1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    31. தாகம் எடுத்த காகம் !

    ஒரு ஊரில் ஒரு காக்கா ஒரு மரத்தில் வாழ்ந்து வந்ததாம். எப்பவும் அது காலை இரை தேடி கிளம்புமாம். அதேபோல ஒருநாள் அது இரை தேடி ஒரு நாள் ரொம்ப தூரம் பறந்ததாம் . ஆனாப்பாருங்கோ, அன்னைக்கு என்று துரதிர்ஷ்டவசமாக அதற்கு ஒரு 'மம்மு' கூட (இரை_ கூட கிடைக்கவில்லையாம் :(

    ரொம்ப தூரம் பறந்தது தான் மிச்சமாம். அப்படி ரொம்ப தூரம் பறந்ததால் ரொம்ப தாகம் எடுத்ததாம் அதுக்கு . வழியில் எங்கேயாவது தண்ணி இருக்கா என்று பார்த்துக் கொண்டே பறந்ததாம்; தேடியதாம். ஹுஹும்.......தண்ணி இருப்பதற்கான அறிகுறியே இல்லையாம். ரொம்ப சோகமாய் பொச்சம் அந்த காக்காக்கு.

    'என்னடா இது , இன்னைக்கு இப்படி ஆகிடுச்சே' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே இன்னும் பறந்ததாம். முடிவில் அது தூரத்தில் ஒரு பானை இருப்பதைப் பார்த்து "ஆஹா .. கடவுள் நம்மை கை விடவில்லை.. தூரத்தில் ஒரு பானை இருக்கிறது, அங்கே போனால் நிச்சயம் நமக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும்" என்று நினைத்துக்கொண்டே அருகில் சென்று பார்த்ததாம் .

    பார்த்தால், அதன் அதிர்ஷ்டம் பானையில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம், ஆனால் அது காக்கைக்கு எட்டும்படியான தூரத்தில் இல்லாமல் பானை இன் அடி இல் இருந்ததாம். என்றாலும் அது, பானையின் மேல் உட்கார்ந்து தலையை உள்ளே விட்டு தண்ணீர் குடிக்கப் பார்த்ததாம் .....

    ஆனால் அதற்கு எட்டலை. என்ன பண்ணலாம் என்று கொஞ்சம் யோசித்ததாம், 'கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலியே' என்று கொஞ்சம் வருத்தப் பட்டதாம். என்றாலும் பதட்டப்படாமல், இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்ததாம். சுத்தும் முத்தும் பார்த்ததாம், கொஞ்ச துரத்தில் நிறைய சின்ன சின்ன கல் கொட்டி
    வைத்திருந்தர்களாம்.

    காக்காய்க்கு ஐடியா வந்து விட்டது, அந்தக் கற்களை, பொறுமையாக வொவ்வொன்னாக எடுத்து பானையின் உள்ளே போட்டதாம். கொஞ்ச கொஞ்சமாய் தண்ணீர் மேலே வந்ததாம். ரொம்ப சந்தோஷத்தோட அது தண்ணீர் குடிச்சிட்டு, தெம்பாக இரை தேடப் போச்சாம்.

    அதனால் குழந்தைகளே, மனசு இருந்தால் மார்க்கம் உண்டு, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளணும். எதுவுமே இல்லாமல் போச்சே என்று பதட்டப்படாமல், இருப்பதை எப்படி செம்மையாக உபயோகிப்பது என்று கொஞ்சம் பதட்டப்படாமல் யோசித்தால் நமக்குத்தான் நல்லது நடக்கும்.

    மேலும், காக்கைக்கே இத்தனை சூப்பராக ஐடியா வந்து இருக்கே, நமக்கு வராதா என்ன? சரியா?

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    tljsk likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    32. தானத்தில் சிறந்தவர் கர்ணனே !

    ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்ததாம். அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர் தானே, பின்ன என் எல்லோரும் கர்ணனை மட்டும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று சொல்கிறார்கள்? என்பது தான் அந்த சந்தேகம். .

    இவர்கள் தங்கள் சந்தேகத்தை ஒருநாள் கிருஷ்ணரிடம் கேட்டார்கள்...இவர்களின் சந்தேகத்தை தெரிந்து கொண்ட அவரும், தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினாராம். அதை காட்டி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள், நீங்கள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று ஒப்புக் கொள்கிறேன்,'' என்று சொன்னாராம்.

    உடனே இதென்ன பிரமாதம் என்று நினைத்து, பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தாராம்.

    ஆனால், நகர மக்களில் நிறைய பேருக்கு அப்படி தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லையாம், மாறாக அந்த ரெண்டு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தது போல அவர்களுக்கு தோன்றியதாம்.

    ஆச்சு சாயங்காலம் ஆகப்போகிறது........ஆனாலும் மலை குறைந்த பாடில்லை......... இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டாராம்.

    உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தாராம். இவர்களும் இவன் ஒருவன் எப்படி தானம் செய்துவிட முடியும் என்று யோசித்தார்களாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் இருந்ததாம் அவர்களுக்கு.

