1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

[தயிர் ஸாதமும், ஸ-பரிவாரமும்]

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 25, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தயிரிற் சிறந்த ஊணுமில்லை.
    எப்பிடி?
    வயத்தைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன வயத்தை சரி பண்ண, தயிரை [மோரை] அடிச்சுக்க முடியாது.
    கோவில்கள்ள தயிர் ஸாதத்தை ஒரு தொன்னைலேயோ, கையிலயோ குடுப்பா. கோவில் ப்ரஸாதத்துக்குன்னு தனி டேஸ்ட், வாசனை இருக்கும்.
    பசுந்தயிர் ஒரு நல்ல வாசனையோட, லைட்டா புளிப்போட இருக்கும்.
    “முட்டாளுக்கு மூணு வேளையும் தயிர் ஸாதம்”ன்னு ஒரு வாசகம் உண்டு. ஆனா, எப்பவும்போல நாம அதோட அர்த்தத்தை தலைகீழாவே புரிஞ்சுப்போம்.
    ஏதோ ஒரு ஜன்மால நிச்சயம் வௌவாலாப் பொறந்திருப்போமோ என்னவோ?

    அடி முட்டாளா இருக்கறவனைக்கூட தயிர் ஸாதம் மேதாவியா ஆக்கிடும்ங்கறதுதான் சரி.
    ஏன்னா...அதோட சத்து அப்படி!
    தயிர் ஸாதம் கலக்கறதுக்கு, சாதத்தை கொஞ்சம் குழைவா வடிக்கணும். எப்பவும் விடறதை விட கூட ரெண்டு டம்ப்ளர் ஜலத்தை விட்டு வடிக்கணும்.
    ஸாதம் ஆறதுக்குள்ள, ஜிலுஜிலுன்னு கொஞ்சம் பச்சை மிளகா, இஞ்சி, கொத்தமல்லி, எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும்.
    இப்போ ஸாதம் ரெடியானதும், கொஞ்சம் வெண்ணெய் [கொலஸ்ட்ரால் !!ன்னு யாரும் பேசக்கூடாது!] பகவான் க்ருஷ்ணனை நெனைச்சுண்டு பண்ணினா, எதுவும் ஒண்ணும் பண்ணாது.
    வெண்ணெயை ஒரு ஸ்பூன் அந்த சுடற ஸாதத்துக்குள்ள போட்டு, உப்பு [பெருங்காயம் optional] போட்டு, மசியப் பெசியணும். வெண்ணெய் போடறதால, தயிர் ஸாதம் வெள்ளைக் கலரா, வெழுமூண [சரவணபவன் மாதிரி] இருக்கும்.
    ஓகே.....
    இப்போ ஸாதம் ஓரளவு ஆறினதும், கெட்டித் தயிரை அதோட தலைல விட்டு, கரண்டியால ஜோரா மசிச்சு கலக்கணும். வெண்ணை போட்டதுனால, தயிருக்கு தன்னோட மனுஷாளைப் பாத்த சந்தோஷத்துல ஜோரா ரெண்டும் ஒண்ணா சேர்ந்துண்டு, தயிர்சாதம் இப்போ... வெண்ணைக்கட்டியா இருக்கும்.

