1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    4 வது கதை :

    "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற"

    ஒரு நாள் கார்த்தால, ஒரே காத்தும் மழையுமாய் இருந்ததாம், ஒரு குருவி இன் வீட்டு ( கூட்டு ) வாசலில் இருந்து ஒரு குயில் ( அதுக்குத்தான் கூடு கிடையாதே, அதை சொல்லணும் குழந்தைகளுக்கு [​IMG])........கதவைத்தட்டி "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்று சொன்னதாம்..............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் எழுதிருக்கேன், கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் பல் தேய்த்து, என் காலை கடன்களை முடிச்சிருக்கேன்........... , கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் பால் காய்ச்சி இருக்கேன், பசங்களை எழுப்பப்போறேன்...... கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் குழந்தைகள் எழுந்து அவங்க காலை கடன்களை முடிக்கிறாங்க , அவங்களுக்கு நான் உதவணும் ...... கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... நான் அவங்களுக்கு காலை மற்றும் மதிய உணவு தயார் செய்கிறேன் .............. கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க பாலை குடித்து விட்டு, ஸ்வாமி சேவிக்கிறாங்க.............., தொந்தரவு செய்யாதே ...............கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க படிக்கிறாங்க..............அப்புறம் காலை உணவு அவங்களுக்கு நான் கொடுக்கணும் ................கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    தொடரும்......................
     
    Caide and Sun18 like this.
  2. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    நல்லா புரிந்தது மா.

    இந்த கதைகள் மூலம் நானும் எனது வருங்காலத்தில் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து பயன் பெறுவேன் என்பதில் மிகையில்லை, மா.

    மிக்க நன்றி மா. பழக்க வழக்கங்கள் கதையின் மூலம் சொல்வது எங்களுக்கு புதுமை. ஹி ஹி.

    ஆனாலும், குயில் எவ்வளவு தான் பொறுமையாக இருக்க போகிறது, அடுத்து என்ன ஆக போகிறது என்று ஆவல், மா.

    தொடருங்கள்.
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    உங்கள் பின்னூடத்துக்காகத்தான் waiting ......பாக்கி இதோ போடறேன் [​IMG]
     
    1 person likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    [​IMG]

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க அப்பா இப்போ தான் எழுந்திருக்கிறார் ............ .அவருக்கு நான் உதவணும்.............. கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவர் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வருவதற்குள், நான் பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்யணும்............ கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... இதோ அவங்க எல்லோருக்கும் டப்பாக்களில் மதிய உணவு எடுத்து வைத்துவிட்டேன்...........இன்னும் 5 நிமிடம் தான்............ கொஞ்சம் பொறு" என்றதாம்.............

    இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............

    அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... இதோ நாங்களும் காலை உணவு எடுத்துக்கொண்டு விட்டோம்............அவர்கள் எல்லோரும் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு தயாராகிவிட்டனர்.....இதோ வந்துட்டேன் என்று சொல்லி வந்து கதவைத் திறந்ததாம் ............"

    அவர்கள் அனைவருக்கும் 'டாட்டா' சொல்லி விட்டு குயிலைப் பார்த்து என்ன வேண்டும் உனக்கு இப்போ சொல் என்றதாம் குருவி [​IMG]

    இதைக்கேட்டதும் உங்களுக்குத்தொன்றும், " என்னடா இது, ஒருத்தரை வாசலில் நிற்க வைத்து விட்டு இவ்வளவும் செய்யணுமா என்று ?...குழந்தைகளும் கேட்பார்கள்....அப்படி கேட்டால்,

    அவர்களுக்கு "அம்மா அப்பாக்கு சேவை செய்யும்போது வாசலில் வந்து கதவைத்தட்டிய
    கிருஷ்ணரையே " கொஞ்சம் இருங்கோ ! அப்பா அம்மாக்கு சேவை செய்து விட்டு வருகிறேன் " என்று சொன்ன புண்டரீகன் வரலாற்றை - பாண்டு ரங்கர் கதையை சொல்லிக்காட்டுங்கள். [​IMG]

