எப்போதும் தனிமை இனிப்பதில்லை. சில சமயம், அது கொடுக்கும் துயரை, வெறுமையினைச் சொல்லிட வார்த்தை இல்லை. பகிர்ந்திட முடியாதவை என்றுமுண்டு. எனக்கு மட்டும் தான் இது நிகழ்கிறது என்று எண்ணாதவர் எவருண்டு? எல்லோருக்கும் துயர் இருக்கிறது. சுய இரக்கத்தின் மீளுதலே நன்று. வலிப்பு வந்து நினைவிழப்பவரின் வலி என்னவென நான் அறிவேனா? நிலை மீண்டதும் அவர் உணரும் துயரின் ஒரு அங்குலம் உணர்ந்திருக்கின்றேனா? எங்கிருக்கிறேன் என அலைபாய்ந்து, மனம் பதறிட, உடலோ மருந்தின் பிடி இறுகியதால், வலுவிழந்தே ஓய்ந்து இருந்திட, தடுமாற்றம் மிக உறுதி. படுக்கையும், உடையும் நனைந்திருக்க, உடல் எவருடையதோ என அங்கிருக்க, விழிகளில் மெல்லியதாய் சூனியமும் நிரம்பி வர, தலைவலியும் மிகும். எத்தனை முயன்றும் தொட முடியா ஒரு தனிமை அவரிடத்தில் இருக்கும். தம் அன்புடை உறவின் தொட இயலா துயரைக் கண்டதும் அவர் நிலை மாறும்!
RGS, Another emotional poem. What beautiful words and you had brought this situation before the eyes! Yes, it is definitely painful and can only be felt by that person! Loneliness is by itself, such a pain, so true. Words can't describe the pain one endures. A newborn doesn't like to be alone, just a cuddle by anyone would make it feel it cosy and the cry stops. Old age which brings with it loneliness, brings suffering just by that fact alone. From beginning till end, we are intertwined and never like that pain at all! Really another fantastic poem! Thanks again, Vaidehi
சுய இரக்கத்தின் மீளுதலே நன்று. true true agreed no one can understand the situation we are going through super sir ... i have seen lots of fits prob ppl and even the one who have died well narrated true to my knowledge
Thanks for your like and a lovely feedback Caide. I had fits during my younger age and grew out of it, as I grew up. So, this also contains a bit of self reflection. But the point here is - No two experiences are alike too. What I experienced may not be the same as what somebody else underwent. -rgs
Thanks for your like and a great feedback Vaidehi. Yes, we human beings seek company and comfort from others always, though we seldom admit that during our most active years. Just a small recollection of Babar - Humayun story tells you a lot when you read the same as you grow up. -rgs
true hope u overcame t totally and try not to take things to heart seriously t will give consequences
Yes, I did, thanks to His grace. But it did teach me more about my body especially after the episodes Caide. Thanks again. -rgs