1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    மிக்க நன்றி மா.


    ரொம்ப நாளாக இந்த சொற்றொடரை தெரியும் - ஆனால் இதன் உண்மையான அர்த்தம் (உருவானதை) இன்று தான் தங்களின் மூலம் தெரிந்து கொண்டேன் மா.


    தொடர்ந்து இது போல் எழுதவும். என்னை போல் பலர் இதை பார்த்து தெரிந்து கொள்வர். நன்றி மா.
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    Thank you Sundar :)
     
    1 person likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    கதை 2.....குருவியும் அம்மையார் பாட்டியும் [​IMG]

    [​IMG]

    இதுவும் ரொம்ப அருமையான கதை, குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ஒரு ஊரில் ஒரு குருவி இருந்ததாம், அதுக்கு ரொம்ப நாளாய் பாயசம் சாப்பிடணும் என்று ஆசையாம். அந்த ஊரில் அம்மையார் பாட்டி என்று ஒரு பாட்டி இருந்தாளாம், அவ ரொம்ப நல்லா பாயசம் பண்ணுவாளாம். அவா கிட்ட போய் கேட்கலாம் என்று அந்த குருவி ஒருநாள் பாட்டி கிட்ட போய்,

    " பாட்டி பாட்டி, எனக்கு பாயசம் பண்ணி தரீங்களா?...... எனக்கு பாயசம் சாப்பிடணும் நு ரொம்ப ஆசையா இருக்கு" என்று கேட்டதாம்.

    அதற்கு பாட்டி சொன்னாளாம் , " இது என்ன பிரமாதம், பண்ணிட்டா போச்சு, ஆனால் தேவையான சாமானெல்லாம் நீ தான் வாங்கிண்டு வரணும்".என்றாளாம்.

    குருவியும் ஒத்துண்டுதாம். உடனே பாட்டி ஒரு லிஸ்ட் போட்டு தந்தாளாம்.

    அதில்.... அரிசி, பருப்பு, நெய் , பால், வெல்லம், முந்திரி பருப்பு, திராக்ஷை, குங்குமபூ .... என்று எல்லாம் எழுதி இருந்தாளாம் .

    குருவிக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம், லிஸ்ட் ஐ எடுத்துண்டு 'வி' என்று பறந்து கடைக்கு போச்சாம். செட்டியாரிடம் சொல்லி எல்லா சாமானையும் பார்த்து பார்த்து வாங்கித்தாம் ..............
    பாயசம் நன்னா வரணுமே அதுக்குத்தான் பார்த்து பார்த்து வாங்கித்தம் [​IMG].......

    தொடரும்.....................


     
    Caide, Gaiya3 and Sun18 like this.
  4. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    கேட்கும் போதே பாயசம் சாப்பிடவேண்டும் போல் உள்ளதே.

    அடுத்த part கதையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் மா.
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    ஹா .ஹா ..ஹா ....இதோ போடறேன் :)
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    குருவி தான் வாங்கின சாமானெல்லாம் கொண்டு வந்து பாட்டி கிட்ட கொடுத்துதாம்.... பாட்டியும் கொஞ்சம் பொறு பாயசம் பண்ணி தரேன் என்றாளாம்.

    குருவியும் கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்ததாம்.............பாட்டி முமுரமாய் பாயசம் செய்வதில் இருந்தாளாம், சரி நாம் போய் குளித்து விட்டு வந்து பிறகு பாயசம் சாப்பிடலாம் என்று நினைத்து,

    " பாட்டீ, நீங்க பாயசம் பண்ணுங்கோ, நான் போய் குளித்து விட்டு வரேன் " என்றதாம்..........

    பாட்டியும் "சரி போய் விட்டு வா " என்றாளாம்.

    குருவியும் ஊர் குளத்தில் போய் குளித்து விட்டு வந்ததாம்..............வரும்போதே பாயசம் வாசனை மூக்கை துளைத்ததாம்.......அதுக்கு ரொம்ப குஷி ஆகி போச்சாம்...மொத்தமும் எனக்கே எனக்கு என்று ரொம்ப சந்தோஷப்பட்டுதாம்.

    "பாட்டீ , பாட்டீ, பாயசம் ரெடியா? " ..என்று சந்தோஷக்குரலில் கேட்டுதாம்...........பாட்டியும் சிரிச்சுண்டே,

    "ரெடி தான் ....ஆனால் ரொம்ப சுடறது, ஜாக்கிரதை, ஆசை அதிகத்தால் முக்கை விட்டு சுட்டுக்கப்போற" , ..............என்றாளாம்.

