1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஜீன்-27 நமது மகாகவி பாரதி-செல்லம்மாளின் திருமண நாள்

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jun 28, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஜீன்-27 நமது மகாகவி பாரதி-செல்லம்மாளின் திருமண நாள்
    தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த அழகிய ஊர் கடையம்.மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் ராம நதி, ஜம்பு நதி என்று இரண்டு நதிகள் வளம் சேர்கின்றன.பெருமாளும்,கல்யாணிஅம்மனும் காத்தருள்கின்றனர்.விவசாயம்தான் பிரதானம்.

    பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் என்பதும் இங்கே பாரதி (1918-20) இரண்டு ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதும்தான் கடையத்திற்கு சிறப்பு.
    1897 ல் செல்லம்மாளை திருமணம் முடிக்க கடையம் வந்த பாரதி 21 வருடங்கள் கழித்து கடலுார் சிறையில் இருந்து விடுதலையாகி உடலும் மனமும் நொந்த நிலையில்தான் மீண்டும் மனைவியின் வீடிருக்கும் கடையத்திற்கு வருகிறார்.வந்தவருக்கு பெரிய வரவேற்போ, மரியாதையோ கிடையாது.ஒரு பித்தனைப் போலத்தான் இங்குள்ள குன்றுகளிலும் தட்டப்பாறையிலும் வயல்வெளிகளிலும் கோவில்களிலும் வீட்டு திண்ணைகளிலும் பாடல்கள் பாடியிருக்கிறார்.
    பாரதி உலாவிய இந்த இடங்களையெல்லாம் 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே….' என்ற பாடலில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்.
    மனிதர்களை சாதி வாரியாக பிரித்து பேதம் பார்ப்பதை வெறுத்த பாரதியார் ' துணி வெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்து மாரியம்மா.. மனம் வெளுக்க வழியில்லை..' எங்கள் முத்து மாரியம்மா என்று மனம் வெந்து பாடியது இங்குதான். 'நவராத்திரிக்கு ஏதாவது பாட்டு எழுதித் தாங்கோ மாமா' என்று கேட்ட உடனே எழுதிக் கொடுத்த பாடல்தான் 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி'. இங்குள்ள பெண்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடல்தான் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா…'
    இப்படி கடையத்தினை அங்குலம் அங்குலமாக அளந்தது அவரது பாதங்கள் மட்டுமல்ல பாடல்களும்தான்.
    இருந்தும் அவருக்கோ செல்லம்மாளுக்கோ எந்தவிதமான சிலையோ நினைவிடமோ இங்கு இல்லை.
    பாரதிப்பிரியரும் சென்னையில் சேவாலயா என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக கல்வியைத்தந்து வருபவருமான முரளிதரனுக்கு இது உறுத்தியிருக்கிறது.
    இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரதி-செல்லம்மாளின் திருமண நாளான ஜூன் 27 ம்தேதி கடையத்தில் பெரிய விழா நடத்தி ஆயிரம் பேர்களுக்கு திருமண விருந்து வழங்கினார் அங்குள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கொடுத்தார் வருடாவரும் இதே போல இங்கு இந்த விழா சிறப்பாக நடத்தப்படும் அடுத்த ஆண்டு விழாவின் போது பாரதி-செல்லம்மாள் சிலையுடன் வருகிறேன் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் நான் கொண்டுவரும் சிலையை வைக்க இடம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான் என்று வேண்டுகோள் வைத்தார்.
    கடையம் அக்ராஹரத்தில் பாரதி-செல்லம்மாளின் தோளில் கைபோட்டு கம்பீரமாக நடந்து போன காட்சியை சித்தரிக்கும் விதத்தில் நான்கு லட்ச ரூபாய்க்கு சிலையும் செய்துவிட்டார்.சிலை தற்போது சென்னை திருநின்றவூரில் காத்திருக்கிறது
    அந்த வருடமும் சரி கடந்த வருடமும் சரி இந்த வருடமும் சரி இன்னமும் பாரதி-செல்லம்மாள் சிலை வைக்க சரியான இடம் ஒதுக்கப்படாததால் பாரதி-செல்லம்மாள் தம்பதியினர் சிற்பியின் வீட்டில் சிலையாக காத்திருக்கின்றனர்.
    27.6.21 அன்று, பாரதியின் 124 வது திருமண நாள் விழா கொண்டாட வழக்கம் போல சேவாலயா முரளிதரன் தயராகிவிட்டார்.திருமண விருந்து பள்ளி சிறார்களுக்கு பரிசு ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சபாநாயகர் அப்பாவுவை அழைத்திருக்கிறார்.அவரது வருகையினால் சிலை வைக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் விரைவில் பாரதி-செல்லம்மாளை அங்கு உலாவவிடலாம் என்று நம்புகிறார் முரளிதரன்.

    Jayasala42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அருமை. சில சக்தி
    மிக்க பாடல்கள் இயற்றிய
    ஊர் கடயம் என்பது அறிந்தேன். மிக்க நன்றி.

    I presume this mr. Murali participated in debate at Nappu-hall Matunga and he was one among the entourage that accompanied my brother for some celebrations under the auspices of Bombay Thamizh sangam in 1972-73.
     

Share This Page