1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்பு(பூ).....நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Aug 4, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இதுவரை நட்பு பற்றி நான் எழுதியதில்லை இனிமேலும் எழுதப் போவதில்லை.இந்த வரிகள் வறண்ட என் வாழ்க்கையை வசந்தம் ஆகிய பசுமைகள்.
    நீளத்தைச் சுருக்கி என் நட்பின் ஆழத்தைக் குறைக்க மனம் வரவில்லை.எனவே இரண்டு அஞ்சலில் தருகிறேன். அசௌகர்யத்திற்கு மன்னிக்கவும்.

    மண்ணின் மைந்தர்களாய் ,கண்ணின் காட்சிகளாய்,கனவின் நிறங்களாய்,வரமாய் என்னிடம் வந்து சேர்ந்த என் நட்பின் நடவுகளே ,வணக்கம்,நாம் அழிந்தாலும் நாமாகவே பிரிந்தாலும்,மரணமில்லா நட்பு நம்முடையது.அதை நவில வருகிறது இந்த மடல்.

    *********************************************************************

    கூடப் பிறந்தவர்கள் அறுவர் ஆயினும்
    பிறந்தது முதல் தனிமையே தவமென நான் திரிய
    இனிமையைச் சேர்க்க திவ்யமாய் வந்து சேர்ந்தாள்
    ஆங்கிலோ -இந்திய தோழி.
    உன் தோல் ஒவ்வாமை பார்த்து என் வீட்டில் தலை சொறிய
    அதுவே ஒரு காரணம்
    நான் உன்மேல் அதிகமாய் அன்பைச் சொரிய.
    காதுபட பேசிய வார்த்தை கேட்டு கலங்கிய உனக்கு
    தோதாய் உன் கரம் எடுத்து தடவிக்கொடுத்து
    நான் சொன்ன ஆறுதல்.
    சரியாமல் நின்ற நம் சிறுவயது நட்பு.

    வறண்ட என் நட்பு நிலத்தில்
    வந்து விழுந்த முதல் பதியன் விதை
    காலம் காலனாய் நம் நட்பில் விளையாட
    சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என்றவளை
    அள்ளிவந்து போட்டார்கள் அம்பாசிடர் வண்டியிலே
    புலம் பெயர்ந்தேன் உன்னிடம் சொல்லாமலே ..
    வழி நெடுகிலும் அழுகை வலியுடன்
    இன்னும் காயாமல் ஈரப் பசையுடன்.

    *********************************************************************

    வந்து நிற்ற புதிய இடத்தில்
    வழிய வந்து நட்பு கை குலுக்கினாள்
    அமைதியின் பிறப்பிடம்,அன்னையை இழந்த அவள்.
    விடுதியில் இருந்த எனக்கும்
    சடுதியில் சந்தோசம் கொடுத்த என் தோழி.
    உன் கலருக்கு கருப்பு பொட்டு தான் அழகு என்று
    திருஷ்டிப் பொட்டு வைத்தவள்.
    இளம் வயதிலேயே பெரிய மனுசியைப் போல் பக்குவம்.
    நான் வரையும் படங்கள் பாதி எல்லாமே
    அவளின் நோட்டுப் புத்தகத்தின் மீதியில்.
    அதன் அடியில் நான் கிறுக்கும் வரிகளை
    அட்சர சுத்தமாய் பாடிக் காண்பித்து மகிழும்
    அந்த நேச உள்ளம்.
    ரசித்துச் சொல்வாள்
    உன்னை உயிரோடு ஒருநாள்
    ஓவியக் கண்காட்சியில் வைக்கப் போகிறேன் என்று.
    உன் கண் காட்சியில்
    நான் நிலையாய் நின்றிட எனக்கு கொடுப்பினை இல்லையடி என்
    தோழியே

    நட்பு விதை வேர்விட்டு வளர உரமாய் நின்றவள்.
    நான் வரைந்த நட்பின் நகலை உன்னிடம் விட்டு
    அசலாய் நான் மட்டும் கடந்து வந்தேன் தனியாய் வேறிடம்
    மீண்டும் நட்பின் வட்டத்தில் சிக்காமல்
    சிக்கனமாய் நானும் என் நினைவுகளும்……….

