1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தேடல் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 12, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நான் யார் ?

    ஓடும் நதியா ? வாடும் பயிரா ?
    தேடும் பொருளா ? முதலா ? முடிவா ?
    கேள்விகள் பலவும் சிந்தையில் சிறக்கும் !
    பதிலைக் காணும் ஆர்வமும் பிறக்கும் !

    நான் யார் ?

    தந்தையின் உருவா ? தாய்க்குத் திருவா ?
    விந்தை உலகின் மற்றொரு கருவா ?
    சாட்டையைச் சுழற்றும் வலிமிகு கரமா ?
    வேட்டையில் இறங்கிடும் விலங்கிற்கு இரையா ?

    நான் யார் ?

    பசியா அல்லது புசிக்கும் உணவா ?
    ருசிக்கும் போது ஏற்படும் உணர்வா ?
    ரசிக்கும் பாட்டில் உள்ளிடு கருத்தா ?
    வசிக்கும் உடலா ? பொசுக்கும் நெருப்பா ?

    நான் யார் ?

    உடலை இயக்கும் இதயத் துடிப்பா ?
    கயிற்றால் இயங்கும் பொம்மை நடிப்பா ?
    சிறகுகள் விரித்தப் பறவையைப் போலே
    கட்டுகள் அறுத்தத் தனிமைத் தவமா ?

    நான் யார் ?

    மண்ணுள் புதைந்த வேரின் தயவால்
    விண்ணைக் காணும் செடியின் வளர்வா ?
    கண்ணில் தெரியும் கனிவா ? கனவா ?
    எண்ணில் அடங்கா எண்ணத்தின் விளைவா ?

    நான் யார் ?

    அடையும் வெற்றியா ? அடக்கும் தோல்வியா ?
    மடையை உடைக்கும் வெள்ளப் பெருக்கா ?
    குடையால் தடுக்கும் மழையின் துளியா ?
    உடையும் போது விழிவிடும் நீரா ?

    நான் யார் ?

    விதைக்குள் ஒளியும் விருட்சம் போல
    சதைக்குள் ஒளியும் உயிரெனும் ஒளியா ?
    கதைக்குள் விரியும் கற்பனை போல
    இதைத்தான் தேடுதல் மானுட விதியா ?

    அதுவே நான் ! நானே அது !

    விடையைத் தேடி நடக்கும் நாடகம்
    இறையை நாடித் திரும்பும் காட்சியில் ,
    நானே கடவுள் என்ற இரகசியம்
    அன்பில் ஆழ்ந்திடத் தானாய்ப் புரிந்திடும் !

    நானென்ற ஆணவம் அழிந்த பின்னாலே
    தோன்றிய காரணம் விளங்கும் தன்னாலே !
    ஈன்றவர் பலர் என்றறிந்தாலே நீங்கிச்
    சென்றிடும் பிறவி நோயும் தன்னாலே !

    தன்னைத் தேடித் தொடங்கிய பயணம்
    தன்னைத் தொலைக்க இனிதாய் முடியும் !
    என்னால் , எனக்காய் , என்னும் ஆணவம்
    தன்னை நீக்கிடத் தெய்வமும் தெரியும் !


    Regards,

    Pavithra
     
    2 people like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அழகிய தேடல்.
    ஆழமான தேடல்
    உயிரின் தேடல்
    இறை தேடல்
    ஒளியின் வழியில்
    நிறைவுறும் தேடல். Excellent one Pavithra.
    Surprisingly my first poem on this site was தேடல்.
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls , Thank you ! Would love to read your " Thedal " .

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Superb superb.Beautiful lines with wonderful meaning.

    Arumaiyana Kavithai.Arthamula Kavithai



     

Share This Page