1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    Wow. very quick reply ma. And I'm so happy for the smilies. you're putting for me ma. Thanks so much.

    And hehe, If I could draw well, I would do. But you know, it would be as bad as my handwriting if I draw. hehe..

    Thanks ma for taking the suggestion well.

    Expecting your next part ma. :)
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    அன்பு சகோதரி அருமையான கதை .நல்ல பதிவு .இது போன்ற கதைகளை எதிர் பார்க்கிறோம் .

    முள்ளு முனையில மூணு குளம் வெட்டினேன் .ரெண்டு குளம் பாழ் .ஒண்ணுல தண்ணியே இல்லை .தண்ணி இல்லா குளத்தில அப்படின்னு ஒரு கதை கேள்வி பட்டிருக்கிறேன்.அந்த கதையின் தொடர்ச்சி மறந்து போச்சு .உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்களேன்
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    குரங்கு குருவி கூட்டை கலைச்ச கதைன்னு சொல்வாங்களே அது இது தானா .மிக அருமை
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#


    yes...yes....yes... I am putting...........:)
     
    1 person likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    "ஏய், விட்டா என்னடி நீ பேசிண்டே போற"? என்று கீழிருந்து உறுமியது...............

    அப்போதும் விடாமல் இந்த பெண் குருவி........." ஏய் , நீ என்ன என்னை மிரட்டற?.....ஒரு கூடு கட்டக் கூட தெரியலை உனக்கு, சொன்னால் கோவம் மட்டும் வருதா? "என்றதாம்.

    அந்த ஆண் குருவி, "ஏய், உனக்கு வாய் அதிகம், பேசாமல் உள்ளே வா" என்று இதை உள்ளே இழுத்ததாம்..

    அதற்கு அந்த பெண் குருவி, " இதோ இப்படி கதவை சர்த்திவிட்டால் அந்த குரங்கால் ஒன்றும் செய்ய முடியாது " என்று அப்பாவியாய் சொன்னதாம். அதுக்கு தெரியலை குரங்கு ஒரே நொடி இல் மரம் ஏறிவிடும் என்று................

    குருவிகள் இரண்டும் கதவை சார்த்த பார்த்ததாம் ................ஆனால், அதற்கு முடியலை...........காலம் கடந்து போச்சு ..............

    குருவி இன் ஏளனப் பேச்சால் வெகுண்ட குரங்கு , " ஆமாம் எனக்கு கூடு கட்டத்தான் தெரியாதே தவிர அதை பிய்த்து எறியத் தெரியும் , இப்போ பார்" என்று சொல்லிக்கொண்டே நாலே எட்டில் கூட்டுக்கு அருகில் வந்து விட்டதாம் குரங்கு..............

    ஆண் குருவியும் பெண் குருவியும் குரங்கை கிட்டக்க பார்த்து அலறிய அலறலில் குட்டிகள் முழிச்சுடுத்தாம் ...........என்ன ன்னு தெரியாமல் அதுகளும் 'கீச் கீச்' என்று கத்தித்தாம் ...............

    கோபம் குறையாத அந்த குரங்கு, அந்த ஆண் குருவி கெஞ்சியும் கேட்காமல், நீண்ட தன் கையை விட்டு குருவிக்கூட்டை எடுத்து மழை இல் வீசியதாம் ..................[​IMG]..............

    கொட்டும் மழை இல் கூடும் பிஞ்சு போய் , குருவிக் குஞ்சுகளும் மூலைக்கு ஒன்றாக சிதறிப்போச்சாம்.........

    அந்த குருவிகள் இரண்டும் பாவம் அழுததாம்.......கூட்டைவீசிய குரங்கு குருவியை பார்த்து,

    "அனாவசியமாய் என்னை கோபப்படுத்தியதன் விளைவை பார்த்தாயா?.............என்ன தற்பெருமை வேண்டி இருக்கு உனக்கு? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கும் , எதற்காகவும் யாரையும் இகழகூடாது........மீறினால் விளைவு விபரீதமாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு ஓடிப்போச்சாம்...............

