1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்: உலகம் சுற்றிய வாலிபன்
    இசை: எம்.எஸ்.வி
    பாடியவர்: டி.எம்.எஸ் & பி.சுசீலா
    வரிகள்: வாலி


    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ
    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?
    பொன்னின் நிறம் பிள்ளை மனம்
    வள்ளல் குணம் யாரோ
    மன்னன் என்னும் பேரில் வரும்
    தேவன் மகன் நீயோ

    (பொன்னின்)


    தத்தை போலத் தாவும் பாவை
    பாதம் நோகும் என்று
    மெத்தை போல பூவைத் தூவும்
    வாடைக் காற்றும் உண்டு
    வண்ணச்சோலை வானம் பூமி
    யாவும் இன்பம் இங்கு
    இந்தக் கோலம் நாளும் காண
    நானும் நீயும் பங்கு
    கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
    நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ

    (பச்சை)


    பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
    நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
    சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
    கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
    பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
    கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா



    (பச்சை)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா.....

    திரைப்படம் : இரவும் பகலும்
    இசை : T r பாப்பா
    பாடியவர் : டி.எம்.எஸ்

    வரிகள்: ஆலங்குடி சோமு

    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    காதல் என்பது தேன் கூடு
    அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
    காதல் என்பது தேன் கூடு
    அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
    காலம் நினைத்தால் கைகூடும்
    அது கனவாய் போனால் மனம் வாடும்
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உயிருக்கு உருவம் கிடையாது
    அந்த உயிரின்றி எதுவும் நடவாது
    உயிருக்கு உருவம் கிடையாது
    அந்த உயிரின்றி எதுவும் நடவாது
    உருவத்தில் உண்மை தெரியாது
    என்றும் உலகத்தில் நேர்மை அழியாது
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    திரைப்படம்: வல்லவன் ஒருவன்
    பாடியவர்: பி.சுசீலா & டி.எம்.சௌந்தராஜன்
    வரிகள்: கண்ணதாசன்

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
    நான் கேட்டதை தருவாய் இன்றாவது


    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
    இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
    நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது


    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது


    மாலைக்கு மாலை காதலர் பேசும்
    வார்த்தைகள் பேசிட வேண்டும்
    பேசிடும் போதே…கைகளினாலே
    வேடிக்கை செய்யவும் வேண்டும்

    அதில் ஆடி வரும்…இன்பம் ஓடி வரும்
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது


    காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
    பாட்டுக்கு யார் துணை வேண்டும்
    தோட்டத்து பூவை மார்புக்கு மேலே
    சூடிட யார் சொல்ல வேண்டும்
    இங்கு யாருமில்லை…இனி நேரமில்லை
    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
    இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
    நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது

    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது


    செண்பகப் பூவில் வண்டு விழுந்து
    தேன் குடித்தாடுதல் போலே
    சேர்ப்பதை சேர்த்து…பார்ப்பதை பார்த்து
    வாழ்ந்திட துடிப்பதனாலே
    இனி பிரிவதில்லை…உன்னை விடுவதில்லை
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
    நான் கேட்டதை தருவாய் இன்றாவது
    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது

    இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
    நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கூந்தல் கருப்பு ஆஹா...

    திரைப் படம் : பரிசு
    பாடியவர் : பி.சுசீலா
    , டி.எம்.சௌந்திர ராஜன்
    வரிகள் : கண்ணதாசன்
    இசை : கே.வி.மகாதேவன்


    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ !


    இன்றுமுதல் நீ என்னுரிமை
    என் இதயத்து மாளிகை உன்னுரிமை
    ஒன்றிய உள்ளம் வாழிய என்று
    சொன்னது கோவில் மணியோசை


    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ


    சந்தன மேடை ! மேடை மல்லிகை வாடை !
    வாடை பொங்கிடும் அழகே மங்களம் மங்களம்
    சங்கிலி தங்கம் ! தங்கம் தந்தவர் சிங்கம் !
    சிங்கம் தங்கிடும் கையில் மங்களம் மங்களம்


    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ


    என்ன வந்தாலும் எது நடந்தாலும்
    இணைந்திருப்பேன் நான் உன்னுடனே
    துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும்
    தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே
    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
    கூந்தல் கருப்பு ! ஆஹா
    குங்குமம் சிவப்பு ! ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ
     
    Last edited: Aug 22, 2010
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது

    திரைப் படம் : பரிசு
    பாடியவர் : பி.சுசீலா
    , டி.எம்.சௌந்திர ராஜன்
    வரிகள் : கண்ணதாசன்
    இசை : கே.வி.மகாதேவன்

    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

    கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
    அந்த காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
    கண்ணால் அடித்த அடி வலிக்குதடீ நீ
    கண்ணால் அடித்த அடி வலிக்குதடீ
    அந்த காயத்திலே மனது துடிக்குதடீ

    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

    தாயார் அணைத்திருந்த* ம*ய*க்க*முண்டு
    நான் த*ந்தை ம*டியிருந்த* ப*ழ*க்க*முண்டு
    நீ யாரோ நான் யாரோ தெரியாது
    இன்று நேர்ந்த*து என்ன*வென்று புரியாது

