1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிஜம் லக்ஷ்மி..........:(
     
    jskls likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிஜம் ஜெயா மா :(.......நாம் முடிந்தவரை எடுத்து சொல்லவேண்டியது தான். எனக்கு அந்த வீடியோ பார்த்ததும் ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது...........பெரும்பாலும் நான் எழுதி வைத்தது தான் காட்டுகிறார்கள்........நான் மேலே சொன்னது போல ஒரு 10 நாளாய் இதை எழுதி கொண்டு இருக்கேன் ...........குறைந்த பக்ஷம் நிறைய பேர் இப்போது இப்படி எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷமாய் இருக்கு.............தமிழ் கொஞ்சம் பிழைக்கும் என்று தோன்றுகிறது :)
     
    vaidehi71 likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மறுபடி சொல்கிறேன், இது வெளிநாட்டு பசங்களுக்கு மட்டும் இல்லை, நம் நாட்டிலேயே பல மாநிலங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும். வெளி இல் எல்லோரும் ஒரு மொழி பேசும்போது, நாமும் அதைத்தான் பேசவேண்டும், கற்க வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. ஆனால், வீட்டுக்குள் நாமே நம் குழந்தைகளிடம் தமிழில் பேசாமல் , ஆங்கிலத்திலோ, அல்லது வேறு மொழிகளிலோ பேசினால் , குழந்தைகள் எப்படி தமிழை தெரிந்து கொள்ளும்?......


    நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், மொழியையும், நம் பழக்க வழக்கங்களையும் சொல்லித்தரவேண்டியது நம் கடமை இல்லையா? அதில் தவறலாமா? நம் அடுத்த தலை முறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை மக்கள் தமிழை மறந்து விடும் ஆபத்து இருக்கே.....

    இப்போவே பார்த்தீர்கள் என்றால், ஒரு 18 -20 வயதுடைய பசங்களும் பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவா, எழுதுவா........கொஞ்சம் " தல போச்சு என்றால் தவலை போச்சு" என்று இருக்கும்........ஏதோ பரவாஇல்லை..ஆனால், அடுத்த தாக இருக்கும் தலைமுறை குழந்தைகள், தமிழில் நாம் பேசுவதை மட்டும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் திருப்பி பதில் அளிக்கத் தெரியாமல், விழித்து ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்............இப்படிப் போனால், இவர்களுக்கு அடுத்த தலை முறை என்ன ஆகும்? ...கொஞ்சம் யோசிக்கணுமே நாம் !

    .................
     
    vaidehi71 and jskls like this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிலைமை இப்படி இருக்க, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்த நேரத்திலாவது கொஞ்சம் விழித்துக் கொள்ளணும் ...... தமிழ் நாட்டில் இருக்கும் குழந்தைகள் ஒரு பாடமாக வாவது தமிழை எடுத்து படித்து விடுவார்கள், இங்கு தமிழ் எப்பவும் ஏதாவது ஒரு விதத்தில் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கும், ஆனால் , பிற மாநிளைங்கழிலோ அல்லது பிற நாடுகளிலோ இருக்கும் குழந்தைகள் என்ன செய்ய முடியும்? ...இது போன்ற வசதி அவர்களுக்கு கிடையாதே?...............கரெக்ட் ? .. அப்போ இருக்கும் ஒரே வழி நாம் தான் அவர்களுடன் நம் தாய் மொழி இல் பேசணும்.


    இல்லை இல்லை, நாங்க தமிழ் சங்கங்கள் வைத்து இருக்கோம், அவர்களை நாட்டியம் பாட்டு போன்றவை கற்றுக்கொள்ள அனுப்புகிறோம் என்று சொல்லலாம். தமிழ் சங்கத்தில் குழந்தைகளின் பங்கு என்ன ?..கொஞ்சம் யோசியுங்கள்........


    தங்களின் மழலை மொழி இல், சொல்லிக்கொடுத்த பாடலை, ஏற்ற இரக்கமே இல்லாமல் ஒப்புவிப்பார்கள், ......கொஞ்சம் இருங்கள் கோபிக்க வேண்டாம் :)..............அவங்களுக்கு த்தான் அந்த பாடலின் அர்த்தம் புரியாதே, அப்புறம் எப்படி மனம் ஒப்பி பாடுவார்கள்?..........ஒப்புவிக்கத்தான் செய்வார்கள்...........


