1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தலைசுற்றல் நிக்க

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 26, 2023.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    தலைசுற்றல் நிக்க
    நன்னா போயிண்டுருந்த லைப் ல ஹெல்த் பத்தி சொல்லறேன்னு எல்லாரும் ஆரம்பிச்சா பாருங்கோ....​
    கார்த்தாலே எழுந்தவுடனே வெறும் வயத்திலே முதல்ல ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கணும்னு சொன்னா... அப்புறம் இல்லே ரெண்டு டம்பளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா... அப்புறம் இல்லை வெறும் வெந்நீர் இல்லை.. அதிலே எலுமிச்சம்பழம் பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா... அப்புறம் அதிலே கொஞ்சம் இஞ்சி தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா... ஆக இப்போ கார்த்தாலே நான் தண்ணீர் குடிக்கறதையே நிறுத்திட்டேன்...
    இது ஆச்சா - அடுத்தது வாக்கிங் போகலாம்னு பார்த்தா.. முதலேயே வேகமா நடக்கப்படாது... மெதுவா நடந்து.. அப்புறம் வேகத்தை கூட்டி . மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள நடக்கணும்னா... வெறும் வாக்கிங் போறாது... எட்டு போட்டு நடக்க சொன்னா.. அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நடந்துண்டு இருந்தவனை கெடுத்து.. எட்டு போட்டு தலை சுத்த வெச்சு.. வாக்கிங் க்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வெச்சாச்சு...
    இது ஆச்சா - காபி, டீ தொடப்படாதாம்.. பால் நிறைய சேர்த்துக்க கூடாதாம்..நாம ஆரோக்கியமா இருக்கணும்னா கண்ராவி கசப்பா பிளாக் காபியோ, க்ரீன் டீயோ குடிக்கலாமாம்,,, அதுக்கு நான் வெறுமனே இருந்துடுவேன்...
    அப்புறம் பிரேக் பாஸ்ட் இட்லி தோசை கூடாது.. பிரட் தான் பெஸ்ட்.. பொங்கல் மாதிரி ஹெவியா சாப்பிடப்படாது... பூரி கூடாது.. இன்னும் ஏதேதோ சொல்லி அதுவும் நிறுத்தப்பட்டது..
    இப்போ மத்தியானம் நிறைய சாதம் சாப்பிடாதைக்கு வேக வெச்ச கறிகாய் இல்லேன்னா மைல்டு பொரித்த கூட்டு, அதிகமா மசாலா சேர்க்காமல் நிறைய சூப் சேர்த்துக்கலாம்னு சொன்னா உருளைக்கிழங்கு ,வாழைக்காய் சாப்பிடக்கூடாதாம்.. தயிர் அதுவும் கெட்டியா கூடவே கூடாதாம்... ஐஸ் வாட்டர் கூடாது..
    சரி சாயங்காலம் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்னா நமக்கு பிடிச்ச கேசரி, பஜ்ஜி போண்டா அதெல்லாம் கூடாதாம்.. வித விதமான பழங்களை அழகா நறுக்கி ஒரு பெரிய பௌல் ல வெச்சுண்டு ரசிச்சு ருசிச்சு சாப்பிடணுமாம்...
    ராத்திரி ரொம்ப பசித்தால் மட்டுமே டின்னர் சாப்பிடணுமாம்.. அதுவும் ரெண்டு சுக்கா ரொட்டி தால் தொட்டு சாப்பிடலாமாம்.. அப்புறம் ராத்திரி பால் சாப்பிடக்கூடாதாம்.. வேணும்னா ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கலாம்..
    அதுக்கப்புறம் தூங்கறதுக்கும் தடா.. இடது பக்கம் படுக்கணும்... அப்போதான் இதயம் இயல்பா இருக்கும்னு சொன்னா.. அப்புறம் வலது பக்கம் படுத்தால்தான் கொழுப்பு ஜீரணமாகும்னு சொன்னா.. மல்லாக்கா படு அப்போதான் பார்கின்சன், அல்சைமர் எல்லாம் வராதுன்னா... இல்லேயில்லே குப்புற படுத்தால் நல்லது.. தொப்பை வராது.. ஒபிசிட்டி வராதுன்னு சொன்னா..
    அடேய்ய்...! அடங்குங்கடா எல்லாரும்...
    இப்படி எதுவுமே சாப்பிடாம ஆரோக்கியமா இருந்து ஒண்ணும் கிழிக்க வேண்டாம்... எனக்கு பிடிச்சதை சாப்டுட்டு.. சந்தோஷமா எப்போதும் போல 'ஜாலிலோ ஜிம்கானா' ன்னு பாடிண்டு போயிண்டே இருக்கேன்..!
     
    vidhyalakshmid likes this.
    Loading...

  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female

Share This Page