1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்.....

    திரைப்படம்:
    மகாதேவி
    பாடியவர்: சந்திரபாபு , ரத்னமாலா
    வரிகள்: டி.என்.ராமையா தாஸ்
    இசை:m.s.v & t.k.r

    தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்
    தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்
    அடி கிங்கினி கிங்கினி கினி கினி சுத்த மாங்கனி மாங்கனி தவமனியே
    தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்

    பாம்பை கூட நம்பிடலாம் அதன் பாசானத்தையும் நம்பிடலாம்
    பாம்பை கூட நம்பிடலாம் அதன் பாசானத்தையும் நம்பிடலாம்
    இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டையேந்தி…
    தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்

    பத்தினி வேஷம் போடாதே சும்ம பகட்டு காட்டி ஆடாதே
    பத்தினி வேஷம் போடாதே சும்ம பகட்டு காட்டி ஆடாதே
    சத்தியமா நீ உத்தமியா
    இந்த கத்தி முனையிலே துள்ளிக்கிட்டு என்னை வெத்து பய போல எண்ணாதே
    இந்த கத்தி முனையிலே துள்ளிக்கிட்டு என்னை வெத்து பய போல எண்ணாதே
    தந்தனா பாட்டு பாடனும் துந்தனா தாளம் போடனும்

    அங்கே இங்கே சுத்தி அலைந்த்திட்டாலும் அம்மனை சேவிக்க வந்திடனும்
    அங்கே இங்கே சுத்தி அலைந்த்திட்டாலும் அம்மனை சேவிக்க வந்திடனும்
    இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியானதும் இந்த சாமிய சேவிக்க வந்திடனும்
    இந்த சாமிய சேவிக்க வந்திடனும் இந்த சாமிய சேவிக்க வந்திடனும்
    அம்மன் தான் உலகில் சிறந்தது…. சாமி தான் சால சிறந்தது
    அம்மன் தான் உலகில் சிறந்தது…. சாமி தான் சால சிறந்தது
    ஆக அம்மன் சாமியும் சம்மதபட்டா அதைவிட சால சிறந்தது யேது

    தந்தனா பாடவும் வேணாம் துந்தனா தாளமும் வேணாம்
    தந்தனா பாடவும் வேணாம் துந்தனா தாளமும் வேணாம்
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை....


    படம் :
    அன்னை
    பாடியவர் : சந்திரபாபு
    பாடல் வரிகள் : கண்ணதாசன்
    இசை : r சுதர்சனம்

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை
    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

    பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
    மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
    பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
    காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

    கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
    அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
    அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
    அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே.....

    படம்: மரகதம்
    இசை: சுப்பையா நாயுடு
    பாடியவர்: சந்திரபாபு, ஜமுனா ராணி

    குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
    பொங்குது தன்னாலே

    போக்கிரி ராஜா போதுமே தாஜா
    பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
    வம்புகள் பண்ணாதே

    சந்துல தானா சிந்துகள் பாடி
    தந்திரம் பண்ணாதே
    நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
    பறிக்க எண்ணாதே

    போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
    குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

    ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
    சலசலக்கையிலே
    என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
    என்னமோ பண்ணுதே

    சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
    உனக்கு பிரியமா
    நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
    எனக்குப் புரியுமா

    போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
    குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

    செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
    சம்மதப்பட்டுக்கனும்
    தாளமும் தட்டி மேளமும் கொட்டி
    தாலியைக் கட்டிக்கனும்

    (குங்குமப் பூவே)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உனக்காக எல்லாம் உனக்காக......

    பாடியவர்:
    சந்திர பாபு
    படம்: புதையல்

    உனக்காக எல்லாம் உனக்காக – இந்த
    உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
    எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ
    எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

    கண்ணுக்குள்ளே வந்து
    கலகம் செய்வதும் எதுக்காக?-மெள்ளக்
    காதுக்குள்ளே உந்தன்
    கருத்தைச் சொல்லிடு முடிவாக (உனக்காக)

    பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?-இல்லே
    பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா?
    துள்ளிவரும் காவேரியில் குளிக்கணுமா?-சொல்லு
    சோறுதண்ணி வேறுஏதுமே இல்லாமெ
    கெடக்கணுமா (உனக்காக)

    இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
    இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்;
    மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் இடி
    மின்னல் மழைபுயலானாலும் துணிஞ்சு
    இறங்கிடுவேன் (உனக்காக)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பிறக்கும் போதும் அழுகின்றாய்.....

    படம்
    : கவலை இல்லாத மனிதன்
    பாடல் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    பாடியவர் : சந்திரபாபு jp
    வரிகள் : கண்ணதாசன்

    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்
    ஒருனாளேனும் கவலை இல்லாமல்
    சிரிக்க மறந்தாய் மானிடனே
    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்

    இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
    முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
    இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
    மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்…இயற்கை சிரிக்கும்..


    அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
    கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
    தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
    தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்…. பெரும் பேரின்பம்..

