1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    https://www.youtube.com/watch?v=JUcWKyUuaO4

    தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


    இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் :)


    இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................:)




    முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
     
    1 person likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    முதல் கதை : வாலு போச்சு கத்தி வந்தது.............

    NINJAMONKEY.gif

    ஒரு குட்டி குரங்கு சாலை வழியாக குதித்து குதித்து போய்க் கொண்டிருந்ததாம் .............அப்போ அது வாலில் ஒரு முள் குத்திடுத்தாம்..........ரொம்ப வலிச்சுதாம்.........பாவம் அதால வலி தாங்க முடியலை......என்ன செய்வது? எப்படி முள்ளை எடுப்பது என்று தெரியலையாம்.......


    சுத்தும் முத்தும் பார்த்ததாம்....அங்கே ரோடு ஓரம் ஒரு அம்பட்டன் ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டு இருந்தானாம்.................. அவன் கையில் கத்தியை பார்த்ததும், குரங்குக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம்..............


    நேர அவனிடம் போய், "என் வாலில் முள் குத்தி விட்டது, எடுத்து விடு "என்றதாம்..................


    அவன் பயந்து போய் "ஐயோ ! என்னால் முடியாது ...........அதை ஒரு டாக்டர் தான் செய்வார் " என்றானாம்.


    "ஏய், ........நீயும் தானே கத்தி வெச்சிருக்க, நீயே எடு" என்று அவனை மிரட்டியதாம் அந்த குரங்கு.


    அவனும் பயந்து கொண்டே, அதன் வாலை பிடித்து, முள்ளை எடுக்க பார்த்தானாம்....குரங்கு ஓரிடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்ததால், முள்ளை எடுக்க முடியவில்லை அவனால்..... அதனால் அவன் சொன்னானாம் , " இதோ பார் குரங்கே, இப்படி நீ ஆட்டினால் முள் வராது , உன் வால் தான் வெட்டுப்படும்...எனவே, கொஞ்சம் வாலை ஆட்டாமல் இரு" என்றானாம்.


    அது வும் சரி என்று சொன்னதே தவிர அவன் முள்ளை எடுக்கும்போது சட் என்று வாலை ஆட்டிவிட்டதாம்....அவ்வளவுதான், கூரான கத்தி பட்டு துளி வால் வெட்டு பட்டு போச்சாம்........ரத்தமும் வந்துச்சாம்.........


    அவ்வளவு தான், ரத்தத்தை பார்த்து பயந்து போன குரங்கு ஒரேடியாக கூப்பாடு போட்டதாம். " இவன் என்வாலை வெட்டிட்டான்..............இவன் என்வாலை வெட்டிட்டான்........." என்று.


    என்னடா இது வம்பாய் போச்சு.............இன்று யார் மூஞ்சில முழித்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டு, குரங்கை சமாதானப்படுத்தப் பார்த்தான் அவன்.


    ஏய், குரங்கே!............கத்தாதே, ஏதோ தவறு நடந்து போச்சு, இப்போ என்ன செய்யாலாம்? என்று கேட்டானாம்..............


    கோபமாய் இருந்த குரங்கு, "நீ ஒண்ணும் எனக்கு முள்ளை எடுக்க வேண்டாம், உன் கத்திய குடு, நானே எடுத்துக்கறேன்" என்றதாம்.


    அதற்கு அவன், " இல்லை நான் முள்ளை எடுத்துவிட்டேன், கொஞ்சநேரம் வலிக்கும் பிறகு சரியாகிவிடும், வேண்டுமானால் ஒரு கட்டு போட்டு விடவா?" என்று கேட்டானாம்.


    கொஞ்சம் கோபம் குறைந்த குரங்கு, வாலில் கட்டு போட ஒப்புக்கொண்டது. ஆனாலும் அது குரங்கு ஆச்சே, பிடிவாதமாய் கத்திவேண்டும் என்று கேட்டது. இவனும், சரி போய் தொலையட்டும் என்று ஒரு பழைய கத்தியை அது கிட்டே தந்தானாம்.


    குரங்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மேலும் நடந்து போச்சாம்................


    தொடரும்................
     
    Caide and Gaiya3 like this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    கத்தியை கையில் வைத்துக்கொண்டு இருந்தால் சும்மா இருக்குமா கை?.......மேலுள்ம் அது குரங்கு வேற.................எனவே, கையில் கத்தியை பிடித்துக்கொண்டு சுழற்றியபடி போச்சாம்.............

    [​IMG]

    கொஞ்ச தூரத்தில் ஒரு கிழவி 'கூடை முடைந்து' கொண்டிருந்தாளாம்..............(இந்த மாதிரி புதிய சொற்களால், குழந்தைகளின் சொல் திறனை நாம் அதிகப்படுத்துகிறோம் [​IMG] ) ...........அவள் கஷ்டப்பட்டு கூடை முடைவதை பார்த்த குரங்கு,

    " பாட்டி, பாட்டி, இப்படி வெறும் கையில் கூடை பின்னரையே, இந்தா இந்த கத்தியை வைத்துக்கொண்டு பின்னு ...............என்றதாம்.

