1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தித்திக்கும்(?) தீபாவளி !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 29, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மடமடவென விடிகாலை, வழுவழுக்கும் எண்ணைக் குளி !
    கொதிகொதிக்கும் வெந்நீரில், சலசலக்கும் கங்கைநதி !
    பளபளவென கவரும்படி, புதுப்புதுசாய் துணிமணியில்,
    விறுவிறுவெனப் பெரியோரை,சுறுசுறுப்பாய்க் கரங்கூப்பி,
    குதிகுதித்திடும் மகிழ்ச்சியுடன், மளமளவென்று தயாராகி,
    மணிமணியாய் நண்பருடன், கதைகதையாய் உரையாடி,
    கலகலவென சிரித்தபடி, கொறிகொறித்திட திண்பண்டம் !
    படபடவென பட்டாசுகள், பொறிப்பொறியாய் மத்தாப்பூ !
    திகுதிகுவென புதைவானம் ,சரசரக்கும் தரைச்சக்கரம் !
    கடகடவென வானேறி, வெடிவெடித்திடும் ராக்கெட்டு !
    சரம்சரமாய் லக்ஷ்மிவெடி,புகைபுகையாய் பாம்புமாத்திரை !
    குடுகுடுயென குழந்தைகளும் அடம்பிடித்து வாங்குவரே !
    அலையலையாய் நெஞ்சிலெழும் அன்றையநாள் தீபாவளி !
    விலைவிலையாய்க் கொடுத்தாலும் பொற்காலம் திரும்பாதே !
    அலைகடலைக் கடந்தாலும் தாயகத்தை மறப்பதெங்கே ?
    அலைபேசியில் வாழ்த்துகளைப் பெறுவதிலே சுகமுமெங்கே ?
    எதையெதையோ பெறுவதற்கு எதையெதையோ இழக்கின்றோம் !
    மெதுமெதுவாய் நெஞ்சினிலே தைத்தழுத்தும் நெருஞ்சிமுள்ளே !
    இருந்தபோதும் மனந்தேறி இருக்குமிடத்திலிருந்து கொண்டே
    வருத்தமறைத்து வாழ்கின்றோம், வாழ்த்தைப் பரிமாறுகின்றோம் !

    அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

    Regards,

    Pavithra
     
    GoogleGlass, rai, periamma and 3 others like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Hi,
    Thanks for your wishes.
    Wish you and your family happy Deepavali !
    Vaidehi

    Ps: Thanks for sharing your visual treats!
     
    PavithraS likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you, Vaidehi ! Wish you the same !
     
    vaidehi71 likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான தீபாவளி கவிதை ! அட பலகரங்கள் கண்ணுக்கு விருந்து ' wish I was your neighbor ;)
     
    PavithraS likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls (I too wish for you to be my neighbor !), @ksuji, @kaniths விருப்பம் தெரிவித்தமைக்கும், பின்னூட்டம் அளித்தமைக்கும் , வாழ்த்தியமைக்கும் நன்றி ! மகிழ்ச்சி ! :)
     
    Last edited: Oct 29, 2016
    ksuji likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அம்மம்மா அருமையான விருந்து .கவிதையும் பட்சணங்களும் தித்திக்குது .தீபாவளி வாழ்த்துக்கள்
     
    PavithraS and jskls like this.
  7. rai

    rai Platinum IL'ite

    Messages:
    290
    Likes Received:
    559
    Trophy Points:
    205
    Gender:
    Female
    Kavidhai negizha vaithadhu!
    Batshanam rusiai thoondi virundhai amaindhadhu!
     
    jskls and PavithraS like this.

Share This Page