1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழுக்காக ஒரு வேண்டுகோள் !

Discussion in 'Posts in Regional Languages' started by PavithraS, Apr 14, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ( குறிப்பு : இங்கேப் பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தி எந்தவித உள்நோக்கம் இல்லாமலும் , சுய இலாபம் கருதாமலும் , என் தனிப்பட்டத் தமிழார்வத்தால் தூண்டப்பெற்று , முயன்று, இணையத்திலிருந்துத் திரட்டப்பட்டத் தகவல்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே வாசகர்கள் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன் ! மேலும் இந்தச் செய்தி நிறையத் தமிழ் ஆர்வலர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கிலேயே , நமது IL தளத்தில் கருத்துப்பரிமாற்றங்களின் வாயிலாக எனக்கு அறிமுகமான,தமிழறிந்த நபர்கள் சிலரை tagging மூலம் இணைக்கிறேன். தவறாயிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் . நன்றி ! )
    tagging @jskls ,@periamma, @rgsrinivasan, @crvenkatesh1963 , @saidevo, @Harini73, @kaniths, @VanithaSudhir, @Poetlatha, @vaidehi71, @uma1966, @Viswamitra ,@suryakala , @jayasala42, @krishnaamma, @iyerviji , @PushpavalliSrinivasan , @knbg , @Rith, @IniyaaSri , @Mahavid, @ennakshatram @Miracle1000 , @Amica , @sreeram )


    என் இனிய IL தளத்துத் தோழமைகளே வணக்கம் ! தமிழ் கூறும் நல்லுலகிற்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    இன்னொரு தமிழ்ப்புத்தாண்டில் அடியெடுத்துவைக்கின்ற நேரத்தில் ஒருவேண்டுகோளோடு இப்பதிவை இங்குப் பதிகிறேன். கடந்த சில நாட்களாக நம் IL தளத்தில் தமிழைப் பற்றிய செய்திகளையும், தமிழார்வம் உடைய நம் தோழமைகளின் கருத்துகளையும் யோசனைகளையும் பற்றிப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, நம்மால் செய்யக்கூடிய மொழித்தொண்டின் வரிசையிலே,தமிழர்களுக்குப் பெருமையுணர்வையும், கடமையுணர்வையும் ஊட்டக்கூடிய ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு உவகை உண்டாகிறது.

    இனிவிடையத்திற்குவருகிறேன்..‍‍‍‍


    'ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில்தமிழ்இருக்கை !'


    உலகத்தின்தொன்மையான(Classic Languages) ஏழுமொழிகளில்ஒன்றானநம்தாய்மொழிதமிழ் , தற்சமயம் வடஅமெரிக்காவிலுள்ள, மாசசூசெட்ஸ்மாகாணத்தைச்சேர்ந்தபாஸ்டன்மாநகரத்தில்இயங்கிவருகின்றஉலகப்புகழ்பெற்ற 'ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில் ' ,அதன் ' தெற்காசியக்கல்வித்துறை'யின்கீழ் திருஜோனதன்ரிப்ளேஎனும்ஆசிரியர்மூலம் மொழிப்பாடமாகப்பயிற்றுவிக்கப்படுகின்றது . அதன்மேம்பட்டத்தொடர்ச்சியாக , தமிழ்மொழிஇலக்கியங்களைப்பற்றியும், தமிழர்பண்பாடு, வரலாறு, இன்னும்தமிழ்மொழித்தொடர்புடையனவற்றைப்பற்றியும்ஆய்வு செய்து, மாணவர்களுக்குக்கற்பிப்பதற்கென்றே ,ஒருநிரந்தரஇருக்கை (Tamil Chair) , establishment of the first Sangam Professorship in Tamil Studies, அதாவது தமிழ்ப்பேராசிரியர்எனும்பதவியைநிறுவி, தமிழில்ஆராய்ச்சிப்பாடங்கள்நடத்தவிரும்புகின்ற தன்னுடையநோக்கத்தைக்கூறியுள்ளது. இதுதொடர்பாகஅப்பல்கலைக்கழகம்வெளியிட்டிருக்கிறஇருஅறிவிப்புகளைஇந்தஇணையஇணைப்புகளில்காணலாம் .


    http://harvardtamilchair.com/images/PatilLetter_signed.pdf http://harvardtamilchair.com/images/sangamprofessorship.pdf


    'இதன்பின்னணியில்இருப்பவர்கள் !'


    இப்படிப்பட்டஅறிவிப்பின்பின்இருப்பது, திருமதிவைதேஹிஹெர்பெர்ட் , Dr. S.T.சம்பந்தம் (புற்றுநோய்மருத்துவர், Rhode Island , USA) மற்றும் Dr. விஜய்ஜானகிராமன் (இருதயநோய் மருத்துவர் Holidaysburg, Pennysylvania) ஆகிய மூன்று புலம்பெயர்ந்ததமிழர்களின்சீரியமுயற்சி !

    திருமதிவைதேஹிஹெர்பெர்ட் , ஹவாயித்தீவில்வாழும்புலம்பெயர்ந்ததமிழர். இவர்சங்கத்தமிழிலக்கியப்பாடல்களின்சுவையைஉலகமுழுமைக்கும்எடுத்துச்செல்லவேண்டும்என்கிறஉயரியநோக்கோடு , பத்துப்பாட்டு , எட்டுத்தொகைஎனப்படும் 18 சங்கஇலக்கியங்களையும், பதினெண்கீழ்கணக்குநூல்களில் 7 ஐயும் , அவற்றுடன்முத்தொள்ளாயிரம், பாண்டியக்கோவைஎன்றஇலக்கியநூல்களையும் , ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதனைஇந்தவலைத்தளமுகவரியில்காணலாம். Sangam Poems Translated by Vaidehi இவரதுதூண்டுதலின்பேரிலேயேதிருவாளர்கள் விஜய்ஜானகிராமன்மற்றும்சம்பந்தம்ஆகியோரும்அவர்களதுமனைவியரும்முயற்சித்துஇந்தஅறிவிப்பிற்குஅடிகோலியுள்ளார்கள்.


    இப்படிப்பட்டஅறிவிப்பின்பின்இருப்பது, திருமதிவைதேஹிஹெர்பெர்ட் , Dr. S.T.சம்பந்தம் (புற்றுநோய்மருத்துவர், Rhode Island , USA) மற்றும் Dr. விஜய்ஜானகிராமன் (இருதயநோய் மருத்துவர் Holidaysburg, Pennysylvania) ஆகிய மூன்று புலம்பெயர்ந்ததமிழர்களின்சீரியமுயற்சி !

    திருமதிவைதேஹிஹெர்பெர்ட் , ஹவாயித்தீவில்வாழும்புலம்பெயர்ந்ததமிழர். இவர்சங்கத்தமிழிலக்கியப்பாடல்களின்சுவையைஉலகமுழுமைக்கும்எடுத்துச்செல்லவேண்டும்என்கிறஉயரியநோக்கோடு , பத்துப்பாட்டு , எட்டுத்தொகைஎனப்படும் 18 சங்கஇலக்கியங்களையும், பதினெண்கீழ்கணக்குநூல்களில் 7 ஐயும் , அவற்றுடன்முத்தொள்ளாயிரம், பாண்டியக்கோவைஎன்றஇலக்கியநூல்களையும் , ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதனைஇந்தவலைத்தளமுகவரியில்காணலாம். Sangam Poems Translated by Vaidehi இவரதுதூண்டுதலின்பேரிலேயேதிருவாளர்கள் விஜய்ஜானகிராமன்மற்றும்சம்பந்தம்ஆகியோரும்அவர்களதுமனைவியரும்முயற்சித்துஇந்தஅறிவிப்பிற்குஅடிகோலியுள்ளார்கள்.


