, இப்போது எப்படி ஆகிவிட்டது??? இன்று அந்த புனிதம் எங்கே போனது ?........அந்த புனிதம் கேள்விக்குறி ஆனது போல உணர்கிறேன்.....இந்த மண்ணில் பிள்ளை பெற்றதை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்" என்றாள்.

    இது எதுவுமே தெரியாத Sarfaraz நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். தன்னுடைய நன்றியை தெரிவித்து விட்ட திருப்தி இல் ஊர்மிளாவும் கண் அயர்ந்தாள்.

    கிருஷ்ணாம்மா [​IMG]
     
    Barbiebala, Caide, Sun18 and 2 others like this.
    Loading...

  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அம்மா சொல்ல வார்த்தையே இல்ல, இங்கே மழை பெய்த பொது இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. Paper la பார்த்து இருப்பீங்க.

    மனித நேயம் உள்ளவர்கள் இப்போழுதும் இருக்கிறார்கள் என்பது இது மாதிரியான நிகழ்வுகள் காட்டுகிறது.

    கதை as usual kneesmiley..
     
    2 people like this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நான் இந்த கதை சௌதி இல் அந்த நாட்டு மன்னர் இறந்த போது எழுதினேன்; அவ்வளவு ஒழுக்கமாய் இருந்தார்கள் அவர்கள் .............அது என் மனம் தொட்டது அதனால் பிறந்த கதை இது :)................நீங்கள் சொல்வது போல சென்னை மழை பல மனிதாபிமான முள்ளவர்களை அடையாளம் காட்டி இருக்கு !
    .
    .
    .
    .
    நன்றி ப்ரியா [​IMG]
     
    3 people like this.
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Yes ma, very nice story.
     
    2 people like this.
  5. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    இப்பொழுது தான் ''நன்றி'' கதையை பார்த்தேன் . 'நன்றி 'கதைக்கு நன்றி மா.. இந்த கதையில் முஸ்லிம் அன்பரின் மனித நேயத்தை பார்த்து வியக்கிறேன் மா .... கதையை படிக்கும் பொழுதே ஊர்மி அந்த அன்பரின் பெயரை தான் தனது குழந்தைக்கு சூட்டி இருப்பாள் என யூகித்து விட்டேன் பிரசவ வேதனையை அழகாக சொல்லி உள்ளீர்கள் எனக்கு பிளாஷ் பாக் ஞாபகம் வந்தது ..

    இதே போல் சென்னையில் இந்த மாதம் ஆரம்பத்தில் நடந்த தொடர் மழையின் பொழுது ஒரு முஸ்லிம் அன்பர் ஒரு பெண்ணை பிரசவ சமயத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து அந்த பெண்ணின் பிரசவ செலவையும் அந்த குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றார். அந்த குழந்தையின் அம்மா ஹிந்து ஆக இருந்தும் தனது குழந்தைக்கு அந்த முஸ்லிம் அன்பரின் பெயரை சூடி உள்ளார்கள். இது செய்தி தாளில் வந்த செய்தி.


    தங்கள் கதையை படிக்கும் பொழுது அந்த நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது அதனால் தான் இவ்வளவு பெரிய பின்னூட்டம் yumsmiley
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம்.. நான் அந்த பதிவில் சொன்னது போல இது போனவருடம் நான் எழுதினது .........:..................:(.........லேட்டாக போட்டதால் பேப்பர் செய்தியை பார்த்து எழுதியது போல ஆகிவிட்டது உமா ..............:)
    .
    .
    .நல்ல மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள் !:clap...:clap...:clap
     
    1 person likes this.
  7. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ma I also DId not notice the post updated by our friends. I thought today u posted nu. I wanted to update my comment first. After posting, I saw the comments posted in this thread.otherwise I never put paper news. Due to anxiety., I did this. See how I become a fan of your story nu. Haha
     
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ma why calm today. Where is priya.? Where is grandfather grand mother story. Waiting to see u and priya
     
    1 person likes this.
  9. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    I saw this message just now ma. I was thinking about the same and posted it in amma's thatha paati story thread.

    Uma ma, just a suggestion. Please quote the username of the person to whom your sending the message incase you didn't click reply with quote. So that we will receive notification when you message us.

    Only the thread starter or creater will get notification whenever any post is made in their thread.
     
    2 people like this.
  10. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Good Morning priya noted ma. Hereafter I will follow as per yr suggestion. Advance new year wishes
     
    1 person likes this.

Share This Page