1. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 2. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

திருமாலின் நாமம்ஆயிரம்-Vishnu Sahasranamam in Tamil

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Dec 5, 2010.

Thread Status:
Not open for further replies.
 1. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  திருமாலின் நாமம் ஆயிரம்

  திருமாலின் ஆயிரம் நாமங்களை ஒருங்கிணைத்து திரு வி்யாச பகவான் அருளிய விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒரு ஆழகடல்.
  அதைத் திரு ரா.நரசிம்மன் தமிழில் செய்யுள் நடையில் அமைத்திருக்கிறார். அதை இங்கு நான் படைக்கிறேன்.
  திரு ரா.நரசிம்மன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

  I wish to make a mention here:
  I am dedicating this thread to my mother who initiated me into Vishnu Sahasranamam at my very young age.
  She strongly believed that chanting this will drive away all negative energy from home.

  Feedbacks may kindly be posted in
  http://www.indusladies.com/forums/1552642-post3.html


  Om Shuklãm Bharadharam VishNum S(h)as(h)i VarNam Chathurbhujam
  Prasanna Vadanam Dhyayeth Sarva Vignopa Shanthayé

  Vyaasam Vasishta Naptharam Shaktai: Pouthramakalmasham
  Paraasharathmajam Vandé Shukathãthum ThapOnidhim

  Vyaasaaya VishNu Roopaya Vyasaroopaya VishaNavé
  NamOvai Brahmanidhayé Vãsishtaya Namonamaha

  Avikãraya S(h)uddhãya Nithyãya Paramathmané
  Sadhaika Roopa Roopaaya VishNavéPrabhavishNavé  வெண்துகி்லைத் தரித்தோனைத் தண்மதிநேர் மேனியனைத்
  திண்தோள்நான் குடையோனை எங்கும்நிறை இன்முகனை
  என்மனமே துதிப்பாய்நீ இன்னலெல்லாம் நீங்கிடவே

  வசிட்டன்தன் வழியுதித்த சத்திமுனி பௌத்திரராம்
  பராசுரரின் புதல்வனாம் சுகமுனியின் தந்தையுமாம்
  வியாசரெனும் தவறறியாத் தவக்குன்றைத் துதிக்கின்றேன்


  வியாசரெனும் மாலினையும் மாலேதான் வியாசரையும்
  வியக்குவகை வசிட்டகுல மறைநிதியை வணங்குதுமே

  மருவற்றோன் தூய்மையோன் என்றுமுளோன் எங்குமுளோன்
  ஓருருவத் திருமேனி பொருள்யாவும் வென்றிடுவோன்
  திருமாலின் திருப்பாதம் மனத்திருத்தி யொருகணமே
  பெருங்கடலாம் பிறவியெனும் விடுபெற்று முத்திபெற
  அருள்புரியும் நெடுமாலே திருவடிகள் சரணடைந்தேன்
   
  Last edited: Dec 11, 2010
  3 people like this.
 2. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  Shree Bheeshmã Uvacha


  Jagath Prabhum Deva Devam Anantham PurushOththamam
  Sthuvan Naama SahasréNa Purusha SathathOth Thithaha

  Thameva Chaar Chayan Nithyam Bhakthyaa Purusha Mavyayam
  Dhayaayan Sthuvan Namasyams(h)cha Yajamaanas Thamevacha 10

  Anaadhinidhanam VishNum Sarva LOkamahes(h)varam
  LOkaadhyaksham Sthuvan Nithyam Sarva Dhukkaa ThigO Bhavéth

  BrahmaNyam Sarva Dharmangyam Lokaanaam Keerthivardhanam
  Lokanaatham Mahath Bhootham Sarva Bhootha Bhavothbhavam

  Esha Mé Sarvadharmãnãm DharmO(a)dhi KathamO Mathaha
  Yad Bhakthyaa Pundaree Kaaksham Sthavai Rar-Chén Nara: Sadaa

  Paramam YO Mahath Thejaha Paramam YO Mahath Thapaha
  Paramam YO Mahath Brahma Paramam Ya: ParaayaNam

  PavithraaNaam Pavithram YO Mangalaanaamcha MangaLam
  Daivatham Dévathaanaam cha Bhoothaanaam YO(a0vyaya Pithaa
  </SPAN>
  Yaani Naamaani GouNaani Vikyaathaani Mahaathmanaha
  Rishibhi : Parigeethaani Thaani Vakshyaami Bhoothayé
  </SPAN>


  யுதிட்டிரன் வினவுவான்;

  மறையாவும் அறைகூவிப் பறைசாற்றும் இறைவன்யார்?
  நிறைபரம் பொருள்யாதோ? இம்மையிலும் மறுமையிலும்
  குறையாத நன்மைபெற துதிக்கவொரு தெய்வம்யார்?
  அருத்திக்க உரியோன்யார்? அறங்களிலே சிறந்ததெது?
  பிறவியிலும் உறவினிலும் பிணையுண்ட உலகோர்க்குச்
  சிறைநீத்து விடுபடவே உச்சரிக்கும் துதியேது?
   
  பீஷ்மர் கூறுவார்:

  சகப்பிரபு தேவதேவன் அனந்தன்புரு ஷோத்தமனை
  அகமுருகி அருநாமம் ஆயிரத்தால் அர்ச்சிப்போர்
  எப்போதும் எந்நாளும் அழிவுற்றோன் அவன்புகழைத்
  தப்பாதே தியானித்துத் துதிபாடித் திளைத்திடுவோர்
   
  முதலின்றி முடிவின்றி எங்கும்நிறை காரணனை
  நிதமென்ணித் துதிப்பவரைத் துன்பங்கள் தீண்டாவாம்
  உலகின்நாதனாம் வேதத்துணைவன் அறங்கள்யாவும் அறிந்தமாயன்
  உலகமனைத்திலும் புகழைச்சேர்ப்பவன் உயிர்களனைத்திலும் ஒளியைச்சேர்ப்பவன்
  இதயமென்றிடும் தாமரைமலரில் இனிதேஇருக்கும் வாசுதேவனின்
  பதங்கள்நினைந்தே இடையறாமல் பணிதலொன்றே சிறந்தஅறம்
   
  உவமையில்லா உயிரொளியெவனோ தவங்கள்தனிலே உயர்தவமெவனோ
  அவனையேபபரப் பிரும்மம்என்று சாத்திரம்யாவும் ஏத்திடல்காணீர்
   