    'தமிழ்இருக்கைஏற்படுத்தப்படுவதால்தமிழுக்குக்கிடைக்ககூடியபயன்கள் !'


    அப்படியொருதமிழ்இருக்கைஏற்படுத்தப்படுமானால், தமிழைப்பற்றியப்புதுப்புது ஆராய்ச்சிகளைமேற்கொள்ளமுடிவதுடன், உலகஅளவில்மொழியியல்மாணவர்களின்கவனத்தையும்நம்தமிழ்மொழிபெறும். தமிழைக்கற்கவிரும்பும்எந்தமொழியினத்தைச்சேர்ந்தவருக்கும்மிகவும்எளிதாகஇருக்கும் . எதிர்காலத்தலைமுறைகளுக்கும்தமிழைத்தொடர்ந்துஎடுத்துச்செல்வதற்கு, ஒருஉலகஅளவிலானவாய்ப்புஇது.


    சற்றேஎண்ணிப்பாருங்கள் ! தமிழுக்கானத் தனிஇருக்கைஉருவாக்கப்பட்டுவிட்டால் , மாணவர்கள்இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ்மொழித்துறைஎன்றஒன்றுஹார்வார்ட்பல்கலைக்கழகம்உள்ளவரைசெயல்படும். அங்கேத்தமிழ்ப்பாடம்நடத்தப்படும். ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில்படித்துப்பட்டம்பெற்றால் , அவரவர்துறையில்மதிப்பும், ஏற்றம்தரக்கூடியவேலைவாய்ப்புகளும், வளமானஎதிர்காலமும்உண்டுஎன்றுஉலகம்முழுவதிலும்உள்ளவர்கள்எண்ணுகிறார்கள்.அதுஉண்மையும்ஆகும் . எனவே , இளையதலைமுறையினர்தங்களதுகனவுப்பல்கலைக்கழகமான, ஹார்வார்டில்இருந்துதமிழில் முனைவர்பட்டம்பெறமுடியும்என்னும்செய்தி அவர்களைத்தமிழ்படிக்கத்தூண்டாதா ?


    'நாம்என்னசெய்யவேண்டும் ?'


    இங்கேதான்நமக்கானபணிகாத்திருக்கிறது. ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில்தமிழ்இருக்கைஏற்படுத்தப்படவேண்டுமானால், அதற்கு, அமெரிக்கடாலர்மதிப்பில் 6 மில்லியன்(இந்தியமதிப்பில்சுமார் 40 கோடிரூபாய் ) தேவைப்படும்என்றுபல்கலைக்கழகநிர்வாகம்தெரிவித்துள்ளது . அதற்கானத் தொகையைத்திரட்டித்தரவேண்டியகடமை, தமிழ்கூறும்அனைத்துமக்களுக்கும்உரியதாகிறது. ஏற்கனவேஜானகிராமன்மற்றும்சம்பந்தம்ஆகிய மருத்துவர்கள்இருவரும்தங்கள்பங்காகதலா அரைமில்லியன்(மொத்தம் 1 மில்லியன் ) அமெரிக்கடாலர் தொகையை (இந்தியமதிப்பில்சுமார் ஆறுகோடியேஅறுபத்தியைந்துலட்சம்ரூபாய் ) நன்கொடையாகஅளித்திருக்கிறார்கள் ! இருக்கப்பட்டவர்கள்கொடுக்கிறார்கள்என்கிறீர்களா ? அள்ளிக்கொடுக்கமுடியாவிட்டாலும், கிள்ளிக்கொடுப்பதுஎன்பார்களே, அதுபோல்பொன்னைவைக்கும்இடத்தில்பூவாவதுவைக்கலாமே ! அவரவரால்முடிந்ததைஅவரவர்செய்யலாமே !


    தமிழகஅரசும், இந்தியஅரசும்நினைத்தால்இச்செயல்மிகவும்எளிதாகும். அவ்வாறுஅவர்கள்செய்யாமல்இருப்பதுவேதனைஅளிக்கிறது. "அரசேமுனைப்புக்காட்டவில்லை, நாம்ஏன்அலட்டிக்கொள்ளவேண்டும்"? என்றுஎண்ண வேண்டாம் ! சிறுதுளிபெருவெள்ளமாகும்என்றநம்பிக்கையுடன்,ஊர்கூடிஇழுத்தால்தேரோடிப்போவதுபோல , தனிமனிதர்களாகநாமெல்லோரும்முயன்று , இப்பெரியபணிநிறைவடைவதற்குஉதவலாம். இப்படிச்செய்வதன்மூலம், நம்தாய்மொழியைஉலகம்முழுவதும்எடுத்துச்செல்லும்உயரியசேவையில்நமக்கானசிறுபங்கினைநாமும்செய்தோம்என்றுஅகமகிழலாம் !


    ஹார்வார்ட்பல்கலைக்கழகநிர்வாகம், இந்தஇருக்கை ஏற்படுத்துவதற்குரியமுழுதொகையினையும்திரட்டிமுடித்தப்பின்னர்தான்தமிழ்ப்பேராசிரியப்பதவியைஉருவாக்கும், அதன்பின்னரே, உலகம்முழுவதிலும்உள்ளத்தகுதியானத்தமிழறிஞர்களில்ஒருவரை, அப்பொறுப்பிற்குஅமரவைக்கும்தேடலையும்தொடங்கும். இதுமிகப்பெரியசவாலானபணிமட்டுமல்ல, காலம்எடுக்கும்பணியும்தான். எனவேஎவ்வளவுவிரைவாகமுடியுமோஅவ்வளவுவிரைவாகநிதிதிரட்டித்தந்தால்தான்யோசனைஅளவில்இருக்கும்இந்தத்திட்டம்செயல்வடிவம்பெறும்.


    நன்கொடைஅளிக்கவேண்டியவழிகள்


    Home இதுஅமெரிக்கநாட்டிலிருந்துஇயங்கும்ஒருஅரசுசாராத்தொண்டுநிறுவனமான Tamil Chair Inc. என்றஅமைப்பின்முகவரியாகும். இப்பணியில்பங்குகொள்ளவிரும்புவோர்இந்தஇணையதளமுகவரிக்குச்சென்றுதங்கள்நன்கொடையைஅளிக்கலாம். இந்தஇணையதளத்தில்நன்கொடைக்கானபணப்பரிமாற்றமுறைகளைவிளக்கமாகக்கொடுத்துள்ளார்கள். Online Transfer முறையிலோ ,கிரெடிட்கார்டு முறையிலோ , இணையம்மூலம்செலுத்தவிரும்பாவிட்டால் , அமெரிக்கஅல்லதுகனடாவங்கிகளின் மூலமாக நேரடியாக ஹார்வர்ட்பல்கலைக்கழகத்திற்கு "President and Fellows of Harvard College."என்றபெயரிலோ அல்லது Tamil Chair Inc( நடைமுறைசௌகரியத்திற்காகஇந்தப்பெயரில்அளிக்கப்படும்காசோலையேசிறந்தது) என்றபெயரிலோ காசோலைஎடுத்து Tamil Chair Inc. நிறுவனமுகவரிக்குத்தபாலில்அனுப்பலாம்.


    அமெரிக்கடாலர்களில்தான்தற்சமயம்இந்தப்பணிக்கானநன்கொடையைவழங்கமுடியுமென்பாதால், இந்தியாவிலிருந்துரூபாய்மதிப்பில்நிதியளிப்பவர்கள் , Online Transfer அல்லதுகிரெடிட்கார்டு எனும்இணையவழியில்பணப்பரிமாற்றம்செய்வதேஎளிமையானது. இல்லையேல்இந்தியவங்கிகளில்ரூபாய்செலுத்தி "Tamil Chair Inc." என்றபெயரில்வரைவோலை (Demand Draft) எடுத்துக் கீழ்கண்டமுகவரிக்குத் தபாலில்அனுப்பலாம்


    Kumar Kumarappan

    Treasurer, Tamil Chair Inc.