    ********************************************************************

    கல்லூரி கனவு தோட்டத்தில்
    தந்தையை இழந்த எனக்கு ஆறுதலாய்.
    என் நட்பு வானில் தாரகையாய் வந்தவள் அவள்.
    அவள் தோள் சாயும் உரிமையை எனக்கு மட்டுமே தந்தவள்.
    உலுக்கிப்போடும் நேசத்தை
    கலப்படம் இல்லாமல் என்னிடம்
    உயிர்ப்பித்தவள்.
    பாசமிகு உலகத்தை எனக்கு அறிமுகம் செய்தவள்.
    அதில் உயிர் மருகும் உறவு என்னவென்று உணர்த்தியவள்.
    வளர்ந்த இந்த சிறு பிள்ளைக்கு வழி சொல்லி
    க் கொடுத்தவள்.
    வரும் வலிகளை மறக்கக் கற்றுக் கொடுத்தவள்.

    இன்றும்
    எனக்காய் கண்ணீரோடு பிரார்த்திக்கும்
    கருணை நெஞ்சம் கொண்ட தாயவள்.
    என் கற்பான நட்பின் நாயகி.

    நட்பின் துளிர் மரமாய் கிளை பரப்ப துணை நின்றவள்
    பிரிவின் வலி என்னவென்று எனக்கு தெரியும்.எனவே
    மீண்டும் நட்பின் வட்டத்தில் சிக்காமல்
    சிக்கனமாய் நானும் என் நினைவுகளும்.
    பத்திரமாய் இருந்தேன் என் பழைய நட்பு
    நகர்தலுடன்………
    ********************************************************************

    புதுப்பிக்க வந்தவள் இந்த புது இளவேனி
    எனைப் புரட்டி போட்ட புலவி.
    என் சங்கத்தில் முதல் ஆளாய் வந்து சேர்ந்த சுத்தத் தங்கம்
    நட்புக்கு நான் வரி எழுத, தமிழ் தானாய் கொண்டு வந்து சேர்த்த அங்கம்.
    காணமல் காதல் வராது.நட்பு வளரும்.
    இணையில்லா இணையத்து நட்பு.......

    எதிர்பாரா நட்பு....எழுதுகோல் துணையுடன்
    நதிமூலம் இல்லா நட்பு ....அன்பெனும் மூலதனத்துடன்
    சுயநலம் இல்லா நட்பு...சொந்தமெனும் சிந்தையுடன்.
    முகம் தெரியா நட்பு...முழு முகவரியுடன்
    துயர் என்றால் தோள் கொடுத்து
    துடைத்திடும் வழியும் கண்ணீர் துடைத்து
    பொங்கும் பூம்புனல் போல் நாளும் பொங்குது.

    கொடிபோல் வளர்ந்து படர்ந்து அடர்ந்து
    எங்கள் காலம் கடந்தாலும் வாடாதிருக்கும்
    இந்த வளர் பிறை வானத்து நட்பு .
    பட்ட மரம் மீண்டும் துளிர்க்க பசியம் கொடுத்தவள்.
    தொடர்கிறது...............................
     
    Last edited: Aug 4, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...!!!!!!

    தடங்கலுக்கு வருந்துகிறேன்
     
    Last edited: Aug 4, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...!!!!!!

    இத்தனையும் நவின்ற நான்
    என் நட்பின் நேசனைப் பற்றி சொல்லாமல் விட்டால்
    நட்பை நற்றாட்டில் விட்ட பாவி ஆகி விடுவேனே!!!!!!