  தூய்மைகளிலே தூய்மையவனே மங்களங்களிலே மங்களமவனே
  தெய்வங்களில் தெய்வம்அவனே உயிரினங்கட்குத் தந்தையவனே
  யுகத்தின்முதலில் அவன்படைத்த பொருட்கள்யாவும் நிலைத்துநின்று
  யுகத்தின்முடிவில் பிரயநாளிலே மீண்டு்ம்அவனைச் சார்வதுகாணீர்
   
  Last edited: Dec 11, 2010
  1 person likes this.
 3. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  Rishirnaamnaam Sahasrasya VédhavyaasO Mahaamunihi
  ChchandO(a)-Nushtup Thadaa DévO Bhaghavaan Dévakee-Suthaha

  Amruthaam SthuthbhavO Bheejam Shakthir Dhévaki Nandhanaha
  Thrisaamaa Hrudayam Thasya S(h)aanthyarthé Viniyujyathe 20

  VishNum JishNum MahaavishNum PrabhavishNum Mahés(h)waram
  Anaika Roopa Dhaithyaantham Namaami Purushoth-Thamam

  Asya S(h)ree VishNOr Dhivya Sahasranaama Sthothra Mahaamanthrasya
  Sri VedhavyasO Bhagavan Rishihi
  Anushtup Ch-Chandaha
  Sri MahavishNu Paramaathmaa Srimaan NaraayaNO Dévathaa
  Amrutham S(h)udhbhavo Bãnurithi Beejam
  Dévakee Nandhana S(h)rashtéthi Sakthihi
  Uthbhava KshObhanO Déva Ithi ParamO Manthraha
  S(h)ankabhruth Nandhakee Chakreethi Keelakam
  Shãrngadhanva Gadhãdhara Ithyasthram
  Radhãngapãni Rakshobhya Ithi Néthram
  Thrisaama Saamaka Saaméthi Kavacham
  Aanandam Parbrahméthi Yonihi
  Rudhu Sudhars(h)anak Kaala Ithi Dhigbandhaha
  </SPAN>
  Shri Viswaroopa Ithi Dhyãnam
  Sri MahavishNup Preethyarthe Sahasra Naama Japé Viniyogaha
  </SPAN>


  மூவுலகங்களின் காவலனான ஞாலமுதல்வன் மாலவனுடைய
  பாவபயங்கள் வேரறக்களையும் நாமமாயிரம் கேளாயரசே
  அருந்தவமுனிவர் உருகிப்போற்றும் பெருமாலவனது அருங்குணங்களை
  அருட்செயல்களைப் பொருள்படக்கூறும் திருநாமங்கள் நலம்பெறக்கேளாய்.
   
  உயிரெழுத்தை எட்டமைந்த அனுட்டுப்எனும் சந்தத்தில்
  வியாசரென்னும் மாமுனிதந்த நாமமாயிரம் கொண்டதிது
  நாரணன்நூலின் நாயகனாம் கடல்கடைந்து மதிதோன்றிடவே
  காரணனேஇதன் ஆதாரம்நம் தேவகிமகனே இதன்வன்மை
  சாமகானமே தொழுதிடும்மாலே இதனஇதயம் இணையிலாத
  நாமமாயிரம் நாவால்துதிக்கப் பாவம்யாவும் பறந்திடப்போமே.
  எங்கும்நிறைந்தே வெற்றிகண்டிடும் அனைத்திலிமுள்ள மகேச்வரனாம்
  உருபலகொண்டு அசுரரைமாய்த்த புருடோத்தமனை நிதம்நான்பணிவேன்.
   
  திருமால் நாமம் ஆயிரத்தின் தோத்திரமாம் இம்மா மந்திரம்
  பகவான் வேதவியாஅர் இதன் ரிஷி. அனுட்டுப் இதன் சந்தம்.
  பெருமால் பரமாத்மா நாரணனே இதன் நாயகன்.
  மதிதோன்றக் காரணனாம் பானுவே விதையாம். தேவகி மைந்தனாம்
  படைப்பவனே இதன்வன்மை. உலகைப் படைத்துக் கலக்கிய
  தேவனே இதன் பரமமந்திரம். சங்கொடு நந்தகம் சக்கரமும்
  ஏந்தியவன் இதன் அச்சாணி. வில்லும் கதையும் தரித்தவன்
  இதன் அஸ்திரம். ஆழியேந்திக் கலங்கானே இதன் கண்கள்.
  முச்சாமத்தால் தொழப்படுபவன் சந்தோகன் சாமம்
  என இதன் கவசம். ஆனந்தம் பரப்பிரும்மம் இதன் மூலம்
  அறுபருவமாய் காணற்கினியவன் காலன் என்பதிதன் திசைக்காப்பு
  எங்கும் நிறைந்தவன் என்பது தியானம். திருமாலின் திருவருளைப்
  பெறுதற்காய் நாமமாயிரம் உச்சரிப்பதே இதன் பலனாம்.
   
  Last edited: Dec 11, 2010
  2 people like this.
 4. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  ध्यानम्:
  क्षीरॊदन्वत्प्रदॆशॆ शुचिमणिविलसत्सैकतॆ मौक्तिकानाम्
  मालाक्लुतासनस्थ: स्पटिक-मणि-निभै-र्मौक्तिकैर्मणिमण्डिताङ्ग:
  शुभ्रैरभ्रै-रदभ्रै-रुपरि-विरचितै-र्मुक्तपीयूषवर्षै:
  आनन्दी न: पुनीया-दरिनळिन-गदा-शङ्कपाणिर्मुकुन्द: 1
   
  भू; पादौ यस्य नाभिर्वियदसुरनिलश्चन्द्रसूर्यौ च नॆत्रॆ
  कर्णावाशा: शिरॊधौर्मुखमपि दहनॊ यस्य वास्तॆयमब्धि:
  अन्तस्स्थम् यस्य विश्वम् सुर-नर-खग-गॊभॊगि-गन्धर्वदैत्यै:
  चित्रम-रम्रम्यतॆ-तम्- त्रिभुवनवपुषम् विष्णुमीशम् नमामि 2

  Dhyãnam

  Ksheerodhanvath Pradhés(h)é Suchi Mani Vilasath Saikathe Maukthikaanaam
  Maalaa Klupthaasanastha SpatikamaNi-Nibhair Maukthikair Mandithaangaha

  S(h)ubhrai Rabhrai Radhabhrai Ruparivirachithair Muktha Peeyuusha Varshaihi
  Anandheena Puneeyaa Dari Nalina Gadaa ShankapaaNir Mukundaha

  Bhoo paadau Yasya Naabhir Viyadasura-Nilas(h)-Chandra Sooryau Cha Néthré
  KarNaavas(h)aa: S(h)iro Dhyaur-Mukhamapi DhahanO Yasya Vaastheyamabdhihi