    44348 Arapaho Ave

    Fremont, CA 94539

    U. S. A.



    ஒருமுக்கியத்தகவல், கிரெடிட்கார்டுமூலம்அளிக்கும்தொகையானது , அந்தந்தவங்கிப்பணப்பரிமாற்றத்திற்கானசேவைக்கட்டணம்போகத்தான்நன்கொடைகணக்கில்வரவுவைக்கப்படும். இவ்வமைப்புஅமெரிக்கவருமானவரிச்சட்டம் 501(c) இன்கீழ்வருவதால், அப்படிச்செய்யும் நன்கொடை , itemized deduction என்றவகையில்அமெரிக்கா மற்றும்கனடாவில் வரிக்குட்பட்டவருமானமாகக்கருதப்படாது என்பதைநினைவில்கொள்க.


    மேலும்தகவல்களுக்குத்தொடர்புகொள்ளவேண்டியதொலைபேசிஎண்கள் பின்வருமாறு :


    India (+91) 9840031000


    Canada (+1) 647 220 5555


    USA (+1) 401 486 3693


    மின்னஞ்சல் (email) முகவரி tamilchair@gmail.com




    இதைப்பற்றிஅச்சு மற்றும்காட்சி ஊடகங்களில்வந்துள்ளசெய்திகளின்இணையதளஇணைப்பும், News இந்தமுயற்சியைஆதரித்துசிலர்பேசியுள்ள காணொளிக்காட்சிகள்சிலவற்றின்இணையஇணைப்பும்இங்கேப்பகிர்ந்துகொள்கிறேன். அவசியம்பாருங்கள்.




    Dr Janakiraman



    Dr Thirugnaanasambhandham


    Artist Trotsky Maruthu


    - Actor Sivakumar


    Support for Harward Tamil Chair


    விக்கிபீடியாசெய்திஇணையமுகவரி(wikipedia link ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை - தமிழ் விக்கிப்பீடியா)


    இதைமுழுவதும்படித்துஅறிந்துகொண்டபின்உங்களுக்கும்செயலாக்கஎண்ணம்தோன்றினால்அதுஇரட்டிப்புமகிழ்ச்சி. இந்தச்செய்தியைநான்சமீபத்திய'கல்கி'தமிழ்வாரஇதழில்வெளிவந்திருக்கும்பெண்தமிழ்க்கவிஞர்தாமரைஅவர்களின்பேட்டியைப்படித்தபின்இணையத்தில்தேடிச்சேகரித்தத்தகவல்களின்அடிப்படையில்உங்களோடுபகிர்கிறேன். இதைப்பற்றிநீங்கள்ஏற்கனவேஅறிந்திருந்துஅதற்கானஉங்கள்முயற்சியையும்செய்துவிட்டிருந்தால், அதுஎனக்குமிகுந்தமகிழ்ச்சியளிக்கும்செய்தி. அல்லதுஇப்போதுதான்இது பற்றிஉங்களுக்குத்தெரியவருகின்றதுஎன்றால் , என்மூலம்அதுதெரியவந்ததை எண்ணிப்பெருமைகலந்தமகிழ்ச்சி .


    எதுஎப்படியாயினும், "இந்தச்செய்தியைஅறிந்துகொள்வதில்ஆர்வமில்லை , அல்லதுஇந்தமுயற்சியில்பங்கெடுக்கவிருப்பமில்லை" என்றுஒதுங்கிவிடாதீர்கள் ! பெற்றஅன்னைக்குஅவளதுமக்கள்செய்யவேண்டியகடமைபோன்றஒன்றிலிருந்துத் தவறிவிடாதீர்கள்என்றுநான்மிகவும்வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் ! நீங்களும்இதில்பங்குபெறுவதோடுமற்றவருக்கும்இச்செய்தியைஎடுத்துச்சென்றுஅவர்களையும்இப்பெரும்பணியில்ஒருசிறுபங்கெடுக்கச்செய்யுங்கள் ! இதுநாம்எடுக்கும்கௌரவப்பிச்சையல்ல, நம்தாய்மொழிக்குநாம்செய்யும்தொண்டுஎன்றுகருதிப் பெருமைகொள்ளுங்கள் !


    மிகவும்பொறுமையாக, உங்கள்பொன்னானநேரத்தைச்செலவிட்டுஇந்தப்பதிவைப்படித்தமைக்குமிக்கநன்றிதெரிவித்துக்கொள்கிறேன் !


    என்றும்அன்புடன்,


    பவித்ரா



     
    Last edited: Apr 14, 2016
    jskls, vaidehi71, knbg and 1 other person like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மதிப்பிற்குரிய வாசகர்களே !

    இந்தத் தகவலைப் பகிரும் போது எனது கணினியில் ஏற்பட்டத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வார்த்தைகளுக்கு இடையே சரியான இடைவெளி இல்லாமல் பதிந்துவிட்டது. அதைப் படிப்பது சற்று கடினமாக இருக்கும் என்பதை அறிவேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    பவித்ரா

    and

    Hi @IL_Admin , @Jey , seems the problem is solved and hence my message got posted. Thank you ! :blush:

    Thanks,

    PavithraS
     
    Last edited: Apr 14, 2016
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வாசகர்கள் படிப்பதற்கு எளிதாக சொற்களுக்கிடையே சரியான இடைவெளி விட்டு இங்கே மீண்டும் மேலே குறிப்பிட்ட செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன் ! உங்கள் அனைவருக்கும் உண்டாகியிருக்கக் கூடிய சிரமத்திற்கு வருந்துகிறேன் !


    ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை !'

    உலகத்தின் தொன்மையான(Classic Languages) ஏழு மொழிகளில் ஒன்றான நம் தாய்மொழி தமிழ் , தற்சமயம் வட அமெரிக்காவிலுள்ள, மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பாஸ்டன் மாநகரத்தில் இயங்கிவருகின்ற உலகப்புகழ் பெற்ற 'ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் ' ,அதன் ' தெற்காசியக் கல்வித் துறை'யின் கீழ் திரு ஜோனதன் ரிப்ளே எனும் ஆசிரியர் மூலம் மொழிப்பாடமாகப் பயிற்றுவிக் கப்படுகின்றது . அதன் மேம்பட்டத் தொடர்ச்சியாக , தமிழ் மொழி இலக்கியங்களைப் பற்றியும், தமிழர் பண்பாடு, வரலாறு, இன்னும் தமிழ் மொழித் தொடர்புடையனவற்றைப் பற்றியும் ஆய்வு செய்து, மாணவர்களுக்குக் கற்பிப் பதற்கென்றே ,ஒரு நிரந்தர இருக்கை (Tamil Chair) , establishment of the first Sangam Professorship in Tamil Studies, அதாவது தமிழ்ப்பேராசிரியர் எனும் பதவியை நிறுவி, தமிழில் ஆராய்ச்சிப் பாடங்கள் நடத்த விரும்புகின்ற தன்னுடைய நோக்கத்தைக் கூறியுள்ளது. இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிற இரு அறிவிப்புகளை இந்த இணைய இணைப்புகளில் காணலாம் .

    http://harvardtamilchair.com/images/PatilLetter_signed.pdf http://harvardtamilchair.com/images/sangamprofessorship.pdf

    'இதன் பின்னணியில் இருப்பவர்கள் !'