    அடுத்தது நடனம், நீங்க சொலித் திருகிறீர்கள் தான் அனால் எப்படி, " வெண்ணெய் உண்ட வாயன்" என்றால், அவளுக்கு எப்படி புரிய வைப்பீர்கள்?..you see, you know Lord Krishna, he is very fond of butter, he is eating butter............you have to dance for that...................இப்படித்தானே? .இதில் என்ன உணர்ச்சியைக்காட்டும் அந்த சிறு பெண்? இதே மொழி புரிந்து ஆடினால் 'பாவம்' தானே வருமே.............அவளும் சந்தோஷமாய் ஆடுவாள், நாமும் நன்கு ரசிக்கலாம் !

    ......................
     
    vaidehi71, jskls and PavithraS like this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதனால் தானே எத்தனயோ உயர்வானது கர்னாடிக் சங்கீதம் என்றாலும், தமிழ் பாடல்களை ஊக்குவிக்கவேண்டும், தமிழில் பாடவேண்டும் , அவர்கள் பாடுவது நமக்கு புரிந்தால்தான் அனுபவிக்க, ரசிக்க முடியும் என்று கலாட்டா செய்து தமிழ் பாடல்களை சபாக்களில் பாடத்துவங்கினர்கள்.அதே தானே இங்கும்?...........சொல்லுங்கோ ? :) .


    எனவே, தனக்குத்தெரிந்த தமிழை, தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியாக படிக்க, எழுத , உச்சரிக்க சொல்லித்தரணும் ......கவிதை எழுதும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு சொல்லித்தரணும்..........விடுமுறை காலங்களில் தமிழ் நாட்டில் இருக்கும் பாட்டி தாத்தாவைப் பார்க்க வரும்போது அவர்களுடன் பேச வசதியாக இருக்கும் .


    நம்மைப் பெற்றவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எத்தனையோ, ஆசாபாசங்களை நமக்காக உதறி, , நம்மை நன்கு படிக்க வைத்து, சம்பாதிக்க வைத்து, கல்யாணமும் செய்து வைத்து, வெளி ஊர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைக்கிறார்கள். வருடத்துக்கு ஒருமுறை அல்லது 2 வருடத்துக்கு ஒருமுறை நேரில் வரும்போதோ அல்லது அப்பப்போ நெட் இல் பேசும்போதோ கூட , தமிழ் தெரியாததால் பாட்டி தாத்தாவுடன் பேச முடியாமல், வெறுமன ஹாய், பாய் சொல்லும் குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?........

    .......................
     
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    I understand your concern and the love of Tamil. Many Tamil parents who live in US think that what is the use of learning Tamil in US. They see everything in the monetary aspect.
    I am teaching (voluntary) Tamil in Tamil school here in California. I am a ardent lover of Tamil and the literature. You may be thinking that why my post isn``t in Tamil. It is easy and fast to express in English.
    I share my experience here. Lots of kids in the school are learning Tamil as a compulsion from their parents. They just attend the Tamil school because of the push from the parents. We cannot blame them, because they were born and grew here in US in the different environment.
    Parents also do not take any initiative to guide and teach the language. Just they send them to Tamil school. Some exceptions are there ofcourse.Most of the kids memorize for drama and thirukkural which is written in english script. I totally against this very concept.
    But when I teach my kid anything in Tamil script only either it is Thirukkural or song or dialogue. I started to teach the letters when she was just 3, you won`t believe.
    She reads Tamil and writes Tamil very well, but she was lagging in conversation part.
    The ambience here is the reason.

    My daughter knows about 50 thirukkurals, main thing is she memorizes with the Tamil script.
    In my view, if the parents love Tamil they will do their best to pass on Tamil to the next generation. I will come back to share more.
     
    vaidehi71, jskls and PavithraS like this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    I understand your concern and the love of Tamil. Many Tamil parents who live in US think that what is the use of learning Tamil in US. They see everything in the monetary aspect.

    I am teaching (voluntary) Tamil in Tamil school here in California. I am a ardent lover of Tamil and the literature. You may be thinking that why my post isn``t in Tamil. It is easy and fast to express in English.

    ம்ம்.. இது ...இதுதான் பிரச்சனை என்று நான் சொல்கிறேன்.பாருங்கோ உங்களுக்கே தாய்மொழியைவிட ஆங்கிலம் சுலபம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.......அப்புறம் குழந்தைகளுக்கு எப்படி?......சொல்லறேன் என்று கோபிக்க வேண்டாம்...........:)


    I share my experience here. Lots of kids in the school are learning Tamil as a compulsion from their parents. They just attend the Tamil school because of the push from the parents. We cannot blame them, because they were born and grew here in US in the different environment.

