1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழ் எனது தாய் மொழி

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Nov 14, 2011.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    தமிழ் எனது தாய் மொழி



    தமிழ் எனது தாய் மொழி.ஆங்கிலம் எனது தத்துமொழி (foster language).ஹிந்தி நான் தேர்ந்தெடுத்துப் படித்த விருப்ப மொழி.இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது நான் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளேனா என்பது கேள்விக்குரிய விஷயம். ஹி ஹி ஹி...........

    தாய் மொழிப்பற்று ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டியதுதான் ஆனால் அதுவே வெறியாக மாறிவிடக்கூடாது. ஒவ்வொருவரும் அவரவருடைய குழந்தைகளுக்குத் தாய் மொழியைப் பயிற்றுவிக்க வேண்டியது அவசியமாகும் தாய் மொழியைப் புறக்கணிப்பது தாயைப் புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.

    தமிழுக்கு இனிமை நல்குவது வேறு எந்த மொழியிலும் இல்லாத 'ழ்' என்ற எழுத்தேயாகும். தமிழுக்கு இனிமை என்றே பொருள். நமது இனிய தமிழைப் புகழ்ந்து பாரதிதாசன் இயற்றிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற பாடலைப் பஞ்சவர்ணக்கிளி என்ற படத்தில் பி. சுசீலா தம் தேனினும் இனிய குரலில் பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத தமிழரும் உளரோ? பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சை அள்ளுவதாக உள்ளன.

    பாடலை நீங்களும் படித்து ரசியுங்கள். கூகுள் தேடுதலின் மூலம் கேட்டும் ரசிக்கலாம்.

    உங்களுக்காக இதோ அந்தப் பாடல்:

    தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

    தமிழுக்கு நிலவென்று பேர்- இன்பத்
    தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்-இன்பத்
    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்-இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர் (தமிழுக்கும்)

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்-இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்.

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்- இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்-இன்பத்
    தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ


    பாடலை ரசித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்


    மீண்டும் இங்கு வருவேன்
     
    2 people like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Pushpavalli ma,
    Padithen, ketten, rasithen..Bharadhidasan paadal varigalai..thamizhin patriotic song enre idhai kooralam. :thumbsup: virumbhi, paadum paadalum kooda...inru muzhuvadhum indha paadalai thaan munumunukka poren :biggrin2:

    "Thaayum mozhiyum kangal..indha paadal varigalum ninaivukku vandhadhu.."sangagale naalaiya thalaivargale paadalil" :)

    Yendha patrume veriyaaga maarum podhu..adhan vilaivugal..bayangaramaanavai dhan.:shake:

    Meendum varuga :hiya:

    Sriniketan
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    mikka nanri!
    patiththu,kettu, rasiththamaikku.
    mika sariyaka sonnirkal. entha oru parrumee veriyaaka maarinaal vilaivu viparithamakivitum.

    Love,
    PS

     
  4. Raniz

    Raniz Platinum IL'ite

    Messages:
    570
    Likes Received:
    1,195
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Hi Pushpa

    "Thamizh enathu thai mozhi" It was really wonderful. i too love tamizh mozhi and of course that lovely song too. Bharathiar and Bharathidasan like people are our pride. அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    Rani
     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Rani,
    Sorry for coming in so late here. Thanks for the link you have given. It is very nice.
    Love,
    PS
     

Share This Page