    இப்படிப்பட்ட அறிவிப்பின் பின் இருப்பது, திருமதி வைதேஹி ஹெர்பெர்ட் , Dr. S.T.சம்பந்தம் (புற்றுநோய் மருத்துவர், Rhode Island , USA) மற்றும் Dr. விஜய் ஜானகிராமன் (இருதய நோய் மருத்துவர் Holidaysburg, Pennysylvania) ஆகிய மூன்று புலம் பெயர்ந்த தமிழர்களின் சீரிய முயற்சி !
    திருமதி வைதேஹி ஹெர்பெர்ட் , ஹவாயித் தீவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர். இவர் சங்கத் தமிழிலக்கியப் பாடல்களின் சுவையை உலகமுழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு , பத்துப்பாட்டு , எட்டுத்தொகை எனப்படும் 18 சங்க இலக்கியங்களையும், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் 7 ஐயும் , அவற்றுடன் முத்தொள்ளாயிரம், பாண்டியக்கோவை என்ற இலக்கிய நூல்களையும் , ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதனை இந்த வலைத்தள முகவரியில் காணலாம்.
    Sangam Poems Translated by Vaidehi இவரது தூண்டுதலின் பேரிலேயே திருவாளர்கள் விஜய் ஜானகிராமன் மற்றும் சம்பந்தம் ஆகியோரும் அவர்களது மனைவியரும் முயற்சித்து இந்த அறிவிப்பிற்கு அடிகோலியுள்ளார்கள்.


    'தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படுவதால் தமிழுக்குக் கிடைக்ககூடிய பயன்கள் !'

    அப்படியொரு தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படுமானால், தமிழைப் பற்றியப் புதுப்புது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடிவதுடன், உலக அளவில் மொழியியல் மாணவர்களின் கவனத்தையும் நம் தமிழ் மொழி பெறும். தமிழைக் கற்க விரும்பும் எந்த மொழியினத்தைச் சேர்ந்தவருக்கும் மிகவும் எளிதாக இருக்கும் . எதிர்காலத் தலைமுறைகளுக்கும் தமிழைத் தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு, ஒரு உலக அளவிலான வாய்ப்பு இது.

    சற்றே எண்ணிப் பாருங்கள் ! தமிழுக்கானத் தனி இருக்கை உருவாக்கப்பட்டு விட்டால் , மாணவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ் மொழித் துறை என்ற ஒன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளவரை செயல்படும். அங்கேத் தமிழ்ப்பாடம் நடத்தப்படும். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றால் , அவரவர் துறையில் மதிப்பும், ஏற்றம் தரக்கூடிய வேலை வாய்ப்புகளும், வளமான எதிர்காலமும் உண்டு என்று உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் எண்ணுகிறார்கள்.அது உண்மையும் ஆகும் . எனவே , இளைய தலைமுறையினர் தங்களது கனவுப் பல்கலைக்கழகமான, ஹார்வார்டில் இருந்து தமிழில் முனைவர் பட்டம் பெற முடியும் என்னும் செய்தி அவர்களைத் தமிழ் படிக்கத் தூண்டாதா ?

    'நாம் என்ன செய்ய வேண்டும் ?'

    இங்கே தான் நமக்கான பணி காத்திருக்கிறது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப் பட வேண்டுமானால், அதற்கு, அமெரிக்க டாலர் மதிப்பில் 6 மில்லியன்(இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய் ) தேவைப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது . அதற்கானத் தொகையைத் திரட்டித் தர வேண்டிய கடமை, தமிழ் கூறும் அனைத்து மக்களுக்கும் உரியதாகிறது. ஏற்கனவே ஜானகிராமன் மற்றும் சம்பந்தம் ஆகிய மருத்துவர்கள் இருவரும் தங்கள் பங்காக தலா அரை மில்லியன்(மொத்தம் 1 மில்லியன் ) அமெரிக்க டாலர் தொகையை (இந்திய மதிப்பில் சுமார் ஆறு கோடியே அறுபத்தியைந்து லட்சம் ரூபாய் ) நன்கொடையாக அளித்திருக்கிறார்கள் ! இருக்கப்பட்டவர்கள் கொடுக்கிறார்கள் என்கிறீர்களா ? அள்ளிக் கொடுக்க முடியா விட்டாலும், கிள்ளிக் கொடுப்பது என்பார்களே, அது போல் பொன்னை வைக்கும் இடத்தில் பூவாவது வைக்கலாமே ! அவரவரால் முடிந்ததை அவரவர் செய்யலாமே !

    தமிழக அரசும், இந்திய அரசும் நினைத்தால் இச்செயல் மிகவும் எளிதாகும். அவ்வாறு அவர்கள் செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. "அரசே முனைப்புக் காட்டவில்லை, நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்"? என்று எண்ண வேண்டாம் ! சிறு துளி பெருவெள்ளமாகும் என்ற நம்பிக்கையுடன்,ஊர் கூடி இழுத்தால் தேரோடிப் போவது போல , தனி மனிதர்களாக நாமெல்லோரும் முயன்று , இப்பெரிய பணி நிறைவடைவதற்கு உதவலாம். இப்படிச் செய்வதன் மூலம், நம் தாய் மொழியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் உயரிய சேவையில் நமக்கான சிறு பங்கினை நாமும் செய்தோம் என்று அகமகிழலாம் !

    ஹார்வார்ட் பல்கலைக்கழக நிர்வாகம், இந்த இருக்கை ஏற்படுத்துவதற்குரிய முழு தொகையினையும் திரட்டி முடித்தப் பின்னர் தான் தமிழ்ப்பேராசிரியப் பதவியை உருவாக்கும், அதன் பின்னரே, உலகம் முழுவதிலும் உள்ளத் தகுதியானத் தமிழறிஞர்களில் ஒருவரை, அப்பொறுப்பிற்கு அமரவைக்கும் தேடலையும் தொடங்கும். இது மிகப் பெரிய சவாலான பணி மட்டுமல்ல, காலம் எடுக்கும் பணியும் தான். எனவே எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நிதி திரட்டித் தந்தால் தான் யோசனை அளவில் இருக்கும் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறும்.

    நன்கொடை அளிக்க வேண்டிய வழிகள்

    Home இது அமெரிக்க நாட்டிலிருந்து இயங்கும் ஒரு அரசு சாராத் தொண்டு நிறுவனமான Tamil Chair Inc. என்ற அமைப்பின் முகவரியாகும். இப்பணியில் பங்கு கொள்ள விரும்புவோர் இந்த இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் நன்கொடையை அளிக்கலாம். இந்த இணைய தளத்தில் நன்கொடைக்கான பணப்பரிமாற்ற முறைகளை விளக்கமாகக் கொடுத்துள்ளார்கள். Online Transfer முறையிலோ ,கிரெடிட் கார்டு முறையிலோ , இணையம் மூலம் செலுத்த விரும்பாவிட்டால் , அமெரிக்க அல்லது கனடா வங்கிகளின் மூலமாக நேரடியாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு "President and Fellows of Harvard College."என்ற பெயரிலோ அல்லது Tamil Chair Inc( நடைமுறை சௌகரியத்திற்காக இந்தப் பெயரில் அளிக்கப்படும் காசோலையே சிறந்தது) என்ற பெயரிலோ காசோலை எடுத்து Tamil Chair Inc. நிறுவன முகவரிக்குத் தபாலில் அனுப்பலாம்.

    அமெரிக்க டாலர்களில் தான் தற்சமயம் இந்தப் பணிக்கான நன்கொடையை வழங்க முடியுமென்பாதால், இந்தியாவிலிருந்து ரூபாய் மதிப்பில் நிதியளிப்பவர்கள் , Online Transfer அல்லது கிரெடிட் கார்டு எனும் இணைய வழியில் பணப்பரிமாற்றம் செய்வதே எளிமையானது. இல்லையேல் இந்திய வங்கிகளில் ரூபாய் செலுத்தி "Tamil Chair Inc." என்ற பெயரில் வரைவோலை (Demand Draft) எடுத்துக் கீழ்கண்ட முகவரிக்குத் தபாலில் அனுப்பலாம்

    Kumar Kumarappan
    Treasurer, Tamil Chair Inc.
    44348 Arapaho Ave
    Fremont, CA 94539
    U. S. A.



