1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நகைச்சுவை எழுதுவது எப்படி. -- கடுகு

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jun 11, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நகைச்சுவை எழுதுவது எப்படி. -- கடுகு
    On reading Shri Thyagarajan's humorous take on Lakumi ,I thought of sharing an article on'how to write a humour tinged article.
    முன் குறிப்பு:
    எழுதுவது எப்படி என்று ஒரு பெரிய புத்தகத்தை பழனியப்பா பிரதர்ஸ் பல வருஷங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். 400-க்கும் அதிகமான பக்கங்கள் நகைச்சுவை எழுத்தாளர் மகரம் அதன் தொகுப்பாளர். ’நகைச்சுவை எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அதை இங்கு தருகிறேன். ’நகைச்சுவைக்கு நீ என்ன அதாரிட்டியா? உன்னை எழுதும்படி யார் சொன்னது என்று யாரும் கேட்கக்கூடாது என்பதற்காக இந்த முன்னுரை! !)

    ************************* [​IMG]
    இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான் போவீர்கள். காரணம் நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சத விகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சத விகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து, ரசித்து, முயன்று தனது திறமையை அதிகரித்துக் கொள்ளமுடியும். இப்படி நான் எழுதிவிட்டதால் கட்டுரையைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள்! உங்களுக்கு இயற்கையாக அந்தத் திறமை இல்லை என்று நீங்களே முடிவு கட்டி விடாதீர்கள்.
    [​IMG]பெரும்பாலான நகைச்சுவை கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் வீட்டில் அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன் காரணமாக அவர்களால்; ஒருபடி அதிகமாக ரசிக்க முடியும்.


    “காங்கோ நாட்டில் லூஷிம்போவில் கிஷிமுஷிக்கா என்பவன்...” என்று நகைச்சுவைக் கதையை ஆரம்பித்தால் தோல்விதான். இந்தக் கதையில் சொல்ல வந்த கருத்தை,” திருவல்லிக்கேணியில் சில பல பெருச்சாளிகள், எலிகள், சில ஆயிரம் கொசுக்கள் வாழும் சந்து வீட்டில், பல வருடங்களாக இருந்துவரும் மிஸ்டர் பூங்காவனம்...” என்று ஆரம்பித்துப் பாருங்கள். படிப்பவருக்கு கதையில் ஒரு அன்னியோன்னியம் ஏற்படும்.


    [​IMG]
    இங்கு ஒரு விஷயம். நகைச்சுவைக் கதை, கட்டுரைகளில் கததா பாத்திரங்களின் பெயர்களும் முக்கியம். கிருஷ்ணமூர்த்தி, இளம்கார்வண்ணன், அருள்மொழி, சுப்பிரமணியன் என்றெல்லாம் பெயர் வைக்காதீர்கள். பெயர்களும் ஒரு நகைச்சுவை உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் வைக்கப்படவேண்டும்.

    எழுதுவது மிகவும் எளிது. ஆனால் எழுதத் தொடங்குவதற்கு முன்பு நிறைய மனதில் அசை போடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நிறையை யோசனை செய்து மனதிலேயே கதையை உருவாக்குகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுலபம் அதைக் காகிதத்தில் எழுதிவிடுவது.

    பலருக்கு இன்று எழுதும் ஆர்வம் இருக்கிறது. (ஆர்வத்தையே திறமை என்று சிலர் தாங்களாகவே கருதிக்கொண்டு பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி ஏமாற்றமடைகிறார்கள்,)


    ஆகவே நகைச்சுவை எழுதுமுன், நிறைய யோசியுங்கள். நிறையப் படியுங்கள். படிக்கப் படிக்கத்தான் சிந்தனை விரிவடையும். கற்பனை வளம் பெறும். மூளைக்கு உரம் கூடும்.

    ஒரு நகைச்சுவை கதையைப் படித்து முடித்த பிறகு ஒன்றிரண்டு நாள் கழித்து அதே கதையை நீங்கள் திரும்ப எழுத முயற்சி செய்து பாருங்கள். கதையை எழுதி விடுவீர்கள். ஆனால் அதில் நகைச்சுவை முழுதுமாக இடம் பெற்றிருக்காது.

    கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு - ஏன் கதையை விட்ட அதிகம் என்று சொல்லலாம் - முக்கியமானது நடை. கதை சொல்லும் விதம், நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், உரையாடல்களை சரளமாகவும் இயற்கையாகவும் அமைக்கும் விதம், சுவையாக முடிக்கும் விதம் எல்லாமே முக்கியமானவை.

    Jayasala42

    அடுத்து, நகைச்சுவை கதையோ, கட்டுரையோ தனித்து நிற்கும் வகையில் எழுதப்படவேண்டும். அதாவது யாருடைய நடையையோ கதையையோ குண விசேஷத்தையோ மனதில் வைத்துக்கோண்டு அதைக் கேலி செய்யும் பாணியில் , ’சடையர்’, பாரடி’ போன்று எழுதுவதை ஆரம்ப எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் எதை மனதில் வைத்துக்கொண்டு எழுதி இருக்கிறீர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே அவர்கள் ரசிப்பு முழுமையாக இருக்காது,

    உதாரணமாக, சோ சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். ஆனால் அவர் சில வருஷங்களுக்கு முன்பு எழுதிய அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகளை இப்போது படியுங்கள். சிலவற்றை முன்பு ரசித்த அளவு இப்போது ரசிக்க முடியாது. காரணம் அன்றைய அரசியல் நிலைமை அப்படியே நம் நினைவில இருக்காதே.!

