1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தழுவலினிமை !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Sep 27, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பார்வைத் தீண்டலில் தொடுகிறேன் !
    வார்த்தையில் தேனை ருசிக்கிறேன் !
    பெண்ணுன் வாசமே முகர்கிறேன் !
    புலன்களில் உன்னை உணர்கிறேன் !
    வளையலால் என்னை வளைக்கிறாய் !
    இளமை கொண்டுயெனை ஆள்கிறாய் !

    அணிகள் பூட்டியப் பொன்னுடல்,
    பிணியில் வாட்டுதே என்னையே!
    வருத்தும் நோயுமந்தக் காதலே,
    மருந்தும் பாவியந்தக் காதலே !
    அணிகள் விலக்கிய மேனியில்,
    அணிந்திடு என்னைப் பெண்மையே !

    இந்திரன் ஆளும் சுவர்கத்தின்
    இன்பத்தை நாளும் அடையினும்,
    பெண்ணிவள் தோளின் மென்மையில்,
    துயில்சுகம் போன்று இருக்குமோ ?
    துறவிகள் இறையுள் கலக்கிறார் !
    துணைவியுன்னில் நான் சாய்கிறேன் !

    நீங்கினால் காயும் கதிரொளி !
    நெருங்கினால் பாயும் நிலவொளி !
    எங்கும் நான் காணவில்லையே
    நெருப்பொன்று இதனைப் போலவே !
    காதலென்னும் தீ வளர்க்கிறாய் !
    சாதல் நாம் காண்பதில்லையே !

    வேண்டும் நேரத்தில் வேட்டவை,
    விரும்புமின்பங்கள் தருதற் போல்,
    கலவி காலத்துன் பூங்குழல் ,
    தோள்வரைத் தளர்ந்து மகிழ்த்துமே !
    முயங்கியுன் மீதில் சாய்கையில்,
    மயக்கத்தில் என்னை ஆழ்த்துமே !

    தோளணைத் துன்னைத் தீண்டிலோ,
    என்னுயிர் மீண்டும் துளிர்க்குமே!
    வாடும் உயிர்க்கொரு அமுதத்தைப்,
    பேதையுன் தோள்கள் அளிக்குமே !
    கூடலில் தோளில் பொருந்தியேப்,
    பருகுவேன் அந்த அமுதையே !

    உழைத்து நானடைந்த செல்வத்தைப்,
    பிறர்க்குப் பகிர்ந்து மகிழ்வுறுகிற,
    ஆணென் தாளாண்மை நிகர்க்கின்ற,
    இன்பம் எனக்குந்தன் முயக்கமே !
    மாநிறம் பொங்கும் மேனியாள்,
    தேவியுனைக் கூடும் மயக்கமே !

    நீயும் நானும் செயுங்காதலால்,
    தேகமிரண்டும் கட்டித் தழுவிட,
    ஊனின் முயக்கத்தின் நெருக்கத்தில்,
    காற்றும் வழியின்றித் திகைக்குமே !
    வளிக்கு இடைவெளி அளித்திடா,
    களிப்பு நமக்கென்றும் சொந்தமே !

    காதற்புணர்ச்சியில் வரும் இன்பம்,
    ஊடல் கொள்வதில் தொடங்குமே !
    பிணக்குப் பாசாங்கின் முடிவிலே,
    அன்பையிருவர் மனம் உணருமே !
    ஊடிப்பின் கூடும் பொழுதுகள்,
    நாடிப்பெறும் வாழ்வின் பயன்களே !

    பயிலப்பயிலப் பெறும் அறிவினால்,
    முன்னம் பெற்றதுக் குறைவென்று,
    உணர்ந்து கொள்வதைப் போலவே,
    புணர்ந்துன் புதுமைகள் காண்கிறேன்!
    படிக்கத் திகட்டாதப் புத்தகம்,
    அணியினாள் நீயென் பெட்டகம் !

    Regards,

    Pavithra
     
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்!

    எதிர் வருங்காலத்தில் மணமுடித்து உரிமை கோரப்போகும் தன்னருமைக் காதலியைக் கட்டித் தழுவி மகிழும் போதிலுண்டாகும் காதலனின் எண்ணங்களை வள்ளுவர் வாக்கினின்று என் வார்த்தைகளில் மாற்றிப் பார்த்த முயற்சியே மேற்கண்ட பதிவு ! தயை கூர்ந்து குற்றம் பொறுக்க வேண்டுகிறேன் ! அந்தக் குறட்பாக்களை மட்டும் இவ்விடம் பதிகிறேன். பொருள் விளக்கம் வாசகர்கள் தாமே முயன்று தேடிப் பிடித்துப் படித்திட வேண்டுகிறேன். புரிதலுக்கு நன்றி!

    என்றும் அன்புடன்,

    பவித்ரா

    குறள் பால்: இன்பத்துப்பால் . குறள் இயல்: களவியல். அதிகாரம்:110) புணர்ச்சிமகிழ்தல்.

    குறள் வரிசை எண் குறள்

    1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள.

    1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்நோய்க்குத் தானே மருந்து.

    1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.

    1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்?