  Anthastham Yasya Vis(h)vam Sura-Nara-Khaga-GhO-BhOgi-Gandharva-Dhaithyaihi
  Chithram Ramramyathe Tham Thribhuvana-Vapusham VishNu Meesham Namaami

  த்யானம்:

  பாற்கடலில் ரத்தினங்கள் ஒளிருமணற் கரையதனில்
  முத்துமணி மாலையொளிர் ஆசனத்தில் வீற்றிருப்போன்
  வான்பரவு வெண்மேகம் அமுதமழை பொழிந்திடவே
  படிகமணி முத்தாரம் தரித்ததொரு திருமேனி
  சக்கரமும் சங்குகதை பத்மமும்கை ஏந்தியவன்
  பக்தருக்குச் சுகமளித்து முக்திதரும் ஏந்தலவன்
  முகுந்தனவன் மலர்ப்பாதம் துதித்துடுவோம் தூய்மையுற
   
  மண்ணே அவன்தம் திருவடிகள் காற்றேஅவனுக் குயிராம்
  விண்வெளியே அவன்நாபி ஞாயிறுதிங்கள் அவன்கண்கள்
  எண்திசைகள் அவன்செவியாம் விண்ணுலகமவன் திருமுடியாம்
  வெண்தீயேஅவன்திருமுகமாம் ஆழ்கதலேஅவன் உறைவிடமாம்
   
  பசுவினமும் புள்ளினமும் மண்ணவரும் விண்ணவரும்
  அசுரர்கள் கந்தர்வர் உயிரினமும் உலகினிலே
  எவனுடைய அருள்பெற்று உதரத்தில் வாழ்ந்திடுமோ
  புவனங்கள் மூன்றினையும் மேனியாய்க் கொண்டவனாம்
  அவன்பதமே பணிந்திடுவேன் காப்பவனே விஷ்ணுவன்றோ
   
  Last edited: Dec 12, 2010
  1 person likes this.
 5. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  शान्ताकारम् भुजगशयनम् पद्मनाभम् सुरॆशम्
  विश्वाधारम् गगनसद्रुशम्मॆघवर्णम् शुबाङगम्
  लक्ष्मीकान्तम् कमलनयनम् यॊगिह्रुद्ध्यानगम्यम्
  वन्दॆ विष्णुम् भवभयहरम् सर्वलीकैकनाथम् 3
  मॆघश्यामम् पीतकौशॆयवासम् श्रीवत्साङ्गम् कौस्थुबॊद्भासिताङ्गम्
  पुण्यॊपॆतम् पुण्डरीकायताक्षम् विष्णुम् वन्दॆ सर्वलॊकैक नाथम्
  नम:समस्थभूथानाम् आदिभूताय भूभ्रुतॆ
  अनॆक रूप्रूरूपाय विष्णवॆ प्रभविष्णवॆ 4
  सशङ्खचक्रम् सकिरीटकुण्टलम् सपीतवस्त्रम् सरसीरुहॆक्षणम्
  सहारवक्ष:स्थलशॊभिकौस्तुभम् नमामि विष्णुम् शिरसा चतुर्भुजम्
  छायायाम् पारिजात्स्यहॆमसिम्हासनॊपरि
  आसीनम् अम्बुदश्यामम् आयताक्षम् अलङ्क्रुतम्
  चन्ड्राननम् चतुर्बाहुम् श्रीवत्साङ्कित वक्षसम्
  रुक्मिणी सत्यभामाभ्याम् सहितम् क्रुष्णमाश्रयॆ
   
  S(h)aanthaakaaram Bhujagas(h)ayanam Padmanaabham Surés(h)am 
  Vis(h)waadhaaram Gaganasadhrus(h)am MéghavarNam S(h)ubhaangam 

  Lakshmee Kaantham Kamalanayanam Yogihrudhyaana Gamyam 
  Vandé VishNum Bhavabhayaharm SarvalOkaikanatham 

  Megha Shyamam Peetha Kaus(h)eya Vaasam 
  Shree Vatsankam KausthubhoOD BhAasithaAngam 
  Punyopetham PundarEE KaAyaHaaksham VishNum Vande Sarva LOkaika Naatham 

  Namas Samastha Bhothaanam Adi Bhoothaaya Bhoo Bhruthe 
  Aneka Roopa Roopaaya VishaNave Prabha VishNave 

  Sas(h)anka Chakram Saka Reeta Kundalam Sappetha Vasthram Sarasee RuhekshaNam 
  Sahaara Vaksha: Sthala S(h)aubhi Kausthubam Namaami VishNum S(h)irasaa Chathurbhujam 5 

  Chaayayaam Paarijaathasya Héma SimhasanO Pari 
  Aaseena Mam-Bhuda-S(h)yaama-Maayathaaksha Malankrutham 

  Chandraananam Chathur Baahum Shree Vatsankhitha Vakshasam 
  RukmNee Sathyabhaamabhyaam Sahitham Kirshnamas(h)raye 

  அரவணைமேல் துயிலுறுவோன் அமைதிமிகு உருவத்தோன்


  விரிகமல உந்தியுடைவிண்ணவரின் நாயகன்
  விண்போலே வியாபித்த விச்வரூபன் கார்வண்ணன்
  மங்களம் சேர் அங்கத்தோன் திருமகளின் மனமீர்த்தோன்
  பங்கயக்கண் படைத்தவனாம் யோகிர்தம் தியானத்தால்
  மனத்துள்ளெ உணரலாகும் விஷ்ணுவையே வழிபடுவேன்
  அனைத்துலகின் அதிபதிஎன் பிறபிபயம் போக்கிடுவான்
   
  முகில்வண்ணன் மறுஉரத்தே தாங்கினவன் பீதகமாம்
  துகிலுடையோன் கௌஸ்துபமாம் மணிஒளிரும் மார்புடையோன்
  சான்றோர்கள் சூழ்ந்தி்ருப்போன் விரிகமல விழியுடையோன்
  மூன்றுலகின் நாயகனாம் நாரணனை நான்பணிவேன்.
   
  சங்கும்திருச் சக்கரமும் குண்டலமும் கிரீடமுடன்
  தங்கத்துகில் தரித்தவனாம் தாமரையாம் திருக்கண்ணன்
  மாலையணி மணிமார்பில் கௌஸ்துபம் ஒளிவிளங்க
  நால்வரைத் தோளுடைய நாரணனை நான்பணிவேன்.
   