    தேவன் எழுதிய ‘ராஜத்தின் மனோரதம்’ போன்றவைகளைப் படியுங்கள். கல்கி எழுதிய ‘ஏட்டிக்குப் போட்டி’ முதலிய கட்டுரைகளைப் படியுங்கள்/ நாற்பது ஐம்பது வருஷத்திற்கு முன்பு எழுதப்பட்டவையாக இருப்பினும் இன்றும் ஜீவனுடனும் நகைச்சுவை சிறப்புடனும் அவை உள்ளன.

    அதற்காகச் சடையர் போன்றவைகளை எழுத முயற்சிக்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆரம்ப எழுத்தாளர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டால் ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்கவேண்டும்.. பின்னால் ஒரு தொகுப்பாக வெளியிட்டாலும் வெற்றிகரமாக அமைவதும் கடினம்.

    நகைச்சுவை எழுதும்போது சிலேடைகளை பொருத்தமாகச் சேர்க்கலாம். பேச்சுத் தமிழில் மட்டும் சில சிலேடைகளைக் கூறமுடியும்.அவற்றை எழுத்தில் கொண்டுவர முயலாதீர்கள்.

    அதீதமும் நகைச்சுவை முக்கிய அம்சம்.. இப்படி நடக்கவே முடியாது என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இத்தகைய நகைச்சுவை ரசிக்கப்படும்.

    வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தவனைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது என்று சிறுவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம். ஆனால் நம் எல்லாருடைய நகைச்சுவை உணர்வும் இந்த அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. மற்றவன், சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டு அவதிப்படுவதை, பைத்தியக்கார முயற்சியில் ஈடுபட்டு நஷ்டப்படுவதை அல்லது கஷ்டப்படுவதை, வம்பில் மாட்டிக்கொண்டு அசடு வழிவதை - இப்படி பலவற்றை நகைச்சுவையாக ரசித்து மகிழ்கிறோம். ஆகவே கதை எழுதும்போது அப்படிப்பட்ட கேரக்டரை உருவாக்குங்கள். வாசகர் அசடு வழிகிற மாதிரி எழுதிவிட்டால், உங்கள் கதையை யாரும் சீந்த மாட்டார்கள்! இதனால்தான் நான் பல நகைச்சுவை கட்டுரைகளில் ‘என் அருமை மனைவி’ கமலாவையும் என்னையும் கதாபாத்திரங்களகக் கொண்டு வந்துள்ளேன். கமலா என்னைத் திடிட்டினால் படிப்பவருக்கு சந்தோஷம்.( கமலா என்னைதானே திட்டுகிறாள். அவரை இல்லையே! வாசகருடைய மனைவி அவரைத் திட்டவில்லையே! கமலாவின் அபத்தமான யோசனைகளை ரசிக்கிறார்கள். அவருடைய மனைவி இதைவிட அபத்தமான யோனையை நிஜமாகவே சொல்பவளாக இருக்கலாம். இருந்தாலும் வாசகர் அதைச் சௌகரியமாக மறந்து விட்டு கமலாவின் அபத்தங்களைப் படித்து புன்னகை புரிவார்!

    சீதாப் பாட்டியின் வசவுகளை அப்புசாமி வாங்கிக் கட்டிக்கொள்வதையும், அவர் ‘அரைபிளேடி’டம் அகப்பபட்டுக் கொள்வதையும் ரசிப்பதற்குக் காரணம் ’வாழைப்பழ தோல்’ மனப்பான்மைதான்! இந்த மனப்பானமையைப் புரிந்துகொண்டு கதையை அமையுங்கள்.

    பல வருடங்களுக்கு முன்பு சசி என்பவர் எழுதிய நகைச்சுவை கதைகளைப் படித்து இருப்பீர்கள். ஒரு பக்கக் கதையாகத்தான் இருக்கும். கடைசி பாராவில் திடீர் திருப்பம் இருக்கும். அதுவே கதைக்கு உயிராகவும் நகைச்சுவை பரிமாணமாகவும் அமையும். இந்த மாதிரி கதைகள் மிகவும் நீளமாக அமைந்துவிடக் கூடாது. கதையின் முடிவில்தான் ஜீவன் இருப்பதால் முடிவு வரை வாசகர் படிக்கும் வகையில் எழுதப்படவேண்டும் வளர்த்திகொண்டேபோனால் பாதியில் படிப்பதை நிறுத்திவிடுவார். நகைச்சுவை வரப்போகிறது வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் படித்துக் கொண்டே போவார்? ரப்பர் பேண்டை ஓரளவுதான் இழுக்கலாம். அதிகமாக இழுத்தால் அறுந்துவிடும். அது இந்த மாதிரிக் கதைகளுக்கும் பொருந்தும்.