    ஒரு முக்கியத் தகவல், கிரெடிட் கார்டு மூலம் அளிக்கும் தொகையானது , அந்தந்த வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கான சேவைக் கட்டணம் போகத்தான் நன்கொடை கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வமைப்பு அமெரிக்க வருமான வரிச் சட்டம் 501(c) இன் கீழ் வருவதால், அப்படிச் செய்யும் நன்கொடை , itemized deduction என்ற வகையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் வரிக்குட்பட்ட வருமானமாகக் கருதப்படாது என்பதை நினைவில் கொள்க.


    மேலும் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பின்வருமாறு :

    India (+91) 9840031000

    Canada (+1) 647 220 5555

    USA (+1) 401 486 3693


    மின்னஞ்சல் (email) முகவரி tamilchair@gmail.com


    இதை முழுவதும் படித்து அறிந்து கொண்டபின் உங்களுக்கும் செயலாக்க எண்ணம் தோன்றினால் அது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்தச் செய்தியை நான் சமீபத்திய'கல்கி'தமிழ் வார இதழில் வெளிவந்திருக்கும் பெண் தமிழ்க்கவிஞர் தாமரை அவர்களின் பேட்டியைப் படித்தபின் இணையத்தில் தேடிச் சேகரித்தத் தகவல்களின் அடிப்படையில் உங்களோடு பகிர்கிறேன். இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்து அதற்கான உங்கள் முயற்சியையும் செய்து விட்டிருந்தால், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் செய்தி. அல்லது இப்போதுதான் இது பற்றி உங்களுக்குத் தெரிய வருகின்றது என்றால் , என் மூலம் அது தெரிய வந்ததை எண்ணிப் பெருமை கலந்த மகிழ்ச்சி .


    எது எப்படியாயினும், "இந்தச் செய்தியை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லை , அல்லது இந்த முயற்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை" என்று ஒதுங்கிவிடாதீர்கள் ! பெற்ற அன்னைக்கு அவளது மக்கள் செய்ய வேண்டிய கடமை போன்ற ஒன்றிலிருந்துத் தவறி விடாதீர்கள் என்று நான் மிகவும் வேண்டி க் கேட்டுக் கொள்கிறேன் ! நீங்களும் இதில் பங்கு பெறுவதோடு மற்றவருக்கும் இச்செய்தியை எடுத்துச் சென்று அவர்களையும் இப்பெரும் பணியில் ஒரு சிறு பங்கெடுக்கச் செய்யுங்கள் ! இது நாம் எடுக்கும் கௌரவப் பிச்சையல்ல, நம் தாய்மொழிக்கு நாம் செய்யும் தொண்டு என்று கருதிப் பெருமை கொள்ளுங்கள் !

    மிகவும் பொறுமையாக, உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு இந்தப் பதிவைப் படித்தமைக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா

    பிற்குறிப்பு

    இதைப் பற்றி அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் இணைய தள இணைப்பும், News இந்த முயற்சியை ஆதரித்து சிலர் பேசியுள்ள காணொளிக்காட்சிகள் சிலவற்றின் இணைய இணைப்பும் இங்கேப் பகிர்ந்து கொள்கிறேன். அவசியம் பாருங்கள்.


    Dr Janakiraman


    Dr Thirugnaanasambhandham

    Artist Trotsky Maruthu

    - Actor Sivakumar

    Support for Harward Tamil Chair




     
    Last edited: Apr 14, 2016
    kaniths likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள் .அமெரிக்காவில் இருக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை இந்த தமிழ் தொண்டில் பங்கேற்க சொல்கிறேன் .ராமர் பாலம் கட்ட உதவிய அணிலை போன்று உதவ முடியும் .
     
    kaniths and PavithraS like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இன்று எனக்குக் கிடைத்த முதற் செய்தியே, நற்செய்தியாக வந்தது இன்பமாயுள்ளது ! தமிழ்ப் புத்தாண்டில் எனக்குக் கிடைத்த உங்களின் ஆசீர்வாதமாகவே இதைப் பார்கிறேன் ! நன்றி ! உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள், பெரியம்மா !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பவித்ரா .புத்தாண்டு வாழ்த்துக்கள்
     
  7. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    பவித்ரா இந்த பதிவை அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    நன்றி உமா வெங்கட்
     
    PavithraS likes this.
  8. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    vathsalaj@yahoo.com


    Today at 17:03
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்குக் கிடைத்த அந்தஸ்து பற்றிக் கேட்க மிகவும் மகிழ்ச்சி.இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த பாராட்டுக்கள்.
    ஆனால் என் மனதில் ஒரு கேள்வி எழாமல் இல்லை.
    இதனால் தமிழுக்கு நற்பெயர் ஏற்படலாம். ஆனால் இந்தியாவில் வாழும் சராசரி தமிழனுக்கு என்ன நன்மை? எவ்வளவு பேர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற இயலும். பல லக்ஷங்களில் ஒருவர்.
    தமிழ் நாட்டில் பல பேருடைய பொழுது தமிழரின் பழம் பெருமையைப் பாடுவதிலேயே கழிகிறது.

    தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள உண்மைகள் ஏராளம்.உலகம் இவ்வளவு வேகமாக விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறி வருகையில் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, நன்னூல் . தொல்காப்பியம் ஏனைய மற்ற இலக்கியங்கள் academic discussion க்கு பெரிதும் உதவலாம்.
    ஹார்வர்ட் பல்கலைக் கழகம் சென்னை கன்னிமேரா நூல் நிலையத்தைவிட அதிக புத்தகங்களை வைத்துக் கொள்ளலாம்

