1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ....

    படம் :
    இதயக் கனி
    குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா
    வரிகள் : புலமைபித்தன்
    இசை : எம்.எஸ்.வி


    இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
    என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
    என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
    இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
    உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
    உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
    (இன்பமே)

    சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
    சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
    தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
    ஓரிரு வாழைகள் தாங்கும்
    தேவதை போல் எழில் மேவிட நீ வர
    நாளும் என் மனம் ஏங்கும்
    (இன்பமே)

    பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
    கைவிரல் ஓவியம் காண
    காலையில் பூமுகம் நாண
    பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
    போரிடும் மேனிகள் துள்ள
    புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
    பேசும் மந்திரம் என்ன
    (இன்பமே)

    மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
    மாமலை மேல் விளையாடும்
    மார்பினில் பூந்துகிலாடும்
    மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
    மேகமும் வாழ்த்திசை பாடும்
    மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
    வான வீதியில் ஆடும்
    (இன்பமே)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்னை தெரியுமா என்னை தெரியுமா....

    படம்: குடியிருந்த கோயில்
    இசை: எம்.எஸ்.வி
    பாடியவர்: டி.எம்.எஸ்

    என்னை தெரியுமா என்னை தெரியுமா -
    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா ஆஆஆ ……..
    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
    கவிஞன் என்னை தெரியுமா ஆஆ…
    என்னை தெரியுமா -
    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா
    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
    கவிஞன் என்னை தெரியுமா
    ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
    உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்

    நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்
    நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்
    ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
    வாழ்வை சோலை ஆக்கலாம்
    இந்த காலம் உதவி செய்ய -
    இங்கு யாரும் உறவு கொள்ள
    அந்த உறவு கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
    இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
    இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்

    என்னை தெரியுமா -
    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா
    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்
    என்னை தெரியுமா
    ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
    உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்

    ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே
    இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
    வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
    காதல் அமுதை பொழியலாம்
    அவள் அருகில் வந்து பழக -
    நான் மெழுகு போல உருக
    இதழ் பிழிய பிழிய தேனை எடுத்து எனக்கு தந்தாளே
    கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்
    கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்

    என்னை தெரியுமா -
    நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
    என்னை தெரியுமா
    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்
    என்னை தெரியுமா
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் என்ன சொல்லிவிட்டேன்


    திரைப்படம்: பலே பாண்டியா
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    ஆண்டு: 1962


    நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
    நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
    உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
    உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
    என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

    செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி – கொண்ட
    மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
    செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி – கொண்ட
    மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
    சுகம் ஊறி விட்டதடி முகம் மாறி விட்டதடி
    சுகம் ஊறி விட்டதடி முகம் மாறி விட்டதடி – நெஞ்சில்
    அன்றில்லாத நாணம் இன்று எங்கு வந்ததடி? என்ன? என்ன? என்ன?

    நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
    உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
    என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

    மலர்ப் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் – உன்
    நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ?
    மலர்ப் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் – உன்
    நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ? – கண்டு
    ஏங்குகின்றாயோ நின்று தூங்குகின்றாயோ? – நாம்
    பழகப் போகும் அழகையெல்லாம் படம் பிடித்தாயோ? என்ன? என்ன? என்ன?

    நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
    உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
    என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே....

    திரைப்படம்:
    ஆனந்த ஜோதி
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன், p. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: m.s. விஸ்வநாதன், b. ராமமூர்த்தி
    ஆண்டு: 1963


    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே – உம்மைப்
    புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே – உம்மைப்
    புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

    பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
    பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே – உன்னைப்
    புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
    பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே – உம்மைப்
    புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

    நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
    நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் – இன்று
    நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
    நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
    வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
    காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே – உன்னைப்
    புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

    சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
    சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே – அது
    தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே – அது
    தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
    நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
    நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
    புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மானல்லவோ கண்கள் தந்தது......
    திரைப் படம்: நீதிக்குப் பின் பாசம்
    பாடியவர்கள்: பி.சுசீலா – டி.எம்.சௌந்திர ராஜன்
    இசை: கே.வி.மகாதேவன்
    வரிகள்: கண்ணதாசன்


    டி.எம்.எஸ்: மானல்லவோ கண்கள் தந்தது
    சுசீலா: ஆஹா
    டி.எம்.எஸ்: மயில் அல்லவோ சாயல் தந்தது
    சுசீலா: ஓஹோ
    டி.எம்.எஸ்: தேனல்லவோ இதழைத் தந்தது
    சுசீலா: ம்ஹும்
    டி.எம்.எஸ்: சிலையல்லவோ அழகைத் தந்தது
    சுசீலா: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது

    சுசீலா: தேக்கு மரம் உடலைத் தந்தது
    டி.எம்.எஸ்: ஆஹா
    சுசீலா: சின்ன யானை நடையைத் தந்தது
    டி.எம்.எஸ்: ஓஹோ
    சுசீலா: பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    டி.எம்.எஸ்: ம்ஹும்
    சுசீலா: பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது

    டி.எம்.எஸ்: இடையழகு மயக்கம் தந்தது
    இசையழகு மொழியில் வந்தது
    நடையழகு
    சுசீலா: ஆ ஆ ஆ
    ஓஓஓ
    டி.எம்.எஸ்: நடையழகு நடனம் ஆனது
    நாலழகும் என்னை வென்றது