    பாடிககு அந்த உதவி தேவை என்றாலும்..............இது குரங்காச்சே, இதன் மனசு எப்பவும் ஒன்று போல இருக்காதே என்று தயங்கினாளாம் ....

    அதை பார்த்த குரங்கு, " தயங்காதே பாட்டி"...., இந்தா என்றதாம்.

    அந்த பாட்டியும், சரி என்று வாங்கிக்கொண்டாளாம் ...ஒரு ரெண்டு சுத்து கூட முடைந்து இருக்க மாட்டா, பழசான அந்த கத்தி உடைந்து விட்டதாம்.............

    அவ்வளவு தான் இதை பார்த்துக்கொண்டே இருந்த குரங்குக்கு ரொம்ப கோபம் வந்து விட்டதாம். ...." நீ பாவம் என்று நான் கத்தி கொடுத்தால்..அதை உடைத்து விட்டாயா? "............என்று சத்தம் போட்டதாம்.

    பயந்து போன பாட்டி, வேண்டுமானால் கத்திக்கு பதிலாக இந்த குட்டி கூடையை நீயே வெச்சுக்கோ என்று சொன்னாளாம்.

    சரி என்று சொல்லி, பாட்டியிடமிருந்து அந்த கூடையை பிடுங்கிக்கொண்டு வந்து விட்டதாம் குரங்கு................

    தொடரும்..................



     
    Caide and Gaiya3 like this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    [​IMG]
    கொஞ்ச தூரம் அந்த அரைகுறையாக முடையப்பட்ட கூடையுடன் நடந்தது அந்த குரங்கு.................அங்கு ஒருத்தன் மாம்பழம் வித்துக்கொண்டு இருந்தானாம்............அவனிடம் கூடை இல்லாததால் கை இல் வைத்து கொண்டு விட்டுக்கொண்டு இருந்தானாம்............

    இதை பார்த்த குரங்கு அவனிடம் போய், " ஏம்பா! உனக்கு கூடை வேண்டுமா? " என்று கேட்டதாம்..

    அவன் எங்கே இந்த குரங்கு எல்லா பழங்களையும் துவம்சம் செய்து விடுமோ என்று பயந்து ஆமாம் வேண்டும் என்று சொன்னானாம்...............

    இந்தா இதை எடுத்துக்கோ, உன் பழங்களை இதில் வைத்து தூக்கிக்கொண்டு போய் உன் வியாபாரத்தை கவனி...........என்று அன்பாக சொன்னதாம்..........

    அவனும் சரி என்று வாங்கி, அதில் பழங்களை அடுக்கி, தூக்கினானாம் பாரு......கூடை பிஞ்சு எல்லா பழங்களும் கொட்டிபோச்சாம்.............[​IMG]

    கோபம் வந்து விட்டது குரங்குக்கு............." நல்லதுக்கே காலம் இல்லை, நீ பாவம் என்று நான் நினைத்தால்.........என்ன செய்து வெச்சிருக்கே ? " என்று சத்தம் போட்டது........

    பயந்து போன அந்த ஆள், " பொதுவாய் நீ நல்லவன், உன்னை பார்த்தால் நல்ல பசி யாக இருப்பது போல இருக்கு, அது தான் உனக்கு கோவம் வருகிறது, , எனவே, உன் கூடைக்கு பதிலாக 2 மாம்பழம் தரேன் வாங்கிக் கொள் ..... அதை சாப்பிட்டு பசியாறு " என்று அன்பாய் சொன்னனாம்........

    குரங்குக்கும் அப்போது தான் நினைவில் வந்தது, காலை இல் இருந்து தான் எதுவுமே சாப்பிடாதது.எனவே அவன் தந்த 2 மாம்பழங்களை வாங்கிக்கொண்டு நடையை கட்டியது ...........[​IMG][​IMG][​IMG]

    தொடரும் .......................
     
    Gaiya3 likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    அது குட்டி குரங்கானதால், 1 மாம்பழம் சாப்பிட்டதுமே அதுக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு.............அப்படியே கொஞ்சநேரம் தூங்கி விட்டது.............கண்ணு தொறந்து பார்த்தல் சாயங்காலம்............

    மீண்டும் தன நடையை தொடர்ந்தது.....கொஞ்ச தூரம் போனதுமே ஏதோ சூப்பர் வாசனை காத்தில் வந்தது.............அந்த வாசனையை பிடித்துக்கொண்டே மேலும் நடந்தது அந்த குரங்கு...........

    பார்த்தால் ஒரு பொட்டிகடை போல ஒரு ரோடு ஒர கடை இல் ஒருத்தன் தோசை வார்த்துக்கொண்டிருந்தான்..........அவனிடம் இந்த குரங்கு பொய் நின்று கொண்டது ..............