    இப்போதான் மிளகா, இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி entry!
    நன்னா ஆறின சாதத்துலதான் போடணும். இல்லாட்டா, பச்சைக் கலர், லேஸா ப்ரௌன் கலரா மாறிடும்.
    Now, ஒரு கரண்டியில நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, [மிளகா வத்தல் optional] தாளிச்சு, அழகா ப்ரௌன் கலருக்கு உளுந்து மாறினதும், தயிர்சாதத்துல போடணும்.
    கரண்டியில சாதத்தை எடுத்து விட்டா, அப்டி வழியணும்!
    இனிமேத்தான் ஜொள்ளோட லெவல் ஜாஸ்தியாகும். Sometimes, overflow ஆகலாம்!
    இதுக்குத் தொட்டுக்க என்ன?
    வெறும் இஞ்சியை பொடியா நறுக்கி, உப்பு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு சாப்பிடலாம்;
    இலுப்பைச்சட்டியை வெச்சு, மொறு மொறுன்னு கொஞ்சம் மோர்மிளகாய் நன்னாக் கறுப்பா வறுத்துக்கலாம்;
    மோர்மிளகாய்ல, அது வெள்ளையா [வறுக்கும் முன்] இருக்கறப்போ பளபளன்னு, மொழுக்குனு இருந்தா, அந்த மிளகாய் பயங்கர காரமா இருக்கும்.
    மணத்தக்காளி வத்தலை வறுத்து தயிர்சாதத்தோட சாப்பிட்டா, ஒவ்வொரு வாய்க்கும் அட்லீஸ்ட் அஞ்சாறு வத்தலாவது அகப்படும். அதுனால, நம்ம நாக்கும் மூக்கும் நம்மளை வாழ்க வாழ்கன்னு வாழ்த்தும்.
    அடுத்தது, வேப்பிலைக்கட்டி. [நில்கிரிஸ்ல கிடைக்கறது] வேப்பிலைக்கட்டியைக் கண்டு பிடிச்சவாளுக்கு ஒரு ஷொட்டு ! மாவிலைக்கட்டி, ஆலிலைக்கட்டின்னு இல்லாம, வேப்பிலைக்கட்டின்னு பேரை வெச்சாலும், எலுமிச்சை, நாரத்தை இலையில பண்ற இந்த ஐட்டத்துக்கு ஒரு ஜே! [நல்லவேளை நெஜமாவே வேப்பிலையை இடிச்சு பண்ணலை]
    கார்த்தல பண்ணின வத்தக்குழம்பு, கீரை மிஞ்சியிருந்தா! ரெண்டையும் ஒண்ணாக் கலந்து ஜோரா கொதிக்க வெச்சுக்கணும். க்ரீம் பிஸ்கட் நடுவுல ஒரு குழிக்குள்ள க்ரீம் இருக்கறாமாதிரி, தயிர் ஸாதக்குழிக்குள்ள இந்த ப்ரௌன் கலர் குழம்பு இருக்கும். ஆஹா! என்ன lovely, colourful combination !!
    ஒண்ணுமே தொட்டுக்க இல்லைன்னா, don't worry! இட்லி மிளகாய்ப்பொடியை கலந்து சாப்பிட்டுப் பாருங்கோ!

    சாதத்துல மோரை நிறைய விட்டு, கரைச்சாப்பல சாப்பிடும் போதும், மிளகாய்ப்பொடி ஜோரா இருக்கும்.
    அப்பறம் மாவடுவும், மாவடு ஜலமும்!
    கேரளா டைப்புல காரமா, கெட்டியா மாவடு [Thangam மாவடு] இருந்தா, அதோட ஜலத்தை அப்பிடி ஸைடுல விட்டுண்டு தோச்சுண்டு சாப்பிட்டா, மூக்குலயும் taste buds வந்தா மாதிரி இருக்கும்.
    மாகாளிக்கிழங்குன்னு நீளநீளமா ஒரு கிழங்கு. அதை தோல் சீவி, பொடிப்பொடியா நறுக்கி, மோர்ல உப்பு காரம் போட்டு ஊறவெச்சு இருப்பா.
    சிலபேருக்கு அந்த வாசனை பிடிக்காது. பிடிச்சவாளுக்கு மாகாளிக்கிழங்கு ஆஹா, ஓஹோதான்!
    எலுமிச்சங்கா, கிடாரங்கா, நெல்லிக்கா, ஆவக்காய் ஊறுகாய் இதெல்லாம் தயிர்சாதத்துக்கு நாலு தூண்கள்!
    பச்சைப்பசேல்ன்னு வாழை இலைல வெள்ளைவெளேர்ன்னு வெண்ணைக்கட்டியா தயிர்சாதம் ! என்ன அழகு!
    உடம்பு சரியில்லியா? காய்ச்சல் இருந்தாலும், ஜில்லுனு இல்லாம, அம்ஸமா ஒரு தயிர் சாதத்தோட காய்ஞ்ச நார்த்தங்கா இருந்தா போறும்! பரம ஔஷதம்!
    Afterall ஒரு தயிர்சாதத்துக்கு இத்தனை buildup-பான்னு சிலபேருக்கு தோணும். ஆனா அதோட அருமை
    தெரிஞ்சவாளுக்குத்தான் இது புரியும்.

    jayasala42
     
    kaluputti and Rajijb like this.
  2. KeerthDhan

    KeerthDhan New IL'ite

    Messages:
    19
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Hahaha Arumai Jayasala amma
     

Share This Page