    ரொம்ப சரி...........இப்போ அது தான் பிரச்சனையே, அவர்கள் வெளி இல் அமெரிக்கர்களையும் உள்ளுக்குள் நம்வர்களாயும் வளர நாம் விரும்புகிறோம்...........எத்தனை பெரிய ஸ்ட்ரெஸ் வரும் குழந்தைகளுக்கு?....குருவி தலை இல் பனம்காய் வைப்பது போல ஆகிறது தானே? அவர்கள் பார்த்தே இராத அல்லது எப்போவோ ஒரு மாதம் பார்த்த இந்தியாவில் உள்ளது போல நடக்கணும் என்றால்............அவர்களுக்கு மிக மிக கஷ்டம் தான் :(

    Parents also do not take any initiative to guide and teach the language. Just they send them to Tamil school. Some exceptions are there ofcourse.Most of the kids memorize for drama and thirukkural which is written in english script.

    கண்டிப்பாக இது பள்ளிகளுக்கு போவதனால் மட்டும் வராது, வீட்டில் அம்மா அப்பா கண்டிப்பாக அவங்க அவங்க தாய்மொழி இல் , குழந்தைகளுடன் பேசணும் ............வெறுமன பள்ளிக்கு அனுப்புவதால் , அதுவும் குழந்தைகளைக் கட்டாயப் படுத்தி அனுப்புவதால், அவர்கள் நீங்கள் சொல்வது போல திருக்குறளைக் கூட ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு தான் படிப்பார்கள் :(


    I totally against this very concept.But when I teach my kid anything in Tamil script only either it is Thirukkural or song or dialogue. I started to teach the letters when she was just 3, you won`t believe.
    She reads Tamil and writes Tamil very well, but she was lagging in conversation part.
    The ambience here is the reason.

    இது மிகவும் நல்லது :) நாளாவட்டத்தில் அவளே ஆர்வத்துடன் படிப்பாள் :)

    My daughter knows about 50 thirukkurals, main thing is she memorizes with the Tamil script.
    In my view, if the parents love Tamil they will do their best to pass on Tamil to the next generation. I will come back to share more.

    உங்கள் பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி, மேலும் உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்...முடிந்தால் தமிழில்.இப்போது தமிழில் அடிப்பது ரொம்ப சுலபம்..இந்த லிங்கை பாருங்கள் :)

    English to Tamil Converter

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
  8. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Reg music classes in US, in many classes they explain the meaning completely, of course in English.Even in olden days many vidwans didn't know the meaning of songs, most of them are in Telugu.At least now there are books-how to segregate the syllables etc etc.
    As for dance,the children who don't imitate and love dancing understand better the concept of'vennai unda vaayan-one with mouth full of butter)and dance really well than students with Tamil as mother tongue.My DIL conducts Bharatha Natyam classes in California.Since her childhood days were spent in several foreign countries she herself
    does not know to write Tamil.When they came to India at the age of 13,Tamil standard was very high and she could take only Hindi which she had learnt overseas.
    Many of the brilliant children who score max in all subjects fail miserably in Tamil, though their mother tongue is in Tamil. Actually my sister is taking Tamil tuition for central board students in Mylapore.She expresses agony how each child ,just out of compulsion learn Tamil just to get 50% marks and heave a sigh of relief when they need not learn any language. Now as cell phone ,face book etc have developed; they know only that language to write.
    ini english paadum athogathi thaan.
    Until I referred to a website for phone abbreviations I could not understand many of them.
    If we insist too much on children they would say" Patti herself has learnt to talk in English.Why do you bother?
    My sister's grandson, in New Jersey knows only to say'vanakkam' in Tamil.My sister 91, goes on talking in Tamil , he goes on replying in English.With her age and maturity, she says'the world has changed,Even our own children don't find time to talk.Every one with a cell sends only texts.The conversation part of a language has undergone lot of metamorphosis especially with youngsters.All are sitting near the table, don't speak to each other. phonaik kudainthu kondu thaan irukkiraagal..
    Drug addiction evvalavo thevalaam.Thaneer pottu vittu vilaavaariyaaga kaththuvaargal.
    These addicts simply keep mum whatever you ask.At the most you will receive sms in reply.