    கர்ணன் வந்ததும், கண்ணன் அவனை பார்த்து, "கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று சொன்னாராம்.

    உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது கண்ணா, இதோ ஒரு நொடி இல் செய்து விடலாமே! "'' என்று சொன்னானாம். அந்த வழியாக போய்க்கொண்டிருந்த ரெண்டு பேரைக் கூப்பிட்டானாம்.

    "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டு , 'ஆச்சு கிருஷ்ணா' என்று இவரிடமும் சொல்லிவிட்டு, தனது தர்மத்தை முடித்து விட்டுக் , கிருஷ்ணரை நோக்கி ஒரு கும்பிடும் போட்டுவிட்டு கிளம்பி போய் விட்டானாம் .

    இதப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டவர்கள் அசந்து போய்ட்டாங்களாம். அவர்களை ஒரு அர்த்தபுஷ்டியுடன் பார்த்தாராம் கண்ணன்..........."நீங்கள் தானம் தரும்போது , 'இவர்களுக்கு இது போதும் என்று ' நீங்களாகவே நினைத்துக்கொண்டு அளவாக வெட்டி வெட்டி கொடுத்தீர்கள், ஆனால் கர்ணன் தரும்போது, மனம் தாராளமாய் இருந்ததால், 'இவ்வளவு பெரிய மலையை வைத்துக்கொன்று தானம் வாங்குபவர் என்ன செய்வார்' என்றெல்லாம் யோசிக்காமல், நான் இதை தானம் செய்யணும் என்று மட்டுமே எண்ணி, அப்படியே தூக்கிக் கொடுத்தான்' தானம் செய்ய அதைப் போல பட்டற்ற, பரந்த மனம் தான் தேவை "என்று சொன்னாரம் அந்த அஞ்சன வண்ணக் கண்ணன் :)

    அதனால், கொடுக்கணும் என்று நினைக்கவும் , உடனே தூக்கிக் கொடுக்கவும் மனம் வேண்டும், தரும் பொருள் மேல் பற்று இல்லாமல் இருக்கணும்..... .அப்போது தான் நம்மால் தானம் செய்ய முடியும் குழந்தைகளா :) .......அதனால் தான் யாருக்காவது பணமோ பொருளோ தருவதாக இருந்தால், உடனே தந்து விடணும் , நேரம் கடத்தினால் முதலில் நாம் நினைத்ததில் 100 இல் ஒரு பங்கைக் கூட தந்திருக்க மாட்டோம் :) ...புரிந்ததா? !
     
    Sivasakthigopi, tljsk and Sairindhri like this.
  3. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    முதல் கதை சூப்பர் அம்மா
     
    krishnaamma likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க மகிழ்ச்சி ரம்யா ......ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு பின்னூட்டம் .............எல்லா கதைகளையும் படியுங்கோ.....உங்களுக்கு தெரிந்து தான் இருக்கும் என்றாலும் , சும்மா ஜாலிக்காக :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    33. விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !

    மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் சுதன் என்பவன் இருந்தான். அவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.

    ''நாள்தோறும் பத்துப் பேருக்கு அன்ன தானம் அளிக்கிறேன். உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்,'' என்று பலரிடம் வேண்டுவான் சுதன்.

    அதை உண்மை என்று நம்பி சிலர் அவனுக்கு உதவி செய்தனர். ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறும் போட மாட்டான்.

    அன்னதானம் அளிப்பதை அறிந்து அவன் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ''ஐயா! சற்று முன்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள். வயிறார சாப்பிடலாம்,'' என்று இனிமையாகப் பேசி அனுப்பி வைப்பான்.

    திரும்பவும் அவர்கள் வந்தாலும் அதே பதிலைத்தான் சொல்வான். யாருக்கும் எதையும் ஈயாத கொடாக் கண்டனாக இருந்தான் சுதன்.

    பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். விடாக் கண்டனாகிய அவன் யாரையும் ஏமாற்றி விடுவான். கொடாக் கண்டனான சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன்.

    சுதன் வீட்டில் விருந்து சாப்பிடுவது என்று முடிவு செய்தான்.
    நண்பகல் நேரம், சுதன் வீட்டிற்கு வந்தான் மகேன்.
    ''ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி பலரும் புகழ்ந்து பேசுகின்றனர். அதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன்,'' என்றான்.

    ''நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நாள்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர்.

    ''பக்கத்து ஊரில் இருந்து வருகிறீர்கள். உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. நாளை வாருங்கள். இங்கே விருந்து சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாக செல்லலாம்,'' என்று இனிமையாகப் பேசினான் சுதன்.
    ''நாளை வருகிறேன்,'' என்று புறப்பட்டான் மகேன்.

    ''வீட்டிற்குள் வந்த சுதனிடம், யார் வந்தது?'' என்று கேட்டாள் மனைவி.

    ''நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். 'நாளை வா!' என்று அவனை அனுப்பி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான்,'' என்று சொல்லிச் சிரித்தான் சுதன்.

    மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன்.
    தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், ''இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது?'' என்று எரிச்சலுடன் கதவைத் திறந்தான்.

