1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

துயர்நீக்கும் அயக்ரீவன்

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Oct 29, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ஞானத்தின் திருவுருவே உன்னை
    நானிங்கு பணிந்து நின்றேன்
    வானகம் வேண்டவில்லை நான்
    வாழவோர் வழிசொல்லுவாய்


    (ஞானத்தின் திருவுருவே...)


    கானகம் ஏகிடவே எனக்குள்
    கொஞ்சமும் சக்தியில்லை
    பாதமுன் சரணடைய எந்தன்
    பாழ்நெஞ்சில் பக்தியில்லை
    நீயாகக் அருள்வதன்றி இங்கு
    வேறொரு வழியுமில்லை
    வேதத்தின் பிறப்பிடமே சொல்ல
    வேறொரு மொழியுமில்லை


    (ஞானத்தின் திருவுருவே...)


    சொந்தங்கள் என்றேநான் ஒரு
    சுழலுக்குள் சிக்கி நின்றேன்
    அந்தகா ரத்திலுள்ள எனக்கு
    ஒளியும் தெரிவதென்றோ
    தந்தையும் நீயானாய் எந்தன்
    தாயுமே நீயானாய்
    பந்துவும் நீயானாய் உந்தன்
    பதநிழல் சேர்த்துவிடு.


    (ஞானத்தின் திருவுருவே...)


    வீயார்
     

Share This Page