1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - உழவு

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Sep 17, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்

    முன்னுரை


    இவ்வதிகாரத்தின் தலைப்பு உழவு , உழவினை வேளாண்மை, விவசாயம் என வேறு பெயர்களிலும் கூறுவர்.ஆக இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்பெருந்தகை உழவின் உன்னதத்தினை பறைசாற்றும் விதமாகஇயற்றியுள்ளார்.

    1
    ஆம் குறளில்உலகத் தொழில்கள்அனைத்திற்கும் உழவு தொழிலே தலை போன்றதுஎனவும்

    2 ஆம் குறளில்உலகத்தார்க்கு உழவுத் தொழில் செய்பவர் அச்சாணி போன்றவர்எனவும்

    3 ஆம் குறளில்உழவரை தவிர பிற தொழில் செய்யும் அனைவரும் பிறரை தொழுது உண்பவர்எனவும்

    4 ஆம் குறளில்பல குடை நிழல்களை தம் குடைக்குகீழ் கொண்டு வருவர்எனவும்

    5 ஆம் குறளில்உழவர் தம்மிடம் இரப்பார்க்கு மறுக்காமல் ஈவார் எனவும்

    6 ஆம் குறளில்உழவர் தன தொழிலை விட்டால்பற்றற்ற துறவியும் அந்நிலையில் நிற்பது இயலாதுஎனவும்

    7 ஆம் குறளில்நன்கு உழுதால் ஒரு பிடிஎருவும் இடாது பயிர்செழித்து வளரும் எனவும்

    8 ஆம் குறளில்உழுதலை விட இரு இடுதலும், பயிர் நட்டு களையெடுத்து பின் நீர் விடுவதை விட அதை பாதுகாத்தல் நன்று எனவும்

    9 ஆம் குறளில்நிலத்தினை அனுதினமும் சென்றுபார்க்காதவன் நிலம் அவன் மனைவியைப் போல விளைச்சலின்றி இருக்கும் எனவும்

    10 ஆவது குறளில்பொருளில்லையே என்று சோம்பி இராது விளைவித்து பொருளீட்டல்நல்லதுஎனவும்

    தன் பத்து குறள்களில் கூறுகிறார்....
    இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....

    உழந்தும் உழவே தலை

    குழந்தையை பெறுவதும் நெற்பயிர் பெறுவதும்

    அவ்வளவு எளிதல்லவே; நெற்பயிரதை
    விளைக்க
    நெற்விதையினின் ஊடே நெற்றி வியர்வையை
    சிந்தாது விளைவித்தல் இயலாத காரியமே


    காலும் சேரும் ஒருசேரக் கலந்து, உடலும்

    உள்ளமும் உழைபிற்குள் பிணைந்து, வலியையும்

    வேதனையும் துச்சமென நினைந்து பயிரினை
    நட்டிடுவர் நாட்டிற்கு உணவினை இட்டிடுவார்

    விவசாயம் என்றவொரு அத்தியாயம், அதை
    தொட
    பயந்து உலகமே பல்வேறு தொழிலினை
    தேடி, நாடி
    விரைந்து தான் சென்றாலும், எத்
    திசையினில் சுழன்றாலும்
    உலகத்தொழிகளிலே
    தலையாய தொழிலாம்
    உழவின் திசை நோக்கி
    தினம் தினம்
    திரும்பி தான் ஆக வேண்டும்
    அதன் வழி
    தொடர்ந்தே தான் செல்லவேண்டும்

    சுழன்றும்ஏர்ப்
    பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை. (1031)
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தெழுவாரை எல்லாம் பொறுத்து

    அன்னையிட்ட பாலமிர்தக் காலம் முடிந்திடவே
    அவ்வன்னை போல் இருந்திடும் உழவே நமக்கு
    அன்னை நம் வாழ்விற்கு அஸ்திவாரம் இட்டிட
    உழவு நமக்கு அச்சாணியாய் நின்றிடும்

    அத்தொழில் செய்கின்றேன் அங்கு நான் செய்கின்றேன்
    இத்தொழில் செய்கின்றேன் இங்ஙனம் செய்கின்றேன்
    எத்தொழில் செய்தாலும் பணப்பெட்டி நிரம்பினாலும்
    வயிரென்ற ஒன்று, தான் நிரம்பிட வேண்டினால் - அதற்கு
    உணவென்ற ஒன்றையன்றி வேறெதுவும் உதவாது