    என்னைக் கரம் பிடித்த தாசனே என் முதல் நண்பன்.
    திருமணத்திற்கு சில தினங்கள் முன்
    ஆருயிர் தோழனை காலன் கொண்டு செல்ல
    நண்பனது இழப்பில் என் வருகை.
    ஏகாந்தம் நிறைந்த அந்த வேளையிலும்
    எனக்குத் தெரிந்தது
    கண்ணில் காந்தமோ ,காதலோ, காமமோ இல்லை.
    உணர்ந்தது அவர் இழந்திட்ட ஈடில்லா
    நட்பை மட்டுமே……
    உப்பு கரித்திட்ட அவர் கன்னத்து விழிநீர் சொல்லியது.
    “நீ என் உற்ற நண்பி” என்று.
    விகல்பமாய் கேட்டது
    “தருவாயா நான் இழந்த என் சோக நேசத்தை” என்று .



    கடந்துபோன நட்பின் வலியில் நானும்
    இழந்துபோன நட்பின் வலியில் அவரும்
    நண்பர்களானோம்.



    இல்லறத்து உறவில் இணை பிரியா துணைகளாய்
    துறவறத்து நட்பில் இமை பிரியா தூண்களாய் …
    அவர் எனக்கு ரகசிய சிநேகிதன் இல்லை………
    நாடறிந்த நாளும் தெரிந்த நட்புக் காதலன்.

    என் நட்பின் நிலம் கலைத் தோட்டமாய் இன்று பூத்துக் குலுங்க
    யாதுமாகி நிற்கும் என் தாயுமானவன் .

    **********************************************************************

    பல வேளைகளில் நினைத்துக் கொள்வேன்
    காதலோடு மணம் செய்யும் பக்குவம் இல்லா மனங்களுக்கு
    இந்த நட்புப் பார்வை இருந்திருந்தால்
    விவாதம் இல்லாமலேயே
    ரத்தாகி போய் இருக்கும் விவாகரத்துக்கள்.


    காதலில் திளைப்போரே!!!!
    இயற்கையின் பொருட்கள் .அது உங்கள் காதலின் இருக்கைகள்
    இருக்கின்ற வரிகள்-அது உங்கள் காதலின் சொத்துக்கள்
    ஒன்றையும் விடாமல் உள்வாங்கி நின்று
    காதலின் பின் வலை சுற்றும் கிறுக்கர்களே!!!!!
    வானவில் நிறம் உங்கள் காதலின் நிறம்
    அத்தனை வண்ணங்களும் இருக்கட்டும்
    உங்கள் காதலின் வர்ணங்களுக்குள்.

    அந்தக் கல்லறைத் தோட்டத்தைப் பாருங்கள்……….
    புல்பூண்டு முளைத்து வெறுமையாய்
    உறங்கி கொண்டிருக்கும் காதல்.
    அருகிலே
    நண்பனுக்காய் குருதி கொடுத்து உயிர் கொடுத்து
    சுருதி சேர்த்த நட்பு.
    நட்புக்காக உயிரைக் கொடுப்பது
    அரிதல்ல…
    உயிரைக் கொடுக்கும்அளவிற்கு
    நட்பு கிடைப்பது அரிது…

    புல் பூண்டு தான் அங்கேயும்
    ஆனால்
    புல்லின் நுனியில் நுண்ணிய வெண் நிற மலர்கள்
    புரிகிறதா ……. நட்பின் நிறம் எதுவென்று.


    நானும் அறுதியிட்டு சொல்கிறேன்
    என் கல்லறையில் எழுத வேண்டிய
    கல்வெட்டு வாசகங்கள் இதுவென்று .
    .

    என் நட்பு சருகானாலும்
    நிறம் மாறாது என் நட்பு சாம்ராஜ்யத்தின் நடவுகள்…..
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
    என் நட்பு கெட்டாலும்
    மேட்டிமையாய் வெண்மையாய்
    வியாபித்திருக்கும் எந்நாளும் ….


    இப்படிக்கு,
    நானும் என் நட்பு நடவுகளும்.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...!!!!!!

    மொழியின்றிப் போனேன் நான்.. நட்பின் உளி கொண்டு நீ செதுக்கிய இந்த நட்பு மடலில் ...

    விழி நிறைக்கும் சொற்கள் கொண்டு கற்கண்டாய் கவி தந்த அல்லித் தண்டே ...

