1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

துயில் கலைந்த இரவு…..

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Mar 12, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    துயில் கலைந்த இரவு…..

    சக்தி வினாயகரைத் தரிசனம் செய்துவிட்டு,
    பக்தியுடன் வணங்கி இல்லம் திரும்பினோம்.

    இசை வகுப்புக்கள் எடுத்து, இரவு உணவு முடித்து,
    இசை ஆர்வமுள்ள உடன்பிறப்புகளுடன் பேசி,

    அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தோம்! – இந்த
    அமைதி தொடர்ந்தது மூன்று மணி நேரம்தான்!

    நல்ல நித்திரையைக் கலைத்துவிட்டது ஏதோ!
    மெல்ல விழிப்பை ஏற்படுத்திவிட்டது!

    கொல்லைப் புறத்தில் பெருமூச்சுச் சத்தம்!
    கல்லை உடைப்பதுபோல் ‘டட்டக், டட்டக்’ சத்தம்!!

    உடல் முழுவதும் 'அட்ரினலின்' பரவியது!
    உடல் முழுவதும் பயமும் நிரவியது!!

    என்னவரோ கொண்டுள்ளார், ஆழ்ந்த உறக்கம்!
    ‘என்னென்னமோ சத்தம்’ – என எழுப்பிவிடத் தயக்கம்!!

    இறைவன் வேண்டுதலுடன், படபடத்தது நெஞ்சம்!
    தரையில் ஓசையில்லாது நடந்தேன் கொஞ்சம்!!

    பின்கட்டில் ஒளி பரப்பும் விளக்கைப் போட்டேன் – அதன்
    பின்பு சன்னல் வழியே பார்த்தேன்! சமையலறை நீரை

    எடுத்துத் தென்னை மரத்தடி சேர்க்கும் 'பிவிசி' குழாய் ஒன்று – அதை
    எடுத்து எடுத்துப் போடுகிறது ‘பைரவர் வாகனம்’ ஒன்று! – அந்த

    பெரிய வெள்ளைக் குழாயை வாயில் கவ்வுகிறது! – ஒருவேளை
    பெரிய எலும்புத் துண்டாக அதை எண்ணுகிறதோ?

    ஒருபுறம் 'சிமென்ட்' வைத்துப் பூசியுள்ளதால்
    மறுபுறம் இழுக்க வராது அந்தக் குழாய்!

    இரவு முழுவதும் ‘டட்டக் டட்டக்’ கேட்டால்
    இரவு முழுவதும் துயில இயலாதே?

    ஒரு நிமிடம் திகைத்து நின்ற மனத்தில்
    மறு நிமிடம் உதித்தது ஒரு நல்ல யோசனை!

    நெடி தூக்கும் 'பினாயிலை' ஊற்றிவிட்டால்,
    நொடியில் அந்த துயில் கெடுப்பவனைத் துரத்திடலாம்!

    இந்த யோசனை எண்ணியபடி வேலை செய்தது – ஆனால்
    சொந்த எலும்பு பறிபோனதுபோல் ‘அதன்’ ஊளை தொடர்ந்தது!!

    அந்த நேரம் விழித்த என்னவரை – இரவின்
    அந்த நேரம் வெளியில் செல்லத் தடை போட்டேன்!

    பின்னணி ஊளையுடன் அரைத் தூக்கம் தொடர்ந்தது!
    பின்னிரவு நேரம் தாண்டிக் காலை மலர்ந்தது!

    அன்றொரு நாள் திருக்கடவூரில், மதிய உணவு கெடுத்தது!
    நேற்றிரவோ, என்னுடைய இனிய துயில் கெடுத்தது!

    ஐந்து மணிக்கு வந்த பால் பையன் 'கேட்' திறந்ததும் – அந்த
    ஜந்து வெளியில் பாய்ந்து ஓடி மறைந்தது!!

    சின்னத் துயிலை நிசப்தமானதும் தொடர்ந்தேன் – இதைப்
    பின்னர் காலையில் பணிப்பெண்ணிடம் உரைத்தேன்! – ‘அது

    பெருச்சாளியைத் துரத்தி வந்திருக்கும் அக்கா’ என்றாள் – ஒரு
    பெருச்சாளி தோட்டத்தில் இறந்து கிடப்பதைக் காட்டினாள்!

    குழாயை எலும்பு என்று எண்ணிக் குடையவில்லை!
    குழாயுள் இருக்கும் உயிர் பறிக்க முனைந்திருக்கிறது!!

    காக்கை பற்றி முன்பு எழுதியதைப் படித்த அக்கா
    ஊக்கம் கொடுத்ததால் இக்கவிதை மலர்கிறது! – ஆனால்

    நாய் நாயகனாய் விளங்குமாறு எழுதியதால்
    ‘நாய்ப்பாடினி’ என்று பெயர் வராதிருக்கணும்!!

    :biglaugh
     
    Loading...

  2. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hello raji,

    Ungal kavithai varigalai vida athan iyalbai vida ennai migavum baathithathu "Shakthi Vinayagar Koyil".

    Whenever I go to Thanajai I never miss out on that 'divine jaunt'!:bowdown

    Sari.....naaipaadiniyaare, bye!

    :cheers
    Saras
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Saras!

    My fear:

    ‘நாய்ப்பாடினி’ என்று பெயர் வராதிருக்கணும்!:crazy
     
  4. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    very nice kavidhai RR.... "naipadini" haha nice one..:)
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi friend!

    You love not only tulips... Thanks ... Raji Ram :)
     

Share This Page