  பாரிஜாத மரநிழலில் பொன்னிருக்கை தனிலிருக்கும்
  கார்மேக வண்ணன்விரி கன்ணன்எழில் அலங்காரன்
  முகம்நிலவு புயம்நான்கு ஸ்ரீவத்ஸமொடு மலர்மார்பன்
  ருக்மணியும் பாமையும்சேர் கன்ணனவன் பதம்பணிவேன்.
   
  1 person likes this.
 6. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  1-10

  ऒम् विश्वम् विष्णुर्वषट्कारॊ भूथभव्यभवथ्प्रभु:
  भूतक्रुद् भूत भ्रुद् भावॊ भूतात्मा भुतभावन: 1

  पूतात्मापरमात्मा चमुक्तानाम् परमा गति:
  अव्यय: पुरुष: साक्षी क्षेत्रञ्नॊ()क्षर् एव च 2

  यॊगॊ यॊगविदाम् नॆता प्रधानपुरुषॆश्वर:
  नारसिम्हवपु: श्रीमान् केशव: पुरुषॊत्तम: 3

  सर्व: शर्व: शिव: स्थाणुर्भॊतादिर्निधिरव्यय:
  सम्भवॊ भावनॊ भर्ता प्रभव: प्रभुरीश्वर: 4

  स्वयम्भू: शम्भुरादित्य: पुष्कराक्षॊ महास्वन:
  अनादिनिधनॊ धाता विधाता धातुरुत्तम: 5
   
  अप्रमॆयॊ ह्रुषीकॆश: पद्मनाभॊ()मरप्रभु:
  विश्वकर्मा मनस्त्वष्टा स्तविष्ठ: स्थविरॊ ध्रुव: 6
   
  अग्राह्य: शाश्वत: क्रुष्णॊ लॊहिताक्ष: प्रतर्दन:
  प्रभूतस्त्रिककुब्धाम पवित्रम् मङ्कळम् परम् 7
   
  ईशान: प्राणद: प्राणौ ज्यॆष्ठ: श्रॆष्ठ: प्रजापति:
  हिरण्यगर्भॊ भूगर्भॊ माधवॊ मधुसूधन: 8
   
  ईश्वरॊ विक्रमी धन्वी मॆधावी विक्रम: क्रम:
  अनुत्तमॊ दुराधर्ष: क्रुतञ: क्रुतिरात्मवान् 9
   
  सुरॆश: शरणम् शर्म विश्वरॆता: प्रजाभव:
  अह: सम्वत्सरॊ व्याल: प्रत्यय: सर्वदर्शन: 10
   
   
  Vis(h)vam vishNur vashatkArO bhootha bhavya bhavath prabhuhu
  Bhoothakrud bhoothabhrud bhaavO bhoothAtma bhootha bhavanaha 1

  Poothathma paramAthma cha mukthAnaam paramA gathihi
  Avyaya:purusha: sakshee kshetragnO(a) Kkshara aevacha 2

  YOgO yOga vidAm naethA pradhAna purushes(h)waraha
  NArasimha vapu : s(h)reeman kaes(h)ava: purushOthamaha 3

  Sarva: s(h)arva: s(h)iva: sthANur bhoothAdir nidhiravyayaha
  SambhavO bhAvanO bharthA prabhava: rabhurees(h)waraha 4

  Swayambhoo: s(h)ambur aadithya: pushkarAkshO mahasvanaha
  AnAdi nidhanO dhAthA vidhAthA dhAthuruththmaha 5

  ApramaeyO hrishee kaes(h)aha padmnAbhO(a) mara prabhuhu
  Vis(h)va karmA manusthvashta: sthavishta: stavirO-dhruvaha : 6

  AgrAhya s(h)as(h)vatha: krishNO LOhithAksha: prathardanaha
  PrabhoothasthrikagupthAma pavithram mangaLam param 7

  Ees(h)Ana: prANada: prANO Jyaeshta: s(h)raeshta: prajA pathihi
  HiraNya garbhO bhoo gahrbhO mAdhavO madhu soodanaha 8

  Ees(h)varO vikramE dhanvE medAvE Vikrama: Kramaha
  AnuththamO durAdarsha: kruthangya: kruthi-rAthmavAn

  Sures(h)a: s(h)araNam s(h)arma vis(h)varaetha prajAbhvaha
  Aha: samvathsarO vyaAa: prathyaya: sarvadhars(h)anaha 10
   

  வையம்விஷ்ணு வசீகரன்அவன் முக்காலத்தும் முதற்பிரபு
  உயிரினமெதையும் படைத்தவனே தாங்கிடுவோனாம் இருத்திடுவோன் 1
   
  அனைத்துயிர்க்கும் ஆத்மாவாம் வளங்கள்தந்து வளர்த்திடுவோன்
  தூயாத்மாவாம் பரமாத்மா துறவோர்கட்குப் பரமகதி 2
   
  அழிவற்றோனாய் அளித்திடுவோன் அனைத்தும்நேரே கண்டிடுவோன்
  அடியார்தங்கள் மெய்கண்டோன் முடிவில்லாத வடிவுடையோன் 3
   
  யோகம்தானே யோகியர்தலைவன் அசித்துயிர்கள் உயர்தலைவன்
  நரசிம்மஉருத் திருவுடையோன் கேசவனே புருஷோத்தமனே 4
   
  அனைத்துமாக அமைந்தவனே அமங்கலங்கள் அழிப்பவனாம்
  சிவனாய்நிலைத்து அருள்புரிவோன் ஆதிப்பொருளாம் அழியாநிதியாம் 5
   
  அவதரிப்பவன் வாழ்வளிப்பவன் காவலன்மேல் பிறப்புடையோன்
  பிரபுஈச்வரன் தான்தோன்றிஅவன் மகிழ்விப்பவனாம் ஆதித்தியனாம் 6
   
  மலர்க்கன்ணனாம் நெடுங்குரலவன் ஆதிஅந்தம் ஏதுமிலான்
  பிரும்மன்தனையும் தாங்கிடுபவனாம் பிரும்மன்தனையே படைத்தவனாம் 7
   
  பிரும்மனைவிட உயர்ந்தவனாமவன் அளப்பறியாத அறிவுடையோன்
  அரும்புலன்கட்கு உயிராவானாம் பத்மனாபனாம் அமரர்பிரபுவே 8
   
  பிரபஞ்சங்களப் படைத்தவனாம் மனுவும்தானே அழிப்பவனாம்
  பருத்தவனாம்மிகப் பழமையானவன் நிலைத்தேஎன்றும் நிற்பவனாம் 9
   
