1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - இரவச்சம்

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Aug 18, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    காலும் இரவொல்லாச் சால்பு

    தன்னுடம்பில் ஒரு நூல் உதிருங்கால்
    தன்னையே சென்று கொல்லும் - பண்பு
    கொண்டது அக்கவரிமான்

    பட்டினியின் கொடுஞ்சொற்கள் வசைபாடினாலும்
    வயிறது வாட்டத்தை காட்டினாலும் - புற்தனை
    புசிக்காத பண்பு கொண்டது அப்புலி

    வாழ்கையை வழிநடத்திட - வழியே
    கிட்டாத போதும் இரந்துண்டுவாழலாம்
    என்று நினைக்காத பண்பிற்கு - இவ்
    வுலகையே ஈடாய்கூறினாலும் ஈடாகாது

    இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு. (1064)

     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம்.....நம் நாட்டில் பல கொடுமைகள் உள்ளன.....என்று தணியும் இந்த கொடுமையின் கோரம் நு பாரதி பாடாம விட்டுட்டாரு....
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    துண்ணலின் ஊங்கினிய தில்

    தேனடை தேன்பல கொண்டாலும் - மனிதம்
    அத்தேனடை கொய்தாலும் - தேனீக்கள்
    ஆயிரம் மலர் சென்றே தேனினை உண்டிடும்
    அச்சுவையே அதனை அனுதினம் தூண்டிடும்


    இரையது சிறிதாய் இருந்தாலும் - இரை
    சுலபமாய் உண்டிட கிடைத்தாலும் -புலி
    அதை பாய்ந்து பிடித்தே உண்டிடும் - அதன்
    சுவையை மனதில் கொண்டிடும்


    கூழ் தான் குடித்தாக வேண்டுமெனினும்
    தன் உழைப்பால் ஈட்டியே குடித்திட்டால்
    அதை விட இனிமை இங்கில்லை - அந்த
    அமிர்தமும் இதற்கு முன்னில்லை


    தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
    துண்ணலின் ஊங்கினிய தில்.(1065)

     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உழைத்து ஈட்டுவது தான் நிம்மதியையும் பெருமையையும் தரும் என்பது உண்மையே
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் ப்ரியா உண்மையிலும் உண்மை..நன்றி :thumbsup
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Hi Raman,
    For this thirukkuRaL -இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்",
    there is another meaning that we can arrive at. It is, if a person opts to live, even by begging, then there is no point in being the almighty - for, being a human is the most exalted state and if, in that state, one goes to that extent, he is insulting the creator himself. You gave a good explanantion too. -rgs
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் ஸ்ரீ நீங்கள் கூறுவதும் சரியாகத்தான் உள்ளது......இறைவனை மதிப்பவன் இரந்துண்ண மாட்டான்.......இரந்துண்ணும் நிலையை ஏற்படுத்தி விடுபவன் இறையாய் இருந்தாலும் கெட்டொழிந்து போவான்......இரண்டும் வேறு வேறாய் இருந்தாலும்.....ஒன்றை தான் குறிக்கிறது.....மிக்க நன்றி ஸ்ரீ....:thumbsup நீங்கள் kooriya உரை யாருடையதுன்னு சொல்லுங்க ஸ்ரீ......
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கிரவின் இளிவந்த தில்

    ரத்தமதை துச்சமாய் தந்து - நம்
    கல்விக்கண் திறக்க வழிசெய்யுந்தந்தை
    நம் கண்திறந்த பின்னரும் - இயலாமை
    காட்டி நாவதை இரக்கும்படி சுழற்றுவதும்
    இழிவே

    தான் செய்யும்படி படைக்கப்பட்ட பணியை
    சோம்பலும் சட்டையின்மையும் கொண்டு
    பிறரிடம் இரந்து செய்திட நினைப்பதும் இழிவு

    ஆவது தாகத்தில் தவித்து நின்றாலும்
    அதற்கு நீர் பெற நாவை - இரக்கும்படி
    அசைத்திட்டால் அந்நாவிற்கு இதைவிட
    இழிவு வேறெதுவும் இராது


    ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
    கிரவின் இளிவந்த தில். (1066)

     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கரப்பார் இரவின்மின் என்று

    கையிருந்த காசை வினவினான்போக
    கைத்தின்றதென்று மறையொன்று கூற
    அப்பொய்கண்டு மனம் சுக்காய் தான் போகும்

    துளிநீர் விழுந்ததும் சிப்பியது மூட

    அடிநீர் வரை சென்று அச்சிப்பியை தேட
    வெளிநீர் வந்து அச்சிப்பியை திறக்க
    முத்தது இல்லாது கண்ட- கண்ணும்
    மனமும் நைந்தே தான் போகும்

    உள்ளங்கையில் உள்ளதை மறைப்போரிடம்

    இல்லை என்று இரந்திட வேண்டாம் என்று
    உள்ள இருகையையும் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்

    இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்

    கரப்பார் இரவின்மின் என்று. (1067)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இருப்பதை இல்லாது திரித்து கூறுவர் மத்தியில் கேட்கும் உதவி யாவும் அர்த்தமற்றது!அதிலும் இரந்து கேட்பது பயனற்றது!
    நன்று
     

Share This Page