1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீயில் தகித்த மலர்கள்!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, May 9, 2010.

  1. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    hi ram anna,
    the story was very nice.... especially these lines...

    வடிவின் முகம் வெளுத்தது ஆம் அவள் இந்த கல்யாணத்தை இவ்வளவு ஆவலுடன் ஏற்பாடு செய்ய காரணம் வரதட்சனையும் ஒத்தாசைக்கு ஆள் கிடைக்கும் என்ற காரணங்களே அதாவது கூலியும் கொடுத்து வேலையும் செய்யும் வேலைகாரிக்காக தான் இந்த ஏற்பாடெல்லாம் அருணாச்சலம் இப்படி கூறியதும் நம் திட்டம் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் அதை வெளிகாட்டிகொள்ளாமல் மகனிடம் பேசுகிறார்

    super ah varadhatchanai ya pathi solli irukeenga.... :bowdown:) periya samooga ezhuthaalar aagidiveenga pola?..... great na.... :thumbsupwaiting eagerly for the next part...:):thumbsup

    regards,
    dhivya. :wave:
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    Ram
    romba nalla irukku.
    Dowry kodukka matennu hero sonnathu unga puratchi ezhuthu.
    Please follow that in your life too.
    Keep going.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    hi divya
    thank you very much dear. next part today evening. point out panni paaraatinathukku romba thanks dear.
     
    Last edited: May 11, 2010
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    dear akka
    thank you very much ka
    naan kandippaa dowry vaanga maatten
    enaku soththu paththula aasai illa ka
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    Ram,
    story is going very good...:)
    ammavaasai aniku nesavu panna mattangannu neenga solli than theriyum...
    ponnu manasu kastapadakudathunu ok solra hero...
    dowry vanga kudathunu solra hero...
    appa pecha kekura hero...
    aana rowdy hero...
    ithu ella characterisation um ore hero kulla kondu vanthathu super...:)
    very nice...:)
    keep rocking ram...:thumbsup
     
    Last edited: May 11, 2010
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தீயில் தகித்த மலர்கள் - part 3

    அஞ்சுகத்தை நிச்சயம் பேசிமுடித்து திருமணமும் நடந்தாயிற்று. திருமணம் முடிந்த சில நாட்களில் அன்சுகத்திற்கு நெசவு நெய்ய தெரியும் ஆகையால் அன்சுகத்திற்கு வீட்டிலேய நெசவு நெய்ய தறி அமைத்து கொடுத்தனர். மாமியார் வடிவுக்கரசி அஞ்சுகத்தின் கழுத்தில் இருக்கும் மூன்று சவரன் நகையை எப்படியாவது வாங்கி விடவேண்டும் என்பதற்காக அன்சுகத்திடம் அன்பாக இருப்பது போல நடித்து வந்தார். காதில் இருக்கும் நகையை வாங்க முடியாது என்பது வடிவிற்கு தெரியும்)

    காட்சி 8
    (அஞ்சுகம் நெய்து கொண்டு இருக்கிறாள், அப்பொழுது அவளின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி வெளியே தொங்கி கொண்டு இருக்கிறது , வடிவு அதை பார்த்து கொண்டு இருக்கிறார் )

    வடிவு: (இது தான் சமயம் நகை இவளிடம் இருந்து வாங்க என்று எண்ணியவாறே) ஏமா அஞ்சுகம் இப்டி நகைய போட்டுட்டே வேல செய்றியே எங்கயாவது மாட்டி அந்துருசுனா என்ன பண்றது பாரு இப்ப கூட வெளிய தான் தொங்கி கிட்டு இருக்கு அப்டியே ஏந்திருக்கும் தரயில எத்தன கம்பிக நீட்டிடு இருக்கு எதாவது ஒண்ணுல மாட்டினாலும் அவ்ளோ தான் (என்று சொல்லிக்கொண்டு இருந்தவள் நகை எப்படி கேட்பது என்று யோசித்து கொண்டு இருந்தால். இவள் யோசிக்கும் முன்னே அவள் நினைத்தது நடந்தது)
    அஞ்சுகம்: ஆமாங்க அத்தை சரி இத நீங்களே வச்சிருங்க அத்தே (என்று சொன்னதும் வடிவின் முகம் பிரகாசமானது . அன்றிலிருந்து அவள் சுயரூபத்தை அஞ்சுகத்தின் மேல் காட்ட தொடங்கினால்)

