1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழா தமிழா தமிழ் கற்றுத் தரலாமா?

Discussion in 'Posts in Regional Languages' started by kasisheela, Dec 14, 2007.

  1. kasisheela

    kasisheela Silver IL'ite

    Messages:
    202
    Likes Received:
    32
    Trophy Points:
    50
    Gender:
    Female
    நம் குழந்தைகளில் எத்தனை பேருக்கு தமிழ் மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கிறது?
    நூறு குழந்தைகளை எடுத்து கொண்டால் அவர்களில் தமிழில் நன்கு படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.என் நண்பர்களில் சிலர் ,நான் படித்த காலங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பிற மொழிகளை படித்தனர்.
    ஆனால் இப்போதோ நிலைமை வேறு மாதிரி போய் கொண்டிருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வதாலும், பிற மொழிகளின் மேல் உள்ள ஆர்வத்தினாலும் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
    ஒரு முறை என் நண்பரின் வீட்டிற்கு போன போது அவரது பெண் (சுமார் 10 வயது இருக்கும்) அமர்ந்து சன் டீவி பார்த்துக்கொண்டிருந்தாள்.நான் அவளிடம் திரையில் என்ன வருகிறது என்று படிக்க தெரியுமா என்று கேட்டேன்.அதற்கு அவள் தெரியாது என்றாள்.எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
    இதே நிலைமை தொடர்ந்தால் நமது அடுத்த தலைமுறையினர் தமிழை பேச்சு மொழியாக மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்படலாம்.
    நமது பண்பாடு,கலாசாரம் முதலியவற்றை நமது அடுத்த தலைமுறையினருக்கு கற்று தருவது நமது கடமை.அதை போல நமது தாய்மொழியை கற்றுத் தருவதும் நமது கடமை தானே ? குறைந்தபட்சம் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் கற்றுத் தருவது அவசியம் தானே?
    இதற்கு முதலில் தமிழை கற்றுத் தருவது அவசியம் என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட வேண்டும்.
    அதற்காக நான் ஒன்றும் பிற மொழிகளின் எதிரி அல்ல.நம் தாய் மொழியான தமிழுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே என் கருத்து.இதற்க்கு சில வழிகள்,
    -சிறு வயது முதலே தமிழ் மொழியில் பேசவும்,எழுதவும்,படிக்கவும் கற்று தர வேண்டும்.
    -மற்ற பாடங்களோடு தமிழுக்கென்றும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.மெல்ல மெல்ல அவர்களுக்குள் தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.
    -அடுத்த தலைமுறையினர் கணினியில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.அதை கொண்டே அவர்களுக்கு தமிழ் மொழியை கற்று தர வேண்டும்.
    தமிழ் கற்று கொடுக்க என்றே பல இணைய தளங்கள் உள்ளன.நமது தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ் இணைய பல்கலைக்கழகம் மூலமும் தமிழ் கற்கலாம்
    அதற்கான இணைய முகவரி http://www.tamilvu.org/
    -வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என அமெரிக்காவின் சில இடங்களில் தமிழ் பயிலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றை பற்றி அறிய,
    http://www.tamilamudham.com/tamil-resources.html
    -சிறுவர்களுக்கான இணைய நூலகத்திற்கு இங்கே செல்லவும் http://www.kids.noolagam.com/
    -முல்லா கதைகள்,தெனாலி ராமன் கதைகள்,அக்பர் பீர்பால் கதைகள் போன்ற புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.ரசித்துச் சிரிப்பதுடன்,
    அவர்களது சிந்தனை திறன் வளரவும் இக்கதைகள் உதவியாக இருக்கும்.
    -வீட்டில் இருக்கும் போது தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்.
    -தமிழ் மொழி தொடர்பான அனைத்து இணைய முகவரிகளும் அறிய இங்கே செல்லவும் http://tamilelibrary.org/teli/tlinks4.html
    இவ்வாறு செய்து விட்டொம் என்றால் நம் தாய்மொழிக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றிய மனநிறைவு கிடைக்கும்.
    நம் தாய்மொழியை நேசிப்போம்..........................வாழ்க வளமுடன்..................
     
    Loading...

  2. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Onru chunnalum nangu chuneergal..I tried to translate and put it in tamil but running into small probs and its taking time..Thanks so much for writing about this..good job and you have perfectly written so well about it..I am going to check out those sites..really very useful..
     
  3. kasisheela

    kasisheela Silver IL'ite

    Messages:
    202
    Likes Received:
    32
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Dear AC,
    Thanks for ur comments.Those sites are really wonderful and that too the kids noolagam has many poems which we learnt in our childhood.We have enjoyed a lot with all this thenali raman,birbal and we should also give a chance to our kids to relish them.
     
  4. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    dear AC i gave the link here, and u could had done wonders with this, and shantha, what u have said is cent percent correct and our children have developed the liking towards english and hindi films so much the preference for the tamil is anywhere less, in those times i used to run around asking for hindi meanings and my uncle got me a personal hindi to english dictionary as none knew what i was asking about..but to day we have to reverse, my uncle taught me just the initial stage of tamil, and i love many languages so developed reading tamil magazines..sunkan
     
  5. rkalpana

    rkalpana New IL'ite

    Messages:
    45
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    vanakkam

    ungalaippol enakkum inda vishayaththil manakkurai irukkiradu...nangal iruppadu mumbai endralum naan en pennirkku varaththil irandu naal thamizh katruk kodukkiraen...nam thaimozhi nam kuzhaindagalukkuth therindiruppadu miga miga avasiyam...I will refer the websites which u have mentioned....mikka nandri...

    rkalpana:hatsoff
     
  6. kasisheela

    kasisheela Silver IL'ite

    Messages:
    202
    Likes Received:
    32
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Dear Sunkan,
    Yes whatever u have said is right.Kids interest towards other languages have increased nowadays.They have all forgoten that they do not properly know their mother tongue which in itself has many wonders in it.As a point,the parents have als forgotten to insist this on them.Nice to know about your interest in learning tamil.Thanks for stepping in.
     
  7. kasisheela

    kasisheela Silver IL'ite

    Messages:
    202
    Likes Received:
    32
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Dear Kalpana,
    I was very happy to know about u teaching your daughter our mother tongue tamil.If every mother starts thinking like you,then Tamil will reach our next generation in its full form very easily.The kids noolagam website is just wonderful.Do not forget to make a visit to that site.Thanks for stepping in.
     
  8. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    ஷீலா அவர்களுக்கு ,
    தங்களின் தமிழ் மொழியின் ஆர்வத்தை கண்டு மெச்சினேன்.தங்களை போலவே எல்லோரும் நாம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது ஆர்வம் காட்டினால் தமிழ் செழித்து வாழும்.
     
  9. kasisheela

    kasisheela Silver IL'ite

    Messages:
    202
    Likes Received:
    32
    Trophy Points:
    50
    Gender:
    Female
    அன்புள்ள நளினி,
    தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.என் புகுந்த வீடு மிகுந்த தமிழ் பற்றுள்ள குடும்பமாகும்.என் மாமனார் தமிழ் பேராசிரியர்.என் கணவரின் தாத்தாவும் ஒரு தமிழ் ஆசிரியர்.அப்படி பட்ட குடும்பத்திற்கு மருமகளாக நான் வந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம்.அதனால் தமிழ் மொழி வளர எனக்கு தெரிந்த சில வழிகளை இந்த வலை பதிவில் கூறியிருக்கிறேன்.
     

Share This Page