    அதைக் காதில் வாங்காமல் முக்கை வெங்கலப் பானைக்குள் விட்டுதாம் குருவி............."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ......பாயசம் நன்னா சுட்டுடுத்து குருவியின் வாயை ............."வலி இல் கத்தித்தா ம் குருவி........

    பாட்டி ,"சொல்லிண்டே இருக்கேன், காதில் வாங்காம சுட்டுண்டியா ....கொஞ்சம் ஆறினதும் சாப்பிடு இல்ல ஆத்தி சாப்பிடு" என்றாளாம்.

    ஆறும்வரை பொறுக்க குருவியால் முடியலை, எனவே, "எப்படி பாட்டி ஆத்துவது?" என்று கேட்டதாம்...............

    " இன்னொரு பாத்திரத்தில் இதைவிட்டால் ஆறும் ,.............இல்லையானால் இந்த பாத்திரத்தை தண்ணி இல் வெச்சுடு, கொஞ்ச நேரத்தில் ஆறிடும்" என்று சொன்னாளாம்............

    அவ்வளவுதான், இதுதான் விஷையமா என்று குருவி, அந்த வெங்கலப் பானையை குளத்து கரைக்கு எடுத்து போச்சாம் அதை ஆறவைக்க...............

    தொடரும்..............


     
    Caide and Gaiya3 like this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    மெல்ல வெங்கலப் பானையை குளத்து தண்ணீர்ல் வைத்து மீண்டும் எடுத்து கரை இல் வைத்து விட்டு தன் மூக்கை வீட்டுப் பார்த்ததாம்,..."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ..................ஆனால் இப்பவும் தன் முக்கை சுட்டுண்டுத்தாம் ...............

    என்ன இது பாட்டி சொன்னது போல ஆறவே இல்லை என்று நினைத்தது....மீண்டும் மீண்டும் இது போல செய்து பார்த்ததாம்........ஆனாலும் பாயசம் ஆறவே இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் அதனால் பாயசத்தை taste பார்க்க முடிந்ததால் அதனுடைய சுவை குருவி இன் ஆசை அதிகம் ஆகிக்கொண்டே போச்சாம் [​IMG]................

    ஒருமுறை அப்படி செய்த போது அது தவறி குளத்தில் கொட்டிப்போச்சாம்........அச்சச்சோ.............என்று பரிதவித்ததாம்...எவ்வளவு ஆசையாய் பாட்டியை செய்ய சொன்னேன் ,.......பாட்டியும் வேலை மெனக்கெட்டு பண்ணிக்கொடுத்தா......ஆனால் இப்படி ஆயடுத்தே ...என்று ரொம்ப வருத்தப்பட்டு அழுததாம்............

    சரி பசி, வாயையும் சுட்டுக்கொண்டோம், கொஞ்சம் தண்ணியாவது குடிக்கலாம், .....என்று நினைத்து, குளத்து தண்ணியை குடித்ததாம்.............

    "ஹை"......என்று உச்சச்த்தாயி இல் கத்தித்தாம்..............ஆமாம் குளத்து தண்ணி தித்திப்பாய் பாயசம் போலவே இருந்ததாம் ......................

    அவ்வளவுதான் அதன் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, யாரும் வருவதற்குள் மொத்த தண்ணியையும் குடித்து விடணும் என்று நினைச்சுதாம்............. சுத்தும் முத்தும் பார்த்துத்தாம்.....தூரக்க கொஞ்சம் வைக்கோல் இருந்ததாம், அதை எடுத்து தன் 'பின்னால்' சொருகிக்கொண்டதாம். ஏன்னா நிறைய தண்ணி குடித்தால், 'ஒழுகாமல் இருக்கணுமே ' என்று அதன் அறிவுக்கு எட்ட அப்படி செய்தது.

    ( இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான்
    எங்க கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று நீங்க யாராவது தான் சொல்லணும் [​IMG] )

    தொடரும்....................


     
    Caide, Gaiya3 and Sun18 like this.
  8. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    அச்சச்சோ பாவம் குருவிக்கு பாயசம் கொட்டி போய்டுச்சே.


    ஆனால், கொஞ்சம் பரவாயில்லை - அந்த தண்ணீரையாவது குடித்ததே.


    மா, நானும் உங்களின் கிருஷ்ணா வயசு தானே. நானும் அப்படி தான் சிரித்து இருப்பேன்.


    இதற்கு present generation-ல் பிள்ளை பெற்றவர்கள் தான் சொல்லணும். ஹா ஹா.


    கதை அருமை மா.