    காட்சி 9
    (அஞ்சுகம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள், வடிவு வெளியே நின்று கொண்டு அஞ்சுகத்தை அழைத்து கொண்டு இருக்கிறார்)

    வடிவு: (இறுமாப்பு கலந்த குரலில்) அஞ்சுகம்!! ஏய்! அஞ்சுகம் (என்று அழைகிறார்)
    அஞ்சுகம்: (வாயில் சோற்றை வைத்துக்கொண்டே) என்னங்க அத்தை சாப்பிட்டுட்டு இருக்கேன் இதோ வந்தர்றேன் அத்த (என்று சொல்கிறார் )
    வடிவு: ஏன் டி இங்க ஒருத்தி உயிருக்கு போராடிட்டு இருக்கேன் உனக்கு சோறு தான் முக்கியமா இப்ப வர போறியா இல்லையா என்று மிரட்டும் தோரணையில் கேட்கிறார்.
    அஞ்சுகம்: இதுவரை அத்தை நம்மை இப்படி கண்டிப்புடன் அழைத்தது இல்லையே இப்பொழுது ஏன் இப்படி அழைகிறார் என்ற ஒரு கேள்வியை மனதிற்குள் கேட்டுகொண்டே சாப்பிட்டதை பாதியில் வைத்து விட்டு வெளியே செல்கிறார்) அத்தே எதுக்கு அத்தே கூப்பிட்டீங்க என்று மெல்லிய குரலில் குரலில் கேட்கிறார்
    வடிவு: ஏன் டி உனக்கு கூப்டதும் வர முடியாதா சரி சரி போயி ஓமதிரம் வாங்கிட்டு வா (வடிவுக்கு வயிற்று வலியெல்லாம் ஒன்றும் இல்லை அஞ்சுகத்தை வேலை வாங்குவதற்காக இப்படி சொல்கிறாள்)
    அஞ்சுகம்: ஏன் அத்த அத பசங்க கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல அத்தே சாப்பிட்டு இருந்தவள கூப்டுரீங்களே (என்று கனிவுடன் கேட்கிறார் )
    வடிவு: (மனதில் ஈரம் ஆவியாகி விட்டவளை போல) ஏன்?? ராணி போக மாட்டீங்களோ பசங்க நல்ல வெளையாண்டுட்டு இருக்காங்க சரி சரி அதெல்லாம் உனக்கெதுக்கு போயி வாங்கிட்டு வானா வா (என்று கூற அஞ்சுகம் மனதில் அழவும் முடியாமல் திருப்பி பேசவும் தெரியாமல் நடக்க ஆரம்பிக்கிறாள்.நடந்து கொண்டிருந்தவளை நில் என்று வடிவு கூறுகிறாள்)
    அஞ்சுகம்: (சோகத்தை முகத்தில் காட்டி கொள்ளாமல் முகத்தில் சந்தோசத்தை சிறிது நேரம் வரச் செய்து) என்ன அத்தே
    வடிவு: அப்டியே வெத்தல பாக்கு வாங்கிட்டு மிச்சச் காசுல புள்ளைங்களுக்கு முறுக்கு வாங்கிட்டு வந்துரு. நீ கீது எதும் வாங்கி தின்னுராத (என்று சொன்னதும் அஞ்சுகம் நடக்க ஆரம்பிக்கிறார்)
    வடிவு சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அஞ்சுகத்தின் கண்ணில் இருந்த நீரை கடன் வாங்கி சென்றன)