    ''ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள்,'' என்ற மகேன், அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டான்.

    உள்ளே வந்த சுதன், மனைவியிடம், ''நேற்று வெளியூரில் இருந்து வந்தானே. அவன் இன்று விடிகாலையிலேயே வந்து விட்டான். நம் வீட்டுத் திண்ணையில் படுத்து இருக்கிறான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது,'' என்று கவலையுடன் சொன்னான்.

    ''இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்? காய்ச்சல் வந்தவள் போல நான் படுத்துக் கொள்கிறேன். அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, விருந்து சாப்பிடலாம் என்று அனுப்பி வையுங்கள்,'' என்றாள் அவள்.

    ''நல்ல வழி சொன்னாய்,'' என்று மனைவியைப் பாராட்டினான் சுதன்.

    பொழுது விடிந்தது. திண்ணையில் படுத்திருந்த மகேனிடம் சோகமான முகத்துடன் வந்தான் சுதன்.
    ''என் மனைவிக்குக் காய்ச்சல். படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் எப்படிச் சமைக்க முடியும்? நாளை வாருங்கள். கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம்,'' என்றான்.

    ''மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன்,'' என்றான் மகேன்.

    சுதனின் பதிலுக்குக் காத்திராமல் சமையல் அறைக்குச் சென்றான். சமைக்கத் தொடங்கினான்.
    இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர்.

    சிறிது நேரம் சென்றது. சுதன் காதில் மெதுவாக ஏதோ சொன்னாள் அவள். அவன் முகம் மலர்ந்தது.
    ''சமையலை முடித்து, வாருங்கள். சாப்பிடலாம்,'' என்று அவர்களை அழைத்தான் மகேன்.

    ''அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழைத் தோப்பில் இலைகளை அரிந்து எடுத்து வாரும்,'' என்றான் சுதன்.

    அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான்.
    அவன் வருவதை இருவரும் பார்த்தனர்.

    உரத்த குரலில் அவள், ''வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது?'' என்று கோபத்துடன் கத்தினாள்.

    ''நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன்,'' என்று பதிலுக்குக் கத்தினான் சுதன்.

    இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே வாயிலைப் பார்த்தனர்.
    இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை.

    ''நீங்கள் இப்படி மிரட்டினால் நான் என் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன்,'' என்று கத்தினாள் அவள்.
    ''என்னை எதிர்த்தா பேசுகிறாய்? எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை,'' என்று அவளை அடித்தான் சுதன்.

    ''ஐயோ! என்னை இப்படி அடித்துக் கொல்கிறாரே... கேட்பார் இல்லையா?'' என்று ஒப்பாரி வைத்து அழுதாள்.
    அவளை அடிப்பதை அவன் நிறுத்தவில்லை.

    அவர்கள் இருவரும் வாயிலைப் பார்த்தனர்.
    அங்கே அவனைக் காணவில்லை.
    அவளை அடிப்பதை நிறுத்தினான் சுதன்.

    ''அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம்,'' என்றாள் சுதனின் மனைவி.
    இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

    ''அடியே! எப்படி என் திறமை? உனக்கு வலிக்காமல் அடித்தேனே,'' என்று பெருமையுடன் சொன்னான் சுதன்.
    ''நான் மட்டும் உங்களுக்குச் சளைத்தவளா? நோகாமல் எப்படி அழுது ஒப்பாரி வைத்தேன் பார்த்தீர்களா?'' என்று பெருமையுடன் சொன்னாள் அவள்.

    பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், ''நான் மட்டும் உங்களுக்குச் சளைத்தவனா? போகாமல் வந்தேனே,'' என்று அவர்கள் முன் குதித்தான்.

    தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்தனர். அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர்.
     
    tljsk likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  7. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    All stories are good.

    :clapclap::clap2::clapclap::clap2:
     
    krishnaamma likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    Thank you so much............. smiley_rosen_schenken.gif
    .
    .
    .
    .
    also go through my stories :) [​IMG]......:thumbsup:
     
  9. Kru

    Kru New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    8
    Trophy Points:
    3
    Gender:
    Female
    @krishnaamma அம்மா எப்படி இருக்கீங்க.. பல நாள் கழித்து மீண்டும் வந்துவிட்டேன். என் pinky21 என்ற account hack ஆனதால் புது accountயிலிருந்து... இவ்வளோ கதை எழுதிவிட்டீர்களா.. சீக்கிரம் படித்துவிடுகிறேன்...
     
    krishnaamma likes this.
  10. Priyarajam

    Priyarajam Senior IL'ite

    Messages:
    27
    Likes Received:
    11
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Arumayana kathaikal amma.

    Romba nalaiku munnadi unga thread parthu appa appo yenga papaku kathai solvaen. Athoda Neenga ellaroda response kum bathil response panrathu enaku romba pidikkum. Romba naal ku aprome IL ku vanthirukaen unga kathaikal Padikka.

    Thanks for sharing such wonderful stories amma.
     
    krishnaamma likes this.

Share This Page