    இன்னும் நிறைய எழுதுங்கள் மா. ரசிக்கிறேன் இது போன்ற கதைகளை.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    மிக்க நன்றி சுந்தர் :)..............ஆமாம் இப்போதுள்ள குழந்தைகள் எப்படி சிரிப்பார்கள் என்று யாராவது தான் சொல்லணும் [​IMG]
    .
    .
    .
    ஆமாம் நீங்க எங்க கிருஷ்ணா போலத்தான் :)
    .
    .
    .
    ம்ம்..தொடர்ந்து போடுகிறேன் !
     
    1 person likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    [​IMG]

    குளத்து தண்ணியில் கலந்த பாயசம் அவ்வளவையும் குடித்ததால் , குருவி இன் தொப்பை ரொம்ப பெரிசாகிப் போச்சாம்............. அதால பறக்கவே முடியலியாம்...........பாவம், மெல்ல மெல்ல நகந்து நகந்து பாட்டி யாத்துக்கு வந்ததாம் ................

    கொல்லைப்புற வாசலில் நின்று " பாட்டீ, பாட்டீ" என்று கூப்பிட்டதாம்.

    பாட்டி வந்து பார்த்தாளாம் யார் கூப்பிடரா என்று..................பார்த்தால்

    குண்டு குருவி..............."அச்சச்சோ............என்ன ஆச்சு ? " என்றாளாம்..................

    ஆதியோடந்தமாய் எல்லாத்தையும் சொல்லித்தாம் குருவி..............கேட்ட பாடீக்கும் வருத்தமாய் போச்சாம்......." சரி இப்போ என்ன வேண்டும் ? " என்று கேட்டாளாம்...............

    "நான் கொஞ்சநேரம் படுத்துக்கறேன், அப்புறம் என்னால் முடிந்ததும் பறந்து போறேனே " என்று கேட்டதாம்.............

    " ஆஹா, அதுக்கென்ன, பேஷாய் படுத்துக்கோ, அதோ அந்த மாட்டு கொட்டில் இருக்கு பாரு, அங்கே போய் படுத்துக்கோ " என்றாளாம்.

    குருவியும் மெல்ல நகர்ந்து போய் அங்கு படுத்துக்கொண்டதாம்........ஒரு 10 நிமிஷம் தான் ஆகி இருக்கும், அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு பொல்லாத கண்ணு குட்டி, இந்த குருவியை பார்த்த்ததாம்............

    முதலில் பயந்து போச்சாம் ....அப்புறம் மெல்ல கிட்டே வந்து பார்த்ததாம்..............குருவி நல்லா தூங்கிக்கொண்டு இருந்ததாம்.................

    சரி என்று போகப்பார்த்த கன்னுக்குட்டி இன் கண்ணிலே குருவி அடைத்து வைத்திருந்த வைக்கோல் பட்டதாம்.............

    "ஹை, வெக்கோல்" என்று சொல்லிக்கொண்டே அதை பிடித்து தன் வாயால் இழுத்ததாம்....சாப்பிடத்தான்......ஆனால் என்ன ஆச்சு?.....................

    ( இப்போ குழந்தைகளே சரிக்க ஆரம்பிச்சுடுவா.............[​IMG]...கைகளை தட்டி யும் சிரிப்பார்கள் )

    அவ்வளவுதான் ...... குருவி குடித்த எல்லா தண்ணியும் அருவி மாதிரி வெளியே கொட்டித்தாம், முதலில் குருவிக்கு ஒன்னும் புரியலை....தன் சிறகை 'பட பட' வென அடித்துக்கொண்டதாம்..................அப்புறம் விஷயம் புரிந்ததும் 'விர் ' என்று பறந்து போய் மரத்து மேலே உட்கார்ந்து கொண்டதாம்...............

    கீழே பார்த்தால்......ஒரே தண்ணி............. வெள்ளக்காடாய் இருக்காம், அதில் பாட்டி இன் ஆடு மாடெல்லாம் மிதக்கிரதாம்...பாட்டி வீட்டுக்குள்ளும் ஒரே தண்ணியாம்................

    அதைப்பார்த்ததும் குருவி இப்படி பாடித்தாம்.........

    " ஆடும் மாடும் கொளம் கொளம் .................

    அம்மையார் வீடும் கொளம் கொளம்....................."..................

    இப்படி பாடிட்டு பறந்து போச்சாம்....அவ்வளோதான் .........

    "கதை முடிஞ்சுதாம்.........கத்தரிக்கா காச்சுதாம்................[​IMG] [​IMG] [​IMG]


     
    Caide, Gaiya3, Deepu04 and 1 other person like this.

Share This Page