    அவ்வளோதான்.............."அதனால தான் நமக்கு தேவை இல்லாத விஷயத்தில் மூக்கை விடக்கூடாது, மத்தவர்களை அவர்களின் பலம் தெரியாமல் கிண்டல் பண்ணக் கூடாது... ..புரிந்ததா? " என்று கேட்கணும் [​IMG]

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா [​IMG]


     
    Caide, Gaiya3, Deepu04 and 1 other person like this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#


    மிக்க நன்றி ருக்மணி [​IMG] :).........கண்டிப்பாக போடுகிறேன் [​IMG]
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    இந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பாலன் கதை” சொல்லுகிறது.


    இந்தக் கதை தோற்றங்களும், அவற்றின் மாயை குறித்தும் வசிஷ்டரால் ராமருக்கு உபதேசிக்கப் படுகையில் இடம்பெறுவது.


    கதை இதுதான்.


    ஒரு நாள் ஒரு சிறிய குழந்தை தன் தாயாரை வேடிக்கையான கதையொன்றைச் சொல்லக் கேட்க, அவள் இந்தக் கதையைச் சொன்னாள்:

    “முன்னொரு காலத்தில் ஆகாயப் பிரதேசத்தில் உண்டாகாத பெரிய பட்டணம் ஒன்றிருந்தது. அப்பட்டணத்தில் மூன்று அழகிய ராஜகுமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் பிறக்கவேயில்லை; ஒருவன் கர்ப்பம் தரிக்கப் படவேயில்லை. இம்மூவரும் ஒருநாள் வெளியூர் சென்று திரவியம் தேடி வரலாமென்று உத்தேசித்துக் கிளம்பிஒரு காட்டுப்பாதையைத் தொடர்ந்து செல்லுகையில் தாகமெடுத்து நீரைத் தேட மூன்று ஓடைகளைக் கண்டார்கள். அவைகளில் இரண்டு நீர் வற்றியும், ஒன்றில் தண்ணீரே இல்லாமலும் இருந்தது. மூவரும் ஓடைகளில் இறங்கி ஸ்நானம் செய்து தண்ணீரும் அருந்தி, பக்கத்தில் தென்பட்ட மூன்று மரங்களை அணுகி பழங்களைச் சாப்பிட எண்ணினார்கள். இந்த மூன்று மரங்களில் இரண்டு வளரவேயில்லை. ஒன்றுக்கு விதையே கிடையாது. இந்த மரங்களில் ஏறி வேண்டியவாறு பழங்களைத் தின்று திருப்தியடைந்தார்கள். பிறகு அக்காட்டை விட்டுச் சென்று சிறிது நேரத்தில் ஏற்படாத நகரமொன்றை அடைந்து அங்கே சுவரே இல்லாத பெரிய சத்திரமொன்றைக் கண்டார்கள். சத்திரத்திலே மூன்று பாத்திரங்கள் இருந்தன. இரண்டு இருக்கவேயில்லை. ஒன்று ஓட்டை. இப்பாத்திரங்களில் நூறு படி அரிசியைச் சமைத்து, வாயில்லா விருந்தாளிகளுக்கு அன்னமிட்டு, பாக்கியைத் தாங்கள் சாப்பிட்டு சுகமாக நித்திரை செய்தார்கள்”. இக்கதையைக் கேட்ட குழந்தை மிகவும் சந்தோஷமடைந்தது.


    என் ஆச்சர்யம் இதுதான்.


    ”யோக வசிஷ்டம்” எனும் வேதாந்த நூல் பரவலாக அறியப் படாத, ராமாயணத்துக்கும் முந்தைய நூல். இது மஹா ராமாயணம், வசிஷ்ட ராமாயணம், ஞான வசிஷ்டம் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது.


    அப்படி மிகக் குறுகிய மக்களால் வாசிக்கப்பட்டதாய்ச் சொல்லப்படும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கதை நமது நாடோடிப் பாடல்களில் ஒன்றான-


    ”முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன்.
    அதில் இரண்டு குளம் பாழு.ஒண்ணுல தண்ணியே இல்லை.

    தண்ணியில்லாக் குளத்துக்கு மண்ணெடுக்க வந்த குயவன் மூணு பேரு. ரெண்டுபேரு முடம்.ஒருத்தனுக்குக் கையே இல்லை.

    கை இல்லாக் குயவன் செஞ்ச பானை மூணு.
    அதில் ரெண்டு ஒடஞ்சி போச்சு; ஒண்ணு ஓட்டை.

