1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - கல்லாமை

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Jan 26, 2012.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பொருட்பால் - கல்லாமை 41 ஆவது அதிகாரம்

    முன்னுரை

    இந்த அதிகாரத்தின் தலைப்பை வைத்தே நாம் அதிகாரம் எது சம்பந்தமாக உள்ளது என்று கண்டறிந்து விடலாம். ஆம், இந்த அதிகாரம் கல்லாமையால் வரும் விளைவு பற்றியும், கல்லாதவர் பெரும் இழிவு பற்றியும் தான் குறள்கள் மூலம் கூறி கல்வியின் சிறப்பினை திருவள்ளுவர் தான் பத்து குறள்கள் மூலம் எடுத்துரைக்கிறார்.

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல். (401)


    நீரின்றி நிலத்தில் நீச்சலிட்டவன் உடலும்
    நீச்சல் தெரியாது நீரில்வீழ்ந்தவன் உயிரும்
    இருட்டில் அலங்கரித்த பெண்ணின் அழகும்
    உறுப்பினரே அல்லாத கட்சியின் நிலையும்
    கெட்டுதான் போயிடுமே குப்பையென ஆகிடுமே

    சொக்கட்டான் ஆடிடவே வேண்டும் சிலகட்டம்
    கட்டங்கள் போடாமல் ஆடிடநேரம்தான் நட்டம்
    கற்றறிந்த அறிஞர்பலர் கூடியுள்ள அவையினிலே
    உரையாடிடவே வேண்டும் பலநூல்கற்ற ஆற்றல்
    அஃதின்றி பேசுவது மேலுள்ளஆட்டத் தினையொக்கும்
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    நீரின்றி நீச்சலில்லை
    நீச்சலின்றி நீரில் உயிருமில்லை
    ஒளியின்றி பெண்ணின் அழகுமில்லை
    உறுப்பினரில்லா கட்சியுமில்லை
    கட்டமின்றி ஆட்டமில்லை
    உரையின்றி அவையில்லை

    என்று உணர்த்தியமைக்கு நன்றி நண்பரே.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நான் பத்து வரிகளில் கூறியதை ஆறு வரிகளில் புதுக் கவியாய் புணைந்து கூறியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா..........:):)
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very nice to read your explanation PGRaman. Thanks.
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று. (402)


    சக்கரமில்லா வண்டியிலே பாய்ந்துசெல்ல நினைப்பதும்
    கைகளற்றவன் காதலியைக் கட்டித்தழுவ நினைப்பதும்
    காதுகள் கேளாதான் இசையினைக்கேட்டிட நினைப்பதும்
    இறுமாப்பு கொண்டவன் இனியபேச்சினை எதிர்பார்ப்பதும்
    இப்பொழுதும் முப்பொழுதும் எப்பொழுதும் நடக்காது

    குழந்தைக்கு பாலூட்டும் மார்பகங்கள் இல்லாதவொருத்தி
    பாலூட்டி பெண்தன்மையினை அடைந்திட வெண்ணுவதும்
    சொற்பொழிவு ஆற்றிட இன்றியமைந்திடா நூற்கல்வியை
    எள்ளளவும் கற்கவேண்டுமென எண்ணாத மூடனொருவன்
    மேடையேறி கருத்துரைக்க எண்ணித்துணிவதும் ஒன்றாகும்
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    மிக்க நன்றிகள் ஸ்ரீ ...:)
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கல்லா தவரும் நனிநல்லார் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின். (403)


    நன்மைகள் செய்யோம் பலதீமை தினஞ்செய்வோம்
    மக்கள் பிழைத்திடும் நல்வழியினை உண்டாக்கோம்
    மக்கள் பணத்தினை தினஞ்சுருட்டி உண்டுவாழ்வோம்
    என்றெண்ணம் கொண்டோர்கள் மக்கள் பணிதனில்
    சேருதல்தனை தவிர்த்தாலே நல்லோர் எனவாகிடுவர்