    பெரிய ஆனால் ---------------------தொடருகிறது.ஹார்வார்டை விட்டுத் தள்ளுங்கள். இந்தியாவின் சிறந்த கல்வி நிலையமான இந்தியன் institute of technology யில் தமிழ் curriculam ஒன்று கிடையாது.
    மற்ற பொறியியல் கல்லூரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் காலியாக பல tamil medium seats காலியாகவே உள்ளன. தமிழ் மீடியத்தில் படித்த எந்தB .E .மாணவனுக்கும் உருப்படியான வேலை கிடைக்கவில்லை.மருத்துவம், வேதியியல் ,தாவர இயல் என்ற பல துறைகளில் ஆங்கில விஞ்ஞான சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்கப் படவே இல்லை.எளிமையான-sulphide ,sulphite ,sulphate என்ற வேறுபாடுகளில் கூட ஏகப் பட்ட குளறுபடி.
    தமிழ் மீடியத்தில் படிக்கும் பிளஸ் two கணிதம் ஆங்கிலத்தில் கற்பிக்கப் படுகிறது. நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கணக்குப் பாடத்தைத் தமிழில் போதிக்க மிக சிரமப் படுவதால், அந்த தேர்வை மட்டும் ஆங்கிலத்தில் எழுத permission வழங்கப் பட்டுள்ளது.
    மாணவர்கள் நவீன யுகத்துக்குத் தகுந்த கல்வியைத் தமிழில் படித்தால் தான், தமிழ் ஆங்கிலத்துக்குச் சமமான அந்தஸ்தைப் பெற முடியும்.அதற்குத் தமிழ் அறிஞரும் ஆர்வலரும் கடுமையாக ஒரு பத்து ஆண்டுகள் உழைத்தால் தான் எல்லா விஞ்ஞான பூர்வ உண்மைகளையும் தமிழிலேயே விளக்க இயலும்.தாய் மொழிக்கான அறிவு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் இன்னும் கால் நூற்றாண்டு கழித்து.
    அதுவரை எதோ ஒரு கண்டத்தில் எதோ ஒரு மூலையில் நம் தமிழும் ஒரு கிரீடம் தாங்கியுள்ளது என்று ஒரு செயற்கையான சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.
    வட மொழிக்கு என்ன ஆயிற்று/எத்தனை வேதம் ,இதிகாசம் காவ்யம் புராணம்! அதர்வ வேதத்தில் இல்லாத விஞ்ஞான உண்மையே கிடையாது. வான சாஸ்திரம் முதல் வைமானிக சாஸ்திரம் வரை எல்லாப் புதையலும் உள்ளது.
    இதற்கான எல்லாப் புள்ளி விவரங்களும் எங்கு உள்ளது?
    ஜெர்மனியில்?இந்திய மண்ணில் பிறந்தவன் வட மொழி பயில ஜெர்மனிக்குத் தான் போக வேண்டும். அது மாதிரி தான் இருக்கிறது ஹார்வர்ட் பலகைக் கழக விவரமும்.
    லக்ஷக் கணக்காண தமிழர்கள் இங்கே சரியான வழி வகை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    reservation இல் கல்லூரியில் இடம் வேண்டுமானால் கிடைக்கலாம். அதனுடன் அரசியல் வாதிகளின் கடமை முடிந்து விடும். அவனை உண்மையாகவே அறிவாளியாக்கும் நோக்கம் யாருக்கும் இல்ல. எத்தனை பட்டதாரிகள் பழம் தமிழின் பெரும் புகழை மட்டும் பாடத் தெரிந்தவர்கள் பிழைக்க வழியின்றி தவிக்கிறார்கள?. பிழை தமிழில் இல்லை.அதை சரிவர வளர்க்காத அரசியல் வாதிகளிடமும் அரசாங்கத்திடமும் தான் இருக்கிறது.
    எங்கேயோ ஒரு மூலையில் தமிழை செம்மொழி என்று அறிவித்தால் எல்லாம் சரியாகி விடுமா?
    உண்மையிலேயே தமிழை வளர்க்கும் நோக்கம் இருந்தால் ,கல்வியின் எல்லா பிரிவுகளிலும் ,ஆங்கிலத்துக்குச் சமமான வளர்ச்சி எட்ட வேண்டும்.அப்போது தான் தமிழர்கள் பிற நாடுகளுக்குச் சம மாக போட்டி போட்டு வெல்ல முடியும்.
    நானும் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழ்ப் பெருமை பற்றிச் சொற்பொழிவுகளையும்,கட்டுரைகளையும், அரசியல் வாதிகளின் ஏற்றமிகு பேச்சுக்களையும் கேட்டு அலுத்துப்போய் விட்டேன்.நிறைய கருத்தரங்குகளில் கலந்து கொண்டாயிற்று.அதில் கிடைத்த ஒரே லாபம் தனிப் பட்ட முறையில் கம்ப ராமாயணத்திலும் மற்ற காப்பியங்களிலும் எனக்கு ஏற்பட்டஆர்வம் மட்டுமே. ஆனால் பொது நோக்கில் தமிழ் வளர்ப்பு மாநாடுகள் ஒரு விளம்பரத்தூண்களாக அமைந்தனவே அன்றி, ஆக்க பூர்வமான எந்த முன்னேற்றமும் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.
    பெரிய நன்மை, மக்கள் நன்கு உணர்ந்து கொண்டு விட்டார்கள், இந்த அரசியல் வாதிகளை நம்பி யாதொரு பயனும் இல்லை;நம் பிழைப்பை நாமே பார்த்துக் கொள்ளுவோம் என்று. .
    முடிவு;தெரிந்ததுதான்.தமிழ் தாய் மொழியாகக் கொண்ட முக்கால் வாசி நடுத்தர குடும்பத்தினரின் தமிழ் வாரிசுகள் வெளி நாடுகளில் குடி உரிமை வாங்கிக் கொண்டு விட்டனர்.அவரவர்களுக்கு ஏற்ற வகையில் சின்ன தமிழ் வகுப்புகள் நடத்தி தமிழுக்கு உயிர் ஊட்ட முயற்சி செய்து வருகிறார்கள்( என் குழந்தைகளும் இதில் அடக்கம்)

    தமிழ் நாட்டில் தமிழ் எப்படி இருக்கிறது தெரியுமா? சொல்லவே வெட்கக் கேடு. மிக புத்தி சாலி, எல்லா பாடங்களிலும் max மதிப்பெண் எடுக்கும் குழந்தை தமிழில் தேர்ச்சி பெறுவதே கடினமாக் உள்ளது.
    அரசியல் வாதிகளின் மேடைப் பேச்சுக்கோ பஞ்சமில்லை.
    " தாழம்பூவாம், அலங்காரக் கொண்டையாம்;உள்ளே பார்த்தால் பேனும் ஈறும் புழுத்து நெளியுதாம்" என்ற வழக்கு தமிழின் நிலைக்கும் தமிழரின் நிலைக்கும் தான் மிகவும் பொருத்தம்.
    இந்த கருத்துக்கள் எனது சொந்த கருத்து மாத்திரம் அல்ல தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு ,தமிழின் அறிமுகத்தையே தொலைத்து விட்டு, மேம்போக்காக தமிழைப் பற்றி அலட்டிக் கொள்ளும் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களின் ஆதங்கம்.
    இந்த அஞ்சலில் இதைப் பகிர்ந்து கொள்வது தவிர வேறு ஒன்றும் செய்ய கையாலாகாத நிலை.
    என்னுடைய அஞ்சல் ஒரு மனக் குமுறல்.யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கம் அல்ல.pessimism என்பதன் வெளிப்பாடும் அல்ல.

    ஜெயசாலா 42
     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அம்மையீர் , இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !


    தாங்கள் முன்வைக்கும் எந்த சிந்தனைகளிலும் நான் எதிர்மறை எண்ணத்தைக் காண்பதில்லை, மாறாக ஒரு வித வாத்ஸல்யத்தையே உணர்வேன். அதற்கான காரணம் இன்றெனக்கு விளங்கியது. உங்கள் பெயரிலேயே வாத்ஸல்யம் உள்ள போது, உங்களின் எழுத்துகளில் அது வெளிப்படாதா ? (காலஞ்சென்ற எனது பாட்டியாருக்கும் இதே பெயர் தான் !)


    உங்கள் பதிலில் நீங்கள் கொட்டியிருக்கும் உள்ளக்குமுறல் மிகவும் நியாயமானதே ! ஆம் நாம் தமிழின் பழம் பெருமை பேசுவதிலேயேப் பொழுதைக் கழிக்கிறோம் என்பது உண்மைதான் ! உங்களது கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு உண்டு. உங்கள் மீதுள்ள மரியாதையின் காரணமாக மட்டுமல்ல, அதில் இருப்பது முழுமையும் மனவேதனைக்குரிய உண்மை என்பதாலும் தான்.