    சுசீலா: தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    டி.எம்.எஸ்: தேனல்லவோ இதழைத் தந்தது
    சிலையல்லவோ அழகைத் தந்தது

    சுசீலா: வண்ண மலர் மாலை கொண்டு
    வடிவழகைத் தேடி வந்தேன்
    வண்ண மலர் மாலை கொண்டு
    வடிவழகைத் தேடி வந்தேன்
    வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
    வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
    இனி வரவும் செலவும் உன்னதென்று என்னைத் தந்தேன்

    டி.எம்.எஸ்: மானல்லவோ கண்கள் தந்தது
    சுசீலா: ஆஹா
    டி.எம்.எஸ்: மயில் அல்லவோ சாயல் தந்தது
    சுசீலா: ஓஹோ
    டி.எம்.எஸ்: தேனல்லவோ இதழைத் தந்தது
    சுசீலா: ம்ஹும்
    டி.எம்.எஸ்: சிலையல்லவோ அழகைத் தந்தது
    சுசீலா: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    சுசீலா: தேக்கு மரம் உடலைத் தந்தது
    டி.எம்.எஸ்: ஆஹா
    சுசீலா: சின்ன யானை நடையைத் தந்தது
    டி.எம்.எஸ்: ஓஹோ
    சுசீலா: பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    டி.எம்.எஸ்: ம்ஹும்
    சுசீலா: பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பனி இல்லாத மார்கழியா.......

    திரைப் படம்: ஆனந்த ஜோதி
    பாடியவர்கள்: பி.சுசீலா, டி.எம்.எஸ்
    இசை: எம்.எஸ்.வி – டி.கே.ஆர்
    வரிகள்: கண்ணதாசன்

    பனி இல்லாத மார்கழியா
    படை இல்லாத மன்னவரா
    இனிப்பில்லாத முக்கனியா
    இசையில்லாத முத்தமிழா
    பனி இல்லாத மார்கழியா
    படை இல்லாத மன்னவரா

    அழகில்லாத ஓவியமா
    ஆசையில்லாத பெண் மனமா
    அழகில்லாத ஓவியமா
    ஆசையில்லாத பெண் மனமா
    மழையில்லாத மானிலமா
    மலர் இல்லாத பூங்கொடியா(2)
    (பனி இல்லாத )

    தலைவனில்லாத காவியமா
    தலைவி இல்லாத காரியமா
    கலை இல்லாத நாடகமா
    காதல் இல்லாத வாலிபமா(2)

    பனி இல்லாத மார்கழியா
    படை இல்லாத மன்னவனா

    நிலையில்லாமல் ஓடுவதும்
    நினைவில்லாமல் பாடுவதும்
    பகைவர் போலே பேசுவதும்
    பருவம் செய்யும் கதையல்லவா(2)
    (பனி இல்லாத)
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஏட்டில் எழுதி வைத்தேன்.....


    திரைப்படம்: வானம்பாடி
    பாடியவர்: T.M.S & L.R Eeshwari
    இசை: K.V.M
    வரிகள்: கண்ணதாசன்

    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
    ஓ..ஓ…
    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
    ஆ..ஆ..ஹ ஹ ஹ ஹா..ஆ..

    திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று..
    திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று
    விரும்பி நானும் வந்தேனடா… இறைவா
    விண்வெளியில் மறைத்தாயடா
    காடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன்
    தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா
    ஆட்டத்தை முடித்தாயடா

    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா

    பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்..
    பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்
    தர்மத்தின் தலைவனல்லவா இறைவா
    சாகச கலைஞனல்லவா
    ஏட்டில் எழுதி வைத்தேன்
    எழுதியதை சொல்லி வைத்தேன்
    கேட்டவளை காணோமடா இறைவா
    கூட்டிச்சென்ற இடமேதடா
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஞாயிறு என்பது கண்ணாக....

    படம்:
    காக்கும் கரங்கள்.
    இசை: k.v.மகாதேவன்.
    வரிகள்: கவியரசு கண்ணதாசன்.
    குரல்: டி.எம்.செளந்தர்ராஜன் & பி. சுசீலா

    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவை பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக

    நேற்றைய பொழுது கண்ணோடு
    இன்றைய பொழுது கையோடு
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு

    ஊருக்கு துணையாய் நான் இருக்க
    எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
    உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
    மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

    (ஞாயிறு என்பது கண்ணாக…)

    முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
    உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
    பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
    பேசிய படியே கொடுக்க வந்தேன்

    (ஞாயிறு என்பது கண்ணாக…)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்னருமைக் காதலிக்கு......
    திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    ஆண்டு: 1960

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
    இளையவளா முத்தவளா
    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
    காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
    கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
    வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
    வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
    கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா முத்தவளா
    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அவளுக்கென்ன அழகிய முகம்.....

    படம்:
    சர்வர் சுந்தரம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    பாடல்: வாலி
    பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி

    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

    ஹோ.. அழகு ஒரு மேஜிக் டச்
    ஹோ… ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    வா வா என்பதை விழியில் சொன்னாள்
    மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

    (அவளுக்கென்ன)

    அன்பு காதலன் வந்தான் காற்றோடு
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
    அவன் அள்ளி எடுத்தான் கையோடு
    அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு

    (அவளுக்கென்ன)

    சிற்றிடை என்பது – முன்னழகு
    சிறு நடை என்பது – பின்னழகு
    பூவில் பிறந்தது – கண்ணழகு
    பொன்னில் விளைந்தது – பெண்ணழகு

    (அவளுக்கென்ன)
     

Share This Page