தமிழில் நலங்கு பாடல்கள்.

Discussion in 'Queries on Religion & Spirituality' started by deepa04, Oct 18, 2011.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    தமிழில் நலங்கு பாடல்கள்.

    தமிழில் நலங்கு பாடல்கள்,கேலி செய்வது போல் இருக்கும் யாரவது,அறிந்தால் சொல்லுங்கள்.
    சில வழக்கமான பாடல்கள் எனக்கு கிடைத்தன.அவை.....

    1. 'Aanandham aanandham aanandhamE' :
    Usually sung immediately ater 'ketti mELam' !
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
    பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே

    ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே
    நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
    வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
    சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்
    நாம் செய்த பூஜா பலமும்
    இன்று பலித்ததம்மா - ஆனந்தம்
    2. 'Gowri kalyaana vaibOgamE' :
    Generic all-purpose song, usually sung at the time of 'aarathi'.

    கெளரி கல்யாண வைபோகமே

    விருத்தம்
    -----------
    க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
    ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
    ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து

    பல்லவி
    --------
    கெளரி கல்யாண வைபோகமே
    லக்ஷ்மி கல்யாண வைபோகமே (2)

    சரணம்
    --------
    வசுதேவ தவ பாலா
    அசுர குல காலா
    சசிவதன ரூபிணி
    சத்யபாம லோலா - கெளரி கல்யாண

    கொத்தோட வாழை மரம்
    கொண்டு வந்து நிறுத்தி
    கோப்புடைய பந்தலுக்கு
    மேல் கட்டு கட்டி - கெளரி கல்யாண
     
    Loading...

  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female

    மாலை சார்த்தினாள்
    மாலை சார்த்தினாள் கோதை
    மாலை மாற்றினாள்
    மாலடைந்து மதிலரங்கன்
    மாலை அவர்தன் மார்பிலே

    மையலாய் தையலாள்
    மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள்

    ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
    ஆசை கூறி பூசுரர்கள்
    பேசி மிக்க வாழ்த்திட
    அன்புடன் இன்பமாய்
    ஆண்டாள் கரத்தினால்

    மாலை சார்த்தினாள் கோதை
    மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்
    4. Here are a set of 'oonjal' (swing) songs.

    4.1 'kannoonjal'
    கன்னூஞ்சல்
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
    மனமகிழ்ந்தாள்
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
    காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

    பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
    ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

    உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
    பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

    அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
    இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட

    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
    காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்
    4.2 'ratha oonjal' - another oonjal song

    ரத்ன ஊஞ்சல்
    ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
    முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
    சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன

    மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
    பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன
    4.3 'Aadir oonjal' - another oonjal song
    ஆடிர் ஊஞ்சல்

    விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி
    விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி
    அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே
    அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்
    ஆடிர் ஊஞ்சல்

    இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
    சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட
    தும்புரு நாரதரும் வீணை மீட்ட
    ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்
    ஆடிர் ஊஞ்சல்
    4.4 'laali' - another oonjal song

    லாலி

    தந்தி முகனுக்கிளைய கந்தனுக்கும் லாலி
    சதுர் மறை மூலனுக்கும் மேயனுக்கும் லாலி

    ஆடிபூர துதித்த ஆண்டாள் நம் கோதை
    அணியரங்கருடன் ஊஞ்சல் ஆடினாள் இப்போதே
    லாலி...

    பாலாலே கால் அலம்பி பட்டாலே துடைத்து
    மணி தேங்காய் கையில் கொடுத்து
    மஞ்சள் நீர் சுழற்று
    லாலி...



    5. Here are some 'nalangu' songs...
    5.1 nalangkita vaarum raajaa
    நலங்கிட வாரும் ராஜா
    நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
    முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
    வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட

    பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
    நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட

    எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
    மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட
    5.2 'nalangidugiraaL meenalocahni' - another nalangu song !