    வறண்ட உன் மனதின் வசந்தமாய் வந்த முதல் நட்பும் .....
    வாடிய உன் மன வாட்டம் போக்க வந்த இரண்டாம் நட்பும் .....
    வசந்தமாய் உன் மனதிலே மயக்கும் மாருதமாய் வீசும் உன் மூன்றாம் நட்பும்....
    வாழ்விலே துணையாய்.. உனக்கு நல் இணையாய்.... உள்ளம் இயைந்த உன்னவரின் நட்பும், நேசமும்,

    நீ சொன்ன விதம் வெகு அழகு.. கவிதை நீளம் என்பதை விட அவை எல்லாம் இருப்பது உன் மனதின் ஆழம் என்பது தெளிவு இதில்..

    நான்காவதாய் வந்த என்னையும், அதே ஆழத்தில் வைத்தாய் என்பதில் என் மகிழ்ச்சியும்.. நெகிழ்ச்சியும் சொல்ல வரவில்லை வார்த்தைகள்.. கண்டவரையும், கண்டதில் தேர்ந்தெடுத்த சிலரையுமே நட்பாய் கொண்டவள்.. காணமலே என் மீது வைத்த அன்பை நான் என்னென்பேன்.. உனது அன்பில் பொழிவிலே, பொலிவிலே.. காணாது நான் போனேனே..

    உன் நட்பின் சாம்ராஜ்யத்தில் நான் ஒரு பிரஜையாக இருப்பேனா என எண்ணிய நாட்கள் போய், ராஜ்யத்தின் அங்கம் நான் என என் நட்புக்கு பங்கம் வராது வரி சொன்ன பங்கையமே... என் பாரிஜாதமே.... நன்றி உனக்கு நெஞ்சத்தில் ஆழத்திலிருந்து...:bowdown

    வார்த்தைகள் வேலை நிறுத்தம்.. இத்தனை வந்ததே அரிது தோழி உன் நட்பைப் போலவே...
     
    Last edited: Aug 4, 2010
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: நட்பு(பூ).....நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...

    Yenna arumai vaasikka thevai porumai alagu padaipu jamuun sorry yashi.Super
    natpin alagu thangam pola minnugirathu
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...!!!!!!


    என் தோழி வேணிக்கு.
    வலியின் சுழிப்பை அதிகம் அறிந்தவள் நான்.
    தனிமையில் அதிகம் கழித்ததால்,என் அருகில் வரும் பாசம்,பரிவை என்னிடம் வைத்துக் கொள்ள கொஞ்சம் பயம்...எங்கே பிரிந்து விடுமோ என்று.அதற்கு நான் தனிமையிலே இருக்கலாமே .
    வரி கொடுக்க உளி தந்த என் மேலோன் வலி தாங்கும் இதயம் தர மறந்தான் ...

    நட்பு என்று சொன்னால் இவர்களைத் தவிர வேறு யாரும் என் மனதிற்குள் வர மாட்டார்கள்.
    இன்னும் இருக்கிறார்கள் நிறை பேர்.என் மேல் அக்கறை கொள்ள,,,அன்பு காட்ட,,,என்னை புரிந்த நட்பு உள்ளங்கள்...இருந்தாலும்......
    என்னை நேசம் கொண்டு செதுக்கிய சிற்பிகள் இவர்களே.....என் உயிர் போனாலும் நான் மறேவேன்.....


    ஆளைப் பார்த்து, அழகைப் பார்த்து, அந்தஸ்து பார்த்தா நட்பு வரும்....வந்து விட்டது நமக்குள் நகம் கூட காணாமலே
    அலைக்களின் ஆர்ப்பரிப்பும்
    நட்பின் சிதறல்களும்
    ஒன்றென்பேன்....அவை என்றுமே தாமாக நிகழ்வதில்லை.அதுபோலத்தான் நம் நட்பும்.

