தினம் ஒரு தகவல்...........

Discussion in 'Tamil Nadu' started by kannaa, Sep 14, 2010.

  1. kannaa

    kannaa Senior IL'ite

    Messages:
    106
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Male
    ஒரே கிராமத்தில் 1,200 பேர் கண் தானம் செய்து சாதனை

    ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1,200 பேர், ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண் தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.ஐதராபாத்தில் இருந்து 42 கி.மீ., தூரத்தில் ரங்கா ரெட்டி மாவட்டம், செவெல்ல டவுன் அடுத்த தேவுனி எர்ரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கண் தானம் வழங்கியது குறித்து, கிராமத்தில் உள்ள பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரசாரம் மேற்கொண்டனர்.விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் ஏராளமானவர்கள் கண் பார்வை இழந்து விடுகின்றனர். அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளி தரும் வகையில், தங்களது மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவது ஒரு முன் உதாரணமான சம்பிரதாயமாகும் என முடிவு செய்த இந்த கிராம மக்கள், சுய சிந்தனையுடன் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்த பின், கண்களை தானமாக வழங்க முடிவெடுத்தனர்.

    இதன் முதற்கட்டமாக 200 பேர், ஐதராபாத் சரோஜினி தேவி கண் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்து, தங்கள் மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.மேலும் இதே கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர், தங்கள் கண்களை தானமாக வழங்குவதாக தெரிவித்து அதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்ட பத்திரங்களையும் மருத்துவமனையின் மேற்பார்வையாளரிடம் வழங்கினர்.கண் தானம் வழங்குவதன் மூலம் பயனாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து கிராமத்தினரிடையே கடந்த இரண்டு மாதங்களாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த ஊராட்சித் தலைவர் சத்தியநாராயண ரெட்டி, மேலும் 1,100 பேர் கண் தானம் வழங்க முன் வந்துள்ளதாக அறிவித்தார். இவர், ஆந்திர மாநில ஊராட்சித் தலைவர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.இதையடுத்து, மாநிலத்திலேயே சிறந்த கிராமமாக எர்ரவள்ளி கிராமத்தைத் தேர்ந்தெடுக்க, இத்தொகுதியின் எம்.எல்.ஏ., ரத்தினம், அரசிடம் சிபாரிசு செய்து வருகிறார்.


    என்றும் அன்புடன்.........
    kannaa....:thumbsup
     
    Loading...

  2. kannaa

    kannaa Senior IL'ite

    Messages:
    106
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Male
    " வெற்றிகரமான வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் சக்தியாக இருப்பவள் ஒரு பெண்தான் என்பது உலகம் அறிந்த உண்மை . ஆனால், பெண்ணுக்கு எங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ? Woman என்றால் Wife Of man என்றுதான் அர்த்தம் , இங்கே !"...

    ரகசியம் !
    ஒரு ரகசியம் ரகசியமாகவே இருக்க எவ்வளவு பேரிடம் ( அதிகபட்சம் ) அதைச் சொல்லலாம் ?
    ' நூறு சதவிகித சக்சஸ் ரேட் ' வேண்டுமானால், ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது ! டாக்டர் ஜேம்ஸ் பாரி ( Barry ) , விக்டோரியா மகாராணியிடம் அரசவை சர்ஜனாக 40 வருடங்கள் தொடர்ந்து பணிபுரிந்தார் . அவரைப் பாராட்டி மகாராணி ' ராணுவ ஜெனரல் ' ஆகப் பதவி உயர்வுகூடக் கொடுத்தார் . 1865- ம் ஆண்டு ஜேம்ஸ் பாரி இறந்த பிறகுதான் அதுவரை யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் வெளிப்பட்டது . அவர் ஒரு பெண் !

    குழந்தை !
    வளர்ந்த மனிதனைக்காட்டிலும் , பிறந்த குழந்தைக்கு எலும்புகள் அதிகம் . விளக்கம் :
    அது உண்மை ! பிறந்த குழந்தைக்கு இருப்பது 350 எலும்புகள் . வயதான பிறகு 206 எலும்புகள் ! குறிப்பாக , மணிக்கட்டு, கால், கை பகுதிகளில் உள்ள எலும்புகள் போகப் போக இணைந்துவிடுகின்றன . இன்னொரு ஆச்சர்யம் - குழந்தையால் மூச்சுவிட்டுக்கொண்டே ( Breathing ) சாப்பிடவும் , விழுங்கவும் முடியும் . நாம் விழுங்கும்போது மூச்சை நிறுத்திக் கொண்டாக வேண்டும் !
    --- ஹாய் மதன் . ஆ. விகடன் . 10. 03. 2010 .
     
    Last edited: Sep 15, 2010
  3. kannaa

    kannaa Senior IL'ite

    Messages:
    106
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Male
    1) பொலிவிழந்தது சில்வர் பீச்: கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட "மெகா சைஸ்' விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் விதிகளை மீறி கடலூர் சில்வர் பீச்சில் 100 மீட்டர் தூரத்திற்குள்ளாகவே கரைக்கப்பட்டதால் சிலைகளும், மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கரை ஒதுங்கி, பீச் பொலிவிழந்து காணப்பட்டது.

    2)த(க)ண்ணீரில் சமையல்: ஊட்டி காந்தல் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள குழந்தைகளுக்கான பால்வடியின் சமையல் அறையில் ஊற்றுநீர் வருவதால், இங்குள்ள பணியாளர் கடும் அவதியில் சமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்காததால் மழை காலத்தில் "குளம்' உருவாகிறது.

    3)நாங்கெல்லாம் அந்த காலத்துல...: மாநகராட்சி சார்பில் சாலையோர சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மூலம் விவசாயம் குறித்து சிறுமிக்கு விளக்குகிறார் இந்த பாட்டி... கழனியெல்லாம் கட்டடங்களாகிவிட்ட நமது சென்னையில் இயற்கை, கலாச்சாரம் குறித்து தெரிந்து கொள்ள இந்த சுவர் ஓவியங்கள் தான் உதவும் போல... இடம்: நந்தனம், அண்ணாசாலை.
     

    Attached Files:

    Last edited: Sep 15, 2010

Share This Page