1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய்ப்பால்

Discussion in 'Regional Poetry' started by deepa04, Sep 20, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    தாய்ப்பால்

    பிள்ளை ஒன்று பெண்ணவளின் மணிவயிறு வாய்த்தவுடன்,
    அவள் மேனியில் கண்டவர் அறியும் வண்ணம் மாற்றங்கள்,
    அவள் மட்டும் அறியும் வண்ணம் மசக்கை மாற்றங்கள்,
    ஆனால் அவளும் அறியா வண்ணம் உள்ளுள் வரும் மாற்றங்கள்,
    சிவ கடவுள் ,சிசு கடவுள் இரண்டும் இருக்குமிடமும் கர்ப்பகிரகம் தான்,
    கையளவே இருந்த கருப்பையை,கண்முன்னே துளி,துளியாய் பெருக்கி,
    திரவப் பொருளினை திடப் பொருளாக்கி,உயிரை அதனுள் இணைத்து,
    ஓர் உரு தந்து,தொப்புள் கொடிவழியே உணவளித்த இறைவன் அவன்,
    அவ்வுயிர் மண்ணில் வந்தவுடன் உணவளிக்கும் பணியைசிசுவது
    தாயின் உள்ளிருக்கும் பொழுதினிலே செம்மையாக தொடக்கி விட்டான்.
    அர்த்தநாரியாய் ஒருபுறம் அன்னையின் அங்கம் கொண்டு தாயும் ஆனவன்,
    இவ்வுலகில் உள்ள உயிர்கெல்லாம்,உயிர்பால் கொண்டு உய்வித்தவன்,
    மங்கையின் மட்டற்ற புண்ணிய தனங்களிலே அமுதமென பாலினை,
    சுரக்கும் படி இப்போதே பல மாற்றங்களை யாரும் அறியாமல் செய்திட்டான்,
    மண்ணுலகில் வந்த பிள்ளை வெளி வந்தவுடன் வீறிட்டது ஒன்றும் அறியாமல்,
    அன்னையவள் கடுத்தவமாய் பெற்ற அலுபினிலே மயங்கி இருந்தாலும்,
    தனக்கு எத்தனை வலி இருந்தாலும் ,அதை மறந்து தன் மெய்யினில் தாங்கிய,
    உன்னதமான உயிரினை,அற்புதமான மகவினை ஆசையுடன் ஏந்தினால்,
    தன் தாயின் கரம் பட்டவுடன் வீறிட்ட குழந்தை அது நொடி
    தாய் பால்.பொழுதில் அமைதியுற,
    தன் தாயின் உதவியுடன்,தான் பெற்ற செல்வமதை கையினில் ஏந்தி,
    தன் தனங்களில் இத்தருனத்திற்காய் சேர்த்திட்ட அமுத பாலை மெல்ல,மல்ல ,
    தன் சேய் வாய் வலிக்காவண்ணம்,வயிறு நிறையும் வண்ணம்,புகட்டிடால்,
    தாய் பால்,தன் சேய்க்காய்,அன்னையவள் தந்திடும் உயிர்பால்,
    தன் உடலையே கருவியாக்கி,உதிரத்தை உணவாக்கும் உயர்பால்.
    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை,தை பாலில் சிறந்த உணவதும் இல்லை.
    எனவே தாயையும்,தாய் பாலையும்,தாய்மையையும் போற்றுவோம்.

     
    Last edited: Sep 20, 2010
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    மிக அருமை உங்கள் வரிகள்... :bowdown
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    தாயின் மாற்றத்தையும், தாய்பால் பற்றியும் அருமையாக சொல்லிர்கீங்க கா. இதன் மூலம் ஒவ்வொரு தாயையும் பெருமை பட செய்திர்கீங்க. அருமையான படைப்பு அக்கா. :bowdown:bowdown:bowdown
     
  4. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    அருமையான வார்த்தைகள்
    அற்புதமான வரிகள்
    நிதர்சனமான உண்மை
    கண்களில் கண்ணீர் துளிகள்!!!
     
  5. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மிக அருமையான கவிதை. தாய்ப்பாலின் மகத்துவத்தை அழகாகச் சொன்னதற்க்கு நன்றி
     
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Deepa,enna idhellam...kalakkureenga:thumbsup.....yes thaippaal vida sirandha/saththana unavu kuzhandhaingaluku vera edhum ila.....
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Deepa,

    Romba research panni ezhudhi irukkeenga pola irukku..:thumbsup:thumbsup

    Thaaiyil sirantha kovilum illai enbadhai muzhumaiyaaga nambugiraen..:bowdown:bowdown
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks vaishu dear.
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    தாய் என்று வந்துவிடின் பெருமைதானே!
    நன்றி தங்கையே!
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    deepa,
    நன்றிகள் பல உங்கள் வார்த்தைக்கு.உணர்ந்து சொல்லும் வார்த்தைகள் மிக மதிப்புடையவைதானே!
     

Share This Page