    பெருமாளுக்கே அந்த கதி என்றால் இந்த சிறு குயில் எம்மாத்திரம்? [​IMG].........சரிதானே? !
    .
    .
    இது போல உங்காத்து வழக்கங்களை நடுவில் சொல்லுங்கள்..........." இப்போ (இங்கு நம் குழந்தை இன் பேரை சொல்லி) என்ன செய்வான் / செய்வாள் " என்று கேட்டால் அவனே அடுத்ததை சொல்லிடுவான் ......அப்படியே அவனுக்கும் நம்மாத்து வழக்கம் மனதில் படியும். ஓகே வா? :)

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    Caide and Sun18 like this.
  5. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    மிகுந்த சந்தோஷத்தினை அடைந்தேன் மா தங்களின் இந்த பின்னூடத்தை பார்த்த பின்.
    :thankyou2::party
     
    1 person likes this.
  6. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    இந்த கதையில் பெருமாளின் படம் எதற்கு வருகிறது என்று யோசித்தேன் மா. பிறகு புரிந்தது. :)

    ஆமாம்மா. உடனே தோன்றியது.

    அதற்கு தங்களின் விளக்கம் அற்புதம். ஆனால், இக்காலத்தில் இது போல் குழந்தைகள் வளர்ந்த பின் இந்த அளவிற்கு சேவை செய்வார்களா என்பது ஐயமே.

    ஏன் எனில், முன் கை நீண்டால் தானே முழங்கை நீளும் (தங்களின் கதைகளுள் ஊறி, தற்போது நானும் பழமொழியை உதாரணமாக சொல்லி விட்டேன். ஹி ஹி) பெற்றோர்கள் பிள்ளைகளை அத்தகைய ஆழமான அன்பும் பண்பும் சொல்லி வளர்த்தால் தானே, பிள்ளைகள் நாளை செய்யும்.

    இன்றைய பெரும்பாலான பெற்றோர்களை தான் தெரியுமே.

    கதை ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்தாலும், இறுதியில் எப்படி சேவை உள்ளத்தோடு இருக்க வேண்டும் என்று கற்று தருகிறது.

    மிக்க நன்றி மா. தொடருங்கள்.

  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    மிக்க நன்றி சுந்தர் [​IMG] ..................தொடருகிறேன்...............நாளை அடுத்த கதை !
     
    1 person likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    அதற்கு தங்களின் விளக்கம் அற்புதம். ஆனால், இக்காலத்தில் இது போல் குழந்தைகள் வளர்ந்த பின் இந்த அளவிற்கு சேவை செய்வார்களா என்பது ஐயமே.
    நாம் தான் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கணும் சுந்தர் :)
    ஏன் எனில், முன் கை நீண்டால் தானே முழங்கை நீளும் (தங்களின் கதைகளுள் ஊறி, தற்போது நானும் பழமொழியை உதாரணமாக சொல்லி விட்டேன். ஹி ஹி) பெற்றோர்கள் பிள்ளைகளை அத்தகைய ஆழமான அன்பும் பண்பும் சொல்லி வளர்த்தால் தானே, பிள்ளைகள் நாளை செய்யும்.

    ஹா...ஹா...ஹா....குட், பார்த்திங்களா....ஒரு 10 கதை படிப்பதற்குள் உங்களுக்கு ஒரு பழக்கம் வந்து விட்டது, அப்போ குழந்தைகளுக்கு?................ இது போலத்தான் நல்ல பழக்கங்கள் அவர்களை தொற்றிக்கொள்ளும்படிக்கு நாம் வளர்க்கணும் [​IMG]
     
    1 person likes this.
  9. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    ha ha. yes ma. Kandippa - stories added with visualization things - will get deeply rooted in our minds.

    that's why many people remember movie dialogues than their school text matters. lol.

    I will definitely bring up my children in a good way, ma. there's no doubt in it.

    **
    I will teach children myself if my potential partner doesn't do (I won't select that kind of potential partner - who wouldn't even care to teach the children - is different matter. lol) the values, good things, how to respect people, how to follow up good people and imbibe their good qualities etc.

    In fact, children learns what they see than what they hear. So, I will act first. Then, definitely my children will follow (after all, they're my children na. lol. ha ha)
     
    1 person likes this.
  10. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    :thankyou2:Thanks so much ma for your stories. I learn a lot.:2thumbsup:
     
    1 person likes this.

Share This Page