1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீபாவளி இனிப்பு சுகியன் -திருநெல்வேலி செய்முறை

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Oct 10, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வணக்கம் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .உங்களுக்காக ஒரு எளிய முறை இனிப்பு செய்வது பற்றி பகிர விரும்புகிறேன் .இந்த இனிப்பை எங்கள் ஊரில் சுசியம் என்று சொல்வோம் .சில ஊர்களில் சுகியன் என்றும் சொல்வார்கள்.
    ஒரு கப் கடலை பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள் .பின் கரண்டியால் சற்று மசித்து கொள்ளவும் .தேங்காய் துருவி வைத்து கொள்ளுங்கள் .ஏலக்காய் தூளும் தயார் செய்து கொள்ளவும் .கால் கப் வெல்லம் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி வடி கட்டி மீண்டும் அடுப்பில் வைத்து அதனுடன் வேக வைத்து மசித்த கடலை பருப்பு சேர்த்து நன்கு கிளறவும் .இத்துடன் தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் கிளறவும் .நன்கு சுருள வதக்கி கெட்டியானதும் இறக்கி விடுங்கள் .பருப்பை வெல்லப்பாகுடன் சேர்த்ததும் அடுப்பை
    மிதமாகவே எரிய விட வேண்டும் .
    கிளறிய கலவை ஆறியதும் ஒரு சிறிய எலுமிச்சை அளவில் உருட்டி வைத்து கொள்ளுங்கள்.பின் மைதா மாவில் சிறிது உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும் .மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து பொறித்து எடுக்கவும் .மிதமான சூடு மிக முக்கியம் .அப்போது தான் உள்ளிருக்கும் கலவை நன்கு சுவைக்கும் .இது நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம் .ஏன் என்றால் நன்கு பதமான முறையில் பருப்பு கலவையை கிளறி இருக்கிறோம் .

    என் அம்மா பருப்பு ஊறவைத்து அம்மியில் சிறிது சிறிதாக வைத்து மசித்து ,வெல்லத்தையும் அதே முறையில் மசித்து பின் தேங்காய் துருவல் ஏலக்காய்போடி சேர்த்து நன்கு கலந்து உருண்டை பிடிப்பார்கள் .பின் அரிசி மாவில் சிறிது மஞ்சள் தூள் கலந்து கரைத்து உருண்டைகளை இந்த மாவில் தோய்த்து சுகியன் செய்வார்கள் .இது ஒரு நாள் மட்டும் வைத்து சாப்பிடலாம் .அந்த காலத்து செய்முறை இது.இதுவே ஒரிஜினல் திருநெல்வேலி செய்முறை

    சுசியம் அல்லது சுகியன் செய்து சாப்பிடுங்கள் .அதன் பின் உங்கள் அனுபவங்களை இங்கே பகிரவும் .தீபாவளி வாழ்த்துக்கள்
     
    PavithraS, kaniths, venlax and 2 others like this.
    Loading...

  2. sindmani

    sindmani Platinum IL'ite

    Messages:
    1,560
    Likes Received:
    1,697
    Trophy Points:
    285
    Gender:
    Female
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Nice receipe periamma. thanks for sharing.
     
    periamma likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @sindmani Thanks ma
     
    sindmani likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu Usha Thanks dear
     
  6. venlax

    venlax Silver IL'ite

    Messages:
    221
    Likes Received:
    172
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Thanks Periamma. So many old recipes forgotten now.Again thanks for the nostalgia.
    "The woods are lovely ,dark & deep but i have promises to keep & miles to go before i sleep "
     
    periamma likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @sindmani Thanks ma
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @venlax Thanks dear.
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    jskls likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    If possible I will try Periamma Thanks for sharing
     
    periamma likes this.

Share This Page