    ஏய் ஏய்....எனக்கு ஒரு தோசை தரியா என்று கேட்டது....................நிமிர்ந்து பார்த்த அவன், சரி பாவம் என்று 1 தோசை தந்தான்..............அதை தின்ற குரங்கு இன்னும் கேட்டது.......................

    அதற்கு அவன் , " ஏதோ பாவம் என்று 1 தோசை தந்தால் இன்னும் கேட்கிறாயே..போ..போ" ...என்று விரட்டினான் ................

    அதற்கு குரங்கு சொன்னது, " உன் தோசை ரொம்ப நல்லா இருக்கு அது தான் கேட்டேன், நீ சும்மா தரவேண்டாம் இந்த பழத்தை வைத்துக்கொண்டு 2 தோசை கொடு" என்று கேட்டது.

    அவனுக்கு பாவமாய் போச்சு, 'பாவம் குட்டி குரங்கு, வழி தெரியாமல் தனியாய் மாட்டிக்கொண்டுவிட்டது போல இருக்கு, அதுக்கு பசிக்கிறது என்று ' அதன் மேல் இரக்கம் கொண்டு,
    "எனக்கு பழம் எல்லாம் வேண்டாம்..................ஆனால் இன்னும் 2 தான் தருவேன், அப்புறமும் நீ எனக்கு தொல்லை தரக்கூடாது..சரியா? " என்று கேட்டான்....................

    அதற்கு ஒப்புக்கொண்ட குரங்கு 2 தோசை வாங்கிக்கொண்டு, பழத்தை வைத்து விட்டே புறப்பட்டது................அதன் நாணயத்தை எண்ணி வியந்தான் கடைக்காரன். [​IMG]

    மீண்டும் 1 தோசை சாப்பிட்டதும் அந்த குட்டி குரங்குக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு...............எனவே, பாக்கி 1 தோசையை எடுத்துக்கொண்டு நடந்தது.................

    தொடரும்.................


     
    Caide, Gaiya3 and Deepu04 like this.
  6. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    Since network is very slow, It'll be very difficult to post in tamil. So, I will give my feedback now in english, once it becomes alright - then I will post in our 'azhagiya tamizh'.

    **
    Nice to know this kind of stories, ma.

    It almost took me to my childhood age. Though I haven't heard this stories at that age much, nevertheless I would hear from you now onwards.

    Thanks so much ma.

    Keep writing these stories - eager to know these and eager to become a 'child' as well once again in my life.

    :thumbsup
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    Thank you for your feedback :)...........sure I will continue and tell - write many more stories......:)
     
    1 person likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் ஒரு டமாரம் வாசித்துக்கொண்டிருந்தானாம் , அது இந்த குரங்குக்கு ரொம்ப பிடித்துப் போகவே அவனை நெருங்கியது அது...............


    அவனிடம் போய் நின்று கொண்டு , அவன் வாசிப்பதை பார்த்தது..........................அவன் குரங்கை பார்த்து பயந்து ஓட்டம் எடுத்தான், இதுவும் தொடர்ந்து ஓடியது......................


    அவன் ஓடிய களைப்பில் சற்று நின்றான்................இது அவன் முன்னாடி போய் குதித்தது................


    அவன், " என்ன வேண்டும் உனக்கு?..............நான் என் சாப்பாட்டுக்காக வாசிக்கிறேன்...............நீ வந்து கெட்டுத்து விட்டியே........" என்றான்.


    உடனே இது , "உனக்கு சாப்பாடு தானே வேணும்?....இந்தா தோசை" என்றதாம்.................


    அவனுக்கு ஆச்சர்யமாய் போச்சு.........என்னடா இது குரங்கு நமக்கு தருகிறதே என்று..............


    எதானாலும் இப்போ ரொம்ப பசி அவனுக்கு, எனவே குரங்கு தந்த தோசையை வாங்கி சாப்பிட்டான்.......பார்த்துக்கொண்டே நின்று இருந்த குரங்கு, அவன் சாப்பிட்டதும்..............


    " ஏன் என் தோசையை சாப்பிட்டாய்? என்று ( சிங்கம் படத்தில் சூர்யா போல கேட்டது.....fir ஐ எண்டா கிழிச்ச? புன்னகை) கேட்டது...............


    அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சான்...............உடனே இந்த குரங்கு, அந்த தோசைக்கு பதிலாய் இந்த டமாரத்தை கொடு என்று பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாம் .............


    தொடரும்................
     
    Caide likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................


    வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............


    கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............


    கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............


    மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............


    தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............


    என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............


    அவ்வளோதான்.................:)
     
    Thyagarajan, ethtest, Caide and 3 others like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    அடுத்த கதை நாளைக்கு [​IMG]
     
    Thyagarajan, aarthi28 and Sun18 like this.

Share This Page