    “ஹஹ்ஹ்ஹா’ என்று சிரிப்பு எற்படுதுவதுதான் நகைச்சுவை கதை என்று கருதாதீர்கள். அந்த மாதிரி முயற்சிகளும் வெற்றி பெறுவது கடினம். படிக்கும் வாசகார்கள் மனதில் லேசான நகைச்சுவை உணர்வைத் தோற்றுவிக்க வேண்டும்.

    ஆர். கே. நாரயணனின் புத்தகங்களைப் படியுங்கள். கதைக்கு சுருதி கூட்டுவதுபோல் நகைச்சுவை சேர்ந்து இருப்பதைக் கவனியுங்கள். தனியாக ஜோக்குகள் இருக்காது. கோணங்கிதனங்கள், அபத்தங்கள் இருக்காது, இருந்தாலும் கதை நெடுக சேனல் மியூசிக்கைப்போல மெலிதான நகைச்சுவை ஆரம்ப முதல் நெடுக இருந்து கொண்டே இருக்கும். இது அவருக்கெனக் கை வந்த கலை. அவரது நடையே அவருக்கு வரப்பிரசாதம்.

    ஓவியர் தாணுவின் கோடுகள் எப்படி ஒரு நகைச்சுவை உணர்வை தோற்றுவிக்கின்றன என்பதைக் கவனித்திருப்பீர்கள். அவர் சீரியசாகப் போட்டாலும் நகைச்சுவை பாணியில் போட்டமாதிரிதான் இருக்கும். (ஆகவேதான் அவர் சீரியஸாகப் போடுவதில்லை.) இந்த மாதிரிதான், எழுத்து நடையிலும் நகைச்சுவை அமையவேண்டும் மேலும் சரளமாக இருக்கவேண்டும். இது நகைச்சுவை கதை என்பது ஆரம்ப வரிகளிலேயே வாசகர் மனதில் பதிந்து விடவேண்டும். இதனால் ஒரு லாபம் உண்டு, இந்த எண்ணத்துடன் படிக்கப்போகும்போது எல்லாமே அவர்களுக்கு நகைச்சுவையாகத் தோன்றும். இது ஒரு விதமான ‘பிரெயின் வாஷிங்’தான்!

    நகைச்சுவை கதைகளில் கேரக்டரை உருவாக்குவதில் மிக்க கவனம் வேண்டும். சற்று வித்தியாசமான, கோணங்கியான, கொனஷ்டையான, ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட கேரக்டர்களாக இருப்பது நலம்.

    எப்படி இருப்பினும் அவை கல்லில் செதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். அதை நாம் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது கதையின் வெற்றியும் தோல்வியும் ( இந்த இடத்தில் கொஞ்சம் சுய பெருமை: கேரக்டர் என்ற தலைப்பில் சுமார் 50 பேனா சித்திரங்களை, ஆசிரியர் ‘சாவி’யைப் பின்பற்றி எழுதினேன். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை கட்டுரைகளாகவே அமைந்து பராட்டு பெற்றன. இந்த கேரக்டர்களோடு இன்னும் சில கதா பாத்திரங்களைச் சேர்த்து நாவல் கூட எழுதலாம்.


    இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு நகைச்சுவை எழுதுவது நம்மால் ஆகாத காரியம் என்று எண்ணிவிடாதீர்கள். எல்லாருக்கும் உள்ளேயும் ஒரு நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை உசுப்பி எழுப்பி, சில்லறை விதிகளை தெரிந்தோ தெரியாமலேயோ பின்பற்றி எழுதுங்கள். வெற்றி பெறுவீர்கள்.


    இந்தச் சமயம், ஒரு உண்மையைக் கூறவேண்டும். இன்று தமிழ்நாட்டில் நகைச்சுவைக் கதை, கட்டுரை எழுதுபவர்கள் அபூர்வமாகிவிட்டார்கள். ( அதனால்தான் இந்த கட்டுரை எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது வேறு விஷயம்.) ஆகவே நகைச்சுவை துறையில் புகுந்தால் -- அதிகம் போட்டியில்லாத இந்த துறையில் புகுந்தால் - விரைவில் பிரபலம் அடையவும் வாய்ப்பு உண்டு.

    நகைச்சுவை எழுதுவது பெரிய அசுர வித்தை அல்ல. ஆனால் நகைச்சுவை எழுதுவது எப்படி என்று எழுதுவது சாதாரணமான விஷயமில்லை. அதற்கு இந்த கட்டுரையே சாட்சி. ஆர்வத்துடன் முயற்சி செய்யுங்கள்; வெற்றி பெறுவீர்கள்!
    jayasala42
    கடுகு at 8:47 AM
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:“இலக்குமி” கடுகை ஞாபகபடுத்த, அவர் ப்ளாகில் தந்த யுக்த்திகளை பயன்படுத்தி ஓர் கதை அல்லது கட்டுரை எழத முயற்ச்சி செய்ய தூண்டுகிறது தங்கள் பதிவு.
    மிக்க நன்றி.
     

Share This Page