    1105 வேட்ட பொழுதின் அவையவை போலுமே
    தோட்டார் கதுப்பினாள் தோள்.

    1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
    அமிழ்தின் இயன்றன தோள்.

    1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு.

    1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.

    1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்.

    1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு.

    இந்த இணையத் தொடர்பில் குறட்பாக்களும்,அவற்றின் விளக்கங்களும் படிக்கக் கிடைக்கின்றன.
     
    kaniths, periamma, jskls and 2 others like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நான் திருக்குறளில் படிக்காத அதிகாரம் இது. ஒண்ணும் சொல்றதுக்கில்ல .. ;) உங்கள் வரிகளை ரசித்தேன்.
     
    PavithraS likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    achchachcho namakku vayasu paththaathu, naa inga varla, veetla yaarum sollidaatheengo :)

    arumai pavithra
     
    PavithraS likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very good attempt Pavithra. Happy to read. I have tried writing equivalent 4 liners in English for the first few chapters of ARaththup Paal. Gave up sooner, realizing the sheer volume of the task and of course the knowledge that I have to gain. -rgs
     
    PavithraS likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இன்பத்துப்பாலின் அதிகாரங்கள் நானுமே படித்திராதவையே,லக்ஷ்மி ! ;) :smile:.
    தினமலரில் இடம்பெறும் குறளமுதத்தில் ஓர் நாள் இவ்வதிகாரத்தின் குறளொன்றைப் படிக்க நேர்ந்தது. அதை எனது மொழியில்/வழியில் வார்த்தைப் படுத்தினால் எப்படியிருக்கும் என்று தோன்றியதின் விளைவே இம்முயற்சி. நம்மெல்லோருக்குமே திருக்குறள் ஏதோ பள்ளியில் சொல்லித் தரப்பட்ட நீதிநூல் என்பதாகவே எண்ணம் போலும். ஆகையால் கல்விபயில் காலத்தின் பின்னர் முழுமையாக அந்நூலை இலக்கிய நோக்கோடு நன்று உள்வாங்கி இரசிக்கத் தவறுகிறோம். அறம் பொருள் இன்பத்தை எவ்வளவு குறுகச் சொல்லி எத்துணை ஆழங்களை வள்ளுவம் காட்டியிருக்கிறது ! எனது முயற்சியை இரசித்துப் பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி !
    Vayasu paththaathaa illa niraiya vayasu aagiduchchaa ?:wink: பாராட்டிற்கு நன்றி , GG !
    Thank you for the feedback, RGS ! Yes, Thirukkural is very vast and deep that one can never do justice by attempting to translate it in any way.. It was just a curious attempt. Happy that it has come out decently. I don't know if I will attempt this again. But I have to admit that the thought is very tempting and joyous. God's Will. I am glad to know that you tried it in English and will be very happy to read if you decide to share with us :)
     
    kaniths, jskls and GoogleGlass like this.
  7. Vani00

    Vani00 Bronze IL'ite

    Messages:
    23
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அருமையான பதிவு, அதற்கு சற்றும் குறைவில்லாத பின்னூட்ட்டத்திற்கான பதில்.

    இதே போல் அறத்துப்பால் அதிகாரம் ஒன்று நாம் மிகவும் அறிந்திறாதது. இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையானது - ஆணுக்கும் / பெண்ணுக்கும் - "பிறனில் விழையாமை" அதிகாரத்தில் உள்ள குறள்கள்.

    இந்த வலைதளத்தில் சில பகுதிகளில் விவாதிக்கப்படும் தகாத உறவுகள் அதனால் வரும் பாதிப்புகள் படிக்க நேர்ந்ததால் வந்த ஆதங்கத்தில் இதை பதிய நேர்ந்தது.

    ஒரு குறள் உதாரணத்திற்கு :

    குறள் 146:
    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
    உரை :
    பிறன் மனைவியிடம்/கனவனிடம் முறைகேடாக நடக்க நினைப்பவரிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

    மற்ற குறள்களுக்கு இங்கே செல்லவும்.

    Tagging @jskls @kaniths @periamma @bhagya85 @rgsrinivasan @GoogleGlass as they may be interested to read this.
     
    vaidehi71, kaniths, PavithraS and 3 others like this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Vani00 வாணி என்னை நினைத்ததற்கு நன்றி மா .உங்கள் பதிவு காலத்துக்கேற்ற ஒன்று .பிறனில் விழையாமை அனைவரும் படிக்க வேண்டிய அதிகாரம் .செய்திதாள்களில் வரும் செய்திகளை படிக்கும் போது மனம் பதறுகிறது .கணவன் மனைவியை கொலை செய்தல் மனைவி கணவனை கொலை செய்தல் இவற்றுக்கு அடிப்படை தகாத உறவு .தனி மனித ஒழுக்கம் அனைவருக்கும் மிக முக்கியமானது .
     
    PavithraS likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS இந்த பதிவை எப்படி பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லையே
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    படிக்கத் திகட்டாதப் புத்தகம்,
    அணியினாள் நீயென் பெட்டகம் !

    என்ன ஒரு அருமையான வார்த்தைகள் .
     
    kaniths likes this.

Share This Page