1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    படம் மிகவும் அருமை மா.

    நானும் உங்க கிருஷ்ணா வயசுன்னு சொன்னதால நீங்களே குழந்தைங்க எங்க சிரிப்பாங்கன்னு இப்போ போட்டுடீங்களா. super.


    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் மா.


    அதுவும் அந்த smiley தான் டாப்.

    ***

    எப்போதும் போல் கதை சூப்பர் மா.


    தொடருங்கள்.
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    மிக்க நன்றி சுந்தர் :)................நாளை அடுத்தது போடுகிறேன் :).................அடுத்த கதை.............3 வது கதை : குரங்கும் குருவியும்
     
    1 person likes this.
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    இந்த கதைகளை படிக்கும் போது குழந்தை பருவத்திற்கு சென்றுவிட்டது மனது.

    என்னொட இரண்டரை வயது மகனுக்கு தினமும் தூங்கவைக்க கதை சொல்ல வேண்டும். இனி என்ன கதை சொல்வது என்ற கஷ்டம் இருக்காது.

    ரொம்ப நன்றி மா.
     
    1 person likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    மிக்க நன்றி ப்ரியா :).............ஆமாம் , குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது ஒரு கலை, அதுவும் நாம் ஒரு கோணத்தில் சொன்னால் அவா ஒரு கோணத்தில் புரிஞ்சுப்பா.......ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் சொல்லணும் :)......என் பதிவுகள் உங்களுக்கு உதவினால் ரொம்ப சந்தோஷம் தான் [​IMG] [​IMG] [​IMG]


    மேலும், நீங்களும் உங்கள் குழந்தைக்கு சொல்லும் கதைகளை இங்கு போட்டால் பலருக்கும் உதவும் !
     
    2 people like this.
  5. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    Amma, story has not been posted yet.
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    sorry, sorry, idho podaren :)
     
    1 person likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    3 வது கதை : குரங்கும் குருவியும் புன்னகை


    குழந்தைகளுக்கு, வீணாக தனக்கு தேவை இல்லாத விஷயத்தில் தலை இடுதல் கூடாது என்று அறிவுரை சொல்லும் கதை.


    ஒரு ஊரில், ஒரு குருவி தன் குடும்பமான ஆண் குருவி மற்றும் 3 குட்டி குருவிகளுடன் ஒரு அடர்ந்த மரத்தில் கூடு கட்டி சுகமாய் வாழ்ந்து வந்ததாம். சந்தோஷமாக வாழ்ந்து வந்த அந்த பறவைகளுக்கு ஒருநாள் சோதனை நாளாக ஆச்சாம் ......... ஆமாம் , அன்னைக்கு கார்த்தாலே இருந்து தொடர்ந்து ஒரே மழை.


    நல்ல வேளை இந்த குருவிகள் தங்கள் கூட்டை மரபோந்தில் கட்டி இருந்ததால் இவைகள் மேல மழை தண்ணி படலை, எல்லா குருவிகளும் உள்ளே உட்கார போது மான இடம் இருந்தது. என்றாலும் அந்த பெண் குருவி சுமா இல்லாமல் வாசலில் உட்கார்ந்து கொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாம்.


    அதை கவனித்த ஆண் குருவி, " ஏய் , உள்ளே வந்துடு, மழை மேலே படப்போகிறது, அப்புறம் சளி பிடிக்கும், மேலும் உன்னை பார்த்து குழந்தைகளும் அங்கு வந்தால் கீழே விழுந்துடும்" என்று எச்சரிக்கையாக சொன்னது.


    அந்த எச்சரிக்கையை அந்த பெண் குருவி கவனித்ததாகவே தெரியலை. வெளியே வேடிக்கை பார்ப்பதில் மும்முரமாக இருந்தது. அப்போது மழை இல் நன்கு நனைஞ்சுண்டே ஒரு குரங்கு இந்த மரத்தடிக்கு வந்தது.