  புலன்கள்தமக்குப் புலப்படாதவன் என்றுமுள்ளவன் கிருஷ்ணனவன்
  செவ்விழியோனாய்ப் பிரளயதினத்தே அழித்திடுவோனாம் அருங்குணத்தோன் 10
   
  Last edited: Dec 30, 2010
  1 person likes this.
 7. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  11 - 20
  अज: सर्वॆश्वर: सिद्धि: सिद्धि: सर्वा्दिरच्युत:
  व्रुषाकपिरमॆयात्मा सर्वयॊगिविनिसस्रुत: 11
   
  वसुर्वसुमना: सत्य: समात्मा सम्मितरस्सम:
  अमॊघ: पुण्डरीकाक्षॊ व्रुषकर्मा व्रुषाक्रुति: 12
   
  रुद्रॊ बहुशिरा बभ्रु-र्विश्व्यॊनिश्शुचिश्रवा:
  अम्रुतश्शाश्वतस्स्ताणुर्वरारॊहॊ महातपा: 13
   
  सर्वग: सर्व्विद्भानुर्विष्वक्सॆनॊ जनार्दन:
  वॆदॊ वॆदविदव्यङ्गॊ वॆदाङ्गॊ वॆदवित्कवि: 14
   
  लॊकाध्यक्षस्सुराद्यक्षॊ दर्मार्ध्यक्ष: क्रुताक्रुत:
  चतुरात्मा चतुर्व्यूहश्चतुर्दम्ष्ट्रश्चतुर्भुज: 15
   
  भ्राजिष्णुर्भॊजनम् भॊक्ता सहिष्णुर्जगदादिज:
  अनघॊ विजयॊ जॆता विश्वयॊनि: पुनर्वसु: 16
   
  उपॆन्द्रॊ वामन: प्राम्शुरमॊघ: शुचिरूर्जित:
  अतीन्द्र:सङ्रह:सर्गॊ ध्रुतात्मा नियमॊ यम: 17
   
  वॆधॊ वैध्य: सदायॊगी वीरहा माधवॊ मधु:
  अतीन्द्रियॊ महामायॊ महॊत्साहॊ महाबल: 18
   
  महाबुद्धिर्महावीर्यॊ महाशक्तिर्महाध्युति:
  अनिर्दश्यवपु:श्रीमानमॆयात्मा महाद्रिध्रुक् 19
   
  महॆष्वासॊ महीभर्ता श्रीनिवास: सताम्-गति:
  अनिरुध्द: सुरानन्दॊ गॊविन्दॊ गोविदाम्-पति: 20
   

  aja: sarvaes(h)vara: sidh(4)da; sidh(4)di: sarvAdirachyuta:
  vrushAkapiramaeyAtmA sarvayOgavinissrutha: 11
   
  vasurvasumanA: sathya: samAtmA sammithssama;
  amOgha: puNdareekAkshO vrushkarmA vrushAkruthi: 12
   
   
  rudrO bahus(h)irA babhrur vis(h)vayOnis(h)s(h)uchis(h)ravA:
  amruthas(h) s(h)As(h)vathas sthANur varAhO mahAthapA: 13
   
  sarvagha: sarvavidbhAnur vishvaksaenO janArdana:
  vaeedO vaeda vidavyangO vaedAngO vaedavithkavi: 14
   
  LOkAdyaksha: surAdyaksha: darmAdyaksha: kruthAkrutha:
  chathurAtmA chaturvyoohas(h)chathurdamshtras(h) chathurbhuja: 15
   
  bhrAjishNurbhOjanam bhOkthA sahisNurjagadAdija:
  anaghO vijayO jaethA vis(h)vayOni: punarvasu: 16
   
  upEndrO vAmana: prAms(h)ramOgha: s(h)uchrUrjitha:
  atheendra: sangraha; sargO dhrutAtmA niyamO yama: 17
   
  vEdhyO vaidhya: sadAyOgee veerahA mAdhavO madhu:
  atheendriyO maAmAyO mahOtsAhO mahAbala: 18
   
  mahAbudhdir mahA veeryO mahA s(h)akthir mahAdhyuthi:
  anirdas(h)yavapus(h)s(h)reemAn amaeyAthmA mahAdidhruk 19
   
  mahaeshvAsO maheebharthA shreenivAsa sathAm gathi:
  anirudhda: surAnandO gOvindO gOvidAm-pathi: 20
   
  மூவுலகங்களின் இருப்பிடமாமவன் தூய்மையோனாம் மங்களவான்
  நடத்திடுவோனாம் உயிரினங்களின் உணர்வும்அவனே உயிரும்அவனே 11
   
  முதல்வன்அவனே மிகச்சிறந்தோன் மானிடர்தங்கள் மாமன்னன்
  தங்கலோகத்தில் தானுறைவோனாம் தன்னுள்தரணி தாங்கிடுவோன் 12
   
  மாதவன்மது ஸூதனன்அவன் ஈச்வரனஆதி பராக்கிரமன்
  வில்வீரன்அவன் மேதாவியே விக்ரமன்எங்கும் நிறைந்தவனாம் 13
   
  தன்மேலிலாதான் எதிர்ப்பிலாதான் செய்நன்றிதனை மறவாதான்
  செய்விபோனாம் ஆன்மாதமையே உய்விப்போனாம் தேவர்தலைவன் 14
   
  துயர்தீர்ப்போனாம் ஆனந்தமயன் அனைத்துலகத்துக் காரணனாம்
  உயிரினங்களின் மூலவனாம் பகலொளிஅவனே காலன்அவனே 15
   
  வயப்படுத்தவே இயலாதானாம் அறிவின்வடிவே யாவும்காண்போன்
  பிறப்பற்றோனாம் அனைவர்கட்கும் தலைவன்அவனே என்றுமுளோன் 16
   
  ஞானரூபியாம் ஆதிமூலமாம் அச்சுதன்அவனே தர்மவராஹன்
  அளவில்லாதான் உணரும்வழியினன் அன்பர்தமது மனத்துறைவோன் 17
   
  நல்மனத்தோன் சத்தியப்பிரியன் சமமனத்தோன் அளப்புரியன்
  சமநிலையோன் தான்பலனுடை செய்வோனவன் கமலக்கண்ணன் 18
   
  அறமேசெய்வோன் அறவடிவத்தோன் ஆனந்தத்தில் அழவைப்போன்
  பன்முகத்தோன் தாரணியெல்லாம் தாங்கிடுவோன் உலககாரணன் 19
   
  இனியசொற்கள் கேட்டிடுவோன் அமுதனென்றும் நிலைததிடுவோன்
  பரமபதத்திற் குரியவனாம் பேரறிஞன் எங்குமுளோன் 20
   