    "சான்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு " எனும் கருத்துப் பொய்த்துவிடுமோ என்று ஐயப்படும் படி , வெறும் வாய்ப்பேச்சுத் திறம் என்கின்ற அரிதாரத்தைப் பூசிக் கொண்டு, பகட்டான மேடைக்கு மட்டும் தமிழ் மொழி வாதிகளாக இருந்து கொண்டு , உண்மையிலேயே நம் மொழியில் திறமும், அறிவும் பெறாத போலித் தமிழறிஞர்கள் , இன்று அதிகம் பெருகிவிட்டதாலும் , மெய்யாகவேத் தமிழிற் சிறந்த அறிவாற்றலும், புலமையும் பெற்றவர்கள் தங்களது மொழியறிவின் மூலம், சமூகத்திற்குப் பயன்படக் கூடிய வகையில் செயலாற்ற வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாலும் , இன்றையத் தமிழ் நாட்டில் தமிழ் மொழி பல வகையானும் அவலங்களைச் சந்தித்து வருகிறது என்று எனக்குத் தோன்றுகின்றது.பல மொழிகளுக்கு நம் தமிழ்ச் சொற்கள் சென்று சேர்ந்தக் காலம் போய் , பிற மொழிகளிலிருந்து வந்துத் தமிழில் கலந்தத் திசைச் சொற்களும் , கொச்சைச் சொற்களும் , படிப்பறிவற்றோரும் கூட மிக எளிதாக உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்களும் , இவையெல்லாமும் சேர்ந்து இன்றையத் தமிழருக்கு எவையெல்லாம் நமது மொழிச் சொற்கள் என்பதேத் தெரியாமல் செய்து விட்டது.


    நீங்கள் குறிப்பிட்டது போல இந்தியக் கல்வி நிறுவனங்களில் தமிழுக்குச் சரியான மரியாதையும் அளிக்கப்படுவதில்லை, அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தமிழில் பாடம் எடுக்கவும் தெரிவதில்லை. எனவே தமிழ் மொழி வழிக் கல்வி என்பது இன்றைய நிலையில் வெற்றிகரமாக இயங்கக் கூடிய நிலையில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அனைத்து ஆங்கில விஞ்ஞானச் சொற்களுக்கும் ஈடாகத் தமிழில் சரியான பெயர் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதும் நியாயமானதே. அப்படியேப் புதிய கலைச் சொற்களும், தொழிற்நுட்பச் சொற்களும் , அறிவியற் சொற்களும் உருவாக்கப் பட்டாலும், அதை அறிந்து கொண்டுப் பயிற்றுவிக்கும் திறம் இன்றையத் தமிழகத்தின் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கும் இல்லை, அப்படியே ஓரிருவர் முயன்றுத் தமிழில் எடுத்தியம்பினாலும், அதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தும் ஆர்வமும், அறிவாற்றலும் பெரும்பான்மையான மாணவர்களுக்கும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் உண்மை நிலை.



    " சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களும், கன்னிமாரா போன்ற அரியத் தமிழிலக்கியப் புத்தகச் சுரங்கங்களும் இயங்கக்கூடிய , சொந்த ஊரானத் தமிழகத்திலேயேத் தமிழின் நிலைமை இப்படியிருக்கையில் வேறொரு நாட்டில் புதிதாக ஒரு தமிழ்ப்பேராசிரியப் பணியிடத்தை உருவாக்குவதும், தமிழிலக்கியப் புத்தகங்களை நூலகத்தில் அடுக்கி வைப்பதும் எந்த வகையில் உள்ளூர்த் தமிழர்களுக்கு உதவும் ? " என்று குறுகிய மனப்பாங்கோடு இதைப் பார்க்கக் கூடாது. நேரடியாகத் தமிழகத்துத் தமிழருக்கு எந்தப் பயனும் இல்லாது போனாலும் , உலக அளவில் பலரது கவனத்தைப் பெற்றிருக்கக்கூடிய, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படக்கூடிய தமிழ் இருக்கையானது , அதே உலகளவில் இருக்கக்கூடியப் பல்வேறு மொழியார்வலர்கள் மற்றும் மொழி ஆராய்ச்சி மாணவர்களின் மனதில் தமிழ் மீதான ஆர்வத்தையும் தூண்டும், அப்படி ஈர்க்கப்படும் வேற்று நாடு, வேற்று மொழியாளர்களும் அடிப்படைத் தமிழ் முதல் ஆய்வுத் தமிழ் வரையும் கூட நமது மொழியைப் பயில ஒரு பரந்துபட்ட வாய்ப்பினையும் நல்கும் .


    "அது சரி தும்பை விட்டு வாலைப் பிடித்தாற் போல், முதலில் தமிழர்களுக்காக, பின்பு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, என்று சொல்லி விட்டு, இப்போது உலக அளவிலுள்ள மாணவர்களுக்காக என்று சொல்வது நகைப்பாயிருக்கிறதே ?" என்றக் கேள்வியெழலாம். அப்படிப் பார்த்தால் இன்று தமிழகத்தில் தமிழ் பேசி வாழ்பவரெல்லோரும் ஆதியிலிருந்தேத் தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவர்களில்லை என்பதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படியிருந்தாலும் ஆதியிலிருந்துத் தமிழைத் தாய்மொழியாகப் பெற்ற உண்மைத் தமிழர்களுக்கு இணையாகவும் , மேலாகவும் ஆரியர்கள் , வந்தேறிகள் என்றழைக்கப்படுவோரும் , மற்றுமுள்ள தமிழகத்தின் எல்லைப்புறங்களிலிருந்துத் தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்தோரும் தாங்களும் தமிழரென்ற உணர்வோடே பல காலமாய் வாழ்ந்து வருவதுடன் , மொழிச் சேவையும் ஆற்றி வருதல் போலவே, எதிர் வருங்காலங்களில் , அது இன்றிலிருந்துப் பன்னூற்றாண்டுகள் என்றாலும் கூட, சீனத்து இளம்பெண்ணும், இங்கிலாந்தின் ஆண்மகனும், இத்தாலியின் அறிஞனும், பிரெஞ்சு தேசத்துப் புலவனும் தமிழிலே பேசியும், எழுதியும், வாழத்தொடங்குவார்களேயானால் அது எவ்வளவு பெரியத் தமிழ் மொழிப்புரட்சியாகும் !

    "நடக்கிற காரியமா ?" என்றால், நாம் மேற்கொள்ளும் எந்த நெடுந்தூரப்பயணங்களும் , முதலில் எடுத்து வைக்கும் சிறிய அடியிலிருந்தேத் தொடங்குவதைப் போலவே , நம் மொழிக்கான இந்தப் பயணமும், அப்படியொரு இருக்கை அமைப்பின் மூலம் தொடங்கினால், அப்பயணத்தின் அனுபவத்தை எல்லோரும் பெறலாமே ! எந்த ஒரு மாபெரும் செயலும் அது தொடங்கப்படும் போது அனைவரின் கவனத்தையும் ஆதரவையும் பெறுவதில்லை. ஆனால் அதுவே ஒருவர் வெற்றிகரமாக நடத்தி முடித்தப்பின், "இதை நாம் செய்யாது போனோமே!" என்று மற்றவர்களை எண்ண வைக்கும். இதே எண்ண ஓட்டம் தமிழ் இருக்கைக்கான சிலரது முயற்சியை மற்றவர் பார்க்கும் விதத்திலும் இருக்கின்றது போலும்.


    (எனது எண்ண ஓட்டங்களை உங்களோடு மேலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் , தமிழ் இருக்கை ஏன் அமைய வேண்டும் என்ற என் இன்னொரு பார்வையையும் கீழே பதிந்திருக்கிறேன் . அதையும் தாங்கள் படித்துப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் !)
     
    Last edited: Apr 15, 2016
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jayasala42

    (மேற்பகுதியின் தொடர்ச்சி)

    எனது இனிமைத் தமிழ் மொழி எமது !என்றக் கட்டுரையில் குறிப்பிட்ட செய்தியை இங்கு நினைவு கூர்கிறேன். தமிழ் மொழி பிறந்தக் குமரிக் கண்டம் , கடலுள் மூழ்கி அழிந்து பட்ட பின்பும் கூட, வேறெங்கோப் (இன்றையத் தமிழகம், இலங்கை உட்பட நாடுகளில்) புலம் பெயர்ந்த நம் தமிழ் முன்னோர்களின் வாயிலாகத் தமிழ் மொழி அழியாமல் இன்று வரை வந்து விட்டது. இன்றைக்குப் பொருளாதார மற்றும் வேறு பல காரணங்களுக்காகத் , தமிழர்கள் மெல்ல மெல்லத் தங்கள் பிறப்பிடத்தை விட்டு அந்நிய நாடுகள் பலவற்றில் குடியேறி விட்டோம். அன்றைக்குப் புலம் பெயர்ந்துத் தமிழகம் வந்தத் தமிழ்ச் சமூகம் போலத் தமிழறிவில் சிறக்காத பலர் இன்று உலகமுழுதும் குடியேறிவிட்ட நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் அப்படிப் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்ககூடிய நடைமுறை சாத்தியக்கூறுகளும் அதிகரித்துவிட்ட நிலையில் , அவர்கள் தங்களது வேரறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.