    அதைப்பார்த்த குருவிக்கு பாவமாய் இருந்தது. அந்த குரங்கு குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்தது. இந்த கருவி சும்மா இல்லாமல்,


    " ஏ குரங்கே!, மழைக்கு முன்னே வீடு போய் சேர்ந்திருக்கலாமே !" என்றது .


    அந்த குரங்கு சுற்றும் முற்றும் பார்த்தது, அதற்கு குரல் எங்கிருந்து வருகிறது என்று தெரியலை. எனவே பார்த்துவிட்டு பேசாமல் இருந்தது.


    ஆனால் உள்ளே இருந்த ஆண் குருவிக்கு இந்த குரல் கேட்டது , அது உடனே, " ஏய் யாருடன் பேசுகிறாய் ? " என்றது.


    "இதுவும் அந்த குரங்கிடம் பேசுகிறேன்." என்றதாம்.


    அதற்கு அந்த ஆண் குருவி, " ஐயோ ! மரத்துக்கு மரம் தாவும் அதனிடம் நமக்கு என்ன பேச்சு?, நீ உள்ளே வா என்றதாம் " ..............


    இது உடனே, " ஏன் பேசினா என்ன ? " என்றதாம்.


    " வேண்டாண்டி, நான் சொன்னா கேளு, அது ரொம்ப பொல்லாதது, நம்மை ஏதாவது
    செய்துடப்போரது........... இன்னும் குட்டிகளுக்கு சரி வர பறக்கக் கூட தெரியலை.....வேண்டாம் நமக்கு இந்த வம்பு" என்றது.


    ஆண் குருவி சொன்னதைக்கேட்காமல் இந்த பெண் குருவி, மீண்டும் எட்டிப்பார்த்தது . அந்த குரங்கு அங்கேயே, குளிரில் நடுங்கிக்கொண்டு, நின்று கொண்டிருந்தது.............


    இந்த பெண் குருவி," ஏய் , உன்னைத்தான் இங்கே மேலே பாரு, நீ வீட்டுக்கு போகலையா? .இங்கே ஏன் நடுங்கிக்கொண்டு நிக்கற? " என்று விசாரித்தது.....................


    இப்போது குரங்குக்கு புரிந்துவிட்டது குரல் எங்கிருந்து வருகிறது என்று. எனவே, அண்ணாந்து பார்த்து சொன்னது ," எனக்கு வீடு என்று எதுவும் இல்லை".............


    தொடரும்.......................



     
    Caide and Gaiya3 like this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    இதைக்கேட்ட குருவிக்கு ரொம்ப ஆச்சர்யம் தாங்கலை, இவ்வளவு பெரிய குரங்கு, அழகாய் 2 கை மற்றும் 2 கால் உள்ள மனிதர்களைப்போல இருக்கு, ஆனால் இருக்க வீடு இல்லையா? ...ஏன் அப்படி என்று தெரிஞ்சுகாட்டா அதுக்கு தலையே வெடித்திடும் போல இருந்ததாம்.

    [​IMG]

    அதனால் , ரொம்ப ஆச்சர்யமாய் , " என்ன, உனக்கு வீடு இல்லையா? "......என்றது .

    மீண்டும் அந்த குரங்கு மேலே பார்த்து, " ஆமாம் .........எனக்கு வீடு இல்லை".........என்று கடுப்பாய் சொன்னது.

    உடனே இந்த குருவி சும்மா இல்லாமல், "உனக்குத்தான் கை கால் எல்லாம் இருக்கே, நீ அழகாய் நல்லா கூடு கட்டிக்க வேண்டியது தானே? "............" அப்போ தானே மழை, புயல் எல்லாத்திலிருந்தும் தப்பிக்கலாம்"...........என்றது.

    குரங்கு ஏதும் பேசலை......பேசாமல் நின்று கொண்டிருந்தது. இந்த குருவி விடாமல், " என்ன பேச்சையே காணும்? " என்றது.