    உழவினை செய்ய முடியாது பிற தொழிலினை பின்
    பற்றி தம் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றிக் கொண்டு
    இருப்பவர்களுக்கு உழவர் தம் உழவின் மூலம் பெற்ற
    உணவினை இட்டவர்களைத் தாங்கி நிற்பதா லவர்
    உலக மக்களை தாங்கும் அச்சாணியாவார்

    உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
    தெழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)

     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தொழுதுண்டு பின்செல் பவர்

    ஒவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு தலையுண்டு
    அத்தனைத் தலையையும் தொழுதிடும் வாலுண்டு
    வால்களுக்கு அருளிடும் தலைகளையும் - நானிங்கு
    வாலாக மாறிடக் காண்கிறேனே

    மண்ணில் மாந்தர்கள் சென்று செய்திடுவர் பல
    தொழில்களையே; எத்துணைத் தொழில்களைச்
    செய்தாலும், போய் எவரைத் தொழுதே நின்றாலும்
    இறுதியில் வந்து சேர்ந்திடும் இடமொன்றே

    விளைநிலத்தில் வியர்வைத் துளியினை விதைத்து
    விளைவித்து பிறர்க்களித்து தானும் உண்டு வாழும்
    உழவரே உலகில் உண்மையாய் வாழ்கிறவர் - மாறாய்
    பிற தொழில் செய்பவர் அவரை தொழுது வாழ்பவரே

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர். (1033)

     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒவ்வொரு விளக்கத்திலும் உங்கள் உழைப்பு நன்றாகவே தெரிகிறது ராம்! நன்று!
     
  5. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai PGR,

    Too good. Your EFFORT will surely reap the good results. Waiting eagerly for the next one.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக்க நன்றி ப்ரியா......கருவை கையில் வைத்துக் கொண்டு எழுதும் எனக்கே கொஞ்சம் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும் பொழுது.......சுயமாக யோசித்து இரண்டடியில் கொடுத்த வள்ளுவருக்கு எப்படி இருந்திருக்கும்.....
    அவருக்கு சிரமமாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் நினைக்கிறன்...அவர் யோசிக்க யோசிக்க அருவி போல கொட்டி இருக்கும்.....

    மிக்க நன்றிகள்....:thumbsup
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக்க நன்றிகள் ஸ்ரீமா
    உங்கள் ஆசி படியே........நன்றிகள்......:thumbsup
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அலகுடை நீழ லவர்

    குறுநில மன்னனம்மா மனத்தில் ஆண்டவண்
    எண்ணமம்மா; அவன் நிலத்தினில் இறையெனிலும்
    அவனும் கீழ்வருவா னவனுக்கு மேலே அரசனம்மா

    அரசனின் குடையம்மா, அதில்பல சிற்றரசுகள் உண்டம்மா
    அங்கங்கு அவரவர் ஆண்டிடுவர் மக்கட்கு நிழலாய் அனு
    தினம் நின்றிடுவர்; தம்குடை நிழலை பிறர்க்களித்தாலும்
    அவருமொரு குடைநிழல்கீழ் வருவரம்மா - அதுகதிருடை
    நெற்பயிரின் நிழலம்மா, அரசனும் அந்நிழல்த்தேடி வரு
    வரம்மா; அந்நிழல் தரும் மந்திரம் கொண்டவ ரிவ்
    வுலகிற்கு உணவளிதிடும் வேந்தரம்மா, அவரின் குளிர்ந்த
    அருள்குணமே உரை
    த்திடும் உழவரென்ற பெயரம்மா

    எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
    குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
    தம் மொருவர் குடைநிழல்க்கீழ் காண்பாரே உழவர்
    தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
    கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு

    பலகுடை நீழலும் தன்குடைகீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர். (1034)

     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அரசன் என்றாலும் ஆண்டி என்றாலும் அவன் வாழ உணவு வேண்டுமே....அதை கொடுக்கும் உழவர்கள் தெய்வம் தானே
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    உண்மையே ப்ரியா.........மிக்க நன்றிகள்..........:thumbsup
     

Share This Page