    நலங்கிடுகிறாள் மீனலோசனி
    நலங்கிடுகிறாள் மீனலோசனி
    நாதருடன் கூடி
    நலங்கிடுகிறாள் மீனலோசனி

    நாரதரும் வந்து கானங்களை பாட
    நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்

    சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
    சுந்தரேசர் கையில் கொடுத்து
    பூபதி பாதத்தில் விழுந்து
    புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்

    சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
    சுந்தரேசர் மேலே தெளித்தாள்
    வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
    வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்
    6. This one is a 'kalyaana samayal saadham' kind of paattu.
    'bOjanam seyya vaarungO' :

    போஜனம் செய்ய வாருங்கோ

    போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
    போஜனம் செய்ய வாருங்கோ

    மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கோ

    சித்ரமான நவ சித்ரமான்
    கல்யாண மண்டபத்தில்
    வித விதமாகவே வாழைகள் கட்டி
    வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்
    மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும்
    பச்சை மரகதங்கள் தளகதி செய்களும்
    முத்து முத்தாகவே நுனி வாழைகளும்
    பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்
    பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே
    முத்து முத்தாகவே முன்னே தெளிக்க - போஜனம்

    மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட
    அன்னம்பார்வதி ஆதிபராசக்தி
    அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா
    த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி
    இந்திரதேவி ரம்பை திலோத்தமை
    கந்தர்வ பத்தினி கின்னர தேவி
    அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே
    சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும்
    பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி
    கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென
    பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து
    பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார் - போஜனம்
    7. Here are two general purpose songs...
    7.1 'Sri raamaa jeya jeya'

    ஸ்ரீராமா ஜெய ஜெய

    ஸ்ரீராமா ஜெய ஜெய
    சீதம்மா மனோகர
    காருண்ய ஜலதே
    கருணாநிதே ஜெய ஜெய

    தில்லையில் வனம் தனிலே
    ராமர் வந்த நாளையிலே
    ராமரோட சேனையெல்லாம்
    ராமரை கொண்டாட

    சங்கு சக்ரம் தரித்து கொண்டு
    தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
    கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
    கோலாகலமாய் இருந்தார்

    ஜனகரோட மனையில் வந்து
    சீதையுடைய வில்லை முறித்து
    ஜானகியை மாலையிட்டார்
    ஜனகர் அரண்மனைதனிலே

    ஸ்ரீராமா ஜெய ஜெய
    சீதம்மா மனோகர
    காருண்ய ஜலதே
    கருணாநிதே ஜெய ஜெய
    7.2 'manmadhanukku maalai ittaayE'
    மன்மதனுக்கு மாலையிட்டாயே
    மன்மதனுக்கு மாலையிட்டாயே
    மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
    அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
    ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு

    மன்மதனுக்கு மாலையிட்டு
    மாலைதனை கைபிடித்து
    கனகநோன்பு நோற்றதுபோல்
    கிடைத்தது பாக்யமடி - மன்மதனுக்கு

    செந்தாழை ஓடையிலே
    மந்தாரை பூத்ததுபோல்
    இந்திரனோ சந்திரனோ
    சுந்தரனோ இவர்தானடி - மன்மதனுக்கு
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கந்தமலர் மீது உறையும் ,கட்டழகி சீதை,
    இந்து முக சுந்தரம் சேர் ,ராமர் மகிழ் கோதை,
    கோசலை குமாரனே,கல்யாண ராமா,
    கௌசிகரின் வேள்விதனை,காத்த பரந்தாமா,
    கல்லை பெண்ணாக்கி வைத்த கமலமலர் பாதா,
    தொல்லுலகில் கீர்த்தி மிகு துரையே ரகுநாதா,
    சிவதனுசை,தான் முறித்த,சீர் மிகுந்த தோளா,
    புவனம் புகழ் ஜனகர் பெற்ற சீதை மணவாளா!
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    [கத்தரிக்காய் மோர்குழம்பு கரி வகைகள் சமைப்பாள்......
    இது போல் வரும் கேலி பாடல்கள் தெரிந்தால்,உதவிடுங்கள்./b]
     
  5. anitharajan

    anitharajan Bronze IL'ite

    Messages:
    114
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Deepa,

    Wonderful....All songs are great, i was searching for this in internet... all in handy now.