  Last edited: Dec 30, 2010
  1 person likes this.
 8. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  21-30
  मरीचिर्दमनॊ हम्स: सुवर्णॊ भुजगॊत्तम:
  हिरण्यनाभ: सुतपा:पद्मनाभ: प्रजापति: 21
   
  अम्रुत्यु: सर्वद्रुक् सिम्ह: सन्धाता सन्धिमान् स्थिर:
  अजॊ दुर्मषण: शास्ता विश्रुतात्मा सुरारिहा 22
   
  गुरुर्गुरुतमॊ धाम सत्य: सत्यपराक्रम:
  निमिइषो()निमिषस्रग्वी वाचस्पतिरुदारधी 23
   
  अग्रणीर्ग्रामणी:श्रीमान् न्यायॊ नॆतासमीरण:
  सहस्त्रमूर्धा विश्वात्मा सहस्राक्ष: सहस्रपात् 24
   
  आवर्तनॊ निव्रुत्तात्मा सम्व्रुत: सम्प्रमर्दन:
  : सम्वर्तकॊ वह्निरनिलॊ धरणीधर: 25
   
  सुप्रसाद: प्रसन्नात्मा विश्वध्रुग्विश्वभुग्विभु:
  सत्कर्तास् सत्क्रुत: साधुर्जन्हुर्नारायणॊ नर: 26
   
  अस्न्ख्यॆयॊ()प्रमॆयात्मा विशिष्ट:शिष्टक्रुच्छुचि:
  सिध्दार्थस्सिध्दसन्कल्प: सिध्दिद: सिध्दिसाधन: 27
   
  व्रुषाही व्रुषभॊ विष्णुर्व्रुषपर्वाव्रुषॊधर:
  वर्धनॊ वर्धमानश्च विविक्त: श्रुतिसागर: 28
   
  सुभुजॊ दुर्धरॊ वाग्मी महेन्द्रॊ वसुदॊवसु:
  नैकरूपॊ ब्रुहद्द्रूप:शिपिविष्ट: प्रकाशन: 29
   
  ऒजस्तॆजॊ ध्युतिधर:प्रकाशात्मा प्रतापन:
  ऋध्द: स्पष्टाक्षरॊमन्त्रश्चन्द्राम्शुर्भास्करध्युति: 30
   
  mareechirdamanO hamsa: suvarNO bhujagOttama:
  hiraNyanAbha: sutapA: padmanAbha: prajApati: 21
   
  amrutyu: sarvadruksimha: sandhAtA saNdhimAn sthira:
  ajOdurmaShaNa: shAstA vishrutAtmA surArihA 22
   
  gururgurutamO dhAma satya: satyaparAkrama:
  nimiShO(a)nimiShasragvee vAchaspatirudAradhee: 23
   
  agraNeergrAmaNee: shreemAn nyAyO naetA sameeraNa:
  saasramoordhA vishvAtmA sahasrAkSha: sahasrapAt 24
   
  AvartanO nivruttAtmA samvruta:sampramardana:
  aha: samvartakO vahniranilO dharaNeedhara: 25
   
  suprasAda: prasannAtmA vis(h)vadrugvis(h)vabhugvibhu:
  satkartA satkruta: sAdhurjanhurnArAyaNO nara: 26
   
  asankyEyO(a)pramaeyAtmA vis(h)iShTa: siShTakrucchuchi:
  sidhdArthassidhdasankalpa:sidhdida:sidhdisAdhana: 27
   
   
  vruShAheevriShabhO viShNurvruShaparvA vruShOdhara:
  vardhanO vardhamAnas(h)cha viviktha: s(h)ruthisAgara: 28
   
  subhujO durdharO vAgmee mahaendrO vasudO vasu:
  naikaroopO bruhadroopa:s(h)ipiviShta: prakAs(h)ana: 29
   
  OjasthaejO dhyuthidhara: prakAs(h)AtmA pratApana:
  Rudhda: spaShTAkSharO mantras(h)chandrAms(h)rbhAskaradhyuthi: 30
   
   

  யாவுமறிந்தோன் அறிவால்ஒளிர்வோன் மாற்றார்தம்மை மாற்றழிப்போன்
  இல்லலொழிப்போன் வேதந்தந்தோன் வேதமறிந்தோன் அங்கநிறைவினன்
  21
   
  வேதசரீரன் வேதவிசாரணன் யாண்டும்யாவும் பார்த்திடுவோன்
  ஞாலங்கண்டோன் தேவர்கண்டோன் தர்மங்கண்டோன் இருமைப்பயனாம்
  22
   
  நால்வகையான உருவங்கண்டோன் நால்வகையான நிலையிலுள்ளோன்
  நான்குகோரப் பல்லுடையோன் நாற்புயத்தோன் ஒளிமிக்கோன்
  23
   
  பக்தர்தமக்கு விருந்தாவோன் பக்தர்படையல் சுவைத்திடுவோன்
  பக்தர்பிழைகள் பொறுத்திடுவோன் முதலில்உதித்த மூர்த்தியவன்
  24
   
  பிழையில்லாதான் விஜயன்வெல்வோன் உலகமனைத்தின் மூலவனாம்
  தேவருள்ளத் துறைபவனாம் உபேந்திரனாம் வாமனனாம்
  25
   
  உலகளந்தான் வீண்போகாத செய்கையாளன் தூய்மையோன்
  வல்லவனவனே இந்திரனுக்கும் வல்லவனவனே பக்தர்ஏற்கும்
  26
   
  நல்லவன்அவனே படைத்திடுபவனாம் ஆன்மாக்களையும் தரிப்பவனாம்
  நியமிப்போனாம் அடக்கிடுவோன் பக்தர்தமக்குப் புலப்படுவோன்
  27
   
  வித்தகன்அவனே என்றும்உழைப்போன் அசுரர்வீரரை அழித்திடுவோன்
  மாதவனாம்மது போன்றவனாம் புலன்தமக்குப் புதிரானவனாம்
  28
   
  அதி உற்சாகி அதிவல்லவனாம் பெருமறிஞன்
  மகாவீரன் மகாசக்திமான் அளவிறந்த மகாஒளியாம்
  29
   
  சுட்டாமேனியன் திருவணியோன் அளவிடமுடியா அற்புதனாம்
  மாமலைதன்னைத் தாங்கியதீரன் மாவில்லதனை ஏந்தியவன்
  30
   
  1 person likes this.
 9. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  31-40


  अम्रुताम्शुद्भवॊ भानु: शशबिन्दु: सुरॆश्वर:
  औषधम् जगत: सेतु: सत्यधर्मपराक्रम: 31
   