    நூற்கற்றலே மூச்சென வாழ்ந்துவரும் பெரியோர்கள்
    கருத்துப் பரிமாற ஒன்றாய்ச்சேர்ந்துள்ள அவையினிலே
    கற்பதன் இன்றியமையாமையும் சிறப்பையும் அறியாது
    கற்பதை வாழ்நாளில் சிறுதுளியும் செய்யாக்கல்லாதார்
    ஏதும்பேசாது இருந்தாலே நல்லோரெனக் கொள்ளப்படுவர்
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார். (404)


    புனிதமும் அழியாசக்தியும் பொதிந்தது நல்லமிர்தமாம்
    சுத்தஞ்செய்யா பாத்திரமொன்று அவ்வமிர்தத்தை ஏந்திவர
    அஃதெத்தனைப் புனித்ததைத் தன்னுள் கொண்டாலும்
    ஆசாரம்பல கற்றபெரியோர் அதைப்புனிதமாய் எண்ணாரே

    உலோகத்தின் வரிசையிலே தரமற்றது தகரமாம்
    அத்தகைய தகரத்தால் செய்திட்ட பெட்டியொன்று
    மதிப்புயர்ந்த பொக்கிசத்தை தன்னுள்சுமந்து வரினும்
    தகரத்தை உயர்ந்ததாக எண்ணமாட்டார் அறிவானோர்

    ஒத்து,
    கல்விக்கேள்விக்கு நுண்ணிய பதிலளிக்கும் மீஅறிவினை
    கல்வியைக் கற்றிடமுயற்சி யேதுமெடுக்காத கல்லாதவர்
    இயற்கையாய் தன்னுள்ளே கொண்டுசிறந்து இருப்பினும்
    கற்றறிந்தோர் அவரைக்கல்வியிற் சிறந்தோரென ஏற்காரே
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும் . (405)


    அறிவற்ற பூனையொன்று குட்டிநாயைக் கண்டதுவாம்
    சிறுநாய்தான் என்பதனால் அதைமிரட்டி நின்றதுவாம்
    நன்றாக வளர்ந்திட்ட தாய்நாயொன் றங்குவந்ததுவாம்
    தாய்நாயின் திறன்முன்னே, சிறுநாய்முன் காட்டியத்தன்
    திமிரெல்லாம், ஒருநொடியினில் மறையக் கண்டதுவாம்

    கற்பதனால் வாய்க்கும் அறிவுயாதென்று துளியுமறியாது
    உயர்ந்தவன்நான் அறிவிலென்று கூறிதினம் திரிபவர்கள்
    அறிவற்றோர் முன்னரொன்றே வாய்க்கிழிய உரைத்திடுவர்
    நூற்கலையை கற்றறிந்தார் அவன்முன்னே சென்றுநிற்க
    கல்லாதான் வேடமங்கு கலைந்திடுமே வாயும்மூடிடுமே
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    உளரென்னும் மாத்திரையர் அல்லாற் பயவாக்
    களரனையர் கல்லா தவர். (406)

    காக்கி நிறத்தினிலே காவலர் உடையணிவர்
    அவ்வுடையில் இருந்தாலே மக்களும் மதிப்பளிப்பர்
    இத்தகைய நன்மதிப்பு வெறுமுடையால் வருவதில்லை
    காவலர் தம்பணியைச் செம்மையாய் செய்திடவந்திடுமே
    தம்பணியை செய்யாக்கால் உடையால் பயன்களேதுமிலை
    இத்தகையோற்கு மக்களிடம் பயமிருக்கும் மதிப்பிருக்கா

    உடலில் உயிரிருப்போர் வெறுமுயிரால் மதிக்கப்பெறார்
    தாமுயிருடன் இருந்தவரை கற்பவையே அதையளிக்கும்
    கற்பதுஎன்றவொரு நற்செயல் செய்யாத உடல்களிங்கு,
    தனக்கும் பிறர்க்கும் பயன்களற்று தரிசாய்க்கிடந்திடும்
    வளங்கள் எதுவுமற்ற நிலத்தையே ஒத்திருக்கும்
     

Share This Page