1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழ் இலக்கியத்தில் சில காதல் காட்சிகள்-2

Discussion in 'Posts in Regional Languages' started by mithila kannan, Oct 17, 2008.

  1. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    தமிழ் இலக்கியத்தில் சில காதல் காட்சிகள்
    காதல் வயப்பட்ட நங்கைக்கு நாயகனின் பெயரைக்க் கேட்பத்லேதான் எத்தனை இன்பம்?நாயகனின் பெயரைக் கேட்டமாத்திரத்திலேயே அவளது உள்ளம் குளிர்கிறது,உயிர் விம்முகிறது.
    "முன்னம் அவனுடை நாமம் கேட்டாள்
    மூர்த்தி அவனிரிக்கும் வண்ணன் கேட்டாள்
    பின்னர் அவனுடை ஆரூர் கேட்டாள்
    பெம்மான் அவனுக்கே பிட்சியானால்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
    தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே".
    என்கிறது ஊர் இலக்கியப் பாடல்.இன்னமும் கூட நீங்கள் கவனித்திருபீர்களேயானால் கிராம மங்கையர் தங்கள் கணவனின் பெயரை சொல்ல வெட்கப் படுவார்கள்.கணவனின் பெயருக்கு அத்தனை மகிமை.
    "சிறையாரும் மடக் கிளியே இங்கே வா தேனோடு பால் முறையாலே உண்ணத்தருவேன்
    மொய் பவளோத்தோடு தரளம் துறையாரும் கடத் தோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே"என்று நாயகி பாவத்தில் எழுதுகிறார் ஒரு நாயன்மார்.
    இன்னுமொரு காதல் வயப் பட்ட மங்கை காதலனைக் காணாமல் தவித்து மனம்,உடல்,ஆவி.வாட அவள் இளைத்து துரும்பாகி விட்டாள்.
    "நீ அலையே சிறுபூவாய்
    நெடுமாலாற்கு என் தூதாய்
    நோய் எனது நுவலென்ன நுவலாதே இருந்தோழிந்தாய்
    சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான்
    இனி உனது வாயருகில் இன்னடிசல் வைப்பாரை நாடாயே" என்று பச்சாதாபத்தில் பிதற்றுகிறாள் .என் நாயகனைக் காணாமல் நான் இளைத்து துரும்பானேன்.உன் வாயருகில் அன்னம் வைக்கவும் எனக்கு திறனில்லை.அதற்க்கு காரணமும் நீதான்.நெடுமாலிடம் எனது அன்பை த்தூதாக சொல்லவும் மறந்தாய்.நான் வாடுகிறேன்.இனி உனக்கு சரியான வேளையில் அன்னம் கொடுக்கும் இடத்தை நாடிப்போ" என்று ஆற்றாமையுடன் புலம்புகிறாள் இபபேதை.
    சரிதான். காதலினால் அவஸ்த்தைபடுபவர்கள் பெண்கள் மட்டும்தானா ஆண்கள் அவஸ்தைப் படுவதில்லையா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
    "குறிப்பிட்ட நேரத்தில் உம்மைக் காண தோழியுடன் வருவேன்" என்ற காதலி சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை.அவளுக்காக காத்திருந்த வாடிய மனதுடன் பாடுகிறான் தலைவன்.
    "தீர்த்தக் கரையினிலே
    அன்றொருநாள் செண்பகத் தோட்டத்திலே
    காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலேபாங்கியரோதேன்று சொன்னாய்
    வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
    பார்தவிடத்திலேள்ளாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி"
    என்று அவன் ஏங்க நம் மனமும் அவனுக்காக ஏங்குகிறது அல்லவா?
    "மோனத்திருக்குதடி இவ்வுலகம் மூழ்கி துயிலினிலே
    நான் மட்டும் தனிமை என்றோர் நரகத் துழலுவதோ?"என்று அவன் விம்மும்போது நம் மனமும் அவனோடு விம்முகிறது அல்லவா?
    காதலுக்கு சுவை சேர்பது காதலர் நடுவே ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள் அதாவது ஊடல்கள் தான்.
    ஊடுதல் காமத்திற்கின்பம்" என்கிறார் திருவள்ளுவர்.
    இந்த ஊடல் காட்சிகளை வெகு அழகாக சித்தரிக்கிரடு நமது இலக்கியம்.
    நாயகன் பரத்தையர் வீடு சென்று அங்கு இரவில் தங்குகிறான்.மறுநாள் யாழ் மீட்டும் பாணன் தலைவியின் வீட்டுக்கு வருகிறான்,
    நாயகன் மீது கோபமாயிருக்கும் தலைவியின் சினம் பாணன் மீது பாய்கிரடு.
    "மீட்டிவிடும் பாண, நீ எங்கை வீட்டிலிருந்த நேற்று விடிவளவும் பாட
    காட்டிலழும் பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார்
    நாய் என்றால் தங்கை நீ என்றேன் நான்"என்கிறாள்.இதற்க்கு விளக்கமே தேவை இல்லை அல்லவா?
    கவனுக்குன் மனைவிக்கும் நடுவில் ஊடல்
    "நீர்ரீராடின் கண்ணும் சிவக்கும்
    ஆர்தோர் வாயில் தேனும் புளிக்கும்.
    தனந்தனையயின் என் இல்லுயித்துக்க் கொடுமோ "என்கிறாள் மங்கை.
    தொடர்ந்து சிக்ல்லேன்ற நீரில் குளித்தல் கண் சிவந்து போகும்.
    தேநேயனாலும் அளவுக்கு மீறி அருந்தினால் அதுவும் புளிக்கும்.நான் உனக்கு சலித்து விட்டேன் போலும்,என்னை என் வீட்டில் கொண்டு சென்று என் வீட்டாரிடம் ஒப்படைத்து விடு" என்கிறாள் இந்த புத்திசாலியான பெண்.கணவனை விட்டுப் பிரிய அவளுக்கு மனமில்லை.எனவே என் வீட்டாரிடம் என்னை ஒப்படைத்து விடு என்கிறாள்,அவன் செய்ய மாடம் அந்த காரியத்தை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் அதனால்.


    என் அருமை சினேகிதிகளே. தாய் மொழியில் எழுட வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதுகிறேன்.ஆனாலும் பயமாக உள்ளது.நிறைய தவறுகள் நான் செய்திருக்க கூடும்.தவிரவும்,எல்லோருக்கும் இந்த கட்டுரை பிடிக்காமலும்,தமிழ் மொழி தெரியாத நண்பர்களுக்கு சற்று போரடிக்கலாம்.என்னை மன்னிக்கவும்.
    மைதிலி
     
    Loading...

Share This Page