1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவிழா முடிந்த பின்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Nov 1, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    திருவிழா முடிந்த கிராம வீதியில் நிறைய குப்பை சேர்ந்திருக்கும்.
    திரும்பிய பக்கம் எங்கும் ஓர் வெறுமை மட்டும் நிறைந்திருக்கும்.
    தினமும் இரவில் விழித்தோருக்கு உள்ளே ஏக்கம் படர்ந்திருக்கும்.
    திடீரென ஒலிக்கும் வேட்டுச் சத்தம் அறவே மறைந்து போயிருக்கும்.

    விளக்கொளி, விழியொளி எது பெரிது என்னும் கேள்வி மறந்திருக்கும்.
    விடலைகள் எல்லாம் வினை மறந்து பள்ளிக்கூடம் போயிருக்கும்.
    விளக்கி விட்ட பாத்திரம் எல்லாம் பரணில் சென்று சேர்ந்திருக்கும்.
    விருந்தாய் வந்த உறவும் நட்பும் விடைபெற்று ஊர் போயிருக்கும்.

    வில்லுப்பாட்டும் கரகமும் நினைவில் மெல்ல மங்கித் தேய்ந்திருக்கும்.
    வீட்டில் இருந்த கலகலப்பெல்லாம் எங்கே எனும்படி ஓய்ந்திருக்கும்.
    வாங்கிய கடனும் பூதம் போலே நினைவில் வந்து பயமுறுத்தும்.
    வட்டிக்கடையில் தன் நகையும், தவணை சொல்லி அச்சுறுத்தும்.

    கணக்கு பார்த்துச் செலவழி என்று முதலில் ஓர் குரல் கேட்டிருக்கும்.
    கணக்கைப் பார்த்தால் மகிழ்ச்சி எங்கே என்று மனமே கடிந்திருக்கும்.
    கணக்கின் மீதம் சுழி தான் என்ற உண்மை இன்று உறைத்திருக்கும்.
    இருந்தும் மனமோ, மீண்டும் அடுத்த திருவிழாவுக்கு காத்திருக்கும்!
    -ஸ்ரீ
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    அற்புதம் ஸ்ரீ,

    கிராமத்தின் திருவிழா செலவுகளை மிக அழகாக சொல்லி விட்டீர்கள் , அவர்களின் கவலைகளையும் சேர்த்து தான்
     
  3. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    thiruvizhaa mudinthap pin irukkum soozhalai miga azhagaaga ezhuthi irrukireergal RGS. enna engayaavathu thiruvizhaa poneengalaa enna? romba naalaa aalai kanom?

    Ramavyasarajan
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    திருவிழா அது தெருவெல்லாம் கூடி களித்த பெருவிழா!
    இதிலும் உண்டு போட்டிகள்,நீயா?நானா?என்ற போட்டிகள்.
    திருவிழா முடிந்த பின்னே வரும் அதற்கும் தீர்ப்புகள்,அவர்,அவர் தரப்பிற்கு தக்கபடி .
    ஊர் திருவிழா முடிந்த பின் நினைவில் நிற்கும் உணர்வு அருமை.
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciative feedback Rama. Engayum pOgalai. Hectic work, even in week-end and net access is very very slow from home. :( -rgs
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Latha, for your appreciation. Google tamil transliteration romba slow....veetla net romba slow-aa irukku..... -rgs
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your thoughts and appreciative feedback Deepa. -rgs
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எவ்ளோ அற்புதமா எழுதுறீங்க ஸ்ரீ... மறந்து போன திருவிழா காலங்களை நினைவு படுத்திவிட்டீர்கள்... இழந்துவிட்ட அந்த கொண்டாட்டங்களை எண்ணி மனம் இப்போது வருத்தம் உணர்கிறது...
     
  9. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Yedhai ellam izhandhadhaga nan varundhi kondirundheno
    adhai ellam ninaivu koorndhu, nam elorayum ondru sertha
    perumai sree ke serum

    sarvam sree arpanam
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி தேவப்ரியா. ஆம். பல நாட்கள் உறவினர் வீட்டில்
    ஒரு கவலையுமின்றி பொழுது போக்கிய நாட்கள் அவை. நிற்க.
    உங்கள் அவதாரப் படம் மிக அழகாக இருக்கிறது. -ஸ்ரீ
     

Share This Page