1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீக்குள் விரலை வைத்தேன்!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jan 12, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தீக்குள் விரலை வைத்தேன்
    தீபமென்று நானறிந்தேன்,
    அது தீண்டுமென்று நீ அறியாயோ
    அறிந்தும் வேடிக்கைப் பார்த்தாயோ?

    காணுமளவும்,
    காட்சியின் வழியும்,
    நான் கண்டது உனைத்தானே??
    கருத்தாயினும் கசப்பாயினும்
    அதை கற்கண்டு சுவையாய்
    கொண்டவள் நான் தானே?

    துன்பம் என நீ தந்ததனைத்தும்
    தாங்கியவள் நான் தானே?
    இன்று மெய்யென நான் சிரித்தும்
    என்னை பொய்யனளாக்கி நீயோ
    மறைந்து போனதென்ன?

    தூற்றுவார் தூற்றவும்,
    அதை ஏற்றமெனவாக்கவும்
    நம்பிக்கை கொண்டேனே...
    இன்று வாழும் வகை நான் அறிந்தும்
    என் வழியை நீ பறித்ததென்ன?

    மண்ணை மிதித்த
    நாள் முதற்கொண்டு,
    என் விதி நீ அறியாயோ?
    அறிந்தும் வீதியில் விட்டாயோ?

    தவறே நான் செய்திருந்தாலும்
    மனமோடு மன்னிக்க நீ இருப்பாய்
    என்றெண்ணி மகிழ்ந்தேனே?
    இன்று அனைத்தும் பொய்யாக்கி,
    பெண் என்ற சொல்லுக்குள்
    என் கைக்கட்டி விட்டதென்ன?
     
    1 person likes this.
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதுக்கு நீ விளக்கம் விவகாரமா சொல்லாம,
    நான் விவரமா பின்னூட்டம் தர முடியாது ப்ரியா. :)

    இல்லேன்னா வேணி, சரோஜ் அல்லது மற்ற நண்பர்கள் சொல்லட்டும்,
    அப்புறமா நா சொல்றேன். நா தீக்குள்ள விரலை வைக்கத் தயாரில்லை. :)

    உன் விளக்கத்தை படித்தவுடன் புரிஞ்சதும் சுத்தமா புரியல. :)

    நல்ல வேளை சரோஜ் எழுதினத வச்சு புரிஞ்சிக்கிட்டேன்.

    நல்லாருக்கு ப்ரியா பெண்ணியம்.
     
    Last edited: Jan 12, 2011
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அதாகப்பட்டது நட்ஸ்... நான் சொல்லிருவேன்... ஆனா நம்பத்தான் பாவம் உங்களால முடியாது.... அப்புறம் பாருங்க, பாவம் நீங்க ஐயனார் சத்தியமா இது கற்பனை தான்னு உங்களையே ஏமாத்திக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீங்க... பரவாயில்லையா?:rotfl

    சரி ஆசைப்பட்டு கேட்டுட்டீங்க.... வீணை வகுப்பில் ஆண்டாள் பாசுரம் பாடினாள் ஒரு பெண்...எனக்கோ பெண் என்றதும் பாரதி ஞாபகம் வந்தது.அதையும் இதையும் கலந்து அந்த பாசுரத்தின் இசைக்கு வரிப்போட்டு கவிதை எழுதிவிட்டேன்.

    இசைக்கு பொருத்தமென்று நான் நினைக்க...அச்சோ... பொருத்தம் எல்லாவற்றுக்கும் சரியாக இருக்க, எனக்கோ இப்போது தலை சுற்ற.... [​IMG][​IMG]

    ஏன் நட்ஸ் இப்படி எல்லாம் பண்றீங்க? ஏதோ சின்னப்புள்ள எழுதிட்டு போறான்னு விட வேண்டியது தான... விவரத்த சொல்லு...விவகாரத்த சொல்லு ன்னு...பாருங்க...நான் எவ்ளோ திண்டாடுறேன் இப்ப...[​IMG][​IMG]
     
    Last edited: Jan 12, 2011
    1 person likes this.
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    பெண்ணியம் பேசி பெண் இனம் வேசி என்று சுருக்கு கயிறு இறுக்கும்
    விசமிகளின் வார்த்தைகள் கேட்கும் போது
    ...தீக்குள் விரலை வைத்தேன்.தீண்டவில்லை.....

    அறுத்து ஏறிய வேண்டிய அடிமைத் தளைகளைக் கொண்டு
    இடிப்பொடிக்கும் துயரம் காணும் போது
    ...தீக்குள் விரலை வைத்தேன்.தீண்டவில்லை......

    கண் எதிரே படையலுக்காய் விடியல் காத்திருக்க
    சுதந்திரமில்லாத பெண்ணாய்
    நான்கு சுவற்றுக்குள் கண்ணீர் சிந்தும் போது
    .....தீக்குள் விரலை வைத்தேன்.தீண்டவில்லை ......

    சீரழியும் இனம் கண்டு சீர் திருத்தம் செய்ய நினைக்கும் போது
    சீதையா நீ என்று கேட்ட போது
    ..தீக்குள் விரலை வைத்தேன்.தீயாய்,தீயிலே நான் எரிந்தேன்.....

    தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா....


    தேவா...
    உன் வரிகளுக்குள் என்னைப் புதைத்தேன்.தோன்றிய இன்பம் என்னைத் தீண்டிற்று. [​IMG]
    அகம் மகிழ்ந்தேன்.உன் பக்கம் இருந்து இத்துணை அரிய வரிகள்.[​IMG].
    பண்பான வரிகள் .வாழ்த்துக்கள் [​IMG][​IMG][​IMG]
     
    Last edited: Jan 12, 2011
    1 person likes this.
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்த மாதிரி நாங்களும் இனி பார்த்தோம் - கொதிச்சிடுவோம்... :)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நாங்க கோடு போட்டாலும்
    கொஞ்ச நேரம் கழிச்சு வந்து ரோடு போட்ருவோம் இல்ல...:rotfl
     
    Last edited: Jan 12, 2011
  7. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    எனக்கு உண்மையாவே சுட்டுவிழி சுடரே பாட்டு நினைவு வந்துருச்சு.. அந்த கண்ணம்மா கேட்ருந்தா இப்படி டான் இறைவனை நோக்கி கேட்ருப்பாங்க.:thumbsup
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    No... No.. vayasaana kaalathula ithu yenna aasai ungaluku? BP vanthutta yenna pandrathu nats??:rant:rant

    Paarkkurathuku vera kannadi venum..... yosichu pesa venaam??? :hide:

    Olunga amaithiya ukkarunga paarkkalaam....Atha vittutu kothippaaram la....:coffee
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அய்யய்யோ தார் ஒட்டிக்கிச்சே.... :)

    இது வரைக்கும் உன்னைத் தவிர வேறு எந்த கோளாறும் இல்லை.
    ஆனா நீ வர வெச்சிடுவ போல இருக்கே... :)
     
  10. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    இந்த கவிதையை நானும் பல தடவை படிச்சு பார்த்துட்டேன் தேவா. ஆனாலும் என் மரமண்டைக்கு ஏறவில்லை :bonk Only starting trouble....கொஞ்சம் விளக்கினா கப்புன்னு புரிஞ்சிப்பேன் [​IMG]
     
    Last edited: Jan 13, 2011

Share This Page