  भूतभव्यभवन्नाथ:पवन: पावनॊ()नल:
  कामहा कामक्रुत्कान्त: काम: कामप्रद: प्रभु: 32
   
  युगादिक्रुध्युगावर्तॊ नैकमायॊ महाशन:
  अद्रुश्यॊ व्यक्तरूपश्च सहस्रजिदनन्तजित् 33
   
  इष्टॊविशिष्ट: शिष्टॆष्ट: शि्ख्ण्डी नहुषॊ व्रुष:
  क्रॊधहा क्रॊधक्रुत्कर्ता विश्वबाहुर्महीधर: 34
   
  अच्युत: प्रथित: प्राण; प्राणदॊ वासवानुज:
  अपाम्निधिरधिष्टान मप्रमत्त: प्रतिष्टित: 35
   
  स्कन्दस्स्कन्दधरॊ धूर्यॊ वरदॊ वायुवाहन:
  वासुदॆवॊ ब्रुहद्भानुरादिदॆव: पुरन्दर: 36
   
  अशॊकस्थारणस्तार: शूर: शौरिर्जनॆश्वर:
  अनुकूल: शतावर्त: पद्मी पद्मनिभॆक्षण: 37
   
  पद्मनाभॊ()रविदाक्ष: पद्मगर्भ: शरीरभ्रुत्:
  महर्ध्रिदिर्ॠध्दॊ व्रुध्दात्मा महाक्षॊ गरुडध्वज: 38
   
  अतुल: शरभॊ भीम: समयञॊहविर्हरि:
  सर्वलक्षणलक्षण्यॊ लक्ष्मीवान् समितिञ्जय: 39
   
  विक्षरॊ रॊहितॊ मार्गॊ हॆतुर्दामॊदर: सह:
  महीधरॊ अहाभागॊ वॆगवानमिताशन: 40
   

  amruthAms(h)udbhavO bhAnu: s(h)as(h)abindu: surEs(h)vara:
  auShadham jagata: sEtu; satyadharmaparAkrama: 31
   
  bhoothabhavyabhavannAtha: pavana: pAvanO(a)nala:
  kAmahA kAmakruthkAntha: kAma: kAmaprada: prabhu: 32
   
  yugAdikrudhyugAvarthO naikamAyO mahAs(h)ana:
  adrus(h)yO vyakthrUpas(h)cha sahasrajithanandajith 33
   
  ishTOvis(h)ishTa: s(h)is(h)TaeshTa: s(h)ikhaNDee nahushO vrusha:
  krOdhahA krOdhakrthkarthA vis(h)vabAhurmaheedhara: 34
   
  achyutha; prathitha: prANa: prANadO vAsavAnuja:
  apAmnidhiradhishtAnam apramaththa: prathishtitha: 35
   
  skandaskandadharO dhooryO varadO vAyuvAhana:
  vAsudaevO bruhadbhAnurAdidaeva: purandara: 36
   
  as(h)OkasthAraNasthAra:s(h)oora: s(h)aurirjanaes(h)vara:
  anukoola: s(h)athAvartha: padmee padmanibhaekshaNa: 37
   
  padmanAbhO(a)ravindAksha: padmagarbha: s(h)areerabhruth
  mahardhdrudhdo vrudhdAhmA mahAkshO garudadhvaja: 38
   
  athula: s(h)arabhO bheema: samayajnO havirhari:
  sarvalakshaNa lakshaNyO lakshmEvAn samithinjaya: 39
   
  viksharO rOhithO mArgO haethurdAmOdara: saha:
  maheedharO mahAbhAgO vaegavAnamithAs(h)ana: 40
   
   

  மண்ணுலகத்தைத் தாங்கிடுவோன் திருவின்உறைவிடம் பக்தர்புகலாம்
  தடையில்லாதான் வின்ணவர்தம்மை மகிழச்செய்வோன் கோவிந்தன் 31
   
   
  வேதவாக்கின் அறிஞர்தலைவன் ஒளிவடிவினனாம் அடக்குவோன்
  அன்னனானவன் எழிற்சிறகுடையோன் பைந்நாகம் தனில்உத்தமன் 32
   
  சுவர்ணநாபனாம் மிக்கமதியினன் பத்மநாபனாம் மக்களின்தலைவன்
  மரணம்தடுப்போன் அனைத்தும்நன்கு கவனித்திடுவோன் சிம்மவடிவினன் 33
   
  பக்தரைத்தன்னுடன் சேரவைப்பவன் என்றும்சேர்வோன் நிலையானவன்
  பிறப்பற்றோனாம் பகைவர்தாங்க இயலாதானாம் அடக்கிடுவோன் 34
   
  அனைவரும்அறியும் அற்புதசரிதன் அசுரரழித்தோன் குருக்களின்குரு
  சராசரங்கள் தாங்கிடுவோன் சத்யன்சத்ய பராக்கிரமனாம் 35
   
  தீயோர்காணான் இமைகொட்டாதான் மாலயணிந்தோன் வி்ந்தைக்கதிபதி
  சிறந்தவித்தகன் பக்தர்தம்மை முக்தியில்சேர்ப்போன் பக்தர்தலைவன் 36
   
  ஸ்ரீமான்நியாயம் காப்போன்தலைவன் சுதந்திரமாகச் செயல்படுவோன்
  ஆயிரமுகத்தோன் எங்கும்நிறைந்தோன் ஆயிரம்கண்ணோன் ஆயிரமடியோன் 37
   
  வாழ்க்கைச்சக்கரம் உருளச்செய்வோன் பற்றற்றோனாம் மறைந்திடுவோன்
  அறியாமைஇருள் அகற்றிடுவோன் காலச்சக்கரம் உருட்டிடுவோன் 38
   
  யாவும்சுமப்போன் வாழ்வளிப்போன் புவியைச்சுமப்போன் அருள்புரிவோன்
  இனியமனத்தோன் உலகுபடைத்தோன் உலகம்காப்போன் மதித்திடுவோன் 39
   
  தொழுதற்குரியோன் சாதனைபுரிவோன் மறையச்செய்வோன் நாராயணனாம்
  நடத்திச்செல்வோன் அளவிடஇயலாப் பொருட்களுடையோன் அரவியுளோன் 40
   
  Last edited: Jan 31, 2011
  1 person likes this.
 10. Chitvish

  Chitvish Moderator IL Hall of Fame

  Messages:
  33,567
  Likes Received:
  3,746
  Trophy Points:
  490
  Gender:
  Female
  41 - 50
   