    காட்சி 10

    (அஞ்சுகம் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கிறார் கடை காரன் அஞ்சுகத்தின் கண்கள் கலங்கி இருப்பதை கவனிக்கிறார்)
    அஞ்சுகம் ; (கடையை நெருங்கியதும் மங்கலான குரலில் கடை காரரை பார்த்து) அண்ணே 10 காசுக்கு ஓமதிரம் என்று டம்ப்ளரை கொடுக்கிறார்.
    கடைகாரர்: வேற என்னம்மா வேணும்
    அஞ்சுகம்; வேற 15 ௦ காசுக்கு வெத்தலையும் பாக்கும் அப்புறம் மீதிக்கு முறுக்கு குடுத்துருங்க என்று 50 காசை கடைகாரரிடம் கொடுக்கிறார்
    கடைகாரர் : (அஞ்சுகம் சொன்ன அனைத்தையும் எடுத்து அன்சுகதிடம் கொடுக்கும் போது) ஏம்மா வீட்டுல ஏதாவது பிரச்சினையா
    அஞ்சுகம்: (முகத்தை சாதாரணமாக வைத்துகொண்டு) அப்படி ஒன்னும் இல்லையேண்ண
    கடைகாரர்: இல்லமா கண்ணு கலங்கி இருந்தத பாத்து தான் கேட்டேன்
    அஞ்சுகம்: அதுவானே வர்றப்ப கண்ணுல தூசி விழுந்துருச்சு அத தொடச்சனா அதுநாள் கண்ணு கலங்குன மாதிரி தெரிஞ்சிருக்கும்(என்று சொன்னவள் மனம் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தது) எங்க அத்த என்ன ராணி மாதிரி பாத்துகிரப்ப எனக்கு எதுக்குணே கவலை (என்று சொன்னவள் பொருட்களை வாங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தால்)

    காட்சி 11

    (வடிவு வெளியே அமர்ந்து கொண்டிருகிரார்ல் அஞ்சுகம் கடையில் இருந்து வந்து கொண்டிருக்கிறாள் காலில் செருப்பு கூட இல்லை)

    அஞ்சுகம்: அத்தே இந்தாங்க அத்தே ஓமதிரம் குடிங்க (என்று டம்ப்ளரை நீட்டுகிறாள் )
    வடிவு: சரி சரி அத குடுத்துட்டு நீ போயி வெளக்கி கழுவு (அஞ்சுகம் உள்ளே செல்ல முயல்கையில் ) அப்டியே துணி ஊற வச்சிருக்கேன் அதையும் தொவசிறு . மறுபடியும் சாப்டுற கீப்ப்டுரனு போயி உட்காந்துக்காத என்று கூறி அஞ்சுகத்தை அன்று சாப்பிட கூட விடவில்லை. எப்படி சாப்பிட நேரம் கிடைக்கும் வெலக்கி கழுவி துணி துவைத்து விட்டு மீண்டும் போயி நெய்ய ஆரம்பிக்க வேண்டும். இருந்தாலும் அந்த மகராசி (அஞ்சுகம்) தன கணவரின் தாய் நமக்கு தெய்வம் மாதிரி அவர்களிடத்தில் எந்த வித கோபமும் கொள்ளாமல் அத்தை சொன்ன வேலைகள் அனைத்தையும் சோகத்தை வெளிகாட்டி கொள்ளாமல் செய்து முடிப்பாள். அருணாச்சலம் காலை நெய்ய சென்றால் இரவாகிவிடும் வீடு திரும்ப. வீட்டில் நடக்கும் கொடுமைகளை அருணாச்சலத்திடம் சொல்லாமலே தனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டாள்.
    வடிவு: டேய் பசங்களா வாங்க இந்தாங்க முறுக்கு சாப்ப்டுடு போயி வெளையாடுங்க
    இதே போல ஒவ்வொரு நாளும் அஞ்சுகத்தை கொடுமை செய்து வந்தால் வடிவு. மாதங்கள் பல கடந்தன அஞ்சுகம் உண்டானாள் ஆம் அஞ்சுகம் கர்ப்பம் தரித்தாள். இந்த சந்தோசமான விஷயத்தை சொல்ல கணவரும் இல்லை அத்தையிடம் சொன்னால் என்ன சொல்வார்களோ என்ற பயத்துடனே வடிவை நெருங்குகிறாள்.