    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

    வ*ர* வ*ர* இத*ய*ங்க*ள் ம*ல*ர்ந்து வ*ரும்
    வ*ள*மான* எண்ண*ங்க*ள் மித*ந்து வ*ரும்
    ப*ல* ப*ல* ஆசைக*ள் நிறைந்து வரும்
    ப*ருவ*த்தின் மேன்மை புரிந்து விடும்
    ஒருவருள் ஒருவ*ரை ஒன்றாக்கி வைத்த*து
    விட்ட* குறை தொட்ட* குறை அஞ்சு ரூபா
    இனி வேக*த்தில் வ*ள*ரும் அஞ்சு ரூபா

    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு
    ரூபா
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு....

    திரைப்படம்: சாந்தி
    பாடல்: யார் அந்த நிலவு
    குரல்: டி எம் சௌந்தரராஜன்
    இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    வரிகள்: கண்ணதாசன்

    யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
    யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
    காலம் செய்த கோலம் நான் வந்த வரவு (யார்)


    மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
    மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
    தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
    உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
    ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ
    (யார்)


    ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே
    அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
    தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
    இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
    ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…
    (யார்)
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை....
    படம் : படகோட்டி
    இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
    வரிகள் : வாலி
    குரல் : T.m.சௌந்தரராஜன்


    உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
    உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
    உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
    ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..


    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
    தண்ணீரில் பிழைக்க வைத்தன்
    கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
    கண்ணீரில் குளிக்க வைத்தான்


    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
    தண்ணீரில் பிழைக்க வைத்தன்
    கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
    கண்ணீரில் குளிக்க வைத்தான்


    கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
    உறவை கொடுத்தவர் அங்கே
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல் தான் எங்கள் வீடு
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல் தான் எங்கள் வீடு
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
    இதுதான் எங்கள் வாழ்க்கை
    இதுதான் எங்கள் வாழ்க்கை


    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
    தண்ணீரில் பிழைக்க வைத்தன்
    கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
    கண்ணீரில் குளிக்க வைத்தான்
    தரைமேல் பிறக்க வைத்தான்


    கடல் நீர் நடுவே பயணம் போனால்
    குடி நீர் தருபவர் யாரோ
    தனியாய் வந்தால் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்
    ஊரார் நினைப்பது சுலபம்


    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
    தண்ணீரில் பிழைக்க வைத்தன்
    கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
    கண்ணீரில் குளிக்க வைத்தான்
    தரைமேல் பிறக்க வைத்தான்
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன....

    திரைப் படம்: தேடி வந்த மாப்பிளை
    இசை: எம்.எஸ்.வி
    பாடியவர்: பி.சுசீலா & டி.எம்.சௌந்தர ராஜன்
    வரிகள்: கண்ணதாசன்

    மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
    மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
    மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
    மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
    ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
    ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
    கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
    கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
    மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன… என்ன
    மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

    மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
    கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
    இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
    கண்ணோட்டம் என் தோட்டம்
    மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
    மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

    தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட
    மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக
    புது மழை போலே நீரோட
    அதிசைய நதியில் நானாட
    நீயாட …. ஆஹா .. தேனோட…
    மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
    மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
    ஓ..ஓ..ஓ…… ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்....

    படம்: தெய்வத்தாய்
    பாடல்: ஒரு பெண்ணைப்பார்த்து..
    இசை: எம்.எஸ்.வி
    பாடியவர்: டி.எம் செளந்தராஜன்
    வரிகள்: கண்ணதாசன்


    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
    நிலவில் குளிரில்லை
    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
    மலரில் ஒளியில்லை (2)
    அவளில்லாமல் நானில்லை
    நானில்லாமல் அவளில்லை(2)


    ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல


    கொடி மின்னல் போல் ஒரு பார்வை
    மானோ மீனோ என்றிருந்தேன்
    குயிலோசை போல் ஒரு வார்த்தை
    குழலோ யாழோ என்றிருந்தேன்
    நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
    தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2)
    இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
    நாளை என் செய்வாளோ

    ………..ஒரு பெண்ணைப் ………….


    கலை அன்னம் போலவள் தோற்றம்
    இடையோ இடையில் கிடையாது
    சிலை வண்ணம் போலவள் தேகம்
    இதழில் மதுவோ குறையாது
    என்னோடு தன்னை சேர்த்தாள்…
    தன்னோடு என்னை சேர்த்தாள் (2)
    இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
    நாளை என் செய்வாளோ
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தொட்டால் பூ மலரும்...

    திரைப் படம்: படகோட்டி
    பாடியவர்கள்: பி.சுசிலா, டி.எம்.சௌந்திர ராஜன்
    இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
    வரிகள்: வாலி

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்
    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்

    கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
    நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
    ஹோய் ஆசை விடுவதில்லை

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்

    இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
    இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
    எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
    பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ…

    பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
    பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
    வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
    சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்

    பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
    பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
    அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
    ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா…
     

Share This Page