    Jayasala 42
     
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    One thing that I noticed was when kids speak to their grandparents in India it's actually the grand parents who ask the children to speak in English. என்ன செய்ய?
     
    vaidehi71 and krishnaamma like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரொம்ப வாஸ்த்தவமான பேச்சு ஜெயா மா :).போன மாதம் அங்கே (பெங்களூர்) எங்காத்துக்கு எங்க ஒர்படி பையன் மாட்டுப்பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கனடாவிலிருந்து வந்ததிருந்தர்கள். மாட்டுப்பெண் தன் 3 வயது முதல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவள், ஆனால் தமிழ் ரொம்ப நன்னா பேசுவா, டான்ஸ் ஆதுவா, பாட்டு பாடுவா............சகல கலா வல்லி ...........அது போலவே தன் பையனையும் வளர்ப்பாள் என்று நாங்கள் நினைத்து இருந்தோம், அதுக்கு ஏற்றார்போல, .அவர்கள் போனமுறை இங்கு வந்திருந்த போது அந்த பையன் அழகான மழலை இல் தமிழில் பேசினான். அதே நினைவாக, நாங்கள் இங்கிருந்து கூகள் டாக் இல் அவங்களுடன் பேசறோம், அந்த பையன், நாங்கள் கேட்பதற் கெல்லாம் ஆங்கியாலத்திலேயே பதில் சொல்கிறான்.., ' டேய் , தமிழில் பேசுடா' என்று இவர் சொல்கிறார். அதற்கு அவன் அப்பா, "சித்தப்பா, அவனுக்கு தமிழ் புரியும் அவ்வளவுதான் , பேச வராது" என்கிறான் கூலாக :sunglasses:...........

    :flushed: "என்னடா இது?.இப்படியே போனால் எப்படிடா, இவனே இப்படி என்றால், சின்னது ( இன்னும் 1 வயசு கூட ஆகலை ) கதி என்ன?.......அப்புறம் எப்படி தமிழ் புரிந்து கொள்வார்கள், நல்லா பேசிக்கொண்டிருந்த குழந்தையை, கனடா கொண்டுபோய் கெடுத்து விட்டிர்களே" என்றார். வேறு என்ன சொல்ல?...ஆனால் அவன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்கிறான் ............டான்ஸ் ஆடறான்...........

    மாட்டுபெண்ணிடம், ' எப்படி டீ அவனுக்கு புரியவைப்பாய் ? ' என்றால், நான் மேலே சொன்ன உதாரணம் தான்.......ஆங்கிலத்தில் சொல்லிடுவேன் சித்தி என்கிறாள்.......நாம் இதற்கு மேலே என்ன சொல்ல?........இந்த கட்டுரை எழுத காரணமே அவங்க தான் :)

    இவளின் அம்மா அப்பா எத்தனை அருமையாக இவளுக்கு தமிழ் சொல்லிவைத்து, அதுவும் 25 -30 வருடங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில்.......டான்ஸ் பாட்டு எல்லாம் சொல்லித்தந்து இருக்கா, இவ கனடா போய் 2 வருஷம் ஆகலை அதற்கே இந்த கதி...........இந்தக்காலத்து பசங்களுக்கு பொறுப்பே இல்லை........"ஆமா, இப்போ தமிழ் பேசி என்ன ஆகப்போகிறது?" என்று ஒரு அலட்சிய மனோபாவம்..நேரம் இல்லை என்று சொல்வதெலாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்..........முக்கியத்துவம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    எத்தனையோ சாமர்த்தியமாய் அயல் நாடுகளில் போய் வேலை பார்க்கும் நம் குழந்தைகளுக்கு இது என்ன கஷ்டமான காரியமா என்ன ?.......அவங்க இல் லிஸ்ட் இல் இது இல்லை அவ்வளவு தான். மனம் இருந்தால் மார்க்கம் கண்டிப்பாக உண்டு.

    SMS , whatsup இல் எல்லாம் நம் ஆங்கிலத்தை கெடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள்...ஆனால் அதை உயிர்ப்புடன் வைக்க ஆங்கிலேயர்கள் இருக்கிறார்களே, அவர்கள் தங்கள் தாய்மொழியை வளர்த்துக்கொள்வார்கள் . நாம் தான் எல்லாத்தையும் சாக அடிக்கிறோம்.

    உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி :)...உங்கள் பதிவைப் பார்த்ததும் ஒரு கதை நினைவுக்கு வந்தது, அதை அடுத்த பதிவில் போடுகிறேன் !

    அன்புடன் ,
    கிருஷ்ணாம்மா :)
     
    vaidehi71 likes this.

Share This Page