    Thank you so much.

    Cheers,
    Anitha
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அக்கா அருமையான பதிவு.
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks to anitha and jeya.
    நாட்டுபுற நலங்கு பாட்டு இருந்த சொல்லுங்கள்....please.
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    இது மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் உள்ளதாய் பாடும் பாடல் "போஜனம் செய்ய வாருங்கள்"

    போஜனம் செய்ய வாருங்கள்
    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்

    நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்

    வாழை மரத்துடன், வெட்டி வேர் கொழுந்து,
    மாவிலைத் தோரணம், பவழ ஸ்தம்பம்
    நாட்டிய கூடம், பச்ச மரகதம்,
    பதித்த செவர்களும், பசும்பொன் தரையில்
    பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
    நட்ட நடுவே குத்து விளக்கேற்றி,
    தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்,
    சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய,
    பந்திபந்தியாய் பாயை விரித்து
    உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
    தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
    (போஜனம் செய்ய வாருங்கள்)

    மும்மூர்த்திகளுடன் முனிவர்கள், தேவர்கள்,
    யக்ஷகின்னரர், கந்தர்வர்களும்,
    அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
    அந்தணர்களும் முன்பந்தியிலே
    அணிஅணியாக அவரவர் இடத்தில்
    அழகாய் இருந்தார்
    அகல்யை, திரௌபதி, சீதை, தாரை,
    மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
    கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
    முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
    பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
    பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
    (போஜனம் செய்ய வாருங்கள்)

    மாந்தயிர் பச்சடி, தேங்காய்பூ கோசுமல்லி,
    இரங்கிக்காய் கிச்சடி, பரங்கிக்காய் பச்சடி,
    விதம்விதமாகவே வற்றல், அப்பளம்,
    பாங்குள்ள கூட்டு, டாங்கர் பகுத்தெடு
    சிலாபிஞ்சு கறியும், பலாபிஞ்சு கறியும்,
    பாகற்காய் கசக்கல், கத்திரிக்காய் துவட்டல்,
    வாழைக்காய் வருவல், வாழைப்பூ துருவல்,
    குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
    மொத்த பருப்பும், புத்துருக்கு நெய்யும்
    (போஜனம் செய்ய வாருங்கள்)

    பொரிச்ச குழம்பு, பூசணிக்காய் சாம்பார்,
    வெண்டைக்காய் மோர்க்கடி, வெங்காய சாம்பார்,
    வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்,
    மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்,
    பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்,
    வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்,
    குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்,
    சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்,
    சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்,
    அக்கார வடிசல், சக்கரைப் பொங்கல்,
    என்னென்ன சுண்டல், வகையான வடை,
    சுமசாலா வடை, வெங்காய வடை,
    சொஜ்ஜி, வடையுடன் நல்லெண்ணை வடை,
    தயிர் வடையும், பால் போளிகளும்,
    அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்,
    சேமியா, ஹல்வா, ஜிலேபி, லட்டு,
    முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு,
    ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு,
    பேஷா இருக்கும் பேசரி லாடு,
    குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு,
    பளபளவெனருக்கும் பயத்தமா லாடு,
    மைசூர் பாகுடன், பர்ஃபியும் சேர்த்து
    (போஜனம் செய்ய வாருங்கள்)

    பொரிகனி வர்கங்கள், பச்சை நாடாம்பழம்,
    தேன்கதளி பழம், செவ்வாழை பழம்,
    நேந்திரம் பழத்துடன், மாம்பழ தினுசுகள்
    பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
    ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
    பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
    ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
    வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
    பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
    கொத்தமல்லிச் சட்னி, மிளகாய்ப் பொடியுடன்
    மிளகாய் பச்சடி
    பந்தியில் பரிமாறினார்
    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    பார்த்துப் பரிமாறினார்…

    இந்த பாட்டினை இங்கே கேட்கலாம்: Bhojanam Seyya (Marriage Songs) - Bombay Sisters
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    jeya,
    thanks dear....
     
  10. vanisriv

    vanisriv Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    99
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Awesome. I have been looking to get all the songs.

    Thank you
     

Share This Page