    காட்சி 12

    (வழக்கம் போல வடிவு வெளியே திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கிறாள் அஞ்சுகம் வாசலில் வந்து தயங்கியவாறே நின்று கொண்டிருக்கிறாள்)

    வடிவு: என்ன டி இங்க வந்து நிக்குறவோ???? நெய்யல?? (என்று கேட்கும் வடிவின் முகம் இரக்கமற்ற என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுவதை போல இருந்தது)
    அஞ்சுகம்: மனதில் தையிரியாத்தை வரவழைத்து அத்தே ஒரு சந்தோசமான விஷயம்
    வடிவு: என்னடி சந்தோசம்ஆனா விஷயம் உங்கப்பா சீதனமா கொண்டு வந்திருக்காரு என்ன விஷயம்னு சொல்லி தோழா
    அஞ்சுகம்: அத்தை இப்படி சொன்னதும் அஞ்சுகத்தின் முகம் வாடியது இருந்தாலும் சொல்லித்தான் ஆகா வேண்டும் என்பதால்) அத்தே நீங்க பாட்டி ஆகா போறீங்க
    வடிவு: அவள் சொல்லுவது புரிந்தும் புரியாதவலை போல ) என்ன டி சொல்ற
    அஞ்சுகம்: ஆமா அத்தே நீங்க பாட்டி ஆகா போறீங்க நா உண்டாயிருக்கேன் (என்று ஒரு வழியாக கூறி முடிக்கிறாள்)
    வடிவு: அட ச்சி இவ்ளோ தான சரி சரி போயி உன்னோட வேலைய பாரு (என்று கூறி தன்னை ஒரு ராக்ட்சசி என்று நிரூபிப்பதை போல இருந்தது அவள் பேசிய வார்த்தைகள் . அத்தை இப்படி பேசியதும் ஏற்கனவே வாடி இருந்த அவள் முகம் மேலும் வாடியது)

    அத்தை இப்படி தன்னிடம் நடந்து கொண்டாலும் கணவர் தன அளவு கடந்த பாசம் வைத்திருப்பதை நினைத்து அவ்வப்போது மனதை தேற்றி கொள்வாள். ஆம் அருணாச்சலமும் அஞ்சுகமும் ஒரு நல்ல கணவன் மனைவிக்கு உதாரணம். அருணாச்சலம் அன்சுகத்திடம் அடிகடி கூறுவது அம்மா என்ன சொன்னாலும் கோவ படாம இரு அஞ்சுகம் என்பது தான். கோபம் என்ற வார்த்தையே அறியாதவள் ஆயிற்றே அஞ்சுகம் பிறகு எப்படி கொவப்படுவாள். இவ்வாறே நாட்கள் நரக வேதனையுடன் நகர்ந்து கொண்டிருந்தன. அஞ்சுகம் நிறை மாத கர்பினியானாள். இடையில் அவளுக்கு கிடைத்த ஒரே சந்தோசம் அவளுடைய வளைகாப்பு தான் அன்று தான் நன்றாக சாப்பிட்டாள். பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது வாழ்கை. வளைகாப்பு முடிந்து சில வாரங்கள் கடந்திருந்தன. அன்று நடந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்க கூடியதாக இருந்தது. வடிவு அவளின் உச்ச கட்ட கோர ரூபத்தை காட்டினாள். அஞ்சுகமோ நிறைமாத கர்பிணி இன்றோ நாளையோ குழந்தை பிறக்கும் நிலை. அப்படி இருந்தும் வடிவு அவளிடம் சொல்லும் வேலைகள் ஏராளம் தினம் தினம் அவள் கொடுமை அதிகரித்து கொண்டே இருந்தது.

    காட்சி 13

    (வடிவு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதையோ யானை பிண்டத்தை முழுங்குவதை போல முழுங்கிகொண்டிருந்தால். அஞ்சுகம் சமையல் செய்து முடித்து விட்டது அசதியில் அமர்கிறாள். அஞ்சுகம் அமர்வதி ராக்ட்சசை பார்த்து விடுகிறாள்)