    ஓட்டைச் சட்டியிலே சமைச்ச அரிசி மூணு.
    அதில் ரெண்டு பச்சை, ஒண்ணு வேகவே இல்லை”


    என்ற பாடலும்,


    [h=2]”ஆளில்லாத ஊர்ல ராஜா இல்லாத ராஜகுமாரி
    தூரில்லாத குடத்த எடுத்துக்கிட்டுக் கரையில்லாத குளத்துக்குத் தண்ணிக்குப் போனாளாம்.
    [/h][h=2]அங்க தலையில்லாத மான் வேரில்லாத புல்லை மேஞ்சுகிட்டு இருந்ததாம். [/h][h=2]அதைக் கண்ணில்லாதவன் பார்த்துக் காது இல்லாதவன் கிட்ட சொன்னானாம். [/h][h=2]அவன் நரம்பில்லாத அம்பெடுத்து மான் மேல விட்டானாம். [/h][h=2]அது மான் மேல படாம மான் வயித்துலேருந்த குட்டி மேல பட்டு குட்டி செத்துப் போயிருச்சாம்.[/h][h=2]குட்டிய சமைச்சு சாப்டுட்டுத் தோலக் கால் இல்லாத பந்தல்ல காயப் போட்டானாம். [/h][h=2]அதத் தலை இல்லாத பருந்து தூக்கிக்கிட்டுப் போயிடுச்சாம். [/h][h=2]அதக் காலில்லாதவன் துரத்திக்கிட்டுப் போனானாம். [/h][h=2]அப்போ அவன் காலுல குத்துன கண்டங்கத்திரி முள்ளால தலைவலி வந்துருச்சாம். [/h][h=2]அதக் காட்ட வைத்தியருகிட்டப் போனானாம். [/h][h=2]இது சரியாகணும்னா ஆல வேரு, அரச வேரு, புங்க வேரு, பூவரச வேரு எல்லாத்தையும் நுனியோட புடுங்கி, அம்மி படாம அரச்சு, நாக்கு படாம நக்குடா. [/h][h=2]இது முதல் வைத்தியம்.[/h][h=2]கண்டங்கத்திரி வேரக் கை படாமப் புடுங்கி, உரலக் குப்புறப் போட்டு, உலக்கை படாமக் குத்திப் பின்னங் கையால எடுத்து நக்குடா. [/h][h=2]இது ரெண்டாவது வைத்தியம்னு சொன்னாராம். [/h][h=2]இப்படிப்பட்ட வைத்தியருக்கு ஏதாவது சன்மானம் தரணும்னு சொல்லி அடி இல்லாத படி எடுத்து ஓட்டச் சாக்குல ஒன்பது முழ உளுந்த அளந்து, சக்கரம் இல்லாத வண்டியில பாரம் ஏத்தி, மாட்டு வண்டி ஓட்டக் குருடன் பாதை காட்ட, வண்டி போயிக்கிட்டே இருந்திச்சாம்.”[/h]

    என்ற நாடோடிக் கதையும் பிரபலம்.


    மக்களின் வாழ்க்கையோடு புதைந்திருக்கும் எளிமையான இந்தப் பாடலிலும், கதையிலும் புதைந்திருக்கும் கற்பனைகளின் வேர் “யோக வசிஷ்டத்தை”த் தொடுகிறது என்பது மிக மிகப் பிரமிப்பான விஷயம்.

    இன்றைக்கு நவீனமாய்க் கருதி, இளைஞர்களைப் பேயாய் அலைய வைத்த இந்த மேஜிகல் ரியலிஸ உத்தியின் வயது, நமது இந்திய மரபில் கணக்கிட முடியாத தொன்மை வாய்ந்தது மற்றொரு பிரமிப்பு.

    thanks to net :)




     
    1 person likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#


    ஆமாம் அதேதான் ! [​IMG] [​IMG] [​IMG]
     
    1 person likes this.
  9. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    மிகவும் அருமை மா.


    இந்த கதை உணர்த்தும் நீதிகள் பல. இதை போன்று கதைகள் சொல்லி இன்றைய குழந்தைகளை வளர்க்க ஆள் இல்லாததால் அவர்கள் அறியாமைகளில் மூழ்கி கிடக்கிறார்கள்.


    தொடருங்கள் மா. நான் கதைகளை மிகவும் ரசிக்கிறேன். மிக்க நன்றி மா.
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    :)...thank you so much.............I am very happy to see your prompt feed backs !:thumbsup
     
    1 person likes this.

Share This Page