    காற்றின் உந்துதல்
    அலைகளின் பிறப்பு என்றால்
    காலத்தின் கட்டாயம்
    நட்பின் சிதறலாகின்றது…
    சுனாமிப் பேரலையாய்
    கடல் வெடித்துத்
    தெறித்தாலும்
    மீண்டும் கடல் சேர்வதில்லையா…???
    அப்படித்தான் நாமும் – நம் நட்பின் சிதறலும்.

    சேர்ந்து விட்டாய் என் என் நட்பு நந்தவனத்தில் புதிய பதியனாய் நீ

    வெண்மையும் வெண்மையும் சேர்ந்தால் என்ன நிறம் கிடைக்கும் என் தோழியே...வெண்மைதானே
    அதுதானே என் நட்பின் நிறமும் .......:)
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: நட்பு(பூ).....நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...



    பொறுமையுடன் படித்து என் நடவுகளின் அருமை அறிந்து நீங்கள் கொடுத்த உடனடி பின்னூட்டம்
    எனக்குள் பேரலை மகிழ்வைத் தருகிறது
    நன்றி சொன்னால் அது கொஞ்சம் குறைச்சல் தான்.Bow.Bow.Bow.
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: நட்பு(பூ).....நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...

    வறண்ட என் நட்பு நிலத்தில்
    வந்து விழுந்த முதல் பதியன் விதை
    நட்பு என்ற வார்த்தையின் பொருளை முதன்முதலில் நமக்கு அறிமுகம் செய்யும் சரியான ஒருவரின் நட்பு எந்த காலத்திலும் போற்றுதலுக்குரியது தான்.... அதுவும் சிறு வயதில் கள்ளம் காண முடியாத நட்புக்கு இணையே இல்லை. எந்த தேவைக்காகவும் அன்றி வெகு உண்மையாகபழகும் நட்பு அது....
    நட்பு விதை வேர்விட்டு வளர உரமாய் நின்றவள்.
    கற்றலில் போட்டி போட்டு, பொறாமை அறவே கலக்காத தூய பாலின் நிறம் கொண்ட பள்ளி நட்பு... நினைக்க நினைக்க சந்தோசம் மட்டுமே பெருக்கிடும் அமுதசுரபி...
    நட்பின் துளிர் மரமாய் கிளை பரப்ப துணை நின்றவள்
    சூழல் மாறும்... பழகும் மனிதர்கள் மாறுவர்... பக்குவமில்லா வயதில் துணையாய் நம் சந்தோஷங்களை பகிர வரும் நட்பு..... தவறைக் கண்டிக்க, துன்பத்தில் தோள்கொடுக்க, வெற்றிக்கு தூண்டுதலாய், என்றும் உறுதுணையாய் கிடைக்கும் கல்லூரி நட்பு சரியாய் அமைந்துவிட்டால்....அதுவே வாழ்வில் பெரும் வெற்றி தான்...
    பட்ட மரம் மீண்டும் துளிர்க்க பசியம் கொடுத்தவள்.
    உங்களுக்குள் வேறாய் நின்ற நட்பை, நட்பு என்ற தண்ணீர் ஊற்றி நட்பையே விளைவிக்க செய்ய வந்தவள், இத்தனைக்கும் தாங்கள் நேரில் கூட கண்டதில்லை எனும்போது, சொல்ல தேவையேயில்லை உங்கள் நட்பின் சிறப்பை...

    நம் கைப்பிடித்தவனே காலம் முழுமைக்கும் நண்பனாய் கிடைத்துவிட்டால், பெரும் வரமே அதுதான்.. இத்தனையும் கிடைக்கபெற்ற நீங்கள் மிகவும் பாக்கியசாலிதான் சரோஜ்..
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: நட்பு(பூ).....நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...

    Vegu arumai Saroj.........
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: நட்பு(பூ).....நிறம் மாறா என் நட்பின் நடவுகள் ...

    நட்புக்கு சரோஜ்,
    கவிதைக்கு சரோஜ்,
    வெண்மைக்கு சரோஜ்.

    என் அவதாரப் பெயரை உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
     

Share This Page