    வடிவு: அஞ்சுகம் அமர செல்லும் பொது ) ஏய் ஏய் எங்க உட்கார போற எவ்வளவு வேலை இருக்கு போற அதுக்குள்ளே ராணிக்கு அலுப்பாயிருசோ (என்று சொன்னவள் முகத்தில் ஓங்கி ஒன்று விடலாம் போலிருக்கும் பார்பவர்களுக்கு அன்சுகத்திற்கு அல்ல ) போயி நெய்யி அப்பறமா மா நா துணி ஊற வைக்கிறேன் அத வந்து தொவ என்று சொன்னவள் அஞ்சுகம் சாப்பிட கூட இல்லை என்பது தெரிந்தும் அதை பற்றி கவலை கொள்ளாமல் இருந்தாள்.
    அஞ்சுகம்: நெய்து கொண்டிருக்கிறாள் அவளால் பசியை தாங்க முடியவில்லை. ஒரு உயிர் பசியாக இருந்தாள் தாங்கி கொள்ளலாம் அவளோ இரண்டுயிர் அதுவும் சந்தேகம் தான் மூன்றுயிராக கூட இருக்கலாம். அதனால் அவளால் பசியை தாங்க முடியவில்லை தலை சுற்றுவதை போல் இருந்தது. தாளாத பசியால் எழுந்து சமையல் அறை சென்று தட்டில் அண்ணம் இட்டு வெளியே வந்தால் நல்ல வேலை அவள் அத்தை அங்கு இல்லை. சோற்றை பிணைந்தும் பினயாமலும் ஒரு வாய் எடுத்து வைக்க சென்றாள். ஒரு கை வந்து சோற்றை தட்டி விட்டது வேறு யாரும் இல்லை அவள் அத்தை வடிவில் இருக்கும் கொடும்பாவி தான். தட்டை தட்டி விட்டவள். அவளை இழுத்து கொண்டு போயி இதோ இங்க இருக்குற துணிய தொவச்சுட்டு வா அப்பரம் சாப்ப்டுரத பத்தி பாக்கலாம் என்று அஞ்சுகத்தை தள்ளி விட முயற்சிக்கையில் அருணாச்சலம் கையில் பழங்களுடன் வீட்டில் நடந்து கொண்டிருந்த கொடுமையை பார்த்து விடுகிறார் பழங்களை அப்படியே கீழே போட்டு விடுகிறார்.
    அருணாச்சலம்: கீழே விழச் சென்ற மனைவியை தாங்கி பிடித்தவாறே (மனமுடைந்த குரலில்) யே!! மா என்னம்மா பண்ற இவ உன்னோட பையனோட மனைவி மா (என்று சொன்னவனுக்கு கோபத்தை விட கண்ணீர் தான் அதிகமாக வந்தது ) நீ இவள உன்னோட பொண்ணு மாதிரி பாத்துபனு தான நா வீட்டுல நடக்குற எதையுமே கவனிக்காம இருந்தேன் இவளும் எதையுமே என் கிட்ட சொல்லாம மறச்சுட்டா. எல்லாத்துக்கும் நான் தான் காரணம் அஞ்சுகிறது கிட்ட நீ என்ன பண்ணுனாலும் கோவ படாம இருமானு சொன்ன. நான் சொன்ன வார்த்தைa மீற கூடாதுன்னு தா நீ பண்ணுன கொடுமைய எல்லாம் என் கிட்ட சொல்லாமையே இருந்திருக்கா. போதும் மா போதும் நீங்க இவளுக்கு பண்ணுன கொடுமை எல்லாம் பொது என்று சொன்னவன் அங்கு அதற்குமேல் ஒரு கணம் கூட நிற்காமல் மனைவியை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். தங்கை தம்பிகள் வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள் அங்கு தங்குவது இனி ஆகாது என்று தெரிந்தவன் கட்டிய புடவையுடன் மனைவியை அழைத்து கொண்டு அதை பொருட் படுத்தாமல் வெளியேறுகிறார் (வெளியேறுபவர் மனதில் எப்படி இந்த புள்ளைங்கள இவங்க கரை சேர்க்க போறாங்களோ என்ற கவலையுடனே செல்கிறார்) கங்காதரன் நெய்ய சென்றிருந்ததால் அவருக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை.

    நாடோடி வாழ்கை ஆரம்பம்
     
    Last edited: May 11, 2010
    1 person likes this.
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள் - part 3

    Super...:) keep going...:thumbsup
    inime antha heroine thapicha...
     
    Last edited: May 11, 2010
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    vaisu thank you very much dear. rowdy nu oor makkal thaan nenachuttu irukkaanga aanaa veen sandaikku pogaatha nalla kunam udaiyavar. thank you
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள் - part 3

    thank you very much dear. epdi ivlo vekathula padichu fb kuduththa
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள் - part 3

    i used 2 read fast...
    aana katchi 10 padicha udane fb kuduthuten...
     
    Last edited: May 11, 2010

Share This Page