1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீராத விளையாட்டு பிள்ளை!!!!!!...

Discussion in 'Regional Poetry' started by latha85, Jan 12, 2011.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தீராத விளையாட்டு பிள்ளை!!!!!

    கண்ணனின் குறும்புகளாய் என்
    நெஞ்சில் பதிந்த இந்த வரிகளை
    அவனுக்கு மட்டுமே சொந்தம்
    என எண்ணி இருந்தேன்
    அப்படி இல்லையம்மா ..??
    என நித்தமும் உன் குறும்புகளால்
    எனக்கு உணர்த்துகிறாய்!!!!!!
    காலையில் கண்மலர் மலர்த்தி
    எனை கண்டு சிரித்து ..
    ஒரு கோப்பை பாலை அருந்த
    நீ செய்யும் நாடகத்தில் இருந்து.....
    எனது கோபம் தணிக்க நீ
    கோபம் கொள்வது போல் பாசாங்கு
    செய்து எனை சிரிக்க செய்வதும்!!! ....
    உனது சேட்டைகளில் லயிக்க செய்து
    எனையும் சிறுபிள்ளையாய் மாற
    வைப்பதோடு அல்லாமல்.......
    இரவில் நான் மறந்தாலும் எனது
    கையை எடுத்து உன் நெஞ்சில்
    வைத்து ..பிஞ்சு கைகளால் அணைத்து
    நீ கண்ணுறங்கும் காட்சி வரை!!!!!
    தினமும் கண்டு களித்தாலும்......
    காலையில் நீ கண்மலரும் அழகை
    காண ஆவலுடன் நிற்கையில்
    வேண்டுகிறேன் ........
    இந்த கள்ளமில்லா பிள்ளைத்தனம்
    என்றும் தீராமல்(மாறாமல் ) உனக்குள்
    இருக்க வேண்டும் என...
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Good poem well narrated
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நன்றாக உணர்ந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் லதா. வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
    Last edited: Jan 12, 2011
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கள்ளம் இல்லா அந்தச் சேட்டைகள்
    ரெக்கை முளைக்கும் மழலைப் பருவம்
    குமுழ் சிரிப்பு. பொக்கை வாய் கொச்சை உச்சரிப்பு
    கிண்கினியாய் செல்லச் சிணுங்கல்கள்
    சிறு சிறு குறு நடை சுறு சுறு குறும்புகள்.
    இத்தனையும் செய்து களைத்து
    புன்னகை பூத்து தூங்குகையில்
    மழலை அழகு…

    லதா
    உங்கள் பிள்ளையின் தீராத விளையாட்டுக்கள்... பூரிப்பு!!!!!
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    மழலைகள் என்றுமே தீராத விளையாட்டு பிள்ளைகள்...
    நன்று உங்கள் வரிகள்...:kiss
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்க பிள்ளை.... உங்களின் குறும்பில் பாதியாவது இருக்க வேண்டாமா??:)
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பரவால்லியே லதா நீங்க நல்ல குணச்சித்திர நடிகை வேஷத்துல அசத்தறீங்களே. :)
    அன்னையும் குழந்தைக் கிடையும் அன்றாடம் நடக்கும் பாச உணர்சிகளை அழகா சொல்லிட்டீங்க லதா.
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அருமை அன்னையின் முதல் பின்னோட்டம் முத்தாய் கண்டதில் எல்லையற்ற ஆனந்தம் எனக்கு ...
    நன்றி அம்மா......:)
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு ஸ்ரீ....:)
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நான் சொல்ல நினைத்ததை என்னை விட அழகாய் சொல்லி விட்டீர்கள் சரோஜ்....
    நன்றி வந்தமைக்கும் பின்னூட்டம் தந்தமைக்கும்.....:)
     

Share This Page