    அப்படிச் செய்வதன் வரிசையில், முதன்மையாய் வருவது தங்கள் மொழியைக் கற்றுக் கொள்ளும் அல்லது தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கும் செயலேயாம். அவர்கள் வாழும் தேசங்களில் முதலில் தங்கள் மொழியைப் பேசவும் , எழுதவும் உதவும் வகையில் அரிச்சுவடியிலிருந்துத் தொடங்கிப் , பின்னர் தொடர்ச்சியாக ஆர்வமூன்றியும், முயன்றும் பெறும் அறிவினால், அரிதாகப் போய் விட்டத் தமிழிலக்கியங்களில் கையாளப் பட்டிருக்கும் அருந்தமிழ்ச் சொற்களுக்கும் விளக்கம் தெரிந்து கொள்ளும் வரை நம் தமிழ் மொழியைத் , தாய்மொழியைக் கற்க வேண்டிய கடமையும்,உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது.

    "அப்படிப் புலம் பெயர்ந்துச் சென்றவர்களுடைய கடமையை அவர்கள் ஆற்ற, இன்றைக்குத் தமிழகத்தில் இருப்பவர்களை எதிர்பார்த்தல் என்ன வகையில் நியாயம் ? " என்ற வினாவை எழுப்பலாம் . அது சரியான பார்வையும் கூடத்தான். "கடமை" என்று சொல்லும் அதே நேரத்தில், "தமிழறிவைப் பெறுவது அவர்களது உரிமையும் கூட" என்ற வார்த்தையைப் பார்க்க வேண்டும். என்னதான் தமிழர்கள் வெளி நாடுகளில் இன்று தங்கள் சுயலாபங்களுக்காகக் குடியமர்ந்து விட்டிருந்தாலும் , என்றும் அவர்கள் தமிழகத்தின் பிள்ளைகளே !

    அவர்களது நியாயமான ஆசையான "தமிழுக்கென்றொரு இருக்கை" என்றக் கனவினைப் பெரும்பான்மையும் அவர்களே முயன்று திரட்டும் நிதியைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்பதும், அடுத்தவர்களை நிதியளிக்கச் சொல்லிக் கேட்கக் கூடாதென்பதும் சரியான வாதம் தான். ஆனால், தமிழகமும், அதில் வாழும் தமிழர்களும் அவர்களுக்கு வேற்றார் அல்லவே ! அவர்களின் பிறந்த வீட்டுச் சொந்தங்களே அன்றோ ? சொந்த வீட்டிலிருந்து வந்த சீர் எவ்வளவு எளிமையானதாயிருந்தாலும், அது உற்றாரின் உள்ளன்பின் அடையாளமல்லவா ? பிள்ளைகள் செய்யும் அரும்பணிக்கு பெற்றோர் அளிக்கும் ஊக்கமல்லவா ?


    "பெற்றோராவது, பிள்ளைகளாவது ? தத்தமது பெற்றோரையே மறந்து விட்டு , தமது மொழியையும், பண்பாட்டையும் வெளியில் காட்டிக் கொள்வது கூட அவமானம் என்று கருதும் புலம் பெயர்ந்தத் தமிழர்களுக்காகவா நாங்கள் பார்க்க வேண்டும் ? பல வகைகளில் தங்கள் நாட்டையும் மொழியையும் அவமதிக்கும் அவர்களால் தாய் நாட்டிற்கோ, எங்களுக்கோ என்ன பயன் ?"
    என்று கடுமையாகச் சாடலாம் . அதற்கிடமளிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்பது முழுப் பூசணியைச் சோற்றில் வைத்து மறைக்க முடியாத உண்மை.


    " ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற நோக்கில் எல்லாத் தமிழர்களையும் நிறுத்திப் பார்க்கக் கூடாது. இலையில் ஓரத்தில் வைக்கும் உவர்ப்பான உப்பும், , கார்ப்பான ஊறுகாயும், கசப்பான வேம்பும், மாங்காய்ப் புளிப்பும் , பாங்காய்ச் சேர்த்தத் துவர்ப்பும், இனிப்புமான அறுசுவையும் சேர்ந்து தான் விருந்தாவது போலப் பல்வகை குணங்கள் கொண்ட மனிதர்களால் ஆனது தான் நமது தமிழ்ச் சமூகமும்.

    ஆதாலால் அப்படிக் குறை குடமாய்க் கூத்தாடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகவே ஆங்காங்கே புலம் பெயர்கிறார்கள். மனதளவிலும், மொழியளவிலும் தங்கள் வேர்களை மறவாதத் தமிழர்களாய்த் தான் வாழ்கிறார்கள். தங்களால் முடிந்த வகையிலெல்லாம் தமிழ்ப் பணியாற்றும் சிந்தனையோடு இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்குத் தங்களால் இயன்ற வகையில் தமிழைக் கற்பிக்கத் 'தமிழ்ப்பள்ளி' போன்ற முயற்சிகளை எடுக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவும், அதைவிடப் பன்மடங்குக் கடினமாகவும் உள்ள செயல் முயற்சியாகத்தான் நாம் இந்த உலகப் புகழ் பெற்ற "ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை " என்பதனைப் பார்க்க வேண்டும்.

    வேறெங்கோ ஒரு நாட்டிலுள்ளப் புகழ் பெற்றக் கல்வி நிறுவனத்தில், ஏற்படுத்தப் படும் தமிழ் இருக்கையால் , தமிழகத்திலுள்ளப் பெரும்பான்மையான சாமானியத் தமிழர்களுக்கு என்ன பயன் என்ற வினா எழுவதில் வியப்பில்லை. ஆனால் அப்படித் தொடங்கும் ஒரு நீண்ட மொழிப் பயணமானது, பலவிதமான பேர்க்கும் ஒவ்வொரு வகையில் அனுபவத்தைக் கொடுக்கும் என்ற உண்மையை உணர்ந்து, சுயலாபம் எதுவுமில்லை என்றுத் தட்டிக் கழிக்காமல் இதை நம் மொழிக்கு நாம் செய்யும் ஒரு தொண்டாகப் பார்க்கலாம்.


    இப்படிச் சொல்வதால் நான் ஏதோ எல்லோரையும் நிதியளிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாக எண்ண வேண்டாம் ! நான் யார் அப்படிச் செய்வதற்கு ? அப்படியொரு சிறுபிள்ளைத் தனத்தை நான் ஒருக்காலும் செய்ய மாட்டேன். இப்படியொரு செயல் நடந்து கொண்டிருக்கிறது என்ற விடையத்தைப் பலரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றவென் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவே அச்செய்தித் தொடர்புள்ளத் தகவல்களை இவ்விடம் பகிர்ந்து கொண்டேன். மொழிக்கான ஒரு முயற்சிக்கும், மொழி பேசும் என் மக்களுக்கும் இடையே வார்த்தைப் பாலமாகவே நான் இச்செயல் செய்தேன். வேறெந்தக் காரணங்களுக்காகவும் அல்ல. இவ்வளவில் என் கருத்துப் பதிவை நிறுத்துகிறேன்.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     

Share This Page