  उद्भव: क्षॊभणॊ देव:श्रीगर्भ: परमॆश्वर:
  करणम् कारणम् कर्ता विकर्ता गहनॊ गुह: 41
   
  व्यवसायॊ व्यवस्थान:सम्स्थान: स्थानदॊ ध्र्व:
  परर्ध्दि: परमस्पष्टस्तुष्ट: पुष्ट: सुभॆक्षण: 42
   
  रामॊ विरामॊ विरतॊ मार्गॊ नॆयॊ नयॊ()नय
  वीर
  : शक्तिमताम् शॆष्ठॊ धर्मॊ धर्मविदुत्तम: 43
   
  वैकुण्ठ: पुरुष: प्राण: प्राणद: प्रणव: प्रुथु:
  हिरण्यगर्भ: शत्रुघ्नॊ व्याप्तॊ वायुरधॊक्षज: 44
   
  ऋतु: सुदर्शन: काल: परमॆष्टी परिग्रह:
  उग्र: सम्वत्सरॊ दक्षॊ विशामॊ विश्वदक्षिण: 45
   
  विस्तार: स्तावरस्थाणु: प्रमाणम् बीजमव्ययम्
  अर्थॊ
  ()नर्थॊ महाकॊशॊ मआभॊगॊ महाधन: 46
   
  अनिर्विष्ण:स्थविष्टॊभूर्धर्मरूपॊ महामख:
  नक्षत्रनॆमिर्नक्षत्री क्षम; क्षाम: समीहन: 47

  यञ इज्यॊमहॆज्यश्च क्रतु:सत्रम् सताम् गति:
  सर्वदर्शी विमुक्तात्मा सर्वञॊ ञानमुत्तमम् 48
   
  सुव्र्त:सुमुख:सूक्ष्म: सुघॊष: स्खद: सुह्रुत्
  मनॊहरॊ जितक्रॊधॊ वीरबाहुर्विदारण
  : 49
   
  स्वापन: स्ववशॊ व्यापी नैकात्मा नैककर्मक्रुत्
  वत्सरॊ वत्सलॊ वत्सी रत्नगर्भॊ धनॆश्वर
  : 50
   
  udbhava: kShObhaNO deva: shreegarbha: paramaeshvara:
  karaNam kAraNam kartA vikartA gahanO guha: 41
   
  vyavasAyO vyavasthAna: samsthAna: sthAnadO dhruva:
  parardhdi: paramaspashtasthushta: pushta: s(h)ubEkshaNa: 42
   
  rAmO virAmO virathO mArgO naeyOnayO(a)naya:
  vIras(h)kthimathAm s(h)raeshtO dharmO dharmavidaththama: 43
   
  vaikuNta: purusha: prANa: prANada: praNava: prathu:
  hiraNyagarbha: s(h)athrughnO vyApthO vAyuradhOkshaja: 44
   
  ruthu: sudars(h)ana: kaala: paramaeshtee parigraha:
  ugra: samvathsarO dakshO vis(h)rAmO vis(h)vadakshiNa: 45
   
  visthAra: sthAvarasthANu: pramANam beejamavyayam
  arthO(a)narthO mahAkOs(h)O mahAbhOgO mahAdhana: 46
   
  anirvishNa: sthavishttOrbhoor dharmaroopO mahArava:
  nakshathranaemi nakshathree kshama: kshAma: sameehana: 47
   
  yajna ijyO mahaejyas(h0cha krathu: sathram sathAm-gathi:
  sarvadars(h)ee vimukthAthmA sarvajnO jnaanamuththamam 48
   
  suvratha: sumukha: sookshma: sughOsha: sukhada: suhruth
  manOharO jithakrOdhO veerabaahurvidaaraNa: 49
   
   
  svApna: svavas(h)O vyApee naikAthmA naikakarmakruth
  vathsarO vathsalO vathsee rathnagarbhO dhanaes(h)vara: 50


   
  தலைசிறந்தோன் குணங்களைத்தருவோன் குற்றமற்றோன் எல்லாமுடையோன்
  நினைத்ததெல்லாம் நிறைவேற்றிடுவோன் கேட்டவையாவும் கொடுத்தருளிடுவோன்
  41
   
  வழிபடவேபல சித்தியும்தருவோன் பகல்போல்தர்மம் பரவச்செய்வோன்
  அருள்மழைபொழிவோன் விஷ்ணுவாம்வீட்டின் வழியமைத்திடுவோன் அறவயிறினன்
  42
   
  வளர்விப்போனாம் வளர்ந்திடுவோன் தனித்துநிற்போன் மறைசேர்கடலாம்
  எழிற்புயத்தோன் வேறோர்தாங்க இயலாதான் சுருதிசொல்லுடையோன்
  .............43
   
  மகேந்திரன்நற் செல்வம்தருவோன் செல்வமு்ம்அவனே பல்வகைரூபன்
  பேருருவத்தோன் ஒளிக்கதிர்போலே பரந்தவன்எதையும் ஒளிரச்செய்வோன்
  44
   
  வலிமைவீரமும் ஒளியுமுடையோன் ஒளிவிடுமுருவன் வெப்பம்தருவோன்
  யாவும்நிறைந்தோன் வேதஎழுத்தை விளக்கிடுவோனாம் நினைப்போர்காவலன்
  45
   
  தண்மதிபோலே குளிர்குணத்தோன் கதிரவன்போலே ஒளிமிக்கவனாம்
  வெண்மதிதோன்றக் காரணனானவன் பிரகாசிப்பவன் களங்கமழிப்போன்
  46
   
  நல்லோர்தலைவன் பிறவிமருந்தாம் உலகம்யாவையும் உய்விப்பவனாம்
  வாய்மையும்அறமும் வீணாக்காதவன் முக்காலத்தவர் போற்றும்நாதன்
  47
   
  புனிதன்காற்றைப் போன்றியல்வினன் சுத்தமாக்கும் தன்மைதந்தோன்
  மற்றைக்காமம் மாற்றச்செய்வோன் மனம்விரும்பியதை மகிழத்தருவோன்
  48
   
  காந்தன்காமன் கோரியபலன்கள் கொடுப்போன்பிரபு காலமுதல்வன்
  மீண்டும்யுகங்கள் தோன்றச்செய்பவன் மாயைசெய்பவன் உலகம்உண்பவன்
  49
   
  புலப்படாதவன் தெளிந்தரூபன் ஆயிரமசுரரை வெற்றிகண்டவன்
  அசுரரழித்தவன் யாவரும்விரும்பும் தாயினும்பரிவினன் ஞானிதம்அன்பன்
  50
   
Thread Status:
Not open for further replies.

Share This Page