    அதற்குள் அந்த ஆண் குருவி, " சொன்ன கேளுடி, குழந்தைகள் கூட தூங்கி போச்சு, நீ பேசாமல் கதவை சார்த்தி விட்டு உள்ளே வா " என்றது.

    இது அதக் கொஞ்சம் கூட சட்டை பண்ணாமல், " நல்லா கரணை கரணையாய் கையும் காலும்
    வெச்சிண்டு இருக்கு அந்த குரங்கு, ஒரு வீடு கட்ட என்ன கேடாம்? " என்றது.

    " ஏய், அதெல்லாம் பத்தி நமக்கு என்ன?..நீ வாயை முடு, உள்ளே வா "..என்றது ஆண் குருவி.

    ஆனால் அந்த பெண் குருவி மீண்டும் கிழே பார்த்து, " ஏய் , குரங்கே!...........நான் தெரியாமத்தான் கேட்கறேன், நல்லா தின்னு தின்னு கொழுத்து போயிருக்க நீ, நல்லா கரணை கரணையாய் கையும் காலும் வெச்சிண்டு இருக்கே, ஒரு கூடு கட்ட துப்பில்லையே உனக்கு............ஆனால் எங்களைப்பார் , எங்களுக்கு குட்டி குட்டி கால் இரண்டும் ஒரு சின்ன அலகும் தான் இருக்கு......... ஆனால் இதை வைத்தே நாங்க எவ்வளவு அழகாய் கூடு கட்டி இருக்கோம்....வெயில் மழை எதானாலும் எங்களுக்கோ எங்கள் குட்டிகளுக்கோ கஷ்டமே இல்லை............நீயும் இருக்கியே இவ்வளவு வளர்ந்து...................ஒரு கூடு கட்டக் கூட தெரியாமல்."...................என்று கெக்கலித்து சிரித்தது...................[​IMG] [​IMG] [​IMG]

    அவ்வளவு தான் அந்த குரங்குக்கு வந்ததே கோபம் ...................

    தொடரும் ....................


     
    Caide, Gaiya3 and Sun18 like this.
  9. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    எங்களுக்காக சிரமம் எடுத்து படங்களை போடுகிறீர்கள் என்று நினைக்கிறன். ஏன் எனில் தங்களின் மற்ற கதைகளில் இது போல் பார்த்ததில்லை. ரொம்ப அழகு மா. மிகவும் நன்றி மா.

    கதையின் ஆரம்பத்திலேயே கருத்தை சொல்லி விட்டீர்கள் மா. கதையின் முடிவில் "இக்கதையின் நீதி/கருத்து" என்று சொல்லினால் சுவாரசியம் குறையாமலும் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வமும் இருக்கும். இது எனது தாழ்மையான கருத்து மா. மன்னிக்கவும்.

    இந்த குருவியின் கூட்டை குரங்கு கலைக்க போகிறதோ. தேவையா இந்த பெண் குருவிக்கு இந்த வேண்டாத வேலை.


    அடுத்த part-ஐ ஆவலுடன் எதிர்பார்கிறேன் மா.
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    சுந்தர், நான் முன்பு எழுதியது நான் எழுதிய கதைகள், அதற்கு நீங்க யாராவது தான் பிரத்தியேகமாய் படம் வரையணும் [​IMG] [​IMG] [​IMG] இப்போ நான் எழுதுவது நான் கேட்ட கடைகள், எனவே என் மனக்கணில் இருக்கும் படங்களை கூகுளே பண்ணி எடுத்து போடுகிறேன் ..அவ்வளவுதான் [​IMG]
    .

    .
    ..
    .
    அடுத்தது, நீங்கள் குறிப்பிட்டது போல கருத்தை கடைசி இல் சொல்கிறேன், இதற்கு எதற்கு சாரி, மன்னிப்புஎல்லம் சுந்தர் :),
    ,
    ,
    ,
    அடுத்த பாகம் இதோ போடறேன் !
    .
     
    1 person likes this.

Share This Page