    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்
    ஒருனாளேனும் கவலை இல்லாமல்
    சிரிக்க மறந்தாய் மானிடனே
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் ஒரு முட்டாளுங்க....

    படம் :
    சகோதரி
    பாடியவர் : சந்திரபாபு jp

    நான் ஒரு முட்டாளுங்க
    ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
    நான் ஒரு முட்டாளுங்க

    ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
    எல்லாம் தெரிஞ்சிருந்து புத்தி சொல்ல வந்தேங்க
    நான் ஒரு முட்டாளுங்க

    கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
    ஏ..ஏ…ஏ.. கைதே …டாய்..
    கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
    முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
    பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
    பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுங்க..
    நான் ஒரு முட்டாளுங்க

    கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
    பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது
    மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லம் நடக்குது
    ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
    நான் ஒரு முட்டாளுங்க

    நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
    நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
    ஆன வரை சொன்னெங்க அடிக்க தானே வந்தாங்க
    அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன் என்னாங்க.
    நான் ஒரு முட்டாளுங்க…
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ippo thaan konjam speed eduthirukku .....
    kandipa..neenga kettu illanu solvenaa....:):):):)
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒண்ணுமே புரியலே உலகத்திலே

    movie : Kumara raja
    music : T r paappa
    singer : Chandra babu jp


    ஒண்ணுமே புரியலே உலகத்திலே
    ஒண்ணுமே புரியலே உலகத்திலே
    என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது
    ஒண்ணுமே புரியலே உலகத்திலே



    கண்ணிலே கண்டதும் கனவாய் போனது
    காதிலே கேட்டதும் கதியாய் ஆனது
    கண்ணிலே கண்டதும் கனவாய் போனது
    காதிலே கேட்டதும் கதியாய் ஆனது
    என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
    என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
    என்னை போலே ஏமாளி எவனும் இல்லே

    ஒண்ணுமே புரியலே உலகத்திலே



    கண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்
    கண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்
    கண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்
    பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
    பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
    என்னை போல ஏமாளி எவனும் இல்லே…

    ஒண்ணுமே புரியலே உலகத்திலே…
     
    Last edited: Aug 22, 2010
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு....

    movie : Kumara raja
    music : T r paappa
    singer : Chandra babu jp

    உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
    உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
    இந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு
    உனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு.. நானே பொறுப்பு
    உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு



    மறைமுகமா பேசுவதும் சரியா இதுவும் சரியா
    அது தான் குறையா ?
    உங்க மனசு இப்படி மாறுவதும் முறையா
    உனக்கென வெறியா?
    மறைமுகமா பேசுவதும் சரியா?



    காதலுக்கும் கண்ணு இல்லே தெரியுமா
    பட்டா காலவதி ஆன உடனே முடியுமா
    கொஞ்சம் கருணை வச்சி மனசிறங்கி கண்ணாளா
    ஆசை கண்ணாள என சொன்னா போதும்


    ..திருமுகத்தை……..



    கலியுக அர்ஜுனனை கண்ணால பாரு
    திரும்பி கண்ணால பாரு
    ? கலங்கிடும் பாரு
    கட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு
    கட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு
    எனக்கு விதி இல்லை வேறு
    ?காதலி நானே நல்ல கவனிச்சி பாரு..
     
    Last edited: Aug 22, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அய்யோ மச்சான் மன்னாரு ஏன் அங்கே போய் நின்னாரு

    movie : Sri valli
    singer : Chandrababu jp

    அய்யோ மச்சான் மன்னாரு ஏன் அங்கே போய் நின்னாரு
    அழகா தான் உதையை வாங்கி தின்னாரு
    அய்யோ மச்சான் மன்னாரு ஏன் அங்கே போய் நின்னாரு
    அழகா தான் உதைய வாங்கி நின்னாரு



    இடுச்ச இடியில் கன்னம் கூட சிவந்து கிடக்குது
    அட ஏண்டா மச்சான்… அட ஏண்டா மச்சான் உனக்கு இப்படி விருந்து நடக்குது
    இடுச்ச இடியில் கன்னம் கூட சிவந்து கிடக்குது
    அட ஏண்டா மச்சான்… அட ஏண்டா மச்சான் உனக்கு இப்படி விருந்து நடக்குது
    அடிச்ச அடியில் கொழுக்கட்டை போல் தடிச்சு கிடக்குது
    அடிச்ச அடியில் கொழுக்கட்டை போல் தடிச்சு கிடக்குது
    ஊரை கெடுத்துட்டு பேரை கெடுத்துட்டு யாரை கெடுத்திட வந்தாய் இங்கே





    அய்யோ மச்சான் மன்னாரு ஏன் அங்கே போய் நின்னாரு
    அழகா தான் உதையை வாங்கி தின்னாரு
    அய்யோ மச்சான் மன்னாரு ஏன் அங்கே போய் நின்னாரு
    அழகா தான் உதைய வாங்கி நின்னாரு
     
    Last edited: Aug 22, 2010

Share This Page