1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தனியா வந்தது ஏன்?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Apr 15, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ரெட்டைச் சீர் போட்டு, ரெண்டு ஊர் மெச்ச நடந்த
    உன் கல்யாண நெனைப்பு இன்னும் மறையலையே!
    ஒத்தையிலே ராத்திரியில் ஊரடங்கினதும் வந்த
    காரணமும் என்னன்னு எனக்கின்னும் வெளங்கலையே!

    காப்பு கட்டி, மொத நாளு, புதுசாக் கண்ட தாயியைப் போல்,
    பொன்மஞ்சள் நெறத்துல நெகுநெகுன்னு இருந்தவளே!
    காப்போட மஞ்ச நெறம் விடுறதுக்கு முன்னாலே,
    விடுபட்ட அம்பைப் போல நீ வந்து நிக்கறியே!

    காதுக்கும், மூக்குக்கும், கழுத்துக்கும் வகை வகையா,
    நகை செஞ்சு, அத்தனையும் சீராகத் தந்தேனே!
    அத்தனையும் துப்புரவா, தொலைச்சிப்புட்டு நிக்கறியே!!
    மஞ்சக் கயிறும் காணாம வெறுங்கழுத்தா வந்தது ஏன்?

    மெத்தப் படிச்சோமுன்னு, வார்த்தை நெறைய கொட்டி,
    அது தேள் கொட்டாப் படவும் நீ தள்ளி வெக்கப் பட்டாயோ?
    மெச்சும் புத்தி உண்டுன்னு உன் செயலால் சுட்டி,
    அது அதிகப்பிரசங்கித்தனமுன்னு அவங்க சொல்லி வந்தாயோ?

    நாத்தனாரை, மாமியாரை, மாமனாரை எல்லாம்,
    தரக்குறைவா ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாயோ?
    நாங்க இங்க அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம்,
    போறாதுன்னு, வாழாவெட்டியா நீ வந்தாயோ?
    -ஸ்ரீ

    குறிப்பு:
    இப்பத்தி, மணமாகிச் சில நாட்களிலேயே தனியாய் தன் பிறந்தகத்திற்கு இரவில் வரும் பெண்ணைப் பார்த்து அவள் தாய் கேட்பதாக எழுதப்பட்டுள்ளது. இக்கேள்விகளுக்கு விடைகள், அவள் சொல்லும் பத்தியாக அடுத்து வரும். -ஸ்ரீ
     
    Loading...

  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    RGS,

    "மெத்தப் படிச்ச ஆண்" என்று எங்கேயும் குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. "மெத்தப் படிச்ச பொண்ணு" - ஏன் இந்த 'Negative connotation?'

    மெச்சும் புத்தி கொண்டு சுட்டி காட்டும் பெண் 'அதிகப்பிரசங்கி' என்றால் மெச்சும் புத்தி கொண்டு சுட்டி காட்டும் ஆணை என்னவென்று குறிப்பிடுவது?

    ஆணின் பெற்றோர்கள் ஆணை குறை கூறாது ஏற்றுக்கொள்ளும்போது, பெண்ணின் பெற்றோர்கள் மட்டும் பெண்ணை ஏன் குறை கூற வேண்டும்? இப்படி பட்ட பெற்றோர்களை பெண்கள் தாங்களாகவே "disown" பண்ண வேண்டும்.

    பெண் வாழாவெட்டி என்றால், பெண்ணால் துரத்தி விடப்பட்ட ஆணிற்கு எனன பெயர்?
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Glad to receive your feedback first Veda. As you correctly pointed out, few questions were asked only to women and most of the times they are either suppressed or chided. This is the anguish of an old lady in a state of helplessness. And, as I said earlier, there is a continuity to it. Will post that soon. Thanks. -rgs
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இன்றும் வாழ வழி இல்லாமல் வரும் பெண்களிடம் கேட்கப்படும் கேள்விகள் ஒன்றையும் விடாமல் கேட்டுவிட்டீர்கள் ஸ்ரீ
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your feedback Devapriya. -rgs
     

Share This Page