1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே.....

    திரைப்படம் : அதே கண்கள் (1967)
    பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன் & பி.சுஷீலா
    இசை : வேதா


    ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே
    லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
    ரிம்ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
    டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே

    (ஒ..ஒ..)

    கண்ணாடி மேனி முன்னாடி போக
    தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
    பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
    பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
    கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
    நெஞ்சைக் கொஞ்சம் தா..

    (ஒ..ஒ..)

    செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன
    செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல
    காளையர் கேட்கும் கேள்விகளுக்கு ஜடையில் கூறாதோ

    கூறாதோ.. ஜடையில் கூறாதோ.. பதில் ஜடையில் கூறாதோ
    முன்னும் பின்னும் மின்னம் கன்னம் வண்ணம் கொள்ளதோ

    (ஒ..ஒ..)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது.....

    படம்:
    ஊட்டி வரை உறவு
    இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
    பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுஷீலா
    இயற்றியவர்: கண்ணதாசன்

    பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
    உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

    சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்…ஆ ஆ ஆ…
    சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…ஆ ஆ ஆ…
    சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
    சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
    கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
    விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)

    (பூ மாலையில்)

    மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்…ஆ ஆ ஆ…
    மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்…ஆ ஆ ஆ…
    இளமை அழகின் இயற்கை வடிவம்
    இரவைப் பகலாய் அறியும் பருவம்

    (பூ மாலையில்)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே.....

    திரைப்படம்:
    காவல்காரன்
    இசை: m.s.v
    பாடியவர்: t.m.s & பி.சுசீலா

    மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ
    சொல்லிப் போ சொல்லிப் போ
    சொல்வதைக் கண்ணால் சொல்லிப் போ மல்லிகையே
    (மெல்லப் போ)

    ஓடையில் நீரலை மேடையில்
    தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம்
    தொட்டில் கட்டிப் பாடும் பூங்கொடி
    பள்ளி கொள்ளத் தோன்றும் பைங்கிளி
    அந்தி மாலையில் இந்த சோலையே சொர்க்கமாகுமோ

    மெல்லத் தான் மெல்லத் தான் மயங்கி நடந்தாள் மாது
    சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள்
    தூதுஇப்பொழுதே..
    (மெல்லப் போ)

    செம்மாங்கனி புன்னகை நல்லோவியம் -
    செவ்விதழ்தேன் மாதுளை பொன்மொழி சொல்லோவியம்
    சிந்து நடை போடும் பாற்குடம்
    சின்ன விழிப் பார்வை பூச்சரம்
    என்ன மேனியோ இன்னும் பாடவோ
    தமிழ் தேடவோ
    (மெல்லப் போ)

    பொன்னெழில் தாமரைப் பூவினாள் -
    மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினாள்
    தொட்டில் கட்டிப் பாடும் பூங்குயில்
    முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில்
    அந்தப் பாடலில் அன்பு ஊடலில் மங்கை மாறினாள்
    (மெல்ல்ப் போ)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காது கொடுத்து கேட்டேன்....

    திரைப்படம்:
    காவல்காரன்
    இசை: m.s.v
    பாடியவர்: t.m.s

    காது கொடுத்து கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்
    காது கொடுத்து கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்
    இனி கணவனுக்கு கிட்டாது
    அவள் குழந்தைக்கு தான்
    இச் இச் இச் இச்
    இனி கணவனுக்கு கிட்டாது
    அவள் குழந்தைக்கு தான் முத்தம்
    காது கொடுத்து கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்

    கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
    கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
    கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
    கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
    இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
    உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
    (காது கொடுத்து கேட்டேன் )

    ஓராம் மாசம் உடல் அது தளரும்
    ஈராம் மாசம் இடை அது மெலியும்
    மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
    நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
    மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
    மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
    சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
    சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
    ஆரீ ரா ரோ …ஆரீ ரா ரோ .. …
    (காது கொடுத்து கேட்டேன்)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அன்னையைப் போலொரு தெய்வமில்லை....

    படம் :
    அன்னையின் ஆணை (1958)
    இசை : s.m.சுப்பையா நாயுடு
    பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
    பாடலாசிரியர் : கவி. கா.மு.ஷெரீப்

    பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
    பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
    வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
    மேதினியில் நாம் வாழச் செய்தாள்

    அன்னையைப் போலொரு தெய்வமில்லை – அவள்
    அடிதொழ மறப்பவர் மனிதரில்லை – மண்ணில் மனிதரில்லை
    மண்ணில் மனிதரில்லை
    அன்னையைப் போலொரு தெய்வமில்லை

    துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே
    துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
    சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
    சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

    (அன்னையைப் போலொரு தெய்வமில்லை)

    நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்
    நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு
    நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
    மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே
    மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்

    அன்னையைப் போலொரு தெய்வமில்லை – அவள்
    அடிதொழ மறப்பவர் மனிதரில்லை – மண்ணில் மனிதரில்லை
    மண்ணில் மனிதரில்லை
    அன்னையைப் போலொரு தெய்வமில்லை
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!.....

    திரைப்படம்
    : பதிபக்தி (1958)
    இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    பாடியவர்: t.m.s & ஜிக்கி
    வரிகள்: மக்கள் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பெண் : கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
    கொந்தளிக்கும் நெஞ்சிலே,
    கொண்டிருக்கும் அன்பிலே,
    அக்கறை காட்டினாத் தேவலே

    ஆண் : குப்பையைக் கிளறிவிடும் கோழியே
    கொண்டிருக்கும் அன்பிலே,
    ரெண்டும் உண்டு என்று நீ
    கண்டதும் இல்லையோ வாழ்விலே!
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    பெண் : காலம் நேரம் அறிந்து உலகை
    தட்டி எழுப்பிடும் சேவலே!
    காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
    காரணம் என்ன சேவலே?

    ஆண் : கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
    குற்றம் ஏதும் நடந்திடவில்லை
    கொண்ட நினைவுகள் குலைந்து போனபின்
    இன்பம் ஏது கோழியே?-அந்த
    எண்ணம் தவறு கோழியே
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!

    பெண் : நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
    நம்பிய பெண்ணின் நிலையை அறியா
    ஞானியை நீயும் பாரு-இது
    ஞாயந்தானா கேளு?

    ஆண் : நம்பியிருப்பதும் நட்பை வளர்ப்பதும்
    அன்பு-மெய் அன்பு! அந்த
    அன்பின் கருத்தை விதவிதமாக
    அர்த்தம் செய்வது வம்பு
    கொக்கரக்கோ கொக்கரக்கோ
    கொக்கரக்கோ-கோ-கோ!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நதி எங்கே போகிறது....

    திரைப்படம்: இருவர் உள்ளம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    ஆண்டு: 1963

    நதி எங்கே போகிறது கடலைத் தேடி
    நாளெங்கே போகிறது இரவைத் தேடி
    நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
    நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
    நதி எங்கே போகிறது கடலைத் தேடி
    நாளெங்கே போகிறது இரவைத் தேடி
    நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
    நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
    நதி எங்கே போகிறது கடலைத் தேடி

    ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
    மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
    ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
    மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
    என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
    என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
    இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று

    நதி எங்கே போகிறது கடலைத் தேடி

    பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்
    பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்
    பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்
    பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்
    இளமைக்குள் ஆடிவரும் இனிமை கண்டு
    இளமைக்குள் ஆடிவரும் இனிமை கண்டு
    இன்றே நாம் காணுவது இரண்டில் ஒன்று

    நதி எங்கே போகிறது கடலைத் தேடி
    நாளெங்கே போகிறது இரவைத் தேடி
    நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
    நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
    நதி எங்கே போகிறது கடலைத் தேடி
    ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
     
    Last edited: Aug 22, 2010
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எல்லோரும் கொண்டாடுவோம்....

    திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், நாகூர் ஹனிபா
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
    வரிகள் : கண்ணதாசன்


    எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்

    அல்லாவின் பெயரை சொல்லி
    நல்லோர்கள் வாழ்வை எண்ணி (2)

    கல்லாகப் படுத்திருந்து
    கழிந்தவர் யாருமில்லே (2)
    கைகால்கள் ஓய்ந்த பின்னே
    துடிப்பது லாபம் இல்லே (2)
    வந்ததை வரவில் வைப்போம்
    செய்வதை செலவில் வைப்போம் (2)
    இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்

    (எல்லோரும்)

    நூறு வகைப் பறவை வரும்
    கோடி வகைப் பூ மலரும்
    ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
    ஆ..

    கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
    கனவுக்கு உருவமில்லே (2)
    கடலுக்குள் பிரிவும் இல்லை
    கடவுளில் பேதமில்லை
    முதலுக்கு அன்னையென்போம்
    முடிவுக்கு தந்தையென்போம்
    மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம்

    (எல்லோரும்)

    ஆடையின்றி பிறந்தோமே
    ஆசையின்றி பிறந்தோமா ?
    ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?
    ஓ..

    படைத்தவன் சேர்த்து தந்தான்
    மதத்தவன் பிரித்து வைத்தான் (2)
    எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
    கொடுத்தவன் தெருவில் நின்றான் (2)
    எடுத்தவன் கொடுக்க வைப்போம்
    கொடுத்தவன் எடுக்க வைப்போம் (2)
    இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    போனால் போகட்டும் போடா ......

    திரைப்படம்:
    பாலும் பழமும் (1961)
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா – இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா

    ஒஹோஹோ… ஒஹோஹோ…

    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
    ஜனனம் என்பது வரவாகும் – அதில்
    மரணம் என்பது செலவாகும்

    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா

    இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காது – இது
    கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா – இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா

    ஒஹோஹோ… ஒஹோஹோ…

    எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
    இருந்தால் அவளைத் தன்னந்தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
    நாடகமாடும் கலைஞடா
    போனால் போகட்டும் போடா

    போனால் போகட்டும் போடா – இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்....

    திரைப்படம்:
    பாலே பாண்டியா (1962)
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
    வரிகள் : கண்ணதாசன்


    ஆ. ஆ.. ஆ..
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் – அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் – அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ…

    வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
    கருணை கருணை கருணை கருணை
    வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
    வ்டிவாகி முடிவற்ற முதலான இறைவா

    நீயே உனக்கு என்றும் நிகரானவன் – அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ…

    துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா – வெறும்
    தூபத்தின் உன் இதயம் மயங்காதையா
    துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா – வெறும்
    தூபத்தின் உன் இதயம் மயங்காதையா
    விதி கூட உன் வடிவை நெருங்காதையா
    விதி கூட உன் வடிவை நெருங்காதையா
    வினை வென்ற மனம் கொண்ட இனம்
    கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர்

    நீயே உனக்கு என்றும் நிகரானவன